Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
namaste.
Let me start a compilation of Tamizh proverbs about men, hoping that it might assuage our offended women members. After all, men should be capable of laughing at themselves, shouldn't they be? தமிழ்ப் பழமொழிகளில் ஆண்கள் ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, ஐயங்காருக்கு மூன்று கொம்பு. அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும். அய்யர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா? அத்தான் செத்தால் மயிராச்சு. கம்பளி மெத்தை நமக்காச்சு. அஞ்சியவனைக் குஞ்சும் விரட்டும். அசலான் வீட்டில் ஐந்து நாள் பட்டினி கிடப்பான். அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் ஒழுங்காகாது. அயல்வீட்டான் பிள்ளை ஆபத்துக்கு உதவுமா? அதிகாரிக்கு முன்னும் கழுதைக்குப் பின்னும் போகக்கூடாது. அடித்தவன் பின்னால் போகலாம் நடித்தவன் பின்னால் போகாதே. (10) அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாசம் பேய்தான். அடாது செய்தவன் படாத பாடுபடுவான். அம்மா பாடு அம்மணமாம். பிள்ளை கும்பகோணத்தில் கோதானமாம். அவசரக் காரனுக்கு புத்தி மட்டு. அதிகாலை எழாதவன் வேலை அழுதாலும் தீராது. அற்பக் கோபத்தால் அறுந்த மூக்கு ஆயிரம் சந்தோஷத்தால் திரும்ப வருமா? அன்புள்ள சிநேகிதனை ஆபத்தில் அறியலாம். அமாவாசை வந்தால் ஐயன் பாடு கொண்டாட்டம். அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் அகாது. அறம் கெட்ட நெஞ்சு திறம் கெட்டு அழியும். (20) (to dig up for more...) |
![]() |
![]() |
#2 |
|
|
![]() |
![]() |
#3 |
|
ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கமாட்டான்.
ஆசானுக்கும் அடவு தப்பும், ஆனைக்கும் அடி சறுக்கும். ஆசை இருக்கு தாசில் பண்ண அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க. ஆணை அடித்து வளர் பெண்ணைப் போற்றி வளர். ஆண்டி வேடம் போட்டும் அலைச்சல் தீரவில்லை. ஆண்டிகள் கூடி மடம் கட்டியதுபோல. ஆட்டாளுக்கு ஒரு சீட்டாள். அடப்பக்காரனுக்கு ஒரு துடைப்பக் கட்டை. இடக்கனுக்கு வழி எங்கே? கிடக்கறவன் தலை மேலே. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான். இடம் வலம் தெரியாதவனோடு இணக்கம் பின்னால் ஆகாது. (30) இட்டதெல்லாம் பயிராகுமா? பெற்றதெல்லாம் பிள்ளையாகுமா? இரக்கம் இல்லாதவன் நெஞ்சம் இரும்பிலும் கொடியது. இரப்பவனுக்குப் பஞ்சம் என்றுமில்லை. இராப்பட்டினி கிடந்தவன் உரித்த வாழைப்பழம் இருக்கிறதா என்று கேட்டானாம். இருப்பதை விட்டு பறப்பதைப் பிடித்தானாம். இலங்கையில் பிறந்தவனெல்லாம் இராவணன் இல்லை. இல்லானை இல்லாளும் வேண்டாள். இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை. இறந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி. ஈயாத லோபி இருந்தென்ன போயென்ன? (40) ஈயான் தோட்டத்து வாழை இரண்டு குலை தள்ளும். ஈரச் சேலைப்போட்டுக் கழுத்தை அறுப்பான். ஈனனுக்கு இரு செலவு. |
![]() |
![]() |
#4 |
|
உச்சனை உச்சன் பார்த்தால் மச்சு வீடும் குச்சு வீடாகும்.
