Reply to Thread New Thread |
04-10-2008, 03:22 AM | #1 |
|
விஜய் டிவியின் விஜய் திரை விருதுகளுக்கான ஓட்டெடுப்பு தொடங்கியுள்ளது. வருகிற 17ம் தேதி வரை நேயர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகையர் உள்ளிட்டோரைத் தேர்வு செய்ய வாக்களிக்கலாம்.
விஜய் டிவி கடந்த ஆண்டு முதல் சிறைந்த திரைப்படக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கத் தொடங்கியுள்ளது. விருதுகளுக்குரியவர்களை நேயர்களே தேர்வு செய்கிறார்கள் என்பது இதில் விசேஷமானது. இதற்காக ரசிகன் எக்ஸ்பிரஸ் என்ற வாகனம் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு அனுப்பப்பட்டு நேயர்களின் கருத்துக்களைப் பெற்று. இந்த ஆண்டு 107 திரைப்படங்கள் விருதுப் போட்டியில் இடம் பெற்றன. நடிகர், நடிகை, இயக்குநர், படம் ஆகியவற்றை நேயர்களே ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கின்றனர். பிற விருதுகளை நடுவர் குழு தேர்வு செய்கிறது. தமிழகத்தின முக்கிய ஊர்களுக்கு சென்று திரும்பியுள்ள ரசிகன் எக்ஸ்பிரஸ் மூலம் பெருமளவிலான நேயர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு வாக்களித்துள்ளனர். அதிலிருந்து சிறந்த ஹீரோ, சிறந்த ஹீரோயின், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் ஆகியோருக்கான விருதுப் போட்டியில் இடம் பெறுவோரின் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விசிறிகளுடன் நடிகர்கள் பரத், விஷால், இயக்குநர் பேரரசு ஆகியோர் கலந்துரையாடி அவர்களுடன் தங்களது எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டனர். இதுதொடர்பான நிகழ்ச்சி கடந்த 6ம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பானது. நடுவர் குழுவில் ஒருவரான யூகி சேதுவும் இதில் கலந்து கொண்டார். விருதுப் போட்டியில் இடம் பெற்றிருப்போர் விவரம்: சிறந்த நடிகர்களுக்கான போட்டியில் ரஜினிகாந்த், விஜய், அஜீத், சூர்யா, மாதவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சிறந்த நடிகைக்கான பட்டியலில் நயனதாரா, ஆசின், ஜோதிகா, ஷ்ரியா, திரிஷா ஆகியோர் உள்ளனர். சிறந்த இயக்குநர்களுக்கான போட்டியில், அமீர், விஷ்ணுவர்த்தன், ராதாமோகன், ஷங்கர், பிரபுதேவா ஆகியோர் உள்ளனர். சிறந்த திரைப்படங்களுக்கான போட்டியில் பருத்தி வீரன், போக்கிரி, சிவாஜி, மொழி, பில்லா ஆகியவை உள்ளன. இவர்களில் வெற்றி பெறுவோரை நேயர்கள் தேர்ந்தெடுக்கவுள்ளனர். எஸ்.எம்.எஸ்., போன் உள்ளிட்டவை மூலம் தேர்வு செய்யலாம். வாக்களிக்கும் முறை ரிலையன்ஸ் மொபைல் போன் வைத்திருப்பவர்கள் 51234 என்ற எண்ணை அழைத்து, விஜய் அவார்ட்ஸ் என்று கூறி தங்களுக்குப் பிடித்தமானவர்களை தேர்வு செய்யலாம். அல்லது பிற போன் வைத்திருப்பவர்கள் VA என்று டைப் செய்து, 57827 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். www.vijayawards.in என்ற இணையதளத்திற்கும் சென்று வாக்களிக்கலாம். ஏப்ரல் 6ம் தேதி 3 மணி முதல் ஏப்ரல் 17ம் தேதி இரவு 10 மணி வரை வாக்களிக்கலாம். |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|