Reply to Thread New Thread |
![]() |
#22 |
|
|
![]() |
![]() |
#23 |
|
|
![]() |
![]() |
#24 |
|
|
![]() |
![]() |
#25 |
|
|
![]() |
![]() |
#27 |
|
தென்னை மரம்பற்றிய சொற்கள்
---------------------------- தென்னை என்ற மரப்பெயரில், ஈற்றில் நின்ற "ஐ" விகுதியாகும். எனவே. சொல்லின் பகுதி: "தென்" என்பதே. தென் என்ற அடிச்சொல், தென் திசையையும் குறிப்பதால், தென்னை தமிழ் நாட்டின் தெற்கிலிருந்து கொண்டுவரப்பட்ட மரமென்பர். அது நிற்க: தென் > தென்னை. தென் > தெங்கு. (தென்+கு > தெங்கு.) திசையைக் குறிக்கும் தென்+கு என்ற புணர்ப்பு "தெற்கு" என்று வர, மரத்தைக் குறிக்கும் தென்+கு என்பது தெங்கு என்றானது. இதிலிருந்து என்ன தெரிகிறது? சொல்லாக்கத்தில் வெவ்வேறு சொற்களைப் படைக்க, வெவ்வேறு வழிகள் பின்பற்றப்படுகின்றன என்பதுதான். இவற்றைக் கூர்ந்து கவனிக்காமல், வாதங்கள் செய்வதில் பயனில்லை. இதை இப்படிக் காட்டாமல், மாற்றுவழியாக: தென் > தெம் > தெங்கு எனலாம். இது ஓர் உத்திதான். தெங்கு+ காய் = தேங்காய்! தெங்குக்காய் என்று வரவில்லை! ஏன் வரவில்லை ? (ஆனால் தெங்கங்காய் என்று கவிதையில் வரும்). தெம் என்ற திரிபு அடியின் முதல் நீண்டது என்று சொல்லலாம். தென்காய் > தேன்காய் > தேங்காய் ஆகலாமே! அப்படியானால் இடையில் ஏன் தேன் வழிகிறது என்று கேட்கத் தோன்றுகிறதா? தென் > தெம் > தேம் > தேம்+காய் > தேங்காய் என்று மடக்கலாம். அதுவும் ஒரு தந்திரம்தான். தென்னை+தோப்பு , இது தென்னைத் தோப்பு என்று வராமல் தென்னந்தோப்பு என்றன்றோ வருகிறது. "தெங்கு நீண்டு ஈற்றுயிர் மெய்கெடும் காய்வரின்" -- நன்னூல், 186. |
![]() |
![]() |
#28 |
|
|
![]() |
![]() |
#30 |
|
|
![]() |
![]() |
#31 |
|
|
![]() |
![]() |
#33 |
|
ஒரு , ஓர் பயன்பாடு
------------ இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான் ( ஒருமைப் பெயர்ச்சொல்லைக் குறிப்பிடப் பயன்படுவது) ஓர் எனும் சொல் உயிரெழுத்தில் துவங்கும் ஒருமைப் பெயர்ச்சொல்லைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஓர் அரசன் ஓர் ஈட்டி ஓர் உலகம் ஓர் ஓடம் ஒரு எனும் சொல் உயிர்மெய்யில் துவங்கும் ஒருமைப் பெயர்ச்சொல்லைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கடிதம் ஒரு வண்ணத்துப்பூச்சி ஒரு பூ தற்காலத் தமிழ்க் கவிகள் பாடலின் சந்தத்திற்காக இரண்டையும் (ஓர், ஒரு) ஒன்றாகப் பாவித்தெழுதி பயன்பாட்டுக் குழப்பத்தினை உருவாக்கிவிட்டார்கள். // ஆங்கிலத்தைத் துணைக்கழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ![]() ஓர் - an ஒரு - a // |
![]() |
![]() |
#34 |
|
இஃது சங்கதமொழிச் சந்தி யாகும். |
