LOGO
Reply to Thread New Thread
Old 02-02-2011, 08:19 AM   #1
PhillipHer

Join Date
Jun 2008
Age
59
Posts
4,481
Senior Member
Default படித்துறை
வலை உலகத்தில் ஓரளவு அறியப்பட்டிருக்கும் சுகா இயக்கும்
படம்.

ராசா இசை.

ஆர்யா தயாரிப்பு, நடிப்பு அவர் இல்லை.

சுகா, பாலு மகேந்திராவின் விழுது என்பதாகக்கேள்வி.
PhillipHer is offline


Old 05-22-2006, 07:00 AM   #2
Peptobismol

Join Date
Oct 2005
Age
59
Posts
4,386
Senior Member
Default
சுகா நல்லா எழுதுறார்!

சொல்வனத்தில் வந்திருக்கும் இந்தக்கட்டுரையை சிரித்துக்கொண்டே படித்தேன், கண்களின் நீர் வருமளவுக்கு.

கடைசியில் ஏதாவது திருப்பம் இருக்கும் என எதிர்பார்த்தேன். அதுவும் கண்களில் நீர் வரச்செய்வது தான் - வேறு வகை.
Peptobismol is offline


Old 02-02-2011, 08:25 AM   #3
Ifroham4

Join Date
Apr 2007
Posts
5,196
Senior Member
Default
விஜய் டிவியில் வந்த வீடியோ லிங்க் ஜெயமோகனின் வலைத்தளத்தில்:

http://www.jeyamohan.in/?p=11914
Ifroham4 is offline


Old 02-02-2011, 09:23 PM   #4
S.T.D.

Join Date
May 2008
Age
43
Posts
5,220
Senior Member
Default
சுகா நல்லா எழுதுறார்!

சொல்வனத்தில் வந்திருக்கும் இந்தக்கட்டுரையை சிரித்துக்கொண்டே படித்தேன், கண்களின் நீர் வருமளவுக்கு.

கடைசியில் ஏதாவது திருப்பம் இருக்கும் என எதிர்பார்த்தேன். அதுவும் கண்களில் நீர் வரச்செய்வது தான் - வேறு வகை.
Very True app_engine

'solvanam'
S.T.D. is offline


Old 02-03-2011, 02:19 AM   #5
Raj_Copi_Jin

Join Date
Oct 2005
Age
48
Posts
4,533
Senior Member
Default
சுகாவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஆப். விஜய் டிவி நிகழ்ச்சி பார்த்தேன், சுகா நன்றாக பேசினார். ராஜாவின் மெட்டுகளும் அருமையாக இருந்தன. ஆனால் பாடல் வரிகள் மிகச்சாதாரணமாக இருந்தன. 'உன்ன மாதிரி யாரும் இங்கு இல்லையே'.

பேலா ஷிண்டேயின் குரல் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் அவரது உச்சரிப்பு மகா
கேவலம். ராஜா பாடல்களில் இத்தவறு அடிக்கடி நடப்பது வருத்ததிற்குரியது.

ஆர்யாவுக்கு நல்வாழ்த்துக்கள்!
Raj_Copi_Jin is offline


Old 02-03-2011, 02:26 AM   #6
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
சுகாவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஆப். விஜய் டிவி நிகழ்ச்சி பார்த்தேன், சுகா நன்றாக பேசினார். ராஜாவின் மெட்டுகளும் அருமையாக இருந்தன. ஆனால் பாடல் வரிகள் மிகச்சாதாரணமாக இருந்தன. 'உன்ன மாதிரி யாரும் இங்கு இல்லையே'.


Neenga English'laye type panni irukkalam
tgs is offline


Old 02-03-2011, 02:37 AM   #7
9mm_fan

Join Date
May 2007
Age
54
Posts
5,191
Senior Member
Default
Nerd,

பாடல் வரிகள் சுமார் பற்றி :
எழுத்தாளர்களெல்லாம் பாட்டு எழுதி இருக்காங்களாம்.

அவங்களை மாட்டி விடுறதுல ராசாவுக்கு அப்படி ஒரு சந்தோசம் பாருங்க
9mm_fan is offline


Old 02-03-2011, 03:19 AM   #8
PhillipHer

Join Date
Jun 2008
Age
59
Posts
4,481
Senior Member
Default
Neenga English'laye type panni irukkalam
InimEl aangilappeyargaLai aangilathilEyE pOtturrEn..

True app, prose writers have written lyrics and I think Na.Mu has written a couple of songs. Anyway this and AKuthirai are two albums I look forward to this year.
PhillipHer is offline


Old 02-03-2011, 03:37 AM   #9
Beerinkol

Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
Default
Even I felt the same about Bela Shinde as Nerd. It's been more than two years since she sung for Vaalmiki, still she didnt improve on her diction, which is very sad. Atleast IR should not give her songs which has those letters.
That's why I feel scary to listen to OLi tharum Sooryan again, even though it is a masterpiece.
Beerinkol is offline


Old 02-05-2011, 02:53 AM   #10
HedgeYourBets

Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
Default
This link says the film is based on Nanjil Nadan's "ettuththikkum matha yAnai".
HedgeYourBets is offline


Old 02-08-2011, 05:05 AM   #11
softy54534

Join Date
Apr 2007
Posts
5,457
Senior Member
Default
All songs rAgA based, the director himself is trained in classical music

“The story is the hero of the film. Almost everyone in the unit has acted in the movie. Editor Suresh Urs and art director Krishnamurthy have also appeared in the film,” Mr. Suka said, adding that it would be released soon.
softy54534 is offline


Old 12-15-2005, 07:00 AM   #12
Paul Bunyan

Join Date
Jul 2007
Age
59
Posts
4,495
Senior Member
Default
சுகாவின் விகடன் தொடரில் தான் சந்தித்த மனிதர்கள், தன பால்ய கால நிகழ்வுகள் பற்றி மிகப்ப்ரமாதமாக எழுதுகிறார். இந்த வாரம் படித்துறை படத்தில் நடித்திருக்கும் ஒரு 'ஆச்சி' பற்றி -

அழகம்பெருமாளின் தாயாராக நடிப்பதற்கு ஒரு பாட்டி தேவைப்பட்டார். திருநெல் வேலிப் பகுதியைச் சேர்ந்தவராக, முற்றிலும் புதிய முகமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். புது முகங் களைத் தேடும் வேட்டையில் உதவி இயக்குநர்கள் இறங்கினார்கள். திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றிவிட்டு, ஏராளமான புகைப்படங்கள், வீடியோக்களுடன் உதவி இயக்குநர் தியாகராஜன் வந்தார். ஏற்கெனவே 'நான் கடவுள்’ திரைப்படத்துக்காக இதே வேலையாகச் சுற்றிய 'மாபெரும் அனுபவம்’ அவருக்கு இருந்தது. நூற்றுக்கணக்கான புகைப்படங்களில் உள்ள முகங்களை சலிப்படையாமல் பார்த்துச் சலிப்படைந்து களைத்தபோது, 'சார், இந்த வீடியோவைக் கொஞ்சம் பாத்திருங்களேன்’ என்றார். குள்ளமாக, தாறுமாறான பல்வரிசையில், முறைத்துப் பார்க்கும் விழிகளுடன் ஒரு வெள்ளைச் சேலை பாட்டி இருந்தார்.

'ஒங்க பேரென்ன?’ கேள்வி முடியும் முன் 'குப்பம்மா’ என்ற பதில் வந்து விழுந்தது.

'வயசு?’

'அது எப்பிடியும் ஒரு எளுவத்தஞ்சு, எம்பது... எளுவதுக்கு மேல இருக்கும்!’

'கொழந்தைங்க?’

'பிள்ளல்லாம் ஒண்ணும் இல்ல.’

'ஒங்க வீட்டுக்காரர் பேரு?’

'பேர சொல்லக் கூடாதுல்லா?’

'இருக்கறாரா?’

'அவ்வொல்லாம் மண்டையப் போட்டு ஆச்சு, பத்து முப்பது வருசம்.’

குப்பம்மா பாட்டியைத் தேர்வு செய்தேன்.

திருநெல்வேலியில் முதல் நாள் படப்பிடிப்பு. குப்பம்மாள் பாட்டி முதல் ஆளாகப் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்திருந்தார். துணைக்கு அவரது 75 வயது தம்பி. நான் இருக்கும் இடத்துக்கு வேகவேகமாக அவர் நடந்து வருவதைப் பார்த்து எழுந்து அவரருகில் சென்று வணங்கினேன். 'எய்யா, வணக்கம். சும்மா இருக்கியா?’ இதுதான் குப்பம்மா பாட்டி என்னிடம் பேசிய முதல் வார்த்தை. திருநெல்வேலி பகுதிகளில் பாட்டியை 'ஆச்சி’ என்றழைப்பதுதான் வழக்கம். அதன்படி நான் குப்பம்மா பாட்டியை 'ஆச்சி’ என்றழைக்க, ஒட்டுமொத்த யூனிட்டும் அவரை 'ஆச்சி’ என்றே அழைக்க ஆரம்பித்தது.

எப்போதும் வெள்ளைச் சேலை அணிந்திருக்கும் ஆச்சிக்கு, மங்கிய காவி மற்றும் நீல நிறத்தில் பருத்திப் புடவையும், கழுத்தில் அணிய ஸ்படிக, துளசி, ருத்திராட்ச மாலைகளும் கொடுக்கப்பட்டன. படப்பிடிப்பு முடிந்தவுடன் முதல் ஆளாக புடவை, மாலைகளைக் கழற்றி காஸ்ட்யூமரிடம் கொண்டு கொடுப்பார். 'எய்யா, சரி பாத்துக்கிடுங்க.’ 'எல்லாம் சரியாத்தான் இருக்கும் ஆச்சி’ என்று சொன்னால் விட மாட்டார். 'காலைல என்ட்ட குடுத்தது குடுத்த மாரி இருக்கான்னு அவ்வளத்தையும் எண்ணுங்கய்யா.’ சரிபார்த்துச் சொன்னால்தான் அந்த இடத்தை விட்டு நகர்வார்.

'சினிமால்லாம் பாத்திருக்கியா ஆச்சி?’ படப்பிடிப்பின் இடைவெளியில் கேட்பேன். 'எங்க வீட்டய்யா ரெண்டு மூணு படத்துக்குக் கூட்டிட்டுப் போயிருக்காக. பேருல்லாம் நெனவு இல்ல. ஆனா, எல்லாம் கணேசன் படம்.’

அவரது காட்சிகள் இல்லையென்றாலும் படப்பிடிப்பை ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பார். 'சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லுதான். மாறி மாறி எடுக்கேளே! சரியாப் படம் புடிக்கற வரைக்கும் விடமாட்டிய, என்னா?’ அவ்வப்போது சந்தேகம் கேட்பார்.



