LOGO
Reply to Thread New Thread
Old 07-15-2006, 08:00 AM   #1
Lillie_Steins

Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
Default
இன்னும் நானூறு ஐநூறு ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் பிறந்த மழலையர் கல்வியில் 'அறம் செய்ய விரும்பு' 'ஆறுவது சினம்' என்று இடம் பெறுமாயின் அதுவே தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் லட்சிய நோக்கமாகும்... மிகவும் விளைவிக்கக் கூடிய நற்பயன் அதுவே... ஏனெனின் இப்போது நற்கல்வியில் வெறும் science & technology is focussed much rather than spritual education of good thoughts, ethics, philosophy, society, religions, good speech, disciplines etc இருப்பினும் மாநாட்டின் செலவுகள் சற்று அதிகம் என்ற கருத்துண்டு
Lillie_Steins is offline


Old 09-26-2006, 08:00 AM   #2
Lillie_Steins

Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
Default
.

. மகாநாடு பற்றிய பத்திரிகையாளர் கூட்டத்தில் விளக்கம்



- தமிழக முதல்வர் திரு. கருணாநிதி அறிவிப்பு.



.
.
.
Lillie_Steins is offline


Old 03-08-2010, 09:14 AM   #3
Beerinkol

Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
Default THAMIZH-CHEMMOZHI Maanaadu-2010. Coimbatore.
.
.

. உலக தமிழ் செம்மொழி மகாநாடு 2010


- கோயம்புத்தூர் - இந்தியா



தமிழ் அன்பர்களே.!

இந்தியாவின் தமிழ்நாட்டில்... கோயம்புத்தூரில்.... ஜூன் மாதம் 2010-இல் நிகழவிருக்கும் தமிழ் செம்மொழி மகாநாடு குறித்து உங்களது கருத்து என்ன.? .கூற அழைக்கிறேன்

....விவாதிக்கலாமா.?

..
Beerinkol is offline


Old 06-24-2010, 09:56 AM   #4
Paul Bunyan

Join Date
Jul 2007
Age
58
Posts
4,495
Senior Member
Default
.
Deleted.
Paul Bunyan is offline


Old 06-24-2010, 10:07 AM   #5
Big A

Join Date
Oct 2005
Age
50
Posts
4,148
Administrator
Default
Intha maanadu avasiyama ivalo selavu senju
Big A is offline


Old 06-24-2010, 10:16 AM   #6
softy54534

Join Date
Apr 2007
Posts
5,457
Senior Member
Default
.

செம்மொழி மாநாடு !

- ஏன் வரவேற்க வேண்டும்?



முதலில் தமிழுக்கு ஏன் செம்மொழி அந்தஸ்து?



‘செம்மொழி’ என்ற பதத்துக்கான தகுதிகளாக பதினோரு விதிகள் தரப்பட்டிருக்கின்றன.

தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப் பண்பு, பண்பாட்டுக் கலை அறிவு மற்றும் பட்டறிவு வெளிப்பாடு, பிறமொழித் தாக்கமில்லா தன்மை, இலக்கிய வளம், உயர்சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை, மொழிக்கோட்பாடு.

இவ்விதிகள் அனைத்தும் பொருந்தி வருவதாலேயே தமிழ் செம்மொழி எனும் தகுதிநிலையை அடைகிறது.

திராவிட மொழி குடும்பத்தில் இருக்கும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 22.

இதிலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை மட்டுமே இலக்கியத் திறன் பெற்றவையாக அமைந்திருக்கின்றன.

கொலமி, பார்ஜி, நாய்ன்னி, கோண்டி, குய், கூவி, கொண்டா, மால்ட்டா, ஒரயன், கோயா, போர்ரி உள்ளிட்ட மொழிகள் இலக்கியத்திறனற்று பேச்சு பயன்பாட்டில் இருக்கும் இதர மொழிகளாகும்.

இம்மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக தமிழ் இருக்கிறது.

சீனம், ஹீப்ரூ, பெர்சியன், அரபி, லத்தீன், கிரீக், சமஸ்கிருதம் முதலானவை ஏற்கனவே இத்தகுதியைப் பெற்றவை.