உஞ்சவிருத்திக்காரனுக்கு அஞ்சு பொண்டாட்டி. உடுத்துக் கெட்டான் துலுக்கன்; உண்டு கெட்டான் மாத்துவன். உட்கார்ந்தவன் காலில் மூதேவி; ஓடுபவன் காலிலே சீதேவி. உண்டு ருசி கண்டவனும் பெண்டு ருசி கண்டவனும் விடமாட்டான். உண்டார் மேனி கண்டால் தெரியும். உண்மையைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன். (50) உத்தியோகம் புருஷ லட்சணம். உத்திராட்சப் பூனை உபதேசம் பண்ணியது போல. உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பான். உரிச்ச வாழைப் பழத்தை ஒன்பது வெட்டு வெட்டினானாம். உழுகிறவன் கணக்குப் பார்த்தால் உலக்கை மிஞ்சாது. உள்ளதும் கெட்டதடா னொள்ளைக் கண்ணா! உறவு போகாமல் கெட்டது; கடன் கெளாமல் கெட்டது. ஊசி போகிறது கணக்குப் பார்ப்பான், பூசணிக்காய் போகிறது தெரியாது. ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும். ஊராருக்கெல்லாம் ஒரு வழி இவனுக்கு ஒரு வழி. (60) ஊரார் நாய்க்குச் சோறிட்டாலும் அது உடையவன் வீட்டில்தானே குரைக்கும்? ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். ஊருக்காக இரும்பு அடிக்கறவன் வீட்டுக்குத் தவிடு இடிக்க முடியவில்லையாம். ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி. ஊர் அறிந்த பிராமணனுக்குப் பூணூல் எதற்கு? ஊர் பேர் அறியாதவன் ஊர்வலம் வருகிற மாதிரி. |
![]() |
![]() |
#6 |
|
namaste smt.VR.
You want just 1000 proverbs? Might probably reach the target with just these jeers on men. Here is some more: எகனை முகனை பார்க்கிறான். எங்கப்பன் குதிருக்குள் இல்லை. எங்கும் சுற்றி ரங்கநாதா என்றான். எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன். (70) எடுக்கிறது பிச்சை ஏறுவது பல்லாக்கு. எட்டினால் குடுமியைப் பிடி எட்டாவிட்டால் காலைப்பிடி. எண் மிகுந்தவனே திண் மிகுந்தவன். எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா? எழுத்து அறிந்த வள்ளுவன் கிழித்து எறிவான் ஓலை. எள் என்பதற்கு முன்னே எண்ணையாய் வந்து நிற்கிறான். ஏடு அறியாதவன் பீடு பெறாதவன். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா? ஏண்டா புளிய மரத்தில் ஏறினாய் என்றால் பூனைக் குட்டிக்குப் புல் பறிக்க என்கிறான். ஏமாந்த சோணகிரி. (80) ஏமாந்தால் நாமம் போடுவான். ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல் செய்கிறவனுக்குத் தலைச்சுமை. |
![]() |
![]() |
#7 |
|
|
![]() |
![]() |
#8 |
|
namaste smt.VR.
I understand your problem: shall be glad to help you as much as I can. Here are a bunch of over 60 proverbs, most of which are not likely to be in your compilation. அகங்கையிற் போட்டுப் புறங்கையை நக்கலாமா? அகடவிகடமாய்ப் பேசுகிறான். அகதிக்கு ஆகாயம் துணை. அகதி சொல் அம்பலம் ஏறாது. அகதி தலயிற் பொழுது விடிகிறது. அகதியைப் பகுதி கேட்கிறதா? அகப்பட்டுக் கொள்வேன் என்றா களவன் களவெடுக்கிறது? அகவிலை அறியாதவன் துக்கம் அறியான். அகா நாக்காய்ப் பேசுகிறான். அகிர்த்தியம் செய்கிறவன் முகத்தில் விழிக்கிறதா? அகோர தபசி விபரீத சோரன்/நிபுணன். அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பிள்ளை. அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா? அக்கிரகார்த்துக்கு ஆடு வந்தால், ஆளுக்கு ஒரு மயிர். அக்கிரகார்த்து நாய் பிரதிஷ்டைக்கு விரும்பினதுபோல. அக்குத்தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் என்ன? அங்காங்கு வைபோகமாயிருக்கிறான், இங்கே பார்த்தால் அரைக்காசு முதலும் இல்லை. அங்கிடுதொடுப்பிக்கு அங்கிரண்டு குட்டு, இங்கிரண்டு சொட்டு. அங்கும் இங்கும் தப்பி அகப்பட்டுக்கொண்டான் தும்மட்டிப்பட்டன். அங்கும் இங்கும் இருப்பான், ஆக்கின சோத்துக்குப் பங்கும் இருப்பான். அசலும் பிசலும் அறியாமல் அடுத்தவனிக் கெடுக்கப் பார்க்கிறான். அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான். அஞ்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான். அஞ்சினவனைப் பேய் அடிக்கும். அஞ்சி ஆண்மை செய். அஞ்சினாரைக் கெஞ்சவைக்கும், அடித்தாரை வாழ்விக்கும். அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாசமெல்லாம் பேய். அஞ்சு காசுக்குக் குதிரையும் வேண்டும், அதுவும் ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும். அஞ்சு பணம் கொடுத்தாலும் இத்தனை ஆத்திரம் ஆகாது. அஞ்சு வயது ஆண்பிள்ளைக்கு ஐம்பது வயதுப் பெண் கால் முடக்க வேண்டும். அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான். அஞ்சூர்ச் சண்டை கண்டாங்கி, ஐங்கல அரிசி ஒரு கவளம். அடக்கமுடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார். அடக்குவாரற்ற கழுக்காணியும் கொட்டுவாரற்ற மேளமுமாய்த் திரிகிறான். அடங்காத மனைவியும் ஆங்கார புருஷனும். அடா என்பான், வெளியே புறப்படான். அடி அதிரசம் குத்து கொழுக்கட்டை. அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவுவார்களா? அடித்த ஏருக்கும் குடித்த கூழுக்கும் சரி. அடிப்பானேன், பிடிப்பானேன்? அடக்குகிற வழியில் அடக்குவோம். அடிமை படைத்தால் ஆள்வது கடன். அடியும் பட்டுப் புளித்த மாங்காயா தின்னவேண்டும்? அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டாரைக் கன்னம் இடுகிறான். அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும். அடுத்துக் கெடுப்பான் கபடன், தொடுத்துக் கெடுப்பாள் வேசி. அடுத்து வந்தவர்க்கு ஆதரவு சொல்லுவோன் குரு. அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினாற்போல. அண்டை வீட்டுச்சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி. அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை முட்டித் தீர்ப்பான். அண்டையிற் சமர்த்தன் இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும். அண்ணனிடத்தில் ஆறுமாதம் வாழ்ந்தாலும், அண்ணியிடத்தில் அரை நாழிகை வாழலாமா? அண்ணனுக்குப் பெண் பிறந்தால் அத்தை அசல் நாட்டாள். அண்ணனும் தம்பியும் சென்மப் பகைவர். அண்ணனைக் கொன்ற பழி, சந்தையிலே தீர்த்துக்கொள்ளுகிறது போல. அண்ணன் பெரியவன், அப்பா நெருப்பு ஊது. அண்ணன் கொம்பு பம்பழ பளாச்சு. அண்ணன் உண்ணாதது எல்லாம் மைத்துனிக்கு லாபம். அண்ணன் தம்பி வேண்டும் இன்னம் தம்பிரானே. அண்ணாவியார் விழுந்தால் அதைவுமுறை. அண்ணாவி பிள்ளைக்குப் பணம் பஞ்சமா, அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் பஞ்சமா? அண்ணாமலையார் அருளுண்டானால் மன்னார்சாமி மயிரைப் பிடுங்குமா? அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை. அதிக ஆசை அஷ்ட தரித்திரம். After you go through your pick, let me know how much you still need to meet your target. |
![]() |
![]() |
#9 |
|
Dear Mr. saidevo,
Thank you for your interest in helping me meet my target. ![]() Right now I am getting ready for the 5 months' long visit to USA. I will let you know if I need more proverbs and how many I need at the earliest. The latest bunch indeed reminds me of the red-carpet-walker and all-star-gazer Mr. Ashok Indeed! Is he still around incognito? ![]() |
![]() |
![]() |
#10 |
|
அதிகாரியும் தலையாரியும் ஒன்றானால், விடியுமட்டும் திருடலாம்.