ஒருநாள் காலையில் நான் படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழையும்போது மரியாதை கொடுக்கும் வண்ணம் எழுந்து நின்றார். அருகில் சென்று ஆச்சியின் தோளைப் பிடித்து அழுத்தி உட்காரவைத்துச் சத்தம் போட்டேன். 'ஒன்ன யாரு எந்திரிக்கச் சொன்னா? பேசாம உக்காரு.’ 'என்ன இருந்தாலும் நீ மொதலாளில்லாய்யா. அந்த மரியாதய குடுக்கணும்லா’ என்றார். 'எங்க எல்லாருக்கும் நீதான் மொதலாளி. இனிமேல் எந்திரிச்சேன்னா, உன்கிட்டப் பேச மாட்டேன்’- கடுமையாகச் சொன்னவுடன் லேசாகச் சிரித்துக்கொண்டார். சாப்பாடு இடைவேளையின்போது ஆச்சியின் அருகில் போய் உட்கார்ந்தால், எழுந்து அந்த இடத்தைத் தூசிதட்டி, 'எய்யா, செத்த நேரந்தான் கட்டைய சாத்தேன்’ என்பார். 'சும்மா இரி ஆச்சி. வேல நேரத்துல தூங்கலாமா?’ 'பத்து நிமிசம் கெடந்து எந்திருச்சேன்னா, நல்ல கெதியா வேல பாக்கலாம்லா?’ என்பார்.

சின்ன வேடம்தான். வசனங்களும் அதிகம் இல்லை. ஆனாலும் 'படித்துறை’ படப்பிடிப்பில் கேமராவைப் பார்க்காமல், வசனம் பேசுவதில் குப்பம்மா ஆச்சிக்கு சிரமம் இருந்தது. சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஒரு மூதாட்டியைத் தேடிப் போய், நாம்தான் நடிக்க அழைத்து வந்திருக்கிறோம் என்பதால், அவரை அதிகம் படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். 'ஸ்டார்ட்... சவுண்ட்’ என்ற உத்தரவுக் குரலுக்குப் பிறகு 'ரோலிங்’ என்று எங்கிருந்தோ யாரோ சத்தம் கொடுக் கிறார்கள். அதைத் தொடர்ந்து இயக்குநர் 'ஆக்*ஷன்’ என்கிறார். அதற்குப் பிறகே எல்லோரும் நடிக்கத் தொடங்குகிறார்கள். இயக்குநரிடம் இருந்து 'கட்’ என்ற சொல் வந்துவிட்டால் சகஜமாகி, நடிப்பவர்கள் எல்லோரும் திரும்பிப் பார்க்கிறார்கள். இவை அனைத்தையும் குப்பம்மா ஆச்சி மெள்ள மெள்ளப் புரிந்துகொண்டார். என்ன ஒன்று, அவருக்கு அவை எல்லாம் பிடிபட ஆரம்பிக்கும் போது படம் முடிந்துவிட்டது. 'இப்பம்தான் அங்கென இங்கென திரும்பிப் பாக்காம நீ சொன்னதச் செய்ய ஆரம்பிச்சேன். அதுக் குள்ள படம் முடிஞ்சிட்டுங்கியெ?’ குறைபட்டுக் கொண்டார்.

குப்பம்மா ஆச்சி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு, ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் எங்களுக்கு மற்ற காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடர்ந்தது. குப்பம்மா ஆச்சியின் சொந்த ஊரான குற்றாலத்தைத் தாண்டி எங்கள் கார் சென்றுகொண்டு இருக்கும்போது ஆச்சியைப் போய் எட்டிப் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று முடிவுசெய்து, அவரது வீட்டுக்குச் சென்றோம். அப்போது ஆச்சி குளித்துக்கொண்டு இருந்தார். அவரது தம்பி ஓடோடிச் சென்று ஆச்சியிடம் விவரம் சொல்ல வும், அவசர அவசரமாக ஈர உடம்பில் ஒரு வெள்ளைச் சேலையைச் சுற்றிய படி ஆச்சி வந்தார். முகம் முழுதும் சிரிப்பாக 'எய்யா... வா’ என்று என் அருகில் வந்து சுருங்கிய, குளிர்ந்த விரல்களால் கைகளைப் பிடித்துக் கொண்டார். உதவி இயக்குநர்கள் ஒவ்வொருவரிடமும் 'எய்யா, வாருங்க வாருங்க’ என்று வரவேற்றார். உள்ளே போய் ஒரு நெளிந்த எவர்சில்வர் சொம்பை எடுத்து வந்து, தம்பியிடம் கொடுத்து காபி வாங்கி வரச் சொன்னார். 'ஆச்சி, அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். இப்பொதான் சாப்பிட்டுட்டு வந்தோம்’ என்றதற்கு 'என் வீட்டுக்கு வந்துட்டு ஒண்ணும் குடிக்காம, கொள்ளாமப் போகக் கூடாது’- உறுதியான குரலில் கட்டளைபோலச் சொன்னார். சொம்பை வாங்கிக்கொண்டு தள்ளாடி ஒருசில அடிகள் முன்னே சென்ற தன் தம்பியை அழைத்தார். 'ஏல, இங்கெ வா’. காதருகில் ரகசியமாக ஏதோ சொன்னார். காது சரியாகக் கேட்காத அவரது தம்பி, 'கொஞ்சம் சத்தமாச் சொல்லு. கேக்கல’ என்றார். 'நீ ஒரு செவிட்டுமூதி. வடகிட வாங்கிட்டு வால, கோட்டிக்காரப் பயல’ என்றார்.

வடையும் காபியும் தன் கையாலேயே எங்களுக்கு வழங்கிய குப்பம்மா ஆச்சியிடம் இருந்து விடைபெறும்போது, ஆச்சியின் கைகளைப் பிடித்து கொஞ்சம் பணம் கொடுத்தேன். கைகளை உதறி, 'ஆகாங்... வேண்டாம்யா. அதான் நடிச்சதுக்குச் சம்பளம் குடுத்துட்டேல்லா?’ என்று வாங்க மறுத்தார். 'ஆச்சி, அது சம்பளம். இது பேரன் பிரியமா ஆச்சிக் குக் குடுக்கேன். வாங்கு’ என்றதும் சந்தோஷமாக வாங்கிக்கொண்டார்.

சில வாரங்களுக்குப் பிறகு சென்னையில் டப்பிங் ஆரம்பமானது. குற்றாலத்தில் இருந்து குப்பம்மாள் ஆச்சி தன் தம்பியுடன் டப்பிங் தியேட்டருக்கு வந்து சேர்ந்தார். ஏ.சி-யின் குளிர் தாங்க முடியாமல், காதுகளை மறைத்து மஃப்ளர் கட்டியிருந்தார். 'ஆச்சி, சின்னப் பிள்ள மாரி ஸ்டைலால்லா இருக்கே!’ கேலி பண்ணினேன். உதட்டோரமாகச் சிரித்தபடி டப்பிங் பேச ஆரம்பித்தார். அவ்வளவு பெரிய ஸ்கிரீனில் அவர் நடித்த காட்சிகள் தெரிந்தாலும், ஆச்சியால் அதைப் பார்த்து டப்பிங் பேச முடியவில்லை. இணை இயக்குநர் பார்த்திபன் ஆச்சியின் அருகில் அமர்ந்து சொல்லச் சொல்ல, ஆச்சி திரும்பச் சொல்லிக் கொண்டு இருந்தார். 'சார், சில இடங்கள்ல ஒப்பிக்கிற மாதிரியேதான் ஆச்சியால பேச முடியுது. என்ன பண்ணலாம்?’ படப்பிடிப்பின் போதும் சொன்ன அதே அபிப்ராயத்தைக் கவலையுடன் தெரிவித்த பார்த்திபனிடம் 'பரவாயில்லங்க, நமக்கு ஆச்சியின் உருவம்தான் முக்கியம். இந்த மாதிரியான முகங்களைத் திரைல பதிவு செய்றது நம்ம கடமை’ என்றேன். சில குறிப்பிட்ட திருநெல்வேலி வட்டார வழக்குச் சொற்கள் வரும்போது நான் ஆச்சிக்கு சொல்லிக் கொடுப்பேன்.

'ஆச்சி, நான் சொல்றத அப்பிடியே திரும்பச் சொல்லு. என்னா?’

'சரிய்யா.’

'ஏ பேராச்சி, நல்லா பொடுபொடுன்னு காய நறுக்கு. மாப்பிள அளப்புக்கு நேரம் ஆச்சுல்லா?’

ஆச்சி திருப்பிச் சொல்லுவார். 'ஆச்சி, கொஞ்சம் வேகமாச் சொல்லு.’ சொன்னபடி வேகமாகச் சொல்லுவார். 'ஆங்... கரெக்ட்டு. இப்போ கொஞ்சம் மெதுவாச் சொல்லு.’ எரிச்சல் வந்துவிட்டது ஆச்சிக்கு. 'வெரசலா சொல்லுங்கே... பைய சொல்லுங்கே. ஏதாவது ஒண்ணு சொல்லு.’ 'என்னப் பெத்த அம்மல்லா. கோவப்படாதே’-கன்னம் தொட்டுக் கொஞ்சுவேன். சிறு பெண் குழந்தைபோல வெட்கத்தில் முகம் சிவப்பார்.

ஆச்சியின் டப்பிங் வேலைகள் முடிந்து குற்றாலத்துக்குக் கிளம்பிய பிறகு, அவ்வப்போது போனில் பேசுவது உண்டு. அவரிடம் எப்போதாவதுதான் பேச முடியும் என்றாலும், அவரது தம்பியிடம் விசாரித் துக்கொள்வோம். ஒருமுறை போனில் ஆச்சி கிடைத்தார். 'எய்யா, என் பேருல்லாம் போட்டு பேப்பர்ல வந்திருக்குன்னு என் தம்பி பேரன் கொண்டாந்து பேப்பர குடுத்தான். படிக்கத் தெரியாதுல்லா. அதான் அந்தப் பக்கத்தப் பாத்தேன். ரொம்பச் சந்தோசம்’ என்றார்.

சினிமா உலகில், எழுதி கையில் வைத்திருக்கும் திரைக்கதையை, மனதில் நினைத்தபடி படமாக எடுக்க முடிபவர்களின், படம் முடிந்தவுடனேயே ரிலீஸ் பண்ணிவிடுபவர்களின் மூதாதையர் நிறையப் புண்ணியங்கள் செய்தவர்கள். கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார் என்பதுபோல, 'ஒரு சினிமா எடுத்துப் பார்’ என்பதற்கேற்ப பட வேலைகளும், ரிலீஸும் தாமதமாகிக் கொண்டே போனதால், வெறும் குசலம் விசாரிப்பதைத் தவிர ஆச்சியிடம் பேசு வதற்கோ, சொல்வதற்கோ விஷயம் ஏதும் இல்லாததால், இடையில் சிறிது காலம் தொடர்பு ஏதும் இல்லாமல் போனது. ஆச்சியும் அவரது தம்பியும் அவர்களாக போன் செய்து நம்மைத் தொந்தரவு செய்வதும் இல்லை.

'அடிக்கடி பேசலையேன்னு தப்பா நெனச்சுக்கிடாதெ ஆச்சி’ என்று ஒருமுறை சொன்னதற்கு, 'எய்யா, நீங்கல்லாம் பல சோலிக்காரங்க. எங்கள மனசுல நெனைக் கேளே. அதுவே போதும்’ என்றார். 'விஷயம் இருந்தால்தான் பேச வேண்டுமா? சும்மாப் பேசக் கூடாதா?’ என்று சென்ற மாதத்தில் ஒருநாள் ஆச்சியின் தம்பியிடம் தொடர்புகொண்டு பேசியபோது, அத்தனை நாள் கழித்துப் பேசினாலும், தினமும் பேசிக்கொள்பவர் போல உற்சாகமாகவே பேசினார்.

'எப்பிடி இருக்கிய?’

'நல்ல சௌக்யம் சார். சும்மா இருக்கேளா?’

'ஆச்சி எப்பிடி இருக்கா?’

'அக்கா எறந்து மூணு மாசமாச்சுல்லா. பதற்றத்துல ஒங்க எல்லாருக்கும் சொல்லணும்னு தோணல. மன்னிச்சுக்கிடுங்க!’
Paul Bunyan is offline


Old 06-17-2011, 10:59 AM   #13
MannoFr

Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
Default
From his blog. Hilarious. For the most part.

’படித்துறை. சில சுவாரஸ்யங்கள்

நான் சொன்ன திரைக்கதையை படமாக்க ஆர்யா முடிவு செய்தபோது படத்துக்கான டைட்டிலை நான் அவருக்குச் சொல்லவில்லை. காரணம், அப்போது எனக்கே டைட்டில் என்னவென்று தெரியாது. அதன் பிறகு முழுவதுமாக எழுதப்பட்டிருந்த திரைக்கதையைப் படித்துப் பார்த்தபோது ‘படித்துறை’ என்ற தலைப்பு அந்தக் கதைக்குச் சரியாக இருக்கும் என தோன்றியது. தமிழ்நாட்டின் முக்கிய நதிகளில் ஒன்றான தாமிரபரணி ஓடுகின்ற திருநெல்வேலியைச் சுற்றியே கதைக்களம் அமைந்திருப்பதாலும், மனித வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளைக் குறிக்கும் வகையில் ஒரு குறியீடாகவும் இந்தத் தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பதை நான் சொன்னவுடன் ஆர்யா மறுப்பேதும் சொல்லாமல் ஆமோதித்தார். இளையராஜா அவர்களிடம் இந்தத் திரைக்கதையைச் சொன்னபோதும் நான் முதலில் இந்தத் தலைப்பைச் சொல்லவில்லை. பாடல் பதிவின் போது திடீரென நினைவுக்கு வந்தவராய் கேட்டார். ‘ஆமா, என்ன டைட்டில் வச்சிருக்கே?’. அப்போதுதான் அவருக்கு இன்னும் டைட்டிலைச் சொல்லவில்ல என்பதே என் மரமண்டைக்கு உறைத்தது. ‘படித்துறை’ என்றேன். ‘பிரமாதம்யா’ என்றார். ஆனால் எனது உதவி இயக்குனர் ஒருவருக்கு இந்த டைட்டில் பிடிக்கவில்லை. முதலில் தனக்கு இந்தத் தலைப்புக்கான அர்த்தம் புரியவில்லை என்றார். பிறகு யூத்துக்கு இது போய் சேராது என்று கவலைப்பட்டார். இரண்டாவது காரணத்தை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் முதல் காரணம், எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. காரணம், ‘படித்துறை’ என்ற தலைப்பு தனக்கு புரியவில்லை என்று சொன்ன அந்த உதவி இயக்குனர் ஒரு தமிழ் முதுகலை பட்டதாரி. Yes. Tamil MA. இந்தக் கவலையுடன் எனது ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா அவர்களைச் சந்தித்தேன். கடுமையான கோபத்துடன் ‘வாத்தியார்’ சொன்னார். ‘படித்துறை’ங்கிற இந்த டைட்டிலை மட்டும் நீ மாத்தினே, நான் உன்னை அடிப்பேன்’. ‘அப்பாடா’ என்றிருந்தது.

பிரசாத் ஸ்டூடியோவில் பாடல்பதிவு நடந்து கொண்டிருந்தது. இளையராஜா அவர்களின் மேனேஜர் சுப்பையா திருநெல்வேலிக்காரர். ‘வாத்தியாரிடம்’ உதவி இயக்குனராக நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே எனக்கு பழக்கம். எனது முதல் படம், அதுவும் திருநெல்வேலியிலேயே படமாக்கப் போகிறேன் என்பது குறித்து அவருக்கு ஏக குஷி. வருவோர் போவோரிடமெல்லாம் ‘எங்க ஊர்ப்படம்லா’ என்று உற்சாகமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது வேறு ஏதோ ஒரு படத்தின் தயாரிப்பாளர் ஒருவர் இளையராஜா அவர்களைப் பார்க்க வந்திருந்தார். திருமண வரவேற்பு மேடையில் புகைப்படம், வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் புதுமாப்பிள்ளை போல இருந்தார். உடம்பை இறுக்கிப் பிடிக்கும் சஃபாரி உடையில், பத்தில் எட்டு விரல்களில் மோதிரங்கள் அணிந்திருந்தார். கால்களில் ஷூஸ் போட்டிருந்ததால் கால் விரல்களை என்னால் கவனிக்க முடியவில்லை. சுப்பையா அந்தத் தயாரிப்பாளரை நேரே என்னிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். ‘எங்க குடுமபத்துல பாலா அண்ணனுக்கு அப்புறம் வந்திருக்க வேண்டியவரு. கொஞ்சம் லேட்டாயிடுச்சு. ஸார்தான் ம்யூசிக்கு. ஷூட்டிங் பூரா எங்க ஊர்லதான். படம் பேரு ‘பாசறை’ என்றார். உடனே அந்த சஃபாரி தயாரிப்பாளர் முகம் மலர்ந்து ‘பாசறை. ஃபர்ஸ்ட் கிளாஸ் டைட்டில் ஸார். விஷ் யூ ஆல் தி பெஸ்ட்’ என்று என் வலது கையை தன் இரண்டு முரட்டுக்கரங்களாலும் பிடித்து அழுத்தினார். வலி தாங்க முடியவில்லை. சிரித்தபடி ‘தேங்க்ஸுங்க’ என்று சமாளித்தேன்.

படப்பிடிப்புக்காக திருநெல்வேலிக்குப் போய் இறங்கினோம். நான் பிறந்து வளர்ந்த ஊர்தான் என்றாலும் படப்பிடிப்புக்கான சாத்தியங்களுக்காக வேறு ஒரு கண் கொண்டு திருநெல்வேலியைப் பார்க்க வேண்டியிருந்தது. முதல் நாள் படப்பிடிப்பில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். அதாவது திருநெல்வேலி ஊருக்குள் எங்கேயுமே படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடையாது என்றார்கள். நிலைகுலைந்து போனேன். அங்கு அப்போதிருந்த கமிஷனர் ஒரு வடநாட்டுக்காரர். என்ன சொல்லியும் அவர் அசைந்து கொடுக்கவில்லை. திருநெல்வேலி ஊரை வெறும் லொக்கேஷனாக பயன்படுத்திய எத்தனையோ படங்களுக்கு ‘படித்துறை’ படப்பிடிப்புக்கு முன்புவரை அனுமதி கொடுத்திருந்தார்கள். ஆனால் அசல் திருநெல்வேலியை, அதன் மனிதர்களை படமாக்க நினைக்கும் ஒரு தாமிரபரணிக்காரனுக்கு அவனது சொந்த மண்ணில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. சரி, பரவாயில்லை என்று கிளம்பி திருநெல்வேலியின் எல்லையைத் தாண்டிய வெளிப்புறங்களிலேயே படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டோம். இரண்டாம் நாள் அடுத்த குண்டு விழுந்தது. ‘படித்துறை’ படத்துக்காக நாங்கள் ஒப்பந்தம் செய்திருந்த கதாநாயகி படப்பிடிப்புக்கு வர மறுத்து விட்டார் என்று சொன்னார்கள். மூன்றாவது நாளிலிருந்து அந்தப் பெண் நடிக்க வேண்டிய காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டிருந்த எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்தப் பெண்ணிடம் தொலைபேசியில் பேசினேன். அவரது மேனேஜருக்கும், அவருக்கும் ஒத்துவரவில்லையாம். அந்த மேனேஜரால் தான் ஒத்துக் கொண்ட படங்களில் இனி நடிப்பதாக இல்லை என்று சொன்னார். உங்களை சிரமப்படுத்தியதற்கு மன்னியுங்கள். இதற்கு பதிலாக உங்களின் அடுத்த படத்தில் பணம் வாங்காமலேயே நடிக்கிறேன் என்றார். கேமெராவையேப் பார்த்திராத புதிய மனிதர்களை ‘படித்துறை’ படத்துக்காக தேர்வு செய்து வைத்திருந்தோம். இந்தப் பெண்ணின் காட்சிகளைப் படமாக்கும் போது அந்த புதியவர்கள் வேடிக்கை பார்த்தால் ஓரளவு சினிமா பிடிபடும் என்பது எங்கள் எண்ணமாக இருந்தது. இப்போது அந்தத் திட்டத்தில் மண். மறுநாளிலிருந்து நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த காட்சிகளுக்கு பதிலாக அந்தப் புதிய மனிதர்களை படமாக்க முடிவு செய்து படப்பிடிப்பைத் தொடர்ந்தோம். ஒருபக்கம் லொக்கேஷன் பிரச்சனை. மறுபக்கம் புதுமுகங்களை வேலை வாங்குவதில் உள்ள சிரமம். இதற்கிடையே புதிய கதாநாயகியையும் தேடிப் பிடிக்க வேண்டும். படப்பிடிப்பின் இடைவேளை நேரங்களில் இணையம் மூலமாக புதிய கதாநாயகியைத் தேடும் வேலை நடந்து கொண்டிருந்தது. ஆர்யா நிறைய புகைப்படங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பிக் கொண்டிருந்தார். அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்த மாத்திரத்தில் அவர் சரியாக இருப்பார் என்று தோன்றியது. ஆர்யாவை அந்தப் பெண்ணிடம் பேசச் சொல்லிவிட்டு படப்பிடிப்பைத் தொடர்ந்தோம்.

அதிகாலையில் ஒட்டுமொத்த யூனிட்டையும் கிளப்பிக் கொண்டு திருநெல்வேலியின் வெளிப்புறத்துக்குச் சென்று ஒரு இடத்தில் எல்லோரையும் இருக்கச் செய்து சாப்பிடச் சொல்லிவிட்டு லொக்கேஷன் பார்க்கக் கிளம்புவோம். அரைமணிநேரத்துக்குள் ஒரு இடத்தை தேர்வு செய்து, அதில் இந்தக் காட்சியை எடுத்து விடலாம் என்று முடிவு செய்து படப்பிடிப்பை நடத்தினோம். இதற்கிடையில் சென்னையில் இருந்த அந்தப் புதிய கதாநாயகிக்கு தொலைபேசியிலேயே முழுக் கதையையும் சொல்லி சம்மதிக்க வைத்தேன். ஒரு பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதையில் நடிக்கவிருக்கும் அந்தக் கதாநாயகியை, இயக்குனரான நான் பார்க்காமலேயே அவர் என் படத்துக்குக் கதாநாயகியானார். ஏதோ ஒரு தைரியத்தில் இந்த முடிவை எடுத்தேன். ஆர்யாவுக்கு என் மேலும், அந்தப் பெண்ணுக்கு நான் சொன்ன கதையின் மீதும், எனக்கு என் உதவியாளர்களின் ஒத்துழைப்பின் மீதும் நம்பிக்கை இருந்ததாலேயே இது சாத்தியமாயிற்று.