இன்று வழக்கில் இருக்கும் மொழிகளில் தமிழுக்கு போட்டியாக கருதப்படும் உயர்ந்த மொழிகளான பிரெஞ்சு (600 ஆண்டுகள்), மராத்தி (800 ஆண்டுகள்), வங்காள மொழி (1000 ஆண்டுகள்) ஆகியவற்றை ஒப்பிடும்போது, இவற்றைவிட 2000 ஆண்டுகள் கூடுதல் தொன்மை கொண்டதாக தமிழ் விளங்குகிறது.

தமிழின் தொன்மையையும், பெருமையையும் எடுத்துக்காட்ட நம் வசமிருப்பது சங்க இலக்கியங்கள். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க இவ்விலக்கியங்களும் ஒருவகையில் காரணமாக இருக்கின்றன.

ஆனால் சங்க இலக்கியங்கள் எவை எவை என்ற தெளிவு நம் எல்லோருக்கும் இருக்கிறதா என்பது ஐயமே.

ஐம்பெருங்காப்பியங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு உள்ளிட்ட ஆகியவையே சங்க இலக்கியங்கள் என்று கூறப்படுகிறது. மொத்தமாக இவை மட்டும்தான் சங்க இலக்கியங்கள் என்று அறுதியிட்டு கூறிவிட முடியாது. சங்க காலத்தில் உருவாக்கப்பட்டவைகளில் இவை மட்டும்தான் நம்மிடம் இன்று எஞ்சி இருக்கிறது.

ஐம்பெருங்காப்பியங்களில் வளையாபதி, குண்டலகேசி ஆகியவை நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நமக்கு முழுமையாக கிடைத்திருக்கும் சங்கத்தமிழ் இலக்கியங்களின் பட்டியல் :

தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல். எட்டுத்தொகை : நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பத்துப்பாட்டு : திருமுருகாற்றுப்படை, பெருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், பதினெண் கீழ்க்கணக்கு : நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, பழமொழி, சிறுபஞ்சமூலம், திருக்குறள், திருகடுகம், ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை.

கதைவளம், காவியச்சுவை மற்றும் கவித்துவ எழில் கொண்ட இலக்கியங்கள் இந்தளவுக்கு வேறேதேனும் மொழியில் இல்லவே இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.

இத்தகைய காரணங்களை சுட்டிக்காட்டி பல்லாண்டுகளாக பரிதிமாற்கலைஞர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை ஓர் இயக்கமாகவே தொடர்ச்சியாக நடத்தி வந்திருக்கிறார்கள்.

பரிதிமாற்கலைஞரால் முன்னெடுக்கப்பட்ட கோரிக்கை கலைஞரால் 2004ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைமுறைக்கு வந்தது. மத்திய அரசு ‘செம்மொழி’ என்றொரு தனி சிறப்புப் பிரிவை தோற்றுவித்து தமிழை செம்மொழி என்று அறிவித்தது.

இதையடுத்து விருதுகள், தமிழ்மொழி மேம்பாட்டு வாரியம், ஆய்வு உதவித் தொகைகள், செம்மொழி தமிழ் உயராய்வு மையம் ஆகிய உட்பிரிவுகளை கொண்ட மத்திய அரசின் செம்மொழித் தமிழ்த் திட்டம் உருவாக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழிலக்கியம், இலக்கணம், இசை, கல்வெட்டுகள் மற்றும் நாணங்கள் குறித்த ஆய்வுகளில் கவனம் செலுத்த முடிவெடுக்கப்பட்டது.

2007 ஆகஸ்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. முன்னதாக இதற்காக ரூ.76.32 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தது.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் இதுவரை என்னென்ன செய்திருக்கிறது?

கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 41 செவ்வியல் நூல்களின் செம்பதிப்பு பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இவை தொடர்புடைய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், பதிப்புகள் ஆகியவற்றை திரட்டுதல் ஆகிய பெரிய பணிகள் முழுமூச்சோடு நடந்துவருகிறது. தொல்காப்பியம், இறையனார் களவியல், அகநானூறு, ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு ஆகிய நூல்களின் பணி இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுக்கு வந்து, நூல்கள் வெளியிடப்பட்டு விடும்.

மணிப்பூரி, நேபாளி ஆகிய இருமொழிகளிலும் திருக்குறள் இப்போது மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. நற்றிணை, முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, நானாற்பது ஆகியவற்றின் மூன்று ஆங்கில மொழிபெயர்ப்புகள் அடங்கிய தொகுப்பு நூல்கள் முடிக்கப் பட்டிருக்கிறது.