![]() |
![]() |
#35 |
|
ஒரு , ஓர் பயன்பாடு ஆசையில் ஓர் கடிதம்!" என்ற திரைப்பாடல் நினைவுக்கு வருகிறதோ? "தானே முளைக்குதாம் தரணியில் ஓர் பூண்டு" - (ஒரு நாட்டுப் பாடல்) ஒரு பூண்டு என்றால் இசைமுறிவு ஏற்படும். கவிதையில் மட்டும் இப்படி எழுதலாம். விதிவிலக்கு. அப்போது அது தவறாகாது. மற்றும் சொல்லாக்கத்திலும் இதே விதிவிலக்கு கையாளப்படுகிறது: எ-டு: ஓர்+ படியாள் = ஓர்படியாள் > ஓப்படியாள் (பேச்சுவழக்கு). ஒருபடியாள் என்றன்றோ வரவேண்டும். அப்படி வரவில்லை. It is a question of "General Rule" and "Exceptions". Also consider " poetical licence"!! |
![]() |
![]() |
#36 |
|
இஃது சங்கதமொழிச் சந்தி யாகும். சரி...அப்படியெனின் வடமொழியில் உள்ளதோ பகவான் + கீதையே அன்றி பகவன் என்ற செந்தமிழ்ச் சொல்லுக்கும் பகவத்கீதைக்கும் சம்பந்தம் இல்லவே இல்லை என்று திட்டவட்டமாக சொல்கிறீர்களா? (தமிழில் பகவற்கீதை என்றே புணரும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.. ஏன் இப்படி கேட்கிறேன் என்றால் வடமொழியில் உள்ள 'த்' பல இடங்களில் தமிழில் ற் என்று மாறுவதைக் கண்டிருக்கிறேன். ex: உத்சவம் - உற்சவம்)) |
![]() |
![]() |
#37 |
|
இஃது சங்கதமொழிச் சந்தி யாகும். சரி...அப்படியெனின் வடமொழியில் உள்ளதோ பகவான் + கீதையே அன்றி பகவன் என்ற செந்தமிழ்ச் சொல்லுக்கும் பகவத்கீதைக்கும் சம்பந்தம் இல்லவே இல்லை என்று திட்டவட்டமாக சொல்கிறீர்களா? (தமிழில் பகவற்கீதை என்றே புணரும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.. ஏன் இப்படி கேட்கிறேன் என்றால் வடமொழியில் உள்ள 'த்' பல இடங்களில் தமிழில் ற் என்று மாறுவதைக் கண்டிருக்கிறேன். ex: உத்சவம் - உற்சவம்)) <font color="blue"> குறிப்பிட்ட சங்கதச் சொற்களுக்கு பக்(பஜ்) (bhag) என்பதே அடிச்சொல் என்பர். இதற்கும் பகுத்தல் என்பதே பொருள். இதிலிருந்து: பக (பகுத்தளிப்போன்) என்றாகும். பகதேவ என்ற சொல்லும் இதனடியாய் அமைந்த ஒன்று. வத் என்பது வச் என்றும் தோன்றும். பகவச் > "பகவச்சரணாரவிந்ததியான" பகவச் > பகவச்சாஸ்த்ர என்பன எடுத்துக்காட்டுகள். இனி: பகவத் > பகவதானந்த பகவத் > பகவதாரதன பகவத் > பகவதர்ச்சன பகவத் > பகவதாஸ்ரயபூத மற்றும்: பகவத் > பகவத்பக்தி பகவத் > பகவதபாஸ்கர பகவத் > பகவத்பட்ட(ர்) பகவத் > பகவத்பாவக பகவத் > பகவத்தாஸ பகவத் > பகவத்தர்மவர்ணன என்றிப்படிப் புணர்மொழிகள் பல. இவற்றை ஆய்ந்து நோக்குக. The rules differ in Sanskrit. ( அதாவது: பகவத் +கீதா என்பதில், "த்" தோன்றுவது, "ன்்" என்பதன் சந்தித் ் திரிபாக அன்று. மேலும் "ன்" ( |
![]() |
![]() |
#38 |
|
நீங்கள் சொல்வது புரிகிறது - மிக்க நன்றி.
