Reply to Thread New Thread |
02-05-2006, 08:00 AM | #1 |
|
'தா'... தமிழ் சினிமாவின் தரமுயர்த்தும் புதிய முயற்சி!
பெரிசாக என்ன எடுத்திருக்கப் போகிறார்கள்... பத்தோடு பதினொன்றாக இருக்குமோ என்ற எண்ணத்துடன் பார்க்க உட்கார்ந்தோம் நாளை வெளிவரவிருக்கும் 'தா' திரைப்படத்தை. படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே தெரிந்துவிட்டது, இது 'சரக்குள்ள இயக்குநரி'ன் படம் என்பது. படத்தின் க்ளைமாக்ஸ் முடிவில், பத்திரிகையாளர்கள் தங்களையும் அறியாமல் கைதட்டிப் பாராட்டினர். தமிழில் உண்மையிலேயே வித்தியாசமான, அதேநேரம் பொழுதுபோக்கும் நிறைந்தபடம் என்ற பெருமை தா படத்துக்கு உண்டு. ஒரு இயக்குநரின் ஆளுமையை படம் முழுக்க உணர முடிந்தது. சுமாரான படத்துக்குக் கூட தொலைக்காட்சி விளம்பரங்கள் தூள் பறக்க, இந்த சூப்பர் படம் சந்தடியில்லாமல் வருகிறதே என்று படத்தின் இயக்குநரான ஆர்கே சூர்யபிரகாஷிடம் கேட்டோம். "நிச்சயம் பெரிய லெவல்ல பண்ணனும் சார். படம் பார்த்த பத்திரிகைக்காரங்க ஒருமனதா பாராட்டியிருப்பது நம்பிக்கையா இருக்கு" என்றார். சமுத்திரக்கனியிடம் உதவியாளராக இருந்த சூர்ய பிரகாஷுக்கு இது முதல்படம். படத்தின் ஹீரோ ஸ்ரீஹரி இதற்கு முன் ஏர்லைன்ஸில் பணியாற்றிக் கொண்டிருந்தாராம். கதை மீதிருந்த நம்பிக்கையில் வேலையை விட்டுவிட்டு 'தா' ஹீரோவாகியிருக்கிறார். நாயகியாக புதுமுகம் நிஷா அறிமுகமாகிறார். இசையமைப்பாளரும் ஒரு புதுமுகம்தான். பெயர் ஸ்ரீவிஜய். ராஜேஷ் உத்தமன் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை முதல் திரைக்கு வருகிறது. |
|
03-05-2006, 08:00 AM | #2 |
|
|
|
12-03-2010, 08:20 PM | #3 |
|
|
|
12-03-2010, 09:21 PM | #4 |
|
|
|
12-03-2010, 10:21 PM | #6 |
|
|
|
12-03-2010, 10:53 PM | #8 |
|
நேரம் ஒதுக்கிய உதயநிதி
நிம்மதியடைந்த 'தா' படக்குழு! பகட்டான சூரியகாந்தியை விட, பார்க்க சின்னதாக இருக்கும் பட்டு ரோஜா ஈர்த்துவிடும் யாரையும்! அப்படிதான் 'தா' என்ற திரைப்படமும் இருந்தது. படம் துவங்கியதிலிருந்து பார்வைக்கு வருகிற வரைக்கும் கூட 'தா' வை பற்றி ஒரு தாழ்வான அபிப்ராயம் கூட வைக்கவில்லை பத்திரிகையாளர்கள். அதற்கும் கீழேதான் இருந்தது அனைவரின் எண்ணமும்!. ஆனால் இப்படம் திரையிடப்பட்ட நேற்று, "அசத்திபுட்டாய்ங்களேப்பா.." என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டதுடன் அதில் நடித்த நடிகர்களையும் இயக்குனரையும் அவர்களே கூச்சப்படுகிற அளவுக்கு புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். இன்னும் ஒரு படி மேலே போன பத்திரிகையாளர் ஒருவர் உதயநிதி ஸ்டாலினுக்கு போன் செய்து, "சார் இந்த படத்தையெல்லாம் வாங்கி நீங்க ரிலீஸ் பண்ணணும். உங்களுக்கும் கவுரமா இருக்கும். ஓட வேணடிய ஒரு படம் ஃபெயிலியர் ஆயிடாம பார்த்துகிட்ட புண்ணியமும் கிடைக்கும்" என்றார் திறந்த மனதுடன்! இவ்வளவு து£ரம் சொல்வதால் பார்த்துதான் விடுவோமே என்று முடிவெடுத்த உதயநிதி பரபரப்பான தனது ஷெட்யூலை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு இன்று காலையில் படம் பார்க்க வந்திருந்தார். ஒரு நல்ல முடிவை தா(ருங்கள்) என்று காத்திருக்கிறது தா டீம்! |
|
12-03-2010, 10:58 PM | #9 |
|
|
|
12-08-2010, 02:52 AM | #10 |
|
http://narumugai.com/?p=20082
இந்த படம் பல தியேட்டர்களின் தூக்கப்பட்டாலும் நல்லபடத்தை நீங்கள் திருட்டு டிவிடியலாவது பார்க்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் இதற்கு விமர்சனம் எழுதி இருக்கிறோம். இந்த படமும் பத்தொடு பதினொன்று என நினைத்து உள்ளே போனால், அந்த எண்ணத்தை வேரோடு பிடுங்கி எறிந்திருக்கிறார் புதுமுக இயக்குனர் சூரிய பிரபாகர். சைட்ல பார்த்தா சசிகுமார், சட்டுன்னு பார்த்தா பாக்யராஜ் என்று கலந்து கட்டி அடித்திருக்கும் இவரது ‘ஸ்க்ரீன் ப்ளே’ ஸ்டைலுக்கு முதலில் ஒரு பொக்கே! “எனக்கு இன்னைக்கு கல்யாணம். இதோ பக்கத்துல உட்கார்ந்திருக்காளே என் பெண்டாட்டி. இவளை கட்டிக்க நான் எத்தனை பேரை உதைச்சிருக்கேன். என்னென்ன நடந்திருக்கு தெரியுமா?” என்று கதை சொல்ல ஆரம்பிக்கிறார் ஹீரோ ஸ்ரீஹரி. அப்புறம் நம் கையை பிடித்துக் கொண்டு ஓட்டமாய் ஓடுகிறது திரைக்கதையும் கலகலப்பான காட்சிகளும். முடிவை முன்பே யூகிக்கிறவர்களுக்கு ‘தா…’ன்னு கேட்கிறதுக்கு முன்னாடியே ஒரு மோதிரம் போடலாம்! ஐந்து இளைஞர்கள். வெவ்வேறு அந்தஸ்தில் இருந்தாலும், இவர்களின் நட்பு ரொம்பவே கெட்டி. நண்பனின் தங்கையை வேறொருவன் ரூட் விட, பிரண்ட்ஷிப்புக்காகவும், அது காதல் என்பது புரியாமலும் காதலனை பொளந்து கட்டுகிறான் ஹீரோ. “உனக்கும் லவ் வந்திருந்தா தெரிஞ்சுருக்கும். பத்து பேரை அடிக்கிறவன் ஆம்பிளை இல்ல. ஒருத்தியோட மனசை ஜெயிக்கறவன்தான் ஆம்பிளை” என்று நண்பனின் தங்கை திட்டிவிட்டு போக, அனுபவத்திற்காக காதலிக்க துவங்குகிறான் ஹீரோ. அதிலும் ஃபெயில்! அப்புறம் வீட்டில் பார்க்கும் பெண்ணையை காதலிக்க ஆரம்பிக்கிறான். அவளோ நன்கு படித்த அழகி. இவனோ படிப்பும் இல்லாத பர்சனாலிடியும் இல்லாத லோக்கல். இந்த ஏற்ற தாழ்வை தன் அன்பால் சரி செய்யும் அவன், தாலி கட்டுகிற கடைசி நேரத்தில் சந்திக்கும் குழப்பங்கள்தான் முடிவு. ‘உயிர் ஊருக்கு. உடல் பாருக்கு’ என்ற மன்றப் பலகை வாசகத்தில் ஆரம்பித்து, அம்சவேணியின் அதிரடி டயலாக் வரைக்கும் நம்மை பதம் பார்க்கிறது காமெடி! (‘பார்’ன்னா உலகம்னு அர்த்தமாம்ல…) அதிலும் அப்போதுதான் வயிறு முட்ட சாப்பிட்டிருக்கும் சண்முகம், நண்பர்கள் குடிக்க அழைத்தவுடன் வயிறை காலி செய்வதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சியும், அம்சவேணியின் காதலுக்கு பின் அவருக்கு நேரும் பரிணாம வளர்ச்சியும் தியேட்டரையே அதிர வைக்கிறது. நகைச்சுவை நாயகர்களில் நம்பிக்கைக்குரிய புதிய வரவு இந்த சண்முகம்! அம்சவேணியின் டயலாக் மாடுலேஷன் டாப். “ஒவ்வொருத்தரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பொண்ணு இருப்பான்னு சொல்லுவாங்க” என்று மைல்டாக ஆரம்பித்து, “த்து£…” காறித் துப்பி விட்டு செல்லும் காட்சிகளில் எல்லாம் பொங்கி வருகிறது சிரிப்பு. ஆக்ஷன் ஹீரோவுக்கான அத்தனை முகவெட்டும் இருக்கிறது ஹரிக்கு. எவளாயிருந்தா என்ன? தேவை உடனடியாக ஒரு காதலி… என்கிற அவரது மௌன தத்துவம் பீறிட்டு தெறிக்கிறது பல காட்சிகளில். அதில் ஒன்றுதான் அந்த ‘கண்ணே கலைமானே’ பாடலை குத்துப்பாட்டாக்குகிற கொடுமை. கல்லு£ரி மாணவியான நிஷாவை இவருக்கு நிச்சயித்த பின் சக மாணவனிடமிருந்தும், தாய் மாமாவிடமிருந்தும் அவரை காப்பாற்ற ஹரி படுகிற பாடு