பண்டைக்கால தமிழ் இலக்கியங்களை மரபுவழி ஓசை ஒழுங்கோடும், இசையோடும் கற்பிப்பதற்கு குறுந்தகடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. செம்மொழித் தமிழ் இலக்கியம், இலக்கணம், கல்வெட்டுகள், நாணயங்கள் தொடர்பான 18 காட்சிப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் முதல் தொகுதி ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழகராதிகளில் இதுவரை இடம்பெறாத எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள் (அளவைகள், ஆடு மாடுகள், நெல் வகைகள், மீன்பிடிப்புத் தொழில், நெசவுத்தொழில், மண்பாண்ட்த் தொழில், வேளாண்மை தொடர்பானவை) தொகுக்கப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டிருக்கின்றன.

கிட்டத்தட்ட பதினோராயிரம் நூல்களும், பல்வேறு ஓலைச்சுவடிகளின் மின்பதிப்புடன் கூடிய குறுந்தகடுகள் ஆய்வு செய்யும் மாணவர்களின் வசதிக்காக நூலகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

சுமார் ஐம்பது கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்தப்பட்டு பல்துறை சார்ந்த அறிஞர்களின் சுமார் 1500 ஆய்வுக் கட்டுரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 94 பிராமிக் கல்வெட்டுகளும் 37 வட்டெழுத்து கல்வெட்டுகளும் HD Video & High Resolution Still Image முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிறுவனத்தின் உதவியோடு பழனிக்கு அருகில் உள்ள பொருந்தல் எனும் ஊரில் நடத்தப்பட்ட அகழ்வாய்வின் மூலமாக பல்வேறு அரிய சங்க காலத் தொல்லியல் சான்றுகள் (காசுகள், சூது பவள மணிகள், பளிங்கு மணிகள், தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள், மண் பாண்டங்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள் போன்றவை) எடுக்கப்பட்டிருக்கின்றன.

இதுமட்டுமின்றி செம்மொழி விருதுகள், ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்ட மேலாய்விற்கு நிதியுதவி என்று ஏராளமான விஷயங்கள் கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இன்று செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கிறோம் என்று கிளம்பியிருக்கும் சிறுபான்மை கும்பலுக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.

இம்மாநாடு செம்மொழி தகுதி கிடைத்த மறுவருடமே நியாயமாக நடத்தப்பட்டிருக்க வேண்டும். இப்போது நடத்தப்படுவது என்பதே மிகவும் தாமதமானது.

1995ல் தஞ்சையில் நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பிறகான சர்வதேச மாநாடு கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடத்தப்படவேயில்லை.

உலகத் தமிழ் ஆய்வுக் கழகமும் இதற்கான முன்னெடுப்பு எதையும் எடுத்ததாகவும் தெரியவில்லை.
.
.
softy54534 is offline


Old 07-03-2010, 11:17 AM   #7
Slonopotam845

Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
Default
.


இந்த செம்மொழி மாநாடு நடத்தப்பட்ட விதம் பற்றி---


--உங்களது கருத்து என்ன.? விவாதிப்போமா.?


.
Slonopotam845 is offline


Old 07-13-2010, 08:29 AM   #8
Fegasderty

Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
Default
Writer Jeyamohan about Semmozhi Tamizh and Maanadu

ஜெயமோகன்[/url]]யார் அங்கீரித்தாலும் அங்கீகரிக்கவில்லை என்றாலும் தமிழ் செம்மொழிதான். தமிழைச் செம்மொழியாக நினைப்பது என்பது தமிழர்கள் மனநிலையில்தான் இருக்கிறது. இரண்டாவதாக நூல்கள் வழியாக உலக அறிஞர்கள் மத்தியில் தமிழ் வாழும் செம்மொழி என நிறுவும் பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. இந்த இரண்டையுமே நாம் செய்யவில்லை. நமக்கு மொழி சார்ந்த உள்ளீடற்ற பீடு இருக்கிறதேத் தவிர செம்மொழி என்ற உண்மையான உணர்வு கிடையாது. அப்படி இருந்தால் இந்தளவிற்குத் தமிழைக் கைவிட்டுத் தமிழுக்கு இரண்டாம் இடத்தைக் கொடுக்கும் மக்களாக இருந்திருக்க மாட்டோம்.

