Reply to Thread New Thread |
01-29-2011, 06:08 PM | #22 |
|
|
|
02-03-2011, 05:17 AM | #24 |
|
துவக்கத்திலேயே ஹீரோவும் ஹீரோயினும் காதலிக்கிறார்கள். ‘இந்த காதல் விவகாரமெல்லாம் எங்க வீட்டுக்கு செட் ஆகாது...’ என பழைய பாணியில் நாயகியின் அப்பாவும் அம்மாவும் டயலாக் பேசுகின்றனர். ‘காதல்ங்கறது சுத்தமான பொய்...’ என ‘பதினாறு’ என்ற ஒரு புத்தகத்தையும், அதையொட்டிய ஃப்ளாஷ்பேக்கையும் திரு ப்பமாக வைத்திருக்கிறார் டைரக்டர் சபாபதி.
அவசர கதியில் காட்டப்படும் சிவா-மதுஷாலினி சம்பந்தப்பட்ட காட்சிகளில் துளியும் ரொமான்ஸ் இல்லை. காதலனாக வரும் சிவாவைப் பார்த்தால் சிரிப்புதான் வருது. ஏதோ கடமைக்காக காதலிக்கிறேன் என்பது போல செம ’பல்பு’ வாங்குறார். ஹீரோயின் மதுஷாலினி சுமார் அழகுதான். ஃப்ளாஸ்பேக்கில் கிராமத்தைக் காட்டுறாங்க. அங்கே டவுசர் போட்ட காலத்தில் சின்னஞ் சிறுசுகள் கைகோர்த்து காதலிப்பதை... இதற்கு மேல் என்ன சொல்ல... அதே பழைய பாணி பால்ய காலத்து காதல் சங்கதிதான். ஒரு மாற்றமுமில்லை. முறைப் பையனாக வரும் பாண்டிப் பையனின் வெள்ளந்தியான நடிப்பும், வசனமும் ரொம்ப நல் லா இருக்கு. இளவரசியாக வரும் அந்தப் பெண்ணின் இயல்பான நடிப்பு ஓ.கே.தான். காதலை தட்டிக் கழிக்கும் காட்சியிலும், வீட்டை எதிர்த்து ‘எனக்கு ஒட்டுத் துணி வாங்கிக் கொடுத்துட்டு கூட்டிட்டுப் போடா...’ என காதலனுக்கு கட்டளை போடுவதும் ‘ஜிவ்’. துணி வாங்கப் போனவன் என்னவானான்...? இளவரசிக்கு என்ன நடந்தது...? என சஸ்பென்ஸ் திருப்பம் கொண்டு வருவது டைரக்டர் ‘டச்’. அந்த திருப்பத்தை க்ளை மாக்ஸில் கோர்த்துவிட்டு தன் பழைய காதலியைக் கண்டு அபிஷேக் கேரக்டர் ஒதுங்கிப் போவது அழகிய காட்சியமைப்பு. மற்றபடி, இந்த ‘பதினாறு’ ஃப்ளாஷ்பேக்கை வைத்துக் கொண்டு காதல்னா என்ன...? எப்படி காதலிக்க வேண்டும்? என சிவா - மதுஷாலினி ஜோடிக்கு டைரக்டர் பாடம் நடத்தியிருக்கிறார். ச்சே... போர் அடிக்கும் அதே பழைய சிலபஸ். சுமாரான இசைதான். என்னாச்சு யுவன்? படம் நெடுக எல்லா கேரக்டர்களும் நீட்டி முழக்கி வசனம் பேசுவதும், தொடர்ச்சியாக வட்டார பாஷையில் பழமொழிகளை எடுத்து விடுவதுமாக திரைக்கதையில் நிறைய பலவீனங்கள். பள்ளிக் கூடப் பையனும், பெண்ணும் ஏதோ பக்குவப்பட்டவர்கள் போல வயதுக்கு மீறிய கவித்துமான வசனங்களைப் பேசுவது கொஞ்சம் அலுப்பு. இள வரசி, கோபி கேரக்டரின் ஆங்கிலப் பெயர்களில் முதல் இன்ஷியலை பதினாறாக பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டிய டைரக்டர், வசனங்களை குறைத்து படத்தை இன் னும் விஷூவலாக சொல்ல முயற்சித்திருக்கலாம். பதினாறு - வெறும் ஆர்வக் கோளாறு. |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|