Reply to Thread New Thread |
05-29-2010, 01:19 AM | #1 |
|
சமீப காலமாக தமிழ்த் திரையுலகில் பல படங்கள் தொடர்ச்சியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத சூழ்நிலை நிலவுகிறது. வழக்கம் போல் சென்டிமென்ட்டிற்கும் குறைவில்லை. குறிப்பாக பெரிய அளவில் தயாரிக்கப் படும் பெரிய பட்ஜெட் படங்கள் தான் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப் படுகின்றன.
முந்தைய தலைமுறையின் காலத்தில் தி்ட்டமிடுதல் ஓரளவுக்கு மேல் தோல்வியைத் தரவில்லை. நஷ்டமும் அதிகம் யாரும் அடைந்ததாக தெரியவில்லை. இதே நிலை இப்பொழுதும் தொடரலாம். தொடருவதற்கும் வாய்ப்புள்ளது. சரியான படி திட்டமிடல், சரியான கலைஞர்கள் தேர்வு இப்படி பல வகையிலும் பல துறையினரும் ஒருங்கிணைந்து செயல் படும் போது நிச்சயம் வெற்றி கிடைக்கும். ஆனால் சென்டிமென்டாக சென்டிமென்டையே நம்பி எடுக்கப் படும் படங்கள் எந்த அளவிற்கு வெற்றியை ஈட்டுகின்றன. படத்தலைப்புகள் அல்லது படத்தின் கதை, கதாபாத்திரங்கள் அனைத்தும் பழைய படங்களையே அடிப்படையாக கொண்டு தயாரிக்கப் படும் போது அதனுடைய விளைவுகள் எப்படி இருக்கும் என ஊகிக்க முடியாத அளவிற்கா தற்போதைய தலைமுறை உள்ளது? தமிழில் வார்த்தைகளுக்குப் பஞ்சமா அல்லது வேறென்ன காரணம். புரியவில்லை. நல்ல கதையம்சம் உள்ள படம் அல்லது நல்ல வகையில் தரப்படும் படம் மக்களிடத்தில் வெற்றியைத் தான் பெற்றுள்ளன. தற்போதைய ஆடியன்ஸ் கதையைப் பற்றிக்கூட பெரிதாக எதிர்பார்ப்பதில்லை. கொடுப்பதை சிறப்பாகக் கொடுங்கள் என்று தான் எதிர் பார்க்கிறார்கள். ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து இறுதியாக படத்துக்குப் பெயர் வைத்தது முந்தைய தலைமுறை. இன்றோ, படத்துக்குத் தலைப்பை வைத்து விட்டு கதையைத் தேட முற்படுகிறது தற்போதைய தலைமுறை. தமிழில் உள்ள அளவிற்கு மற்ற மொழிகளில் எழுத்தாளர்கள் உள்ளனரா என்பது ஐயமே. கடல் போல் ஆற்றல் இருக்கும் போது அவர்களைப் பயன்படுத்திக் கொண்டு குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த படமாகத் தரமுடியுமே.. சுப்ரமணியபுரம், நோடோடிகள் போன்ற பல படங்கள் உதாரணமாகத் தர முடியுமே. சிந்திப்பார்களா திரைப்படத்துறையினர் முதலில் அவர்கள் படத்தலைப்பிலிருந்து தம்முடைய புதிய அணுகுமுறையைத் துவக்கலாமே. நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து கதைக்குப் பொருத்தமான புதிய தலைப்புகளாகத் தேர்ந்தெடுக்கலாமே.. ராகவேந்திரன் |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|