தமிழ்ச் செம்மொழி,ஆனால் தமிழைப்படிக்க மாட்டோம், தமிழ் இலக்கியங்களைப் படிக்க மாட்டோம், தமிழ் நவீன இலக்கியங்களைப் படிக்க மாட்டோம். எங்கும் தமிழில் பேச மாட்டோம் – இதுதான் நம் பழக்கமாக இருக்கிறது. தமிழ் செம்மொழியா இல்லையா என்பதை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டிய அவசியமில்லை. முதலில் தமிழ் மக்களாகிய நாம் அங்கீகரிக்க வேண்டும் .

இரண்டாவதாக தமிழை செம்மொழியை அங்கீகரிக்க வேண்டியவர்கள் உலக அளவில் இருக்கும் அறிஞர்கள். உலக அளவில் தமிழ் பயிற்றுவிக்க கூடிய பல பல்கலைக்கழகங்கள், பீடங்கள் இன்று மூடக்கூடிய நிலையில் உள்ளன. நான் பெர்க்லி பல்கலைக்கழகத்திற்குப் போன போது அறிஞர் ஜார்ஜ் எல் ஹார்ட்டை சந்தித்தேன் அங்கும் தமிழ்த்துறை மூடக்கூடிய நிலையில்தான் இருக்கிறது என்றார். மாணவர்கள் வருவதில்லை. நிதியுதவியில்லை. போதுமான ஆதரவு இல்லை. அங்குள்ள புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதியுதவியால்தான் அந்த துறை இயங்கிக்கொண்டிருக்கிறது. அது எந்த நேரத்திலும் மூடப்படும் என்ற நிலையில்தான் உள்ளது. அநேகமாக அவர்தான் கடைசிப்பேராசிரியாராக இருப்பார் போல் தோன்றுகிறது. ஆக இந்நிலையில்தான் தமிழ் உலக முழுதும் இருக்கிறது.

தமிழ் உலகின் செம்மொழிகளில் ஒன்றுதான், இம்மொழியை ஆராய வேண்டியது அவசியம், தமிழர்களின் உலகத்தைத் தெரிந்துகொளவதற்கும். உலகத்தின் பண்பாடுகளை மரபுகளை தெரிந்து கொள்வதற்கும் தமிழை ஆராய வேண்டியது அவசியம் என்ற எண்ணத்தை உலக அறிஞர்கள் உள்ளத்தில் உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்க தமிழில் பேரரறிஞர்கள் தோன்ற வேண்டும். இந்தப் பேரரறிஞர்கள் நூலகள் தொடர்ச்சியாக உலக அறிஞர்கள் மத்தியில் போக வேண்டும். கடந்த 50 ஆண்டுகளில் அப்படி உலக அளவில் போன தமிழறிஞர் நூல்கள் எத்தனை. அப்படி போவதற்கு தகுதியான தமிழ் அறிஞர்கள் எத்தனை பேர் இங்கிருக்கிறார்கள்.

இன்றைக்கு இருக்கும் பல்கலைக்கழகங்களில் தமிழாய்வு எப்படி இருக்கிறது என்றால் ரொம்ப வருத்தப்படக்கூடிய நிலையில்தான் உள்ள்து. கடந்த 30 அல்லது 40 வருடங்களாகத் தமிழாய்வுத் துறையில் என்ன நடக்கிறது என்றால் ஏற்கனவே வந்த ஆய்வுகளை திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருக்கும் நிலைதான் உள்ளது. தமிழாய்வுகளின் பொற்காலம் என்று சொன்னால், தொ.போ.மீ., மு.அருணாச்சலம் போன்றோரோடு முடிந்தது. அந்த நூல்களில் இருப்பதைக் கூட படிக்காமல், அதிலிருந்து அங்கும் இங்கும் பிரதியெடுத்து பி.ஹெச்.டி வாங்கும் நிலைதான் இன்று உள்ளது. நான் தொடர்ந்து பல்கலைக் கழக ஆய்வுகளைக் கவனித்து வரக்கூடியவன் என்ற முறையில் சொல்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழாய்வு என்பது அற்றுப் போய்விட்டது. தேடினல் உருப்படியாக ஒன்று இரண்டு கூட இல்லை.