செம கிறுகிறுப்பு. கடைசியில் கை விலங்குதான் என்று நினைத்தால் விக்ரமன் ஸ்டைலிலில் வேறு கதவை திறக்கிறார் டைரக்டர். கதாநாயகி நிஷாவை எங்கிருந்து பிடித்தார்களோ, ஒரு தலை ராகம் ரூபாவின் சோகம் வழிந்தோடுகிற முகம். கதைக்குள் நச் என்று பொருந்திவிடுகிறார். ஆஸ்பிடலில் தன்னை குறை சொல்லும் அம்மாவை “உதவி செய்வேன்னு கூட்டிட்டு வந்தேன். நீ கிளம்பு” என்று விரட்டும் ஹரியை மவுனமாகவே காதலிக்க ஆரம்பிக்கும் இவரது கேரக்டரும் ஈர்க்கிறது. நாற்பதை தாண்டியும் லவ்வுக்காக அலைவதும், தினம் ஒரு செருப்பை சந்தித்து மரத்து போவதுமாக சிவப்பு ரோஜா கோவிந்தன். அந்தகால கமல் மாதிரியான இவரது கெட்டப், பார்த்ததுமே பல்லிளிக்க வைக்கிறது. டைரக்டர் சூர்ய பிரபாகர், எடிட்டர் காசிவிஸ்வநாதன் இருவர் தவிர மற்ற எல்லோரும் இன்னும் உழைத்திருக்கலாம். ஸ்ரீவிஜெய் இசையில் ‘ஏதோ ஒரு ஏக்கமோ…’ மட்டும் திரும்ப முணுமுணுக்க வைக்கிறது. ‘தா’ என்கிறார்கள். கொடுங்களேன் ஒரு கோலாகலமான வெற்றியை! இந்தபடத்தையும் யாராவது பெரிய தயாரிப்பாளர்கள் வெளியிட்டிருக்கலாம், ஒரு நல்ல படம் மக்களுக்கு சேராமல் போய் விட்டது. |
|
12-08-2010, 03:12 AM | #12 |
|
|
|
12-13-2010, 03:02 AM | #13 |
|
|
|
12-13-2010, 03:34 AM | #14 |
|
|
|
12-13-2010, 03:36 AM | #15 |
|
Tha Review by behindwoods
THA MOVIE REVIEW Review by : Behindwoods review board Starring: Sri Hari, Nisha Direction: RK Surya Prabhakar Music: Sri Vijay Production: Rajesh Uthaman Just before a couple enters into marriage there are a thousand matters swarming around in their minds. Thaa explores the feelings and doubts of a couple as they get to know each other, develop affection and prepare to get married. It is more than just another regular love story. Tha The movie is about a young man doing a normal blue collar job in his hometown. Simple, shy and quite careless about his appearance; he just goes about his daily life as any other youngster would. His only social life is when he meets his group of friends who are quite unlike him. Yes, they have their jobs and do them responsibly, but they also show a very active interest in trying to woo girls of their choice; only the protagonist is an exception to all this, choosing to stay away from all matters related to love. Now, perhaps you would think that this is yet another story of masculine resistance being broken by one look at a beautiful girl; and violins begin playing in the west with sunshine in the background. But, that is where Thaa differs from regular love story that is part of cinema. The protagonist does have deep feelings inside him, the desire to find a girl for himself, but is really too much of an introvert to get on with it. And, as is the norm in all such cases, the parents step in and find a bride for their son. The twist happens here; the chosen girl holds a white collar job, is very sociable, sophisticated