Reply to Thread New Thread |
11-25-2010, 12:56 AM | #21 |
|
B(K) especially for you: I knew the astrology thing but didn't know about the writing. Has anyone seen maalai sooda vA? Wikipedia says 1975 Imagine Kamal saying: எனக்கு ஐடியா எல்லாம் கபாலத்துலேர்ந்து பீறிகிட்டு வருது Idhai office time-la padicchuttu sirippu peerikittu vandhudichi.. |
|
11-25-2010, 05:27 AM | #22 |
|
|
|
11-25-2010, 05:32 AM | #23 |
|
Sorry if it's posted already. |
|
11-25-2010, 06:45 AM | #24 |
|
Sorry if it's posted already. |
|
11-25-2010, 07:04 AM | #25 |
|
Originally Posted by kid-glove Sorry if it's posted already. |
|
11-25-2010, 07:04 AM | #26 |
|
Originally Posted by HonestRaj Originally Posted by kid-glove Sorry if it's posted already. |
|
11-25-2010, 07:05 AM | #27 |
|
Originally Posted by kid-glove Originally Posted by HonestRaj Originally Posted by kid-glove Sorry if it's posted already. |
|
11-25-2010, 04:59 PM | #28 |
|
விகடன் பொக்கிஷம்
டின்னர் - கோட்ஸேக்கு நன்றி சொல்லுங்கள்! எந்தக் காரியமாயினும் முழு ஈடுபாட்டோடு, உணர்வுபூர்வமாகச் செய்யும் கமல்ஹாசன், 'மகாநதி' யின் ஒவ்வொரு ஃபிரேமிலும் கவனம் செலுத்திக்கொண்டிருந்தபோதிலும், இடையே நம்மைச் சந்தித்தார் "டின்னருக்கு நீங்கள் யாரை அழைப்பீர்கள்?" "மோகன்தாஸ் கரம்சந்த் காந்தின்னு ஒரு வக்கீல் இருந்தாரே... அவரைத்தான்! அவர்மீது எனக்கு ப்ரியம்- மரியாதை அதிகம். அவர் உயிரோடு இருந்த காலத்தில் அவர் அருகே அமர்ந்து, பேசிக்கொண்டே சாப்பிடும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. அதனால், எனது டின்னருக்கு அவரை விருந்தினராக அழைக்க விரும்புகிறேன். கற்பனை என்பதல்ல... இது என் ஆத்மார்த்த ஆசை." "அவரை செலக்ட் பண்ணக் காரணம் என்ன?" "அவர் ஒரு வக்கீல். வழக்கறிஞர்களுக்கும் எனக்கும் ஜன்மார்ந்த பந்தம் உண்டு. என் அப்பா, சகோதரர் உள்பட என்னைச் சுற்றிலும் வழக்கறிஞர்களே அதிகம். எனக்குத் தெரிந்த வக்கீல்களெல்லாம் கடைசிவரை 'பிராக்டீஸ்' பண்ணிச் சம்பாதித்தனர். அப்படி இருக்கும்போது, இந்த வக்கீல் மட்டும் (மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி) கறுப்பு அங்கியை உதறி எறிந்துவிட்டு, தேச சேவையில் மக்கள் நல்வாழ்வுக்காக, சுதந்திரத்துக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டார். வருமானம் தருபவற்றை உதறிவிட்டு, எதற்காக இப்படிச் செய்தார் என்று அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்." "டின்னரை எங்கு வைத்துக் கொள்வீர்கள்?" "விருந்தோம்பலில் தமிழருக்கென்று சிறப்பு உண்டே! நமது இல்லத்துக்கு வரவழைத்து விருந்தளிப்பதுதானே முறை! எனவே, எனது சொந்த ஊரான பரமக்குடியில் உள்ள எனது வீட்டுக்கு (தேசிய பெருமை வாய்ந்ததாக்கும்) அவரை அழைக்கவே விரும்புகி றேன்." "டேபிள், சேர் போடுவீர்களா?" "அதெல்லாம் எதற்கு? அந்த மனிதருக்குக் கால்களை மடக்கி உட்காருவதுதானே பிடிக்கும்! அவர் இஷ்டப்படியே தரையில் அமர்ந்துதான்! நானும் அவரைப் போலவே உட்கார்ந்து கொள்வேன்." "உங்கள் கெஸ்ட் தனியாக வர வேண்டுமா... குடும்பத்துடனா?" "அந்த அம்மாவோடு (கஸ்தூரிபா காந்தி) உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்றும் எனக்குக் கொள்ளை ஆசை. அதனால், அம்மாவுக்கு உடம்பு சரியாக இருந் தால், அவர்களையும் அழைத்து வாருங்கள் என்று கேட்டுக் கொள் வேன்." "மெனு என்னவாக இருக்கும்?" "காந்திக்குப் பிடித்தமான வேர்க்கடலையும் ஆட்டுப்பாலும்தான் மெனு. எனக்கும்கூட அதுதான். முடிந்தால், உடனுக்குடன் பால் கறந்து கொடுக்க, ஆரோக்கிய மான ஆட்டைக்கூட அருகில் வைத்துக் கொள்ளக்கூடும். இந்த டின்னர் ருசிக்காக அல்ல; ஆத்ம பசிக்காகத்தானே!" "டின்னரின்போது அவரிடம் என்ன பேசுவீர்கள்?" "அவரிடம் நிறையக் கோள்மூட்டுவேன். 'நீங்க என்னெல்லாம் நினைச்சீங்க. நாடு எப்படியெல்லாம் இருக்கணும், அரசியல் வாதிகள் எந்த மாதிரியெல்லாம் இருக்கணும்னு நீங்க நினைச்சுக் கிட்டிருந்தீங்களோ, கனவு கண் டீங்களோ, ஆசைப்பட்டீங்களோ, அந்த மாதிரியெல்லாம் இப்போது இல்லை. உங்களை நன்றாக ஏமாற்றிவிட்டார்கள். இதுவரைக் கும் நீங்கள் உயிரோடு இருந்திருந் தால், கோட்ஸே உங்களைச் சுட் டிருக்க வேண்டியதில்லை. இன் றைய மோசமான நிலைகளைப் பார்த்து உங்களை நீங்களே சுட்டுக் கொள்வீர்கள். அதனால் கோட் ஸேக்கு நன்றி சொல்லிவிட்டு, எல்லாவற்றையும் மறந்துவிடுங் கள்' என்பேன்." "உங்கள் சந்தோஷத்தை எப்படித் தெரிவிப்பீர்கள்?" "'உங்களை மாதிரி வியாபாரத்தனமில்லாத மனிதரைச் சந்திப்பதில் ரொம்பச் சந்தோஷம். உங் களை மாதிரி எங்களால் இருக்க முடியாது. எங்க நிலையை உங்க ளிடம் சொல்லி பாவமன்னிப்புக் கேட்க இந்த டின்னர் ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்ததில் எனக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சி' என்பேன்." "டின்னரில் கடைசி அயிட்டம் என்னவாக இருக்கும்?" "வெளியே சொல்வதில் நான் வெட்கப்படப்போவதில்லை. மற்றவர்களைப்போல நான் பண்டிகைகளைக் கொண்டாட விரும்புவதில்லை. இந்தத் தேசத்துக்குச் சுதந்திரம் வந்த நாளன்று நான், என் மனைவி, குழந்தைகள் விழித்திருப்போம். சுதந்திரம் கிடைத்த நள்ளிரவு நேரத்தில் எங்கள் வீட்டில் கொடியேற்றி, நிமிர்ந்து நின்று, சல்யூட் அடித்து, தேசிய கீதம் பாடுவோம். இது பலருக்குக் கேலியாகத் தெரியலாம். ஆனால், எங்களுக்கு இது பெருமை. நாங்கள் இந்தியர்கள். இந்த உணர்வு என்னுள் வியாபித்து இருப்பதால் டின்னரின் கடைசி அயிட்டம்... ஜன கண மன..." http://lh6.ggpht.com/_NQBPenwjOt8/TO...87b%5B1%5D.jpg |
|
11-25-2010, 05:00 PM | #29 |
|
Kalaanidhi Maran on Kamal
http://lh5.ggpht.com/_NQBPenwjOt8/TF...jM/s800/aa.JPG From Vikatan, dunno if this is latest or old one |
|
11-25-2010, 05:02 PM | #30 |
|
Sujatha on Kamal's original writing in Dasavatharam
http://lh3.ggpht.com/_NQBPenwjOt8/TL...oA/s800/1q.JPG http://lh3.ggpht.com/_NQBPenwjOt8/TL...E34/s800/2.JPG |
|
11-25-2010, 05:46 PM | #31 |
|
Sorry if it's posted already. |
|
11-25-2010, 06:03 PM | #32 |
|
B(K) especially for you: I knew the astrology thing but didn't know about the writing. Has anyone seen maalai sooda vA? Wikipedia says 1975 Imagine Kamal saying: எனக்கு ஐடியா எல்லாம் கபாலத்துலேர்ந்து பீறிகிட்டு வருது |
|
11-28-2010, 12:06 AM | #33 |
|
http://tamil.chennaionline.com/cinem...GORYNAME=TFILM
விளம்பரப் படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்த கமல்ஹாசன் சென்னை, நவ.27 (டிஎன்எஸ்) ஒன்று இரண்டு படங்களில் தலை காட்டிய ஹீரோக்கள் கூட இன்று விளம்பரப் படவுலகில் சிறந்த வியாபாரிகளாக வலம் வந்துகொண்டிருக்க, ஐம்பது வருடத்தை கடந்து தமிழ் சினிமாவில் சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டிருக்கும் கமல்ஹாசன், ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்த போதிலும் விளம்பரப் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது ஒரு நல்ல செயலுக்காக விளம்பரப் படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் உலகநாயகன். ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுகளின் கல்வி, ஊட்டச்சத்தான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் போன்றவற்றுக்கு நிதி திறட்டும் நோக்கத்தோடு தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. "பெற்றால்தான் பிள்ளையா" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், "எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது நாம் ஒவ்வொருவரின் கடமை. இதை நான் செய்வதற்காக என்னை யாரும் பாராட்ட வேண்டாம். கடமையை செய்ய எதற்கு பாராட்டு. இது போல செய்ய இன்னும் நிறைய இருக்கிறது. இதுபோன்ற குழந்தைகளுக்காக உதவிகளை செய்ய வேண்டும் என்பதற்காக நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். 25 வருடமாக நான் செய்யாத ஒரு விஷயத்தை செய்யப்போகிறேன். நான் வேண்டாம் என்று ஒதுக்கி வந்த ஒன்று. விளம்பரப் படங்களில் நடிப்பதை இந்த குழந்தைகளுக்காக செய்யப்போகிறேன். நான் ஒரு பொருளை விற்பனை செய்ய வியாபாரி இல்லை. நான் நடிகன் அதனால் என்னுடைய நடிப்பு வேலையை செய்துவந்தேன். இப்போது எச்.ஐ.வி. குழந்தைகளின் நலனுக்காக விளம்பரப் படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறேன். விளம்பரப் படத்தில் நடிப்பதால் எனக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை வரி இல்லாமல் அப்படியே எச்.ஐ.வி. குழந்தைகளின் நலனுக்கு கொடுக்க எந்த நிறுவனம் தயாராக இருக்கிறதோ அந்த நிறுவனத்தின் விளம்பர படத்தில் நான் நடிக்க தயார். அதுபோல அரசாங்கத்திடமும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். இதுபோன்ற குழந்தைகளுகளூக்கு என்னை போன்றவர்கள் செய்வதை விட இரண்டு மடங்கு அதிகமாக அரசாங்கம் செய்ய வேண்டும்" என்றார். அரசாங்கம் இரண்டு மடங்கு உதவிகளை செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களே, நீங்கள் இந்த குழந்தைகளுக்காக ஏதாவது குறிப்பிட்ட தொகை நிர்ணயித்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, "என்னை வைத்து விளம்பரப் படம் எடுக்கும் நிறுவனங்கள் எனக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்களோ அதை அப்படியே நான் கொடுத்து விடுவேன். அதில் ஒரு பைசாவை கூட நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். அது ஐந்து கோடியாக இருந்தாலும் சரி. அப்போது அரசாங்கம் பத்து கோடியாக இவர்களுக்கு கொடுக்க வேண்டும்" என்று பதில் அளித்த கமல்ஹாசன், "எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருவரை என்னிடம் அழைத்து வந்தார்கள் அவர்களை பார்த்தபோது நமக்கு இன்னும் கடமைகள் இருக்கிறது என்று எனக்கு தோன்றியது. அந்த கடமை பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கும் இருக்கிறது. அதனால்தான் நாம் இணைந்து செயல்படுவோம் என்றேன்" என்றார். இந்த நிகழ்ச்சியின் போது எச்.ஐ.வி.பற்றியும் அதனால் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் பற்றியும் தற்போது அளிக்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து கடந்த சில வருடங்களில் பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் தொகுப்புகள் அடங்கிய கண்காட்சியினை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கடுப்பாடு சங்கத்தின் திட்ட இயக்குநர் திருமதி.அமுதா துவங்கி வைத்தார். http://www.top10cinema.com/eventgall...children-event |
|
11-28-2010, 02:08 AM | #34 |
|