ஏன், நமக்கு ஒரு தனி தமிழ்ப்பல்கலைக்கழகம் இருக்கிறது. இத்தனை வருடத்தில் ஒரு தமிழ்க்கலைக் களஞ்சியத்தைக் கூட பதிப்பித்து முடிக்கவில்லை. வாழ்வியல் களஞ்சியம் என்று ஒரு தொகுப்பு போட்டார்கள் அதை இன்னும் முடிக்கவில்லை. ஒரு நல்ல கலைக் களஞ்சியம் தமிழில் இதுவரை இல்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழ்க் கலைக்களஞ்சியம் ஒன்று போட்டார்கள் அது மறுபதிப்பு கூட வரவில்லை. அதை ரீ-பிரிண்ட்தான் போட்டிருக்கிறார்கள். ஆகவே தமிழறிஞர்கள் என்ற ஒரு வம்சமே அற்றுப் போய்விட்டது. இங்கு தமிழறிஞர்களே கிடையாது. அரசியல் காற்றுக்கு ஏற்றபடி பாய்விரித்த்து மேலே போகக்கூடிய புரபஸனலிஸ்டுகள், தொழில் லாபத்தை மட்டுமே விரும்பக்கூடிய பேராசிரியகள் நிரம்பியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் தமிழ் மொழி மேல் தமிழர்களுக்கு அக்கறையில்லை. உலகம் முழுதும் 10 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதில் 1 கோடி பேர்கள் கூடத் தமிழ் புத்தகங்களை வாங்கிப் படிப்பதில்லை. 5000 வாசகர்கள் கூட தமிழில் இல்லை எனும் போது தமிழ் செம்மொழியானால் என்ன ஆகாவிட்டால் என்ன? இவர்கள்தானே தமிழைச் செம்மொழியாக்க வேண்டும்.

தமிழறிஞர்கள் பெருகி தமிழின் வளத்தையும் பெருமையையும் உலகிற்கு எடுத்துச் சொல்லவேண்டிய நேரத்தில் அதற்கான தகுதிகொண்ட இரண்டு மூன்று தமிழறிஞர்கள் கூட இல்லை என்று சொன்னால் பிறகு எப்படி அவர்கள் தமிழறிஞர்கள் ஆவார்கள். ஆக இப்போது எஞ்சியிருப்பது மத்திய அரசு இதற்காக தரக்கூடிய நிதியாதரங்களை பெறுவதற்கான முயற்சிமட்டுமே. மத்திய அரசு தமிழைச் செம்மொழிப் பட்டியலில் சேர்த்திருப்பதன் மூலம் தமிழுக்கு கூடுதலாக சில கோடி ரூபாய்கள் கிடைக்கும். இதில் இது ஒன்றுதான் லாபம்.

சரி, செம்மொழியாக அறிவிக்கப்பட்ட கடந்த 3 ஆண்டுகளில் கிடைத்த நிதிகளைக் கொண்டு தமிழ்வளர்ச்சிக்கு என்ன நடந்திருக்கிறது என படைப்பாளர்கள் கேட்டுக் கொண்டால் அதனால் எந்தப் பயனும் இல்லை என தெரிய வரும். இப்போது தமிழுக்கு உயர் தமிழ் ஆய்வு மையம் என்ற ஒன்று இருக்கிறது. ஒன்று மைசூரில் இன்னொன்று சென்னையிலிருக்கிறது. இத்தனை வருடங்களாக என்ன செய்தார்கள். இன்றைக்கும் புத்தக சந்தையில் போய் சங்க இலக்கியம் பிழை திருத்தப்பட்ட ஒரு பதிப்பை வாங்க வேண்டும் என்றால் அது தனியார் பதிப்பகம் வெளிடப்பட்ட நூலாகத்தான் இருக்கும் அதிகாரப்பூர்வமான ஒரு தொகுதி கிடையாது. அப்படி இருந்தால் கூட முழுக்க முழுக்க அது தவறாகத்தான் இருக்கும்.