திருநெல்வேலியின் பழமையான தியேட்டர்களுள் ஒன்றான ‘லட்சுமி தியேட்டர்’ இப்போது இயங்கவில்லை. மதிய உணவுக்காக எங்களுக்கு அதை திறந்து கொடுத்திருந்தார்கள். நானும், நண்பர் அழகம்பெருமாளும் உணவருந்திவிட்டு எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உட்பட பழைய பெரும் நடிகர்கள் நடித்த திரைப்படங்களை திருநெல்வேலி மக்களுக்குக் காண்பித்து பரவசப்படுத்தியிருந்த லட்சுமி தியேட்டரின் அவ்வளவு பெரிய பழைய திரைக்கு முன் உள்ள காலியான, உடைந்த, தூசியடைந்த இருக்கைகளில் உட்கார்ந்திருந்தோம். அப்போது சென்னையிலிருந்து ‘படித்துறை’ படத்தின் கதாநாயகி ஜீன்ஸும், ஆண்பிள்ளைச் சட்டையும், உயர்குதிகால் செருப்பும் அணிந்தபடி நேரே அழகம்பெருமாளிடம் வந்து வணங்கி ‘ஸார், நீங்கதானே டைரக்டர்?’ என்று கேட்டார்.
*
ஆற்றங்கரையில் நண்பர்கள் அனைவரும் தலையிலிருந்து பாதம் வரை எண்ணெய் தேய்த்துக் கொண்டு, குளிப்பதற்குமுன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது மாதிரி ஒரு காட்சி. இதில் நடித்த இளைஞர்களின் நால்வர் சென்னையைச் சேர்ந்தவர்கள். தினமும் ஷவரில் குளித்துப் பழக்கப்பட்டவர்கள். வாழ்க்கையில் முதன்முறையாக எண்ணெய் தேய்த்து ஆற்றில் குளித்தார்கள். அது ஒரு நீண்ட காட்சி. காலையிலிருந்து மாலைவரை படம்பிடித்தோம். அன்று முழுவதும் அந்த இளைஞர்கள் அனைவரும் உடம்பு முழுக்க எண்ணெயுடன் இருந்ததால் மறுநாள் எல்லோருடைய உடம்பும் புண்பட்டு சின்னச் சின்னக் கொப்பளங்கள் வந்து சிரமப்பட்டுவிட்டனர். நல்ல வேளையாக அந்தக் காட்சியில் எந்தவொரு ஷாட்டும் பாக்கியில்லாமல் எல்லாவற்றையும் அன்றைக்கே எடுத்து விட்டோம். ஏதேனும் மிச்சம் வைத்திருந்து இன்னொரு நாள் எடுத்திருந்தால் பையன்கள் இரவோடு இரவாக சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு லாரி பிடித்திருப்பார்கள்.

’படித்துறை’ திரைக்கதையில் ஒரு அறுபது வயதுக்கார கதாபாத்திரத்துக்காக திருநெல்வேலியைச் சேர்ந்த கஜேந்திரன் என்ற மனிதரை நடிக்க வைத்தோம். ‘லாலா’ என்றழைக்கப்படும் அவர் ஒரு டிரைவர். மனதளவில் வெகுளி. அவரிடம் உள்ள ஒரே பிரச்சனை, தனக்கு தெரியாதது இந்தவுலகில் எதுவுமே இல்லை என்ற அவரது நம்பிக்கைதான். அது மூடநம்பிக்கை என்பது அவரைச் சந்தித்த சில மணித்துளிகளில் அவரே நமக்கு உணர்த்திவிடுவார். காட்சிக்குத் தேவையான வசனங்களை உதவி இயக்குனர்கள் அவருக்குச் சொல்லி முடிக்கும் முன்னரே அவராக பேச ஆரம்பித்துவிடுவார். ஒரு காட்சியில் ‘பிரம்மாஸ்திரம்’ என்று அவர் சொல்ல வேண்டும். எனது இணை இயக்குனர் பார்த்திபன் எவ்வளவோ முறை கெஞ்சிப் பார்த்தும் ‘லாலா’ மீண்டும் மீண்டும் ‘பிரம்ம சாஸ்திரம்’ என்றே சொல்லிக் கொண்டிருந்தார். ஒருகட்டத்துக்கு மேல் பார்த்திபன் பொறுமை இழந்து கடும் கோபம் கொண்டார். விளைவு, முன்மண்டை வீங்கிவிட்டது. ‘லாலா’வுக்கல்ல. விரக்தியின் விளிம்புக்குச் சென்ற பார்த்திபன் வசனப் பேப்பரை தூக்கி எறிந்து விட்டு, சுவற்றில் ‘மடேர் மடேர்’ என்று முட்டிக் கொண்டார்.

