LOGO
Reply to Thread New Thread
Old 04-30-2012, 04:33 AM   #1
Peptobismol

Join Date
Oct 2005
Age
58
Posts
4,386
Senior Member
Default கூட்டுக் குடும்ப வாழ்க்கைமுறை....
அந்தக் காலத்தில் தமிழர்களுக்கு பெருமை சேர்த்ததே அவர்கள் கடைப்பிடித்து வந்த பாரம்பரியமான கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைதான்....

ஜாதி வித்தியாசமில்லாமல் அத்தனை வீடுகளிலும் பின்பற்றப்பட்டு வந்தஅந்த வாழ்க்கை முறை நிச்சயமாக ஒரு பொற்க்காலம் தான்....

மாமனார்,மாமியார்,அவ்வப்போது வந்துபோகும் நாத்தனார்கள்,மைத்துனர்கள்,மற்றபடி அக்கிரகாரத்தில் அக்கம் பக்கம் வசிக்கும் உறவினர்கள், நண்பர்கள், இனப்பெருமக்கள், திண்ணைகள்தோறும் நடைபெறும் சீட்டுக்கச்சேரிகள், வாசல்கள் தோறும் மாமிகளின் வம்பு பேச்சுக்கள், கன்னிப்பெண்களின் கடைக்கண் ஜன்னல் பார்வைகள், அப்பப்பா.......

இந்தக்காலத்து இளைஞர்கர் மற்றும் இளம் பெண்கள் அனுபவிகாத அந்தக்காலத்து பொற்கால , நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள் மறக்கமுடியாதவை....

மீண்டும் அதுபோல் நம் வாழ்க்கை முறை மலருமா ?

எத்தனை சிக்கன்மான வாழ்க்கை முறை...

விஷம்போல் விலைவாசிகள் விண்ணைமுட்டும் இக்காலத்தில் அதுபோல் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை திரும்பி வந்தால் அனைவர் வாழ்க்கையிலும் விடியல் கிடைக்கும்....
Peptobismol is offline


Old 04-30-2012, 03:02 PM   #2
Beerinkol

Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
Default
I am yearning for a nuclear family system for it has its own values and advantages. Each member had concern and respect
for the other. There was camaraderie between the members. The children were raised jointly without discrimination. The expenses were
shared. The life was enjoyable. It was a golden era which would not dawn again.

PC RAMABADRAN
Beerinkol is offline


Old 04-30-2012, 03:57 PM   #3
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default
It is encouraging to note that at least people living in metropolitan cities are waking up to the

realities and advantages of a joint family system.


It is NOT only a money saver plan but also binds people together-who are otherwise hanging

loose, unconnected and LONELY.
doctorzlo is offline


Old 04-30-2012, 04:14 PM   #4
Fegasderty

Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
Default
குடும்பமா? குழப்பமா?




கூட்டுக் குடும்பம் என்னும் அழகிய ஆலமரம்
பட்டுப்போய் விழுகின்ற அவலம் கண்டீர்!
“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று
கூவினாலும் காதில் விழுவதே இல்லை!

ஒருவர் ஊதியத்தில் வாழ இயலாமல்,
இருவரும் செல்வர் வெளியே பணி புரிய.
பூட்டிய கதவுகளால் வரவேற்கப்படும் சிறார்,
மாட்டிக் கொள்ளுவர் கெட்ட பழக்கங்களில்.

என்ன செய்தாலும் தெரியப் போவதும் இல்லை;
என்ன என்று கேட்க யாருக்கும் நேரமும் இல்லை;
தானே தனிக்காட்டு ராஜா என்று இருப்பதனால்,
தன் மனம் போனபடி எல்லாம் நடக்கலாமே!

கணவன் மனைவியர் இடையே தோன்றும்
பிணக்குகள், சில பல சிறு பிரச்சனைகள்.
பெரிவர்கள் இருந்தால் பாங்காய் பேசி,
சரி செய்து விடுவார்கள் பிரச்சனைகளை.

வளர்ந்து வரும் விவாஹரத்துக்கள் வரை,
வளர விடமாட்டார்கள் சிறு விவகாரங்களை.
வளரும் குழந்தைகளை மிகவும் நோகடிப்பது,
தளரும் தன் தாய் தந்தையரின் உறவல்லவா?