கடந்த 50 வருடங்களில் மாஸ்டர் பீஸ் எனச் சொல்லக்கூடிய நூல்கள் வந்திருக்கிஇன்றன . அந்த நூல்களுக்கு ஒரு ஒழுங்கான மறுபதிப்பு போடக்கூட செம்மொழி அந்தஸ்தால் கிடைத்த கோடிக் கணக்கான ரூபாய்களால் முடியவில்லை. ஒரு உதாரணம் சொல்லலாம். விபுலாணந்த அடிகளின் யாழ்நூல் தமிழிசை பற்றிய ஒரு மாபெரும் நூலாகும். அந்த நூலை கனடாவைச் சேர்ந்த சிவதாஸ் என்ற வணிகர் தனது சொந்த செலவில் மறுபதிப்பு போட்டிருக்கிறார். 50 வருடங்களுக்கு பிறகு, கருணாமிர்தசாகரம் எனும் தஞ்சை ஆபிரகாம பண்டிதருடைய நூல் இன்றைக்கு வரை மறுபதிப்பு போடவில்லை. தமிழாய்வின் ஒரு பொற்காலம் அப்படியே அஸ்தமித்து போய்விட்டது. பல நூல்கள் சந்தையில் கிடைப்பதில்லை. வையாப்புரிப்பிள்ளையின் பேரகராதி விற்காமல் கிடக்கிறது. ஒரு அகராதி என்பது வருடம் தோறும் வர வேண்டும் அப்போதுதான் அதை வாழும் அகராதி என்று சொல்வார்கள். 5 வருடம் வரவில்லை என்றால் அது செத்த அகராதி என்பார்கள். ஆனால் 50 வருடமாக பதிப்பிக்கபடாத அகராதியை பேரகராதி என்று சொல்கிறோம்.

ஆகவே செம்மொழிக்காக கிடைக்கும் நிதியை தமிழ் வளர்ச்சிக்காக பயன்படுத்த போவதில்லை. அதனால் செம்மொழி என்பது ஒரு அரசியல் வார்த்தையே தவிர அதனால் மூன்று தளங்களிலும் பயன் கிடையாது. அதனால் தமிழர்கள் தமிழை வாசிக்கவோ எழுதவோ எந்த மறுமலர்ச்சியும் வந்துவிடாது. உலக அளவில் தமிழை எடுத்துப்போகும் முயற்சியும் வெற்றியடையாது. செம்மொழிக்கு அளிக்கபட்ட நிதி மதிப்பிற்குரிய வகையில் பயன்படுத்தபட போவதில்லை. எனவே செம்மொழி என்பது முழுக்க முழுக்க அரசியல் சம்பத்தபட்ட வார்த்தைதானே தவிர வேறொன்றும் இல்லை. என் போன்ற சிந்தனையாளர்களுக்கோ படைப்பாளர்களுக்கோ எந்தப் பங்களிப்பும் இல்லை அதனால் எனக்கு இதில் ஆர்வமும் இல்லை.
as usual JM
Fegasderty is offline


Old 07-13-2010, 05:23 PM   #9
Big A

Join Date
Oct 2005
Age
50
Posts
4,148
Administrator
Default
Big A is offline


Old 07-13-2010, 07:57 PM   #10
Ifroham4

Join Date
Apr 2007
Posts
5,196
Senior Member
Default
summa manasula ullatha sollunga :P
Ifroham4 is offline


Old 07-13-2010, 10:18 PM   #11
Peptobismol

Join Date
Oct 2005
Age
58
Posts
4,386
Senior Member
Default

oru emoticon pOthum!
Peptobismol is offline


Old 07-16-2010, 12:46 AM   #12
9mm_fan

Join Date
May 2007
Age
53
Posts
5,191
Senior Member
Default
.

.


. கோவை தந்த தமிழ்-மணம்.!!!


தமிழ்-மணம் கமழப் பெற்றோம் ஒரு சிறு துளியே எனினும்
அமிழ்தினும் இனிய தமிழ் ஆனந்தம் கொண்டோம் அம்மா
சிமிழ்-அளவே தந்தார் இங்கே கோவை நகர் ஞாலப்புகழே
குமிழி நீர் போல் சற்றே தோன்றியே மறைந்திட்டாலும்
குமிழவே நினைவு நீங்கா தமிழ்-மணம் தொட்டோம் பொட்டாய்.!!!

..
.
9mm_fan is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 10:53 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity