Reply to Thread New Thread |
10-29-2005, 08:00 AM | #1 |
|
|
|
07-23-2006, 08:00 AM | #2 |
|
|
|
09-21-2006, 08:00 AM | #3 |
|
நடிகர் திலகத்தின் கலைக் காவியங்கள் கலையுலகிற்கு மட்டும் பாடமல்ல, வருங்கால இந்தியாவை வளமாக உருவாக்க இருக்கும் பள்ளி மாணவர் தொட்டு கல்லூரி மாணவமணிகள் வரை, ஏன் உலக மக்கள் அனைவருக்கும் நல்ல விஷயங்களை நலம் பட போதிக்கும் குருகுலமல்லவா. கர்ணம் மூலம் அருமையான அறிவுரைகளை வலியுறுத்திய திரு. நாகராஜ் அவர்களுக்கும், அழகாக அதைப் பதிவிட்ட அன்பு ராகவேந்திரன் சாருக்கும் நன்றிகள்.
|
|
10-06-2006, 08:00 AM | #4 |
|
டியர் வாசுதேவன் சார்,
நமது நடிகர் திலகம் திரியின் பத்தாவது பாகத்தை தங்களது அன்புக்கரங்களால் மிகமிக மங்களகரமாக ஆரம்பித்து வைத்திருக்கும் தங்களுக்கு, எனது பாசமான பாராட்டுக்கள் ! வளமான வாழ்த்துக்கள் !! நெஞ்சார்ந்த நன்றிகள் !!! செவ்வாயன்று [12.6.2012] இரவு தங்களுடன் கைபேசியில் உரையாடும் போது 'நமது திரியின் இந்தப் பாகம் 400 பக்கங்களை நெருங்குவதால் அடுத்த பாகம் துவங்க மாடரேட்டர்கள் முடிவு செய்யக்கூடும் என்றும், அப்படிப் புதிய பாகம் தொடங்க முடிவெடுக்கப்பட்டால், தாங்களே அடுத்த பாகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும்' தங்களுக்கு அடியேன் அன்பு வேண்டுகோள் விடுத்தது நினைவிருக்கும்..! இதே கருத்தை இங்குள்ள நமது அன்புள்ளங்கள் அனைவரும் வலியுறுத்தி உள்ளனர் என்பதைக் காணும்போது கண்கள் ஆனந்தத்தால் பனிக்கிறது. பத்து ஆண்டு திருத்தொண்டினை பத்து மாதங்களில் ஆற்றியிருக்கும் தங்களை விட பத்தாவது பாகத்தை துவக்கிவைக்க பொருத்தமானவர் யார்..?! நமது திரியில் ஒவ்வொருவரும் நல்ல பங்களிப்புகளை நல்கி, வாசிக்கின்றனர். ஆனால் தாங்களோ சிறந்த பங்களிப்புகளை நல்கி வாசிப்பதோடு மட்டுமல்லாமல், திரியை சுவாசிப்பவரும் ஆயிற்றே..! ஆரம்பப் பதிவுகளையே மிகமிக அட்டகாசமாக வழங்கியுள்ளீர்கள்..! "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்" என எடுத்தியம்பும் 'அன்னை இல்ல'ப் புகைப்படம், "காலத்தை வென்ற கலை தெய்வம்" என்ற தலைப்பில் 'வாசுகி' இதழில் வெளிவந்த அருமையான கட்டுரை, எனத் தங்கள் பதிவுகள் மூலம் எங்களுக்கு ஒரே திருவிழா கொண்டாட்டம்தான்..! பொலிவோடு தொடரட்டும் தங்களின் திருப்பணியாகிய திரிப்பணி..! தங்களுக்கு மீண்டும் எனது கோடானுகோடி நல்வாழ்த்துக்கள்..! பாசத்துடன், பம்மலார். |
|
06-14-2012, 08:45 PM | #5 |
|
Nadigar Thilagam Sivaji Ganesan Part 10
(continued from here: http://www.mayyam.com/talk/showthrea...Part-9/page101 ) Nadigar Thilagam Sivaji Ganesan Part 10 திரியைத் தொடங்க இந்த எளியேனுக்கு வாய்ப்பளித்த என் உயிரினும் மேலான அனைத்து அன்புள்ளங்களுக்கும், மரியாதைக்குரிய அன்பு மாடரேட்டர்களுக்கும் என் ஆனந்தக் கண்ணீரை நன்றியாய் சமர்ப்பித்து. இதய தெய்வம் நடிகர் திலகத்தின் பாதங்களைத் தொட்டு வணங்கி, புதுத் திரியின் முதல் பதிவாக கலைத்தெய்வத்தின் குடும்பம் ஒரு கோவில் என்பதற்கு சான்றாக விளங்கும் இந்த அற்புதப் புகைப்படத்தை பதிவிடுகிறேன். நன்றி! கலைத்தெய்வத்தின் குடும்பம் ஒரு கோவில் அன்பு மாடரேட்டர்களுக்கு, Nadigar Thilagam Sivaji Ganesan Part 9-இன் தொடர்ச்சியாக Nadigar Thilagam Sivaji Ganesan Part 10 திரி தொடக்கத்தை ஏற்று அனுமதி வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி! அன்புடன், வாசுதேவன். |
|
06-14-2012, 09:02 PM | #6 |
|
சூப்பரோ சூப்பர் வாசு சார்... ஆரம்பமே அட்டகாசம் ... வள்ளுவனும் வாசுகியும் போல் வாழ்ந்த கணேசன்-கமலா தம்பதியரின் நிழற்படத்தைத் தாங்கி வெளி வந்த வாசுகி இதழின் கட்டுரையை வெளியிட்டு அசத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
என் வேண்டுகோளினையும் அதற்கு மற்றவர்கள் தந்த ஆதரவையும் மதித்து ஏற்று திரியைத் துவக்கி வைத்த தங்களுக்கு உளமார்ந்த நன்றிகள். அன்புமிக்க மாடரேட்டர் அவர்களுக்கு, எப்போதும் போல் முந்தைய திரிகள் மற்றும் முக்கியமான கருத்துப் பகிர்வுகளின் இணைப்புகளை இங்கேயும் தர வேண்டுகிறேன். அன்புடன் ராகவேந்திரன் |
|
06-14-2012, 09:37 PM | #9 |
|
|
|
06-14-2012, 09:41 PM | #10 |
|
|
|
06-14-2012, 11:33 PM | #13 |
|
Nadigar Thilagam Sivaji Ganesan Part 10 |
|
06-15-2012, 12:12 AM | #14 |
|
அன்புள்ளங்கள் அனைவருக்கும்,
நமது நடிகர் திலகம் திரியின் பத்தாவது பாகத்திற்கு எனது இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்..! கடந்த பத்து மாதங்களில் பத்து வருட சேவையை இத்திரியில் ஆற்றியிருக்கும் நமது ஆருயிர்ச் சகோதரர் நெய்வேலி வாசுதேவன் அவர்கள் பத்தாவது பாகத்தை துவக்கி வைத்திருப்பது சாலப்பொருத்தம்..! அவரே துவக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும் ஆகும். தொடர்ந்து இப்பாகத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து இதயதெய்வம் நடிகர் திலகத்தின் புகழ் பாடுவோம்..! என்றென்றும் கலைதெய்வத்தின் புகழ்பாடும் குயில், பம்மல் ஆர். சுவாமிநாதன். |
|
06-15-2012, 01:24 AM | #15 |
|
|
|
06-15-2012, 01:54 AM | #16 |
|
திரு. வாசுதேவன் அவர்களுக்கு,
நடிகர் திலகம் அவர்களிடம் யாரேனும் ஆசி வாங்க வேண்டும் என்று நினைத்து அவரது பொற்பாதங்களில் விழும்போது, அவர் அவசரப்பட்டு அதை தடுப்பதில்லை. ஆசி வழங்கும் தகுதி தனக்கு உண்டு என்பதை உணர்ந்து, அந்த வெள்ளை மனம் நின்று நிதானமாக பூரண ஆசி வழங்குவதை நாம் பல முறை பார்த்திருப்போம். அது போலவே இன்று இந்த 10வது திரியை தாங்கள் தான் துவக்கி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவுடன், அந்த கடமையும், பொறுப்பும், தகுதியும் தங்களுக்கு இருப்பதை உணர்ந்து கால தாமதம் செய்யாமல் உடனடியாக திரியை, அசத்தலான தவல்களுடன் துவக்கி வைத்த தங்களுக்கு என் நன்றிகள். நட்புடன் |
|
06-15-2012, 02:00 AM | #17 |
|
|
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|