பகு என்றால் divide - தமிழில் பாகம் - division - வடசொல்லிலும் இதே பொருள் தான். ஆனாலும் இன்னும் நீங்கள் ஒன்று விளக்க வேண்டி உள்ளது... முழுமை அடைய... பகவன்- ஆண்பால் பகவதி - பெண்பால்- கடவுளைக் குறிக்கும் இவை தமிழில் பகு(divide) என்பதோடு தொடர்புடையது இல்லை. அதே போல் பகவான், பாகவதம், பகவத், பகவச் போன்ற சொற்களை மட்டும் ஏன் divide என்பதோடு சம்பந்தப் படுத்த வேண்டும் என்பதற்கு தயவு கூர்ந்து விளக்க வேண்டும்.. http://en.wikipedia.org/wiki/Bhagavan (please visit this link... which states this sentence below) The Srimad Bhagavatam (1.2.11) clearly states the meaning of Bhagavan to mean the supreme most being இதைக் காண நேர்ந்த பிறகே இப்படிக் கேட்கிறேன் பகவாந் could be same or atleast similar as our தமிழ் word (ஆதி) பகவன் இல்லையா? சந்தித் திரிபு பற்றி இன்னொன்று சங்கதம் எனப்படும் வடமொழியில் 'ந்' என்பது 'த்' என்று மாறுவது இல்லையா? நன்றி |
![]() |
![]() |
#39 |
|
தாபம் என்பதன் ஆங்கிலம் என்ன?
பரிதாபம் - sympathy - இரக்கம் பச்சாதாபம் - empathy அனுதாபம் - pity - இரக்கம் தாபம் - yearning ( source - http://www.tamildict.com/tamilsearch.php) தவிப்பு என்பதும் தாபம் என்பதற்கும் உண்டான தொடர்பு படிப்பு என்பதும் பாடம் என்பதற்கும் உண்டான தொடர்பைப் போன்றதே அல்லவா இருக்க வேண்டும்! தாபம் - PASSION என்று சரியான ஆங்கிலங் கொள்ளலாமா? பரிதாபம் - COMPASSION - இரக்கம் - என்றும் சரியாக பொருள் படுகிறது தாகம் எனபதும் THIRST/YEARNING என்று பொருள் படுகிறது அறிவுத் தாகம் - yearning for knowledge... இன்னும் இவற்றில் பகுத்தறிவு தேவை என்று கருதுகிறேன் |
![]() |
![]() |
#40 |
|
ஆனாலும் இன்னும் நீங்கள் ஒன்று விளக்க வேண்டி உள்ளது... முழுமை அடைய... பகவன்- ஆண்பால் பகவதி - பெண்பால்- கடவுளைக் குறிக்கும் இவை தமிழில் பகு(divide) என்பதோடு தொடர்புடையது இல்லை. அதே போல் பகவான், பாகவதம், பகவத், பகவச் போன்ற சொற்களை மட்டும் ஏன் divide என்பதோடு சம்பந்தப் படுத்த வேண்டும் என்பதற்கு தயவு கூர்ந்து விளக்க வேண்டும்.. அதாவது: சொல்லாராய்ச்சி வல்லுநர் இங்ஙனம் கூறியுள்ளனர் என்று சொன்னால், இப்பதில் தங்களுக்கு மன நிறைவு அளிக்குமோ என்னவோ என்று யோசிக்கிறேன், இதை இன்னும் கொஞ்சம் விளக்க வேண்டுமானால் : இறைவனைப் "படியளப்பவன்" என்று மக்கள் நினைத்தனர் அல்லது நம்பினர். பரமசிவனும் பார்வதியும் படியளப்பதாகப் பாட்டிமார் பேரப்பிள்ளைகளுக்குப் போதிப்பதுண்டு. குவியலாக உள்ள நற்பொருள்களை, ஒவ்வொருவருக்கும் ஏற்புடையவாறு பகிர்ந்தளிப்பவர் என்பது