Thread
:
கவியரசர் கண்ணதாசன் சொன்ன கதை...
View Single Post
10-25-2011, 04:12 AM
#
1
muytreda
Join Date
Oct 2005
Posts
534
Senior Member
கவியரசர் கண்ணதாசன் சொன்ன கதை...
ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் வாழ்ந்து வந்தான்.அவன் ஒவொரு வீட்டு வாசலிலும் சென்று பிச்சை கேட்கும் பொழுது ,
" அம்மா பார்வதி பிச்சை போடு "
என்று கேட்பது அவன் வழக்கம்.
இவன் குரல் ஒரு முறை கைலாயத்தில் இருந்த பார்வதி தேவி காதுகளில் சென்றடைந்தது. அவளும் இறக்கமுற்றாள்.சிவனிடம் பார்வதிதேவி பிச்சைக்காரனிடம் இரக்கம் காட்டும்படி வேண்டினாள்.
சிவபெருமான் இப்பிறவியில் பிச்சையெடுப்பது அவன் பிராப்தம் என்றும்,அவன் விதியை தம்மால் மாற்றமுடியாது என்று எவ்வுளவோ சொல்லியும் அவன் மேல் செலுத்திய கருனையை மாற்றிகொள்ள பார்வதி தேவி தயாராக இல்லை.
தாய் அல்லவா ?
" முடிந்தால் அவன் விதியை மாற்றி கொள் " என்று சிவபிறான் கூறி விடுகிறர்.
" நான் அவனை மிக பெரிய கோடீஸ்வரனாக மாற்றி அவன் விதியை நான் மாற்றி காட்டிகிறேன் " என்று ஈசனிடம் சவால் விடுகிறாள் பார்வதி தேவி.
ஈசன் மனதுக்குள் சிரித்து கொள்கிறார்.
ஒரு வீடு முடிந்து அடுத்த வீட்டுக்கு வரும் வழியில் மூன்று மூடைகள் தங்க கட்டிகளை அவன் வரும் வழியில் போடுகிறாள் பார்வதி..
அந்த நேரம் பார்த்து பிச்சைகாரனுக்கு திடீரென " ஒரு வேளை தான் குருடாகி விட்டால் என்ன செய்வது ? " என்ற எண்ணம் வருகிறது.
கையில் கிடைத்த ஒரு கம்பை எடுத்துகொண்டு,இரு கண்களையும் மூடிக்கொண்டு பக்கத்து வீடிற்கு செல்கிறான் பிச்சை காரன்.வழியில் பார்வதி தேவி போட்டிருந்த பொற்காசு மூட்டைகள் காலில் இடறுகிறது.
பிச்சைகாரனோ,கண்களை மூடிகொண்டு இருப்பதால் அந்த பொற்காசு மூடைகளை கல் எண்று நினைத்து, கால்களால் உதைத்துவிட்டு,அடுத்த வீட்டிற்கு சென்றடைகிறான்.
அடுத்த வீட்டிற்க்கு சென்ற பின் கையில் வைத்திருந்த கம்பை தூக்கி எறிந்து விட்டு, மூடிய கண்களையும் திறந்து கொண்டு , குருடாகி விட்டாலும்கூட தன்னால் தொடர்ந்து பிச்சை எடுக்க முடியும் என்று தனக்குள் திருப்தியடைந்துகொண்டு,அடுத்த வீட்டு வாசலில் நின்றுகொண்டு வழக்கம்போல,
" அம்மா பார்வதி பிச்சை போடு "
என்று வழக்கம்போல் கூவுகிறான்.
விதி வலியது. அதை யாரும் வெல்லமுடியாது என்பது இக் கதையின் நோக்கம்.
Quote
muytreda
View Public Profile
Find More Posts by muytreda
All times are GMT +1. The time now is
03:30 AM
.