http://tamil.chennaionline.com/cinema/news/newsitem.aspx?NEWSID=5f7cd134-c816-4376-b417-fb5232b3560e&CATEGORYNAME=TFILM Kamal is a true hero. |
|
11-28-2010, 02:41 AM | #35 |
|
http://thatstamil.oneindia.in/movies...-children.html
இதுவரை நான் விளம்பர படங்களில் நடித்ததில்லை. விளம்பர படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்ததும், அதை நான் பயன்படுத்தவில்லை. அந்த வாய்ப்புகளை நான் தவிர்த்து வந்தேன். இனி விளம்பர படங்களில் நடிக்க உள்ளேன். ஆனால் அதில் வரும் வருமானத்தை, நான் எனக்காக பயன்படுத்தப் போவதில்லை. அது என்னுடையது அல்ல. நம்முடையது. அந்தப் பணத்தை எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொடுப்பதாக முடிவு செய்துள்ளேன். நான் தனி மனிதனாக கொடுக்கும் பணத்தைவிட, இரண்டு மடங்கு பணத்தை இந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கு அரசாங்கம் கொடுக்குமேயானால் அது நன்றாக இருக்கும். அரசாங்கத்துக்கு இது ஒரு வேண்டுகோள்தான். கோரிக்கை அல்ல," என்றார். |
|
11-28-2010, 03:36 AM | #36 |
|
உதவுவதால் நான் தியாகி இல்லை, இது என் கடமை! - கமல்ஹாசன்
தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன் தான். பல சமூக பிரச்சனை களுக்காக தனது பல்வேறு தருணங்களில் தனது முழு ஆதரவையும் அளித்து வரும் நடிகர்களில் கமல்ஹாசன் முக்கியமானவர். தனது 'மன்மதன் அம்பு' படத்தின் ரிலீஸ் வேலைகள் இருந்தாலும் 'பெற்றால் தான் பிள்ளையா?' என்ற பிரச்சாரத்தின் மூலம் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான ஆதரவை திரட்டி வருகிறார் கமல். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில், ஊடக கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (27.11.2010) நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். கமல்ஹாசன் பேசுகையில், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த சரியான கல்வி, ஊட்டச்சத்தான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கச் செய்வது நாம் ஒவ்வொருவரின் கடமை. பொதுமக்களின் ஆதரவு பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தினை உருவாக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் கனவுகள் உண்டு. அவர்களின் கனவுகளை நினைவாக்க நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். இந்த குழந்தைகளுக்கு உதவ நான் சித்தமாய் இருக்கிறேன் என்பதை அவர்களிடம் நான் தெரிவித்தேன் அதற்காக அவர்கள் என்னை பாராட்டினார்கள், பாராட்டுவதற்காக அதை நான் செய்யவில்லை. இது என் கடமையாகவே நான் நினைக்கிறேன். நாம் நமக்குள்ளே ஒருவருக் கொருவர் பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டாம், சமுதாயத்தில் நமக்கான வேலைகள் நிறைய இருக்கிறது. இது நான் செய்ய வேண்டிய கடமை என்பதை விட, நாம் செய்ய வேண்டிய கடமை. எல்லோரும் சேர்ந்தால் சுமையைக் குறைக்க முடியும். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளை நான் நேரில் சந்தித்தேன். அவர்களைப் பார்க்கும் போது தான், நான் செய்ய வேண்டிய கடமைகளை நான் உணர்தேன். இதுவரை என்னை நீங்கள் விளம்பர படங்களில் பார்த்திருக்கவே முடியாது. விளம்பரங்களில் வரும் சம்பாத்தியம் எனக்கு தேவையில்லை என்று நினைத்து தேடி வந்த பல வாய்ப்புகளை எல்லாம், கொள்கை ரீதியாக உதறித் தள்ளியவன் நான். ஆனால் அரசாங்கத்திற்கு எங்களுடைய உள்ளுணர்வை தெரிவிக்கும் வகையில் ஒரு முதல் அடியை எடுத்து வைக்கலாம் என்றே நினைக்கிறேன். நான் விளம்பரப் படங்கள் செய்வதாக இருந்தால் அந்த பணத்தை தொடமாட்டேன். அதை அப்படியே இந்த சமுதாய வளர்ச்சிக்கு பயன்படுத்துவதாக இருந்தால் விளம்பரப் படங்களில் நடிக்க நான் தயார். என்னுடைய வருவாய் எனக்கு வசதியாக இருக்கும் என்பதை என் கலை உலகம் எனக்கு கொடுத்துள்ளது. 