Thread
:
சிவ தொண்டு செய்வதன் பலன்....
View Single Post
02-09-2012, 04:43 AM
#
1
Zmniubqr
Join Date
Oct 2005
Posts
448
Senior Member
சிவ தொண்டு செய்வதன் பலன்....
ஒரு ஊரில் நந்திவர்மன் என்ற பேரரசன் இருந்தான்.
ஒரு சூழலில் அவனுக்கு கப்பம் கட்டி வந்த அனைத்து குருநில மன்னர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவனை தோற்க்கடித்து,அவனது அறியனையினை பிடுங்கிகொண்டு அவனை நாட்டைவிட்டு துறத்திவிட்டனர்.
மணிமுடி இழந்த்து,நாட்டை இழந்த்து காட்டில் பரிதாபமாக வாழ்ந்துவந்தான்.தன்னுடய போராத காலத்தை எண்ணி வருந்திய நந்திவர்மன் தன்னுடய எதிர்காலத்தை தெரிந்துகொள்ள அண்டை நாட்டை சேர்ந்த பிரபலமான ஜோதிடரை தேடி போனான்.இவனது ஜாதகத்தை வாங்கி பார்த்த மாத்திரத்திலேயே தன்னை ஒரு வாரகாலம் கழித்து வந்து பார்க்குமாறு ஜோதிடர் திருப்பி அனுப்பிவிடுகிரார்.
இங்கும் தன் நிழலாக தனது விதி செயல்படுவதாக எண்ணி வருந்திய நந்திவர்மன் காட்டு வழியே நடந்து செல்கிறான். அவனால் அதிக தூரம் செல்ல முடியவில்லை.
உணவின்றி தவித்த தவிப்பும்,கால் நடையாய் நடந்த களைப்பும் அவனை சோர்வடய செய்தது.கூடவே இடி மின்னலுடன் கடும் மழையும் பெய்தது.
நந்திவர்மன் அருகாமையில் இருந்த பாழடைந்த சிவாலயத்தில் தஞ்சமடைந்தான்.
களைப்பின் மிகுதியால் உற்க்கம் வரவே சற்று கண் அயர்ந்தான்.
தூக்கத்தில் அவன் பேரரசனாக அறியணையில் வீற்றிருந்த காலம் வந்தது கனவில்.
கனவில் இந்த சிவாலயத்தை அவன் புனரமைப்பதுபோலவும்,அப்படி புனரமைப்பு பணியில் சிற்பிகளுக்கு கட்டளையிட்டுக்கொண்டிருப்பது போலவும் நிகழ்வு....
நந்திவர்மன் பேரரசனாக கட்டளையிட்டான்.....
கர்ப கிரகத்தின் எழில் எந்த நாட்டிலும் இல்லாதபடி இருக்கவேண்டும்...நந்தி மண்டபம் எழில் கொஞ்சுவதாக இருக்கவேண்டும்....ஊஞ்சல் மண்டபம் சுமார் 1000 பேராவது நிற்பதுபோல் இருத்தல் வேண்டும்....
கணபதி,முருகபெருமானுக்கு இறைவனின் கர்ப கிரகதின் பின் புறம் ஆங்காங்கே ஆகம விதிகளின்படி இருக்க வேண்டும்....
கைதேர்ந்த ஓவியர்களைக் கொண்டு பல வ்ண்ண மூலிகை கலவைகள் எக்காலதிலும் அழியா வண்ணம் அழகுடன் காட்சி அளிக்க வேண்டும்...
இப்படியாக கனவு அவன் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. திடீரென்று உஷ் .... என்ற சத்தம் கேட்டு திடுக்கிற்று விழிக்கிறான்...சுமார் 8 அடி நீள நாகம் இவனை துரத்தியது...
அய்யகோ... இதுவரையில் நான் கண்டது கனவு தானா... இந்த பாழடைந்த மண்டபத்தில் கூட நிம்மதியாக உறங்க முடிய வில்லயே... என்று தன் விதியை நொந்தபடி வெளியேருகிறான்.
என்ன ஆச்சரியம்... இவன் வெளியேருவதற்கும், ஆலய மண்டபம் இடிந்து விழுவ்தற்கும் மிக சரியாக இருந்தது.
கனவில் கூட சிவாலயத்தை கட்டி அதன் கும்பாபிஷேகத்தை காணமுடியவில்லையே...என்ன போராத காலம் என்று தன்னை தானே நொந்துகொண்டு ஒரு வார காலத்தை காட்டில் கழித்துவிட்டு மீண்டும் ஜோதிடர் இல்லம் நோக்கி செல்கிறான் நந்திவர்மன்.
இவன் வருவதை தூரத்திலிருந்தபடியே கவனித்த ஜோதிடர் தனக்கு தானே தூக்கு மாட்டிக் கொள்கிறார்....
அதை கவனித்துவிட்ட நந்திவர்மன் ஓடிவந்து ஜோதிடரை காப்பாற்றுகிறான்...
சர்வ வேதங்களையும் கற்று அறிந்த தாங்களா இவ்வாறு செய்வது ?....
நான் நாட்டை இழந்தபோது கூட கவலை கொள்ளவில்லை...என்ன காரியம் செய்துவிட்டீர்கள்.
என்று ஜோதிடரை வினவினான்.....
மீதி நாளை....
Quote
Zmniubqr
View Public Profile
Find More Posts by Zmniubqr
All times are GMT +1. The time now is
03:10 AM
.