|
![]() |
#1 |
|
சில நாட்களுக்கு முன்பு ஐ.நா வில் அமேரிக்கா கொண்டுவந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தினை நீர்த்து போக செய்த இந்தியாவின் குள்ளநரி செயலால் உலகெங்கும் உள்ள தமிழக மக்கள் காங்கிரஸ் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
இலங்கையும் , இந்தியா அமெரிக்க தீர்மானத்தை (தனக்கு ஆதரவாக) எதிர்க்கும் என்று கடைசிவரை நினைத்திருந்தது. ஆனால் இங்குள்ள தமிழர்களை ஏமாற்றவும், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் காரர்கள் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு,தனிமைப்படுத்தப்படுவார்க ள் என்ற பயம் காரணமாக , " பாலுக்கும் காவல்,பூனைக்கும் தோழன் என்ற் கதையாக தீர்மானத்தை நீர்த்து போகச் செய்தது. இன்னிலையில் இலங்கையை சமாதானப்படுத்த நினைத்த இந்திய அரசு, நல்லெண்ணப் பயணமாக மாண்புமிகு எதிர் கட்சித் தலைவி திருமதி சுஷ்மா அவர்கள் தலைமையில் எம்.பிக்கள் குழுவை இலங்கைக்கு நல்லெண்ணப் பயணமாக அனுப்பி இலங்கையை சமாதானப்படுத்த நினைத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்திய அரசு அனுப்பும் எம்.பிக்கள் குழுவில் திருமதி சுஷ்மா மற்றும் திரு வெங்கையா நாயுடு தவிர இதர எம்.பிக்கள் இலங்கை பிரச்சனை பற்றி ஏதும் அறியாதவர்கள். அவர்களது நிகழ்ச்சி நிரலில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களை சந்திக்க திட்டம் இல்லை. அடிக்கடி இலங்கை ராணுவத்தால் சுட்டு கொல்லப்படும் தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி விவாதிக்கவும் நிகழ்ச்சி நிரலில் இல்லை. பிறகு இந்த எம்.பிக்கள் அங்கு செல்லும் நோக்கம்தான் என்ன? வழக்கம்போல் தமிழக முதல்வர் ஜெ...அவர்கள் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி தனது அ.இ.அ.தி.மு.க சார்பில் அனுப்ப உத்தேசித்திருந்த திரு.ரபி பெர்னாட் எம்.பி அவர்களை திரும்ப பெற்றுக்கொண்டபின் , ( தமிழின போலி தலைவர் ) கலைஞரும் ஜெ... பாணியில் தி.மு.க எம்.பி திரு இளங்கோவனை திரும்பப் பெற்றுக்கொண்டார். இன்னிலையில் இந்த நல்லெண்ணப் பயணத்தால் யாருக்கு என்ன பயன் ? |
![]() |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|