பொருள். பகிர்தல் என்ற சொல்கூட "பகு> பகிர்" என்று அமைந்ததுதான். divide பண்ணாமல் distribute செய்ய இயலாது. இறைவனுடைய இத்தகைய உலகைப் பராமரிக்கும் செயலுக்குப் "பகுத்தல்" என்பதே அடிப்படையாகும். எல்லாம் வல்ல அவனே பகுத்தளிப்பவன் என்ற பொருளில்தான், இங்கு குறிப்பிட்ட சொற்கள் அமைந்துள்ளன. இன்னும் சொல்லப்போனால் "இது பாவம்" என்றும் "இது புண்ணியம்" என்றும் அவனே பகுத்து, பவநோய் தணித்து, மாயை அகற்றி, கடைத்தேறச் செய்கின்றான். பிறப்புக்குத் தகுந்த குணங்களையும் அவனே பகுத்துரைத்ததாய்ச் சொல்வதும் அறிந்திருப்பீர்கள். படைத்தல், காத்தல், அழித்தல், முதலாக அருளல் ஈறாகத் தன் தொழில்களை அவனே பகுத்துக்கொண்டு உலகை நிறுவி நடாத்திக்கொண்டிருக்கின்றான். ஆகவே இறைவனை the great divider (the benevolent distributor) என்று முன்னோர் நினைத்து, இச்சொற்களை அமைத்த அவர்தம் நுண்மதியை நாம் போற்றத்தான் வேண்டும். இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஒரு சொல்லின் சொல்லமைப்புப் பொருள் (etymological meaning) வேறாகவும்; அதன் பெறப்பட்ட (derived meaning ) வேறாகவும் இருக்கலாம். எடுத்துகாட்டாக: நல் என்ற அடியிலிருந்து நாற்றம் என்ற சொல் ஏற்பட்டது. ஆனால் நாற்றம் என்ற சொல்லுக்கு: இன்று நன்மை அல்லது நல்ல வாசனை என்ற பொருள் இல்லை. இந்தச்சொல் பொருள் மாறிவிட்டது: இதற்கு "இழிபு" (degradation) எனலாம். இதேபோல் பொருள் உயர்பும் உண்டு. (elevation) என்று சொல்லலாம். இவற்றுக்கு வேறு பெயர்களும் கூறப்படுவதுண்டு. இதேபோல், பகவான் முதலிய சொற்கள் பொருள் உயர்பு அல்லது விரிவு அடைந்துள்ளன. இன்னொரு எடுத்துக்காட்டு: அல்லா என்ற அரபுச் சொல்லுக்கு தொடக்கப்பொருள் யாது? இப்போதுள்ள பொருள் யாது? நாம் கவனத்தில் கொள்வதுடன் விட்டுவிடலாம். அங்ஙனமே Christ என்றால் நெய்யணிந்த பெருமான் என்பது முன்னைப் பொருள். இன்று "மீட்பர்" ("இரட்சகர்") saviour என்பதே பொருள். நாளடைவில் சொல்லமைப்புப் பொருள் மாறுகிறது; மறு வரையறவு (redifinition) செய்யப்பட்டு விளக்கப்படுகிறது, அறிஞர் பெருமக்களால்.. இதுவே இயல்பு ஆகும். பகவான் என்ற சொல்லும் எப்போதும் ஒரே பொருள் தருவதன்று. "பகவான் ராம கிருஷ்ணர்" "பகவான் ஷிருதிபாபா" என்ற தொடர்களில் இச்சொல் தெய்வத்தன்மை பெற்ற மனிதர்களையே குறித்தது. இங்கு: சொல்லியல் (etymological meaning) பொருளும் இல்லை; கீதை கூறும் (acquired religious) பொருளும் இல்லை. Words take on meaning according to usage too. In specific disciplines, words may be used variously from the etymological as well as derived normal meanings. பகு என்ற