தன் வீடும், கூடும் காலியாகி விட்டதால்,
தனியே தவித்து, வெறுமையில் வாடி;
மனோ வியாதிகளும், உடல் வியாதிகளும்,
மாறி மாறித் தாக்குவதால் துவண்டு போய்;

வாழ்வே சுமையாகிவிட்ட வயோதிகர்கள்,
வாழ்வில் எதிர்நோக்குவது ஒன்றே ஒன்று.
தம் வாரிசுகளின் வாரிசுகளுடன் கூடி,
தம் மீதி நாட்களைக் கழிப்பதே ஆகும்!

மனோ வியாதிகள் உற்பத்தி ஆகாது.
மறந்தே போய்விடும் உடல் வியாதிகள்.
மாசற்ற மழலைகளின் ஸ்பரிசத்தால்
மாறியே போய்விடும் அத்தனையுமே!

அனைவருக்குமே நன்மை பயக்கும் அந்த
அருமையான வாழ்க்கை முறையை மீண்டும்
அரங்கேற்ற வேண்டாமா? ஆராய்ந்து கூறுவீர்!
அதற்கு ஆவனவற்றை செய்ய வேண்டாமா?

“கூட்டுக் குடும்பத்தில் குழப்பமே மிஞ்சும்!”
கூற்றில் உண்மை கடுகளவும் இல்லை.
தனிக் குடும்பத்தில் தகராறுகள் இல்லையா?
தனி நபர்கள் அதில் தலையிடுவது இல்லையா?

கூடி வாழும் போது பொறுமை வளரும்;
பொறுப்பும், சகிப்புத் தன்மையும் வளரும்;
பகிர்ந்து உண்ணும் நல்ல பண்புகளும்,
பரந்த மனப்பான்மையும் ஓங்கி வளரும்.

கூடி வாழுகின்றன கொடிய விலங்குகள் கூட;
கூடி உண்கின்றன கரிய காகங்களும் கூட;
கூடி வாழ்கின்றன எறும்புகளும், தேனீயும்;
கூடி மனிதர்கள் வாழ்வது எப்போது?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
Fegasderty is offline


Old 04-30-2012, 04:43 PM   #5
PhillipHer

Join Date
Jun 2008
Age
58
Posts
4,481
Senior Member
Default
அருமையான விளக்கங்கள். எனினும் இக்கால இளசுகளுக்கு புரியுமா? என்பது சந்தேகமே...

தாந்தோன்றித்தனமாக வளர்ந்தவர்கள்... கூட்டுக்குடும்ப வாழ்க்கைமுறையை ...

பன்றிக்கூட்டம் என்று ஏளனமாக யோசிக்கவைக்கும்...

ஒருவரை ஒருவர் அண்டி வாழ்ந்தால் விலைவாசி உயர்வுக்கு விடைகொடுக்கலாம்....

குழந்தையை பார்த்துக்கொள்ள ஆயாவை தேடி ஓடவேண்டிய அவலத்துக்கு விடை கொடுக்கலாம்....

ஆபிசுக்கு போனபின் காஸ் அடுப்பை ஆப் செய்துவிட்டோமா ? என்ற சந்தேகத்துக்கு விடை கொடுக்கலாம்....

மாலை வீடு திரும்பும் வரை பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள் என்று கவலைப்படவேண்டாம்.....

கூட்டுக்குடும்பமே ஒரு தலை வலி என்று எண்ணாமல்.....

தலைவலி,காய்ச்சல் வந்தால் அனாதைபோல் தவிக்கவேண்டியதில்லை.....

இன்றய இளைஞர்களுக்கு உரைத்தால் சரி.....உணர்ந்தால் சரி....
PhillipHer is offline


Old 04-30-2012, 08:36 PM   #6
Drugmachine

Join Date
Apr 2006
Posts
4,490
Senior Member
Default
Now joint family is like a broken glass. In those days there was no tv, no pc and children are compelled to play either with own relatives are other neighbours. During that time friendship has developed and there was very good understanding between wifes of brothers. Mother was the head of the family and controlling all the sons and daughter in laws. Now a days thani kudithanam is the first step every son or daughter is planning immediately after marriage.
Drugmachine is offline


Old 05-01-2012, 01:46 AM   #7
Fegasderty

Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
Default
Freedom???? Responsibility???

Loving family??? Loneliness???

Money saving??? Multiple expenditure???

Help and be helped??? Suffer and make other suffer???
Fegasderty is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 03:53 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity