Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
எற்கனவே கடந்த தி.மு.க ஆட்சியில் சிறையிலிருந்த ரவுடிகள் பலபேரை தி.மு.க அரசு நன்னடத்தை என்ற போர்வையில் அண்ணா பிறந்தநாள் அன்று தனது சுயநலத்திற்காக விடுதலை செய்தது.
அந்த ரவுடிகள் இடைத்தேர்தல் காலங்களில் தி.மு.கவிற்க்கு வேலை செய்தனர்.அதன் விளைவுதான் திருமங்கலம் இடைதேர்தலில் 100க்கு 100 ஓட்டுப்பதிவானது. அப்படி வேளியே வந்த ரவுடிகள் தி.மு.கவில் சேர்ந்துகொண்டு அதே போலீசை மிரட்டும் வண்ணம் அஞ்சா நெஞ்ஜருக்கு பலவண்ணங்களில் கட்டவுட் வைத்து போலீசை மிரட்டினர். அது அந்தக்காலம். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதை தற்போதய வெடிகுண்டு சம்பவம் மெய்ப்பிக்கின்றது. மதுரையில் ஹெல்மெட் அணியாதவரைப்பிடித்து 50 அல்லது 100 வாங்குவது, வெளியூர் லாரி மற்றும் டாக்சி டிரைவர்களை மிரட்டி மாமுல் வாங்குவது போன்றவை மட்டுமே தனது கடமை என்று மதுரை போலிசார் நினைத்துக்கொண்டுள்ளனர். தினந்தோறும் சகஜமாகிவரும் சங்கிலி பறிப்பு,வெடிகுன்டு கலாச்சாரம்,மற்றும் ரவுடிகளின் தலைநகரமாக மதுரை மாறிக்கொண்டுவருவதைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கடந்தமுறை திரு அத்வானி ஜி வந்தபோதும் திருமங்கலம் அருகே பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்க பட்டது. அதையும் போலீஸ் கண்டுபிடிக்கவில்லை. காலைக்கடன் கழிக்க அந்த ஓடைக்கு அருகே சென்ற ஆடுமேய்க்கும் நபர்கள் கண்டுபிடித்தனர். நேற்று முன்தினம் அண்ணாநகர் அருகே ராமர் கோவில் அருகே சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் அனாமத்தாக அந்த ஆலயபகுதியில் ஒரு சைக்கிள் நிற்பதாக அங்கு வந்த ரோந்து போலிசிடம் (வெடிப்பதற்கு முன்பே) தகவல் கொடுத்தும் அது அல்ட்சியப்படுத்தியுள்ளானர். யானைகளுக்கெல்லாம் பயிற்ச்சி முகாம் அமைப்பது போல் மதுரை போலீசுக்கும் பயிற்ச்சி முகாம் அமைத்து, மதுரை மாநகரின் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த தி.மு.க ஆட்சியில் விடுவிக்கப்பட்ட ரவுடிகளை கண்காணித்து,அவர்களை இரும்புகரம் கொண்டு அடக்கினால் மட்டுமே இதுபோல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கமுடியும். காவல்துறையை தன்வசம் வைத்துள்ள மாண்புமிகு முதல்வர் கவனத்துக்கு இந்தவலைத்தளம் மூலம் இந்த கோரிக்கையை அர்ப்பணிக்கின்றேன்.... |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|