Reply to Thread New Thread |
07-13-2012, 05:29 PM | #21 |
|
This answer is from the net (from an aanmeegam blogspot site)
ஆன்மீகம்: தெரிந்த கேள்விகள் தெரியாத பதில்கள் - 2 10. சங்கம், பதுமம் என்பது மிகப்பெரிய எண்களைக் குறிக்கும். சங்கம் என்பது நூறு கோடான கோடி. மகாசங்கம் என்பது ஆயிரம் கோடான கோடி. பதுமம் என்பது கோடான கோடி. மகாபதுமம் என்பது பத்து கோடான கோடி. சங்கநிதி, பதுமநிதி என்பது குபேரனின் இருபுறமும் உள்ளவை. இது குபேரன் பலப்பல கோடிகளுக்கு அதிபதி என்பதைக் குறிக்கும் sanganidhi is 100 times that of padhuma nidhi according to the above. But it doesn't jibe with the figures given in post #16. I don't want either of these two nidhis. Just leave me alone!!!!!!!!!!!!!! |
|
07-14-2012, 04:38 PM | #22 |
|
ஒரு வருடதிற்க்கு முன்பு எனக்கும் ஆப்பிரிக்க நாடான " ரிப்பப்ளிக் ஆப் கானா " விலிருந்து எட்சன் மில்ஸ் என்பவர் மெயில் அனுப்பினார். தான் அன்னாட்டு வங்கி ஒன்றின் ஆடிட் ஆபீசர் என்றும்,2008-09 ஆண்டு கணக்கு தணிக்கையின்போது பலலட்சம் மதிப்பினாலான் அமெரிக்க டாலர்கள் அவரது வங்கியில் கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதைவைத்து இந்தியாவில் ரியலெஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யவிரும்புவதாகவும்,அதை டிரங்க்பெட்டியில் வைத்து இந்தியாவிற்க்கு அனுப்பிவைத்ததாகவும்,என்னிடம் ஒப்படைக்க இரண்டு டிப்ளமேட்ஸ்களை அனுப்பிஉள்ளதாகவும், ஆனால் டில்லி ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் அதற்க்கு ரூ 17500/- கட்டினால்தான் வெளியே கொண்டுவரமுடியும் என்றும் எனக்கு டில்லியிலிருந்து பேசுவதாக ஒரு செல்போனிலிருந்து அழைப்பு வந்தது.
அந்த எண்ணைக்குறித்துவைத்துக்கொண்ட நான், அவனிடமிருந்து அடுத்த அழைப்பு வரும்வரை காத்திருந்தேன். அடுத்த அழைப்பும் வந்தது. அதில் அவன் ஒரு ஸ்டேட் பாங்க் எண்ணைக் குறிப்பிட்டுஇருந்தான். டில்லி அக்கவுண்ட் என்று பூ சுற்றினான். உலகுக்கே அல்வா குடுக்கும் திருநெல்வேலிக்காரனான என்னிடம் பலிக்குமா? நான் அந்த வங்கியின் கிளை என்ன என்று தேடினால் அது " அஸ்ஸாம் கவுகாட்டி கிளை " என்று தெரிந்தது. உடனே சந்தேகம் மேலும் வலுப்பட்ட நான் " டிரேஸ் த மொபைலில் அந்த எண் எந்த மானிலத்தைச்சேர்ந்தது? " என்று பார்தேன். அதுவும் அஸ்ஸாம் கவுகாத்தி என்று காட்டியது. அந்த தொலைபேசி நபர் மீண்டும் மீண்டும் என்னை தொடர்புகொண்டார். அதே வேளையில் ரிப்பப்ளிக் ஆப் கானாவிலிருந்து எட்சன் மில்ஸ் என்பவனும் பேசினான். டிரங்க் பெட்டி கொடுப்பதாக இருந்தால் மதுரைக்கு கொண்டுவந்து கொடு. பெட்டி வராமல் அதை சோதித்து பார்க்காமல் சல்லி பைசா கொடுக்கமுடியாது என்று கராராக சொல்லி விட்டேன். இத்தனைக்கும் அவன் பாக்கிங்க் பிக்சர்ஸ் என்று கட்டு கட்டாக டாலர் நோட்டுக்களை ஒரு பெட்டியில் அடுக்குவதுபோல் படம் எல்லாம் அனுப்பினான். போடா அதுக்கு வேற ஆளைப்பார்ன்னு சொல்லிவிட்டேன். |
|
07-15-2012, 02:07 AM | #23 |
|
|
|
07-15-2012, 02:13 AM | #24 |
|
|
|
07-15-2012, 03:21 AM | #25 |
|
பழய திரைப்படம் ஒன்றில் கலைவாணர் திரு என்.எஸ்.கே அவர்கள் கூறுவார்," புலிக்கு பயந்தவன் எல்லாம் என்மேலே வந்து விழுங்கடா " என்று.
புலி வந்தால் மேலே இருப்பவனை தூக்கிக்கொண்டு சென்றுவிடும்.கீழே இருக்கும் இவர் தப்பிக்கலாம் அல்லவா? அதுபோல்," கோடி " வேணும்ங்கறவங்க எல்லாம் ஒரு லட்ச ரூபாயை என்கையில் கொடுத்துவிட்டு ஒருவருஷம் கழித்து வரவும் " என்று வாசலில் போர்டு வைக்கலாமான்னு யோசிக்கிறேன். நம்ம ஜனங்க ரொம்ப நல்லவங்க. யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடறாங்க. |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|