250 சம்பளத்தில் வேலையை துவங்கினேன். 10,000 ருபாய் சம்பாதித்தால் அதுவே போதும் என்று நான் நினைத்தது உண்டு. ஒரு லட்சம் சம்பளம் கொடுத்தால் ஒரு படம் மட்டும் நடித்து விட்டு அப்படியே வசதியாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இன்று கோடிகளை எட்டிய பிறகு தான்... நான் நினைத்த வாழ்கையை வாழ்ந்து பார்க்க முடிந்தது. மற்ற நடிகர்கள் எல்லாம் எத்தனையோ சந்தர்பத்தில் விளம்பர படங்களில் என்னை நடிக்க சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அப்போது நான் மறுத்து விட்டேன். பொருட்கள் விற்பது என் வேலை இல்லை. எனக்கு தெரிந்த வேலை சினிமா மட்டுமே. அதனால் தான் 25 வருடமாக அந்த வேலையை நான் நிராகரித்து வந்தேன். ஆனால் விளம்பரப் படங்களில் நான் நடிப்பதால் அதில் வரும் பணம் இப்படி ஒரு நல்ல செயலுக்கு உதவுமேயானால் அதை செய்ய நான் தயார். அரசாங்கத்திடம் ஒரே ஒரு வேண்டுகோள், ஒரு தனி மனிதனாக நான் என்ன கொடுக்கிறேனோ, அதே மாதிரி இரண்டு மடங்கு பணம் நீங்கள் கொடுத்து விடுங்கள். இதை நிர்பந்தமாக வைக்க முடியாது என்றாலும் ஒரு வேண்டுதலாகவே வைக்கிறேன். என்னென்ன உதவிகள் என்னால் செய்ய முடியுமோ அதை நான் செய்ய தயாராக இருக்கிறேன். இதை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள். நான் செய்வதை தியாகமாக நான் கருதவில்லை. இதுவரை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்ததை இவர்களிடம் கொடுக்கிறேன். உங்களிடமும் ஏதாவது அப்படி இருக்குமேயானால் அதை இதற்காக பயன்படுத்துங்கள் என்றார். கமலின் 'பெற்றால் தான் பிள்ளையா?' என்ற இந்த பிரசாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகை திரிஷா, நடிகர்கள் மாதவன், ரமேஷ் அரவிந்த் போன்றவர்கள் முன்வந்துள்ளனர். http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=751 |
|
11-28-2010, 03:54 AM | #37 |
|
உதவுவதால் நான் தியாகி இல்லை, இது என் கடமை! - கமல்ஹாசன் and his reason for not acting in ads. one part of a question in my mind for a loong time..(why Rajinj and Kamal dont act in Ads?) is asnwered.. |
|
11-28-2010, 05:22 AM | #38 |
|
Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar Kalaanidhi Maran on Kamal |
|
11-28-2010, 07:01 AM | #39 |
|
B(K) especially for you: I knew the astrology thing but didn't know about the writing. Has anyone seen maalai sooda vA? Wikipedia says 1975 Imagine Kamal saying: எனக்கு ஐடியா எல்லாம் கபாலத்துலேர்ந்து பீறிகிட்டு வருது "nee ellam fans-a da" |
|
11-28-2010, 07:28 AM | #40 |
|
Akshara in love with a Sri Lankan guy ..
http://tamilcinema.com/CINENEWS/Hotn...er/271110a.asp One of my friends brother in law is a friend of this guy and my friend confirms the news through him. Heard from her that pictures of the two together were posted on FB (my friend has seen) by the guy - and guy's family is mad over the matter and now the pictures have been removed. Managed to get hold of his profile on FB and could see Akshara in his friends list. http://www.facebook.com/#!/profile.php?id=626800201&v=info Don't know how far the news is true - in terms "in love". |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|