தமிழ் அடிச்சொல்லுக்கும் bhaj, bhag என்ற சங்கத மூலச்சொல்லுக்கும் பகுத்தல் என்பதே பொருளாயிருப்பதால், அதிற்பிறந்த "bhagavan" என்பதற்கு "supreme" என்று பொருள்கூறுவது "உயர்பு" அல்லது "ஏற்றுரை" ஆகும். தவறு என்று சொல்லவில்லை; அது ஒரு மறுவிளக்கம், அந்த இடத்துக்கு அது பொருத்தம் ஆகும். பகம் - ஐசுவரியம் முதலிய ஆறு அடைவுகள்; பகம்+ ஆன் = பக+ஆன் = பகவான், அவ்வாறையுமடைந்தவன் என்று பொருள் கூறுவதுமுண்டு!! Also see: bhaga `" dispenser "' , gracious lord , patron (applied to gods , esp. to Savitr2i) RigVeda. Atharvana Veda. (bestowing wealth and presiding over love and marriage) , bhagavan from bhaga: also dispenser (divider or distributor) பகவன் என்பதற்குப் பொண்பால் வடிவம் " பகவதி" என்று இருப்பதனால், "பகு" என்ற மூலச்சொல்லுக்கு உள்ள தொடர்பு அறுந்துபோய்விடாது. அப்பன் பகுத்து அருள் பாலிப்பதுபோலவே, அம்மையும் செய்வதற்குத் தடையேதுமில்லை. அட்மிரல் என்ற ஆங்கிலச்சொல், அரபு "அமீர்" என்ற சொல்லில் இருந்து வந்தது என்பர். முழுத் தொடருக்கும் பொருளை நோக்கினால், chief of transport என்று பொருள்படுமாம். இப்போது அட்மிரலுக்கும் அமீருக்கும் உள்ள பொருட்பொருத்தத்தைவிட, "பகு" - பகவன் முதலியவற்றின் பொருத்தம் நன்றாகவே உள்ளதென்று சொல்லலாம். பகவாந் could be same or atleast similar as our தமிழ் word (ஆதி) பகவன் இல்லையா? பகவானுக்கும் ஆதிபகவனுக்கும் ஒருபோன்மை (similarity) இல்லை என்று நான் சொல்லவில்லை. கூட்டிக்கழித்துப் பார்த்தால் கடவுள் ஒன்றுதான். பகவான் வேறு, ஆதிபகவன் வேறு என்று வாதிடுவதற்கில்லை. பகவானுக்கும் "பகு" என்பதன் இனமான bhag என்பதே மூலம். ஆதிபகவன் என்பதிலுள்ள பகவு+அன் என்பதற்கும் "பகு" என்பதே மூலம். அடிமூலம் ஒன்றாயினும் சொல்லமைப்பிலும், பொருண்மையிலும் பயன்பாட்டிலும் அவை வேறு. ஆதிபகவன் = அம்மையின் பகுதியானவன் என்று பொருள் கூறினேன். ஆதிபகவு + அன் என்று பிரித்தோம். Bhagavan = bhaga+van. Therefore it is analysed differently. .The purport too is not same. ஆதிபகவன் என்ற சொற்றொடர் திருக்குறளில் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது. So it must have been used with some special significance not found in any other treatise. Here ThiruvaLLuvar has coined a similar sounding word ushering in a different meaning. இதுவரை சொன்னதில் ஏதும் நிறைவளிக்காதது இருந்தால் சொல்லுங்கள். பின்னர் மேலே உரையாடலாம்.. |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 12 (0 members and 12 guests) | |
|