அதிகாரி வீட்டில் துரிடி தலையாரி வீட்டில் வைத்ததுபோல. அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியையே உடைக்கும். அதிர்ஷ்டம் தொட்ட கழுக்காணி. அதிர்ஷ்டம் இல்லாதவனுக்குக் கலப்பால் வந்தாலும் அதையும் பூனை குடிக்கும். அதிலே குறைச்சல் இல்லை ஆட்டடா பூசாரி. அது அதற்கு ஒரு கவலை ஐயாவுக்கு எட்டு கவலை. அத்தம் மிகுதியினால் அல்லவோ அம்பட்டன் பெண் கேட்கிறான்? அத்தான் செத்தால் மயிராச்சு, கம்பளி மெத்தை நமக்காச்சு. அத்து மீறிப்போனான், பித்துக்குளி ஆனான். அந்தம் சிந்தினவனுக்கு அழகு ஒழுகுமா? அந்தணர் மனையிற் சந்தனம் மணக்கும். அந்தரத்தில் கோல் எறிந்த அந்தகன் போல. அந்தூது நெல்லானேன். அப்பச்சி குதம்பையைச் சூப்பப் பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறதுபோல. அப்பச்சி கோவணத்தைப் பருந்து கொண்டோடுகிறது, பிள்ளை வீரவாளிப் பட்டுக்கு அழுகிறது. அமஞ்சி உண்டோ குப்புநாய்க்கரே என்பானேன்? அமர்த்தனுக்கும் காணி வேண்டாம், சமர்த்தனுக்கும் காணி வேண்டாம். அம்பட்டக்கிருதும் வண்ணார் ஒயிலும். அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருக்காணியா? அம்பல்லத்தில் ஏறும் பேச்சை அமசடக்கம் பண்ணப் பார்க்கிறான். அம்மானும் மருமகனும் ஒரு வீட்டுக்கு ஆள் அடிமை. அம்மான் வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக் கேட்க வேண்டுமா? அயலார் உடைமையில் அந்தகன்போல் இரு. அயோக்கியர் அழகு அபரஞ்சிச் சிமிழில் நஞ்சு. அரசன் இல்லாத நாடு, புருஷன் இல்லாத வீடு. அரசன் வழிப்பட்டது அவனி. அரசனுக்கு வலியார் அஞ்சுவது எளியார்க்கு அனுகூலமாயிருக்கிறது. அரசனுக்குத் துணை வயவாள். அரசனும் அரவும் சரி. அரசனும் நெருப்பும் பாம்பும் சரி. அரி அரி என்றால் ராமா ராமா என்கிறான். அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிக்கிரமம் பண்ணலாமா? அரிசிக்குத் தக்க உலையும் ஆமுடையானுக்குத் தக்க வீறாப்பும். அரிசிப் பகையும் ஆமுடையான் பகையும் உண்டா? அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீடு. அரியது செய்து எளியதற்கு ஏமாந்து திரிகிறான். அருமை மருமகன் தலை போனாலும் போகட்டும், ஆதிகாலத்து உரல் போகல் ஆகாது. அரைத்து மீந்தது அம்மி, சிரைத்து மீந்தது குடுமி. அரைப்பணச் சேவகம் ஆனாலும் அரண்மனைச் சேவகம்போல் ஆகுமா? அரைப்பணம் கொடுக்கப் பால்மாரி, ஐம்பது பொன் கொடுத்துச் சேர்வை செய்த கதை. அல்லாதவன் வாயில் கள்ளை வார். அவகடம் உள்ளவன் அருமை அறியான். அவமானம் பண்ணி வெகுமானம் பேசுகிறான். அவலமாய் வாழ்பவன் சவலமாய்ச் சாவான். அவனுக்கும் இவனுக்கும் எருமைச்சங்காத்தம். அவனே இவனே என்பதைவிடச் சிவனே சிவனே என்கிறது நல்லது. அவன் நா அசைய நாடு அசையும். அவன் ஒரு குளிர்ந்த கொள்ளி. அவன் உள்ளெல்லாம் புண், உடம்பெல்லாம் கொப்புளம். அவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்ன செய்வான்? அவன் உனக்குக் கிள்ளுக்கீரையோ? அவன் கையைக்கொண்டே