and looks upon the prospective groom as professionally, socially and personally incompatible. But, as the families have agreed upon the match, there is little she can do about it. What happens next? Does the girl agree reluctantly, does the marriage succeed or is there something else in store? What could have ended up as just another love story does eventually manage to make a sort of impression because of the hint of reality and practicality that is thrown into the script. We have been used to seeing girls falling head over heels in love with heroes either after being impressed by their machismo and style, or by their ideals and bravado. But here, the reasons for which the heroine disapproves of the prospective groom appear to be taken out of real life; the financial differences, the professional gulf etc. Also convincing are the portions where the hero tries to win over the heroine’s heart. Here again there are no cinematic clichés like ‘saving the heroine from eve teasers’ or ‘masquerading as an idealist out to save society’ or ‘ramp walk Remo kind of stuff’. The hero tries very sincerely to establish a deep personal relationship with his bride to be. The film carries yet another twist in the form of the hero’s psyche which makes him think that what is happening is ‘too good to be true’. Looking at the movie in totality, there are only a few turning points during the entire course of the narration. There are not many moments that make you sit up. It is rather plain viewing; but don’t mistake plain for bland; it is a good kind of plain. The slow forging of the relationship looks genuine, so does the internal turmoil of the hero’s mind which keep one connected to the characters. There is also the odd lively fun moment which involves the gang of friends, but not too many. Songs too have been sparsely used. Almost the entire cast consists of fresh faces and to their credit they have done a fair job. The hero Sri Hari and heroine Nisha carry off the demands of their character well. There is not much of note on the technical front which is strictly okay. Debutante Sri Vijay has come up with a couple of hummable tunes. Thaa is neither the family entertainer, nor is it the sugar coated love story. In fact, there is more of a mature relationship of understanding being formed than any romance happening on screen. That treatment puts Thaa on a different track from other love based subjects and director Shurya Prabakar deserves credit for adopting this treatment. A simple, self-contained film of a mature relationship and inner doubt! http://www.behindwoods.com/tamil-mov...ie-review.html |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|