Thread
:
Holy Places
View Single Post
03-02-2007, 09:30 PM
#
10
Si8jy8HN
Join Date
Oct 2005
Posts
485
Senior Member
அர்த்த ராத்திரியில் கானா பாட்டு காசட் கடைகளுடன்
சகல விதமான உணவுகளும் கிடைக்கும் ரோட்டோரக் கடைகள் என இருக்கும்
மாமண்டூரில்
பேருந்தில் பயணம் செய்யும் யாவரும் இறங்கியிருப்போம்.
ஆனால் இவ்வூர் ஒரு புனிதத் தலம் என்பது ஆச்சர்யமானது.
மண்டூக மஹரிஷி
ஈசனை நோக்கி மிகப்பெரிய தவத்தை இயற்றி மோக்ஷம் பெற்றாராம். அவர் வழிபட்ட சிவன் பெரிய திருக்குளத்தோடு இவ்வூரின் மேற்கே உள்ளது. மா (பெரிய) மண்டூர். இங்கிருக்கும்
பிச்சீஸ்வரரை தரிசித்தால் எத்தனை பெரிய துன்பமாய் இருந்தாலும் விலகி விடுமாம்.
வழி:- தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு பாலாற்று பாலம் தாண்டி சிறிது தூரத்தில் வலக்கைப் பக்கம் திரும்பும் ஊர் சாலையில் சென்றால் 1/4 கி.மீட்டரில் கோவிலிருக்கிறது. மாணிக்க விநாயகரின் தரிசனம் கொள்ளை அழகு. பூத்துக் குலுங்கும் பல்லாயிரக்கணக்கான தாமரைகளைக் கொண்ட திருக்குளம் மனதை வசீகரிக்கும்.
__________________
Quote
Si8jy8HN
View Public Profile
Find More Posts by Si8jy8HN
All times are GMT +1. The time now is
04:08 AM
.