அவன் கண்ணில் குத்தினான். அவன் என் தலைக்கு உலை வைகிறான். அவன் ஓடிப்பாடி நாடியில் அடங்கினான். அவன் வல்லாளகண்டனை வாரிப்போட்டவன். அவன் கொஞ்சப்புள்ளியா? அவையிலும் ஒருவன் சவையிலும் ஒருவன். அழுகள்ளர் தொழுகள்ளர் ஆசாரக்கள்ளர். அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது. அழுவார் அற்ற பிணமும் ஆற்றுவார் அற்ற சுடலையும். அளகாபுரியிலும் விறகுதலையன் உண்டு. அள்ளாது குறையாது சொல்லாது பிறவாது. அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன். அறக்காத்தான் பெண்டிழந்தான், அறுகாதவழி சுமந்து அழுதான். அறப்படித்தவர் கூழ்ப்பானையில் விழுந்தார். அறப்பத்தினி ஆமுடையானை அப்பா என்று அழைத்த கதை. அறிஞர்க்கழகு அகத்துணர்ந்து செய்தல். அறிந்த பார்ப்பான் சிநேகிதன் ஆறு காசுக்கு மூன்று தோசைய? அறிந்தும் கெட்டேன் அறியாமலும் கெட்டேன் சொறிந்து புண் ஆயிற்று. அறிந்தவனென்று கும்பிட அடிமை வழக்கிட்ட கதை. அறிய அறியக் கெடுவார் உண்டோ? அறியாத நாள் எல்லாம் பிறவாத நாள். அறியாமல் தாடியை வளர்த்து அம்பட்டன் கையிற் கொடுக்கலாமா? அறிவினல் தமக்கு ஆயிரம் உரைக்கிலும் அவம். அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம். அறிவேன் அறிவேன் ஆவிலை புளியிலைபோல் இருக்கும். அறுதலி மகனுக்கு அங்கம் எல்லாம் சேட்டை. அற்பர் சிநேகிதம் பிராண கண்டிதம்/சங்கடம். அற்பன் பணம் படைத்தால் வைக்க வகை அறியான். அன்றுகொள், நின்றுகொள், என்றும் கொள்ளாதே. அன்று எழுதினவன் அழித்து எழுதுவானா? அன்னம் மிகக் கொள்வானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர். அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இடலாமா? அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும். அன்னைக்கு உதவாதான் ஆருக்கு உதவுவான்? |
![]() |
![]() |
#11 |
|
Another bunch of sixty:
ஆகடியக்காரன் போகடியாய்ப் போவான். ஆகாத நாளையில் பிள்ளை பிறந்தால், அண்டை வீட்டுக்காரனை என்ன செய்யம்? ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாச்சியம். ஆகாதவற்றை ஏற்றால் ஆய்ந்து ஏற்றுக்கொள். ஆகாத்தியக்காரனுக்குப் பிரம்மகத்திக்காரன் சாட்சியா? ஆகாயத்தில் பறக்க உபதேசிப்பேன், என்னைத் தூக்கி ஆற்றுக்கு அப்பால் விடு என்றான் குரு. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள், தொண்ணூறு நாளும் போனால் துடைப்பக்கட்டை. ஆடு கொழுத்தால் இடையனுக்கு லாபம். ஆடு கொண்டவன் ஆடித்திரிவான், கோழி கொண்டவன் கூவித்திரிவான். ஆடு கொடாத இடையன் ஆவைக் கொடுப்பானா? ஆடு கோனானின்றித் தானாய்ப் போகுமா? ஆடுங்காலத்துத் தலைகீழாக விழுந்தால் ஓடும் கப்பரையும் உடையவன் ஆவான். ஆடுதவுமா குருக்களே என்றால், கொம்பும் குளம்பும் தவிரச் சமூலமும் ஆகும் என்கிறார். ஆடு பிழைத்தால் மயிர்தானும் கொடான். ஆட்காட்டி சொந்தக்காரனையும் திருடனையும் காட்டிக்கொடுக்கும். ஆட்காட்டி தெரியாமல் திருடப்போகிறவன் கெட்டிக்காரனோ, அவன் அறியாமல் அவன் காலடிபிடித்துப் போகிறவன் கெட்டிக்காரனோ? ஆட்டாளுக்கு ஒரு மோட்டாள். ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, ஐயம்பிடாரிக்கு மூன்று கொம்பு. ஆட்டுக்கும் மாட்டுக்கும் முறையா, காட்டுக்கும் பாட்டுக்கும் வரையா? ஆட்டுத் தலைக்கு வண்ணான் பறக்கிறதுபோல. ஆணுக்கு அவகேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழைகேடு செய்யலாகாது. ஆணையும் வேண்டாம் சத்தியமும் வேண்டாம், துணியைப்போட்டுத் தாண்டு. ஆண்ட பொருளை அறியாதார் செய்த தவம் மாண்ட மரத்துக்கு அணைத்த மண். ஆண்டி கிடப்பான் மடத்திலே, சோளி கிடக்கும் தெருவிலே. ஆண்டிக்கு வாய்ப்பேச்சு, பார்ப்பானுக்கு அதுவும் இல்லை. ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான். ஆண்டியும் தாதனும் தோண்டியும் கயிரும். ஆண்டியைக் கண்டால் லிங்கன் என்கிறான், தாதனைக் கண்டாள் ரங்கன் என்கிறான். ஆண்டியும் ஆண்டியும் கட்டிக்கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக்கொள்ளும். ஆண்டிவேஷம் போட்டும் அலைச்சல் தீரவில்லை. ஆண்பிள்ளைகள் ஆயிரம் ஒத்திருப்பார்கள், அக்காள் தங்கச்சி ஒத்திரார்கள். ஆதாயமில்லாத செட்டி ஆற்றோடு போவாணா? ஆஸ்தியுள்ளவன் ஆஸ்திக்கு அடிமை. ஆமுடையான் அடித்ததற்கு அழவில்லை, சக்களத்தி சிரிப்பாலென்று அழுகிறேன். ஆமுடையான் வட்டமாய் ஓடினாலும் வாசலால் வரவேண்டும். ஆமுடையானுக்கு பொய் சொன்னாலும் அடுப்புக்குப் பொய் சொல்லலாமா? ஆமுடையான் பலம் இருந்தால் குப்பை ஏறிச் சண்டை செய்யலாம். ஆய உபாயம் அறிந்தவன் அரிதல்ல வெல்லுவது. ஆயத்திலும் நியாயம் வேண்டும். ஆயத்துறையில் அநியாயம் செய்யாதே. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன். ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திற் கண் வேண்டும். ஆரும் இல்லாத ஊரிலே அசுவமேதயாகம் செய்தானாம். ஆரோ செத்தான் எவனோ அழுதான். ஆல்போல் விழுதுவிட்டு, அறுகுபோல் வேரோடி, மூங்கில்போற் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருக்க. ஆவத்தை அடரான் பாவத்தைத் தொடான். ஆவல்மாத்திரம் இருந்தால் என்ன, அன்னம் இறங்கினால் அல்லவோ பிழைப்பான்? ஆவேறு நிறமானாலும் பால்வேறு நிறமாமோ? ஆழாக்கு அரிசி மூழாக்குப்பானை முதலியார் வருகிற வீறாப்பைப் பாரும். ஆளுக்கு ஒரு குட்டுக் குட்டினாலும் அவனுக்குப் புத்தி வராது. ஆளுக்கு ஒரு குட்டுக் குட்டி அடியேன் தலை மிடாப்போல. ஆளை ஆள் அறிய வேண்டும் மீனைப் புளியங்காய் அறிய வேண்டும். ஆள் மெத்தக் கூடினால் மீன் மெத்தப் பிடிக்கலாம். ஆறின புண்ணிலும் அசடு நிற்கும். ஆறினால் அச்சிலே வார் ஆறாவிட்டால் மிடாவிலே வார். ஆறு காதம் என்கிறபோதே கோவணத்தை அவிழ்ப்பானேன்? ஆறு கொண்டது பாதி தூறு கொண்டது மீதி. ஆறு நீந்தினவனுக்கு வாய்க்கால் எவ்வளவு? ஆற்றிலே போகிற தண்ணீரை அப்பா குடி, ஐயா குடி. ஆற்றிலே கணுக்கால் தண்ணீரிலும் அஞ்சி நடப்பது உண்டு. |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|