இன்னொரு காட்சியை சேரன்மகாதேவி பஸ்ஸ்டாண்டில் நள்ளிரவு பன்னிரண்டரை மணிக்கு எடுத்துக் கொண்டிருந்தோம். உணர்ச்சிபூர்வமான காட்சி அது. நடிகர்கள் அனைவரும் கண்களில் கிளிசரின் போட்டு கலங்கி நடித்துக் கொண்டிருந்தனர். காட்சியை விளக்கிவிட்டு வந்து மானிட்டரில் உட்கார்ந்திருந்தேன். காட்சியின்படி வெளிநாட்டுக்குக் கிளம்பிச் செல்லும் ஒரு கதாபாத்திரத்திடம் ‘லாலா’ வந்து ’மாப்ளே, கவலப்படாம போயிட்டு வா’ என்று சொல்ல வேண்டும். கண்களில் கண்ணீருடன் அந்த இளைஞனும், வழியனுப்ப வந்த மற்ற இளைஞர்களும் காத்து நிற்க, தளர்ந்த நடையுடன் வந்து ‘லாலா’ அந்த இளைஞனின் கைகளை ஆதரவாகப் பற்றியபடி, ‘மாமா’ என்றார். கையை உதறிவிட்டு அந்த இளைஞன் சிரித்தபடி ஓட, மற்றவர்களும் கிளீசரின் கண்ணீரையும் மீறி வெடித்துச் சிரித்தனர். ‘கட்’ என்றேன். காமிராமேனைக் காணோம். காமிராவை விட்டு இறங்கி கீழே உட்கார்ந்து வயிற்றைப் பிடித்துச் சிரித்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள் காலையில் சேரன்மகாதேவியில் ஒரு இடத்தில் யூனிட் ஆட்கள் எல்லோரையும் அஸெம்பிள் செய்துவிட்டு லொக்கேஷன் பார்த்துக் கொண்டிருந்தோம். இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதி அது. இடுப்பில் சாரம்(கைலி) அணிந்திருந்த ஒரு மனிதர் என்னருகில் வந்து, ‘மகனே, என்னை ஞாபகம் இருக்காலெ? நாந்தாலெ சாகுல் சித்தப்பா’ என்றார். சிறுவயதிலிருந்தே எங்கள் குடுமபத்தோடு ஒட்டி உறவாடிய எங்கள் குடும்ப நண்பரவர். நான் பார்த்து பலவருடங்கள் ஆகியிருந்தது. அடையாளம் தெரிந்து கொண்டு ‘சித்தப்பா’ என்றேன். ‘எவ்வளவு சங்கடப்பட்டு இந்தப் படத்தை எடுக்கே! எல்லாம் கேள்விப்பட்டேன். கவலப்படாதே. நல்லதே நடக்கும். இன்ஷா அல்லா’ என்றார்.
MannoFr is offline


Old 06-17-2011, 10:59 AM   #14
HedgeYourBets

Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
Default
Cont...

லொக்கேஷன் பிரச்சனை, புது நடிகர்களுடன் போராட்டம் இத்தனையையும் மீறி குறைந்த செலவில் குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தை முடிக்க வேண்டிய கட்டாயம். தினமும் ஏதேனும் ஓர் இடைஞ்சல் வரும். ஆனாலும் ஒரு நாள்கூட நாங்கள் படப்பிடிப்பை நிறுத்தவில்லை. டைட்டில் வைத்ததிலிருந்தே சிறிதும், பெரிதுமாக நிறைய இடைஞ்சல்கள். தொழில்ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எண்ணிலடங்காத போராட்டங்கள். சென்ஸார் ஆன பிறகும் உடனே ரிலீஸாக முடியாத சூழல். ஆனாலும் நம்பிக்கை இருக்கிறது. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று. இன்ஷா அல்லா.
HedgeYourBets is offline


Old 06-17-2011, 12:28 PM   #15
Peptobismol

Join Date
Oct 2005
Age
59
Posts
4,386
Senior Member
Default
Nerd. Amazing article. Very interesting to read. It seems a very good experience for Suka. Suka's narration about Aachi was very moving. Hard to find such people. Second part was too hilarious especially the 'mama' part.

All said, I suspect even Suka is desperate in getting Padithurai released. But for some reason it is not happening at all.
Peptobismol is offline


Old 06-17-2011, 02:23 PM   #16
Lillie_Steins

Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
Default
Nerd,
பகிர்வுக்கு மிக்க நன்றி . ஆச்சிய படிச்சிட்டு கண்ணுல தண்ணி முட்டி நிக்கு மக்கா .
Lillie_Steins is offline


Old 06-17-2011, 06:32 PM   #17
9mm_fan

Join Date
May 2007
Age
54
Posts
5,191
Senior Member
Default
This is Suka's playlist - http://www.youtube.com/user/kssuka This too is an example of his raga knowledge. raaga of the raja song is given. Very nice, rare melodies, ithere is no single song i dislike in this collection. Some are ecstasic gems. Gives an idea how good the padithurai songs will be

It will be interesting and informative to hear the discussions he had with MottaiBoss, during composing sessions
9mm_fan is offline


Old 06-17-2011, 06:38 PM   #18
Drugmachine

Join Date
Apr 2006
Posts
4,490
Senior Member
Default
vithagan & Nerd, நான் App_Engine அவரை ஆப்பு_எந்திரன் என செல்லமாக அழைப்பதுண்டு
Drugmachine is offline


Old 06-17-2011, 07:15 PM   #19
Peptobismol

Join Date
Oct 2005
Age
59
Posts
4,386
Senior Member
Default
சுகா பற்றிய இன்னொரு முக்கிய தகவல்: அவர் திரு.நெல்லை கண்ணன் அவர்களுடைய புதல்வர்.
Peptobismol is offline


Old 06-17-2011, 07:37 PM   #20
Lt_Apple

Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
Default
ஆனால் எனது உதவி இயக்குனர் ஒருவருக்கு இந்த டைட்டில் பிடிக்கவில்லை. முதலில் தனக்கு இந்தத் தலைப்புக்கான அர்த்தம் புரியவில்லை என்றார். பிறகு யூத்துக்கு இது போய் சேராது என்று கவலைப்பட்டார். இரண்டாவது காரணத்தை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் முதல் காரணம், எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. காரணம், ‘படித்துறை’ என்ற தலைப்பு தனக்கு புரியவில்லை என்று சொன்ன அந்த உதவி இயக்குனர் ஒரு தமிழ் முதுகலை பட்டதாரி. Yes. Tamil MA.
கோவில் தெப்பக்குளத்து படிகள் என்று நினைத்தேன், அதி கிட்டதட்ட சரிதான்!
http://ta.wiktionary.org/wiki/%E0%AE...AE%B1%E0%AF%88
Lt_Apple is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 03:54 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity