|
![]() |
#1 |
|
இது தமிழைபற்றி பாரதியின் கவலை...
எந்த அளவு உண்மை.... நடைமுறையில் நாம் பார்ப்போம்.... " எர்லி மார்னிங்க் 5 மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்தேன். வேக வேகமாக பிரஷ் பண்ணிட்டு, காப்பி குடிசிட்டு,பேப்பர் படிச்சிட்டு, குளிச்சிட்டு,டிரஸ் பண்ணிண்டுவிட்டு, ப்ரேக்பாஸ்டயும் வேக வேகமா முடிச்சுண்டு, அவசரம் அவசரமாக, கரக்ட் டயமுக்கு, ட்ரெயினை பிடிக்க வேண்டும்ன்னு ஸ்டேஷனுக்கு ஓட்டமும் நடயுமாக நடந்து, ஸ்டேஷனை ரீச் பன்னறதுக்குள்ள, ப்ரண்ட் ஃபோன் பண்ணிட்டான் , " ஸ்டாட்டர் " போட்டுட்டான் என்று. நல்லவேளை அவன் போனை நான் அட்டண்ட் பண்ணும் போது ஓவர்பிரிட்ஜ் ஏறிக்கோண்டிருந்தேன். பிரிட்ஜ் மேலேருந்து பார்த்தேன். சிக்னல் போட்டுட்டான். டிரெயினை நான் ரீச் பண்ணவும், கார்டு ரைட் குடுக்கவும் கரக்ட்டாக இருந்தது , மோஷனில் ஏறி வண்டியை காட்ச் பண்ணிட்டேன் " . இதுபோல் நமது அன்றாட உரயாடல்களில் ஆங்கில வாக்கியங்களின் குருக்கீடு அதிகரித்துக்கொண்டே வருவது வழக்கமாகி விட்டது. அதனால் தான் கவி பாரதிக்கும் கவலை வந்துவிட்டது போலும்... இதற்கு என்ன வழி... " தமிழ் வாழ்க " என்று அரசு கட்டிடங்களில் எழுதிவிட்டால் மட்டும் போதாது. தமிழ் வாழ உருப்படியான கருத்துக்களை நண்பர்கள் வழங்கவும்... அதன் வெளிப்பாடுதான்," மெல்லத்தமிழ் இனி சாகும் " என்று கவலை கொண்டானோ? ... |
![]() |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|