Reply to Thread New Thread |
![]() |
#2 |
|
http://www.dailythanthi.com/article....date=5/17/2010
குமுதம் குழுமம் புதிய அச்சு இயந்திரங்களை வாங்கியபோது, வாரத்துக்கு ஒரு நாள் வரும் குமுதம் அச்சிடுவது அல்லாமல் மற்ற நேரம் அவற்றைப்பயன்படுத்துவதற்காக ஆரம்பித்தது தான் 'மாலைமதி' என்ற புதின இதழ் என்று நினைக்கிறேன். (கூடாமல், கல்கண்டு உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அச்சிடத்தொடங்கினார்கள், ஆனந்தவிகடனும் அதேமாதிரி அச்சியந்திர உபயோக நோக்கத்தோடு துக்ளக் அடிக்க ஆரம்பித்ததாக நினைவு). மாலைமதியின் முதல் சில நாவல்கள் பிரமாதமாக இருந்தன. சுஜாதாவின் "மறுபடியும் கணேஷ்", "எதையும் ஒரு முறை" போன்ற நாவல்கள் புதிதாக மாலைமதிக்கென்றே எழுதப்பட்டவை. சு.சமுத்திரம் எழுதியதும் பின்னால் திரைப்படமாக வந்து ராசாவின் இனிய பாடலகளைக்கொண்டிருந்ததுமான 'இன்று நீ நாளை நான்' இந்தக்கூட்டத்தில் சேர்ந்தது தான். அப்படி எழுதிய "அரளிப்பூ மேல் ஆசை வைத்து' மூலம் தான் அனுராதா ரமணன் எனக்கு அறிமுகம். அசத்திய நாவல் அது! அப்போது அவர் வளரும் எழுத்தாளர் மட்டுமே. ஆழ்ந்த அனுதாபங்கள் ![]() |
![]() |
![]() |
#4 |
|
தமிழகம் கண்ட தலை சிறந்த பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். அந்தக் காலத்தில் லக்ஷ்மி என்ற திரிபுரசுந்தரி என்றால் இந்தக் கால வரிசையில் சிவசங்கரி, இந்துமதி, இவர்களுடன் அனுராதா ரமணன் அவர்களும் மிகச் சிறந்த அளவில் படைப்புகளை அளித்துள்ளார். அவர்களின் மறைவு இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.
இன்று நீ நாளை நான் கதை சி.ஏ. பாலனுடைய தூக்கு மரத்தின் நிழலில் நாவலைத் தழுவியது என நினைக்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். ராகவேந்திரன் |
![]() |
![]() |
#5 |
|
|
![]() |
![]() |
#7 |
|
http://expressbuzz.com/cities/chenna...ad/173984.html
Prayers for her ![]() She was an icon for few aspiring writers. |
![]() |
![]() |
#8 |
|
1980 - 1990 இல் அவருடைய நாவல்களின் ரசிகனாக இருந்தேன்.
இவருடைய நாவல் / கதைகளை எதுவும் மிஸ் செய்வதில்லை. சுஜாதாவின் மற்றும் PKB நாவல்களை விட அனுராதா ரமணன் நாவல்களை விரும்பி படிபேன். இவருடைய "மிதிலை நகரத்து சீதைகள்" நாவலை படித்து இவருடைய எழுத்துகளுக்கு ரசிகன் ஆனேன் . ஜெயேந்திர சரஸ்வதி விவகாரத்தில் இருந்து இவரை வெறுக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு இவருடைய் எழுத்துகளை எதுவும் படிக்கவில்லை / படிக்க விரும்பவில்லை. இந்த விவகாரத்தை நிக்கிவிட்டால் , இவர் என்றும் என்னுடைய அபிமான எழுத்தளார். இவருடைய ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். |
![]() |
![]() |
#9 |
|
இன்றுளன்யான் இனிஅறியேன் எனும்உல கத்தில்
இயன்றவரை முயன்றுபுனை கதைபல தந்து நன்றெனவே உயர் அறிஞர் புகழுரை வென்றாய் ஒன்றெனவே உடுக்களொடு சிறப்புற நின்றாய் என்றினிமேல் உனைநிகர்த்த புதினமும் ஈனும் எழுத்தறிவுப் பெட்டகமென் இருவிழி காணும்! சென்றடைந்த உலகினில்நீ அமைதிகொள் என்றே சிரம்பணிந்து வணங்குகிறோம் செழுமனக் குன்றே. |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|