Reply to Thread New Thread |
|
![]() |
#1 |
|
|
![]() |
![]() |
#2 |
|
|
![]() |
![]() |
#3 |
|
|
![]() |
![]() |
#4 |
|
|
![]() |
![]() |
#6 |
|
|
![]() |
![]() |
#7 |
|
செமி பைனலில் விஜயின் இ.க்யூ.2
விஜய் சேனல் கடந்த நவம்பர் மாதம் முதல் ஒளிபரப்பி வரும் , கல்லுõரி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான பல்சுவை போட்டி நிகழ்ச்சி, இ.க்யூ.,2. இதில், பல கல்லுõரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் குழுக்களாக கலந்து கொண்டனர். செமி பைனலில், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுõரி, டாக்டர் எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுõரி, சாஸ்த்ரா பல்கலைக்கழக குழு பங்கேற்றுள்ளன. நேற்று கலக்கியது போக, வரும் சனிக்கிழமை இந்த குழுக்கள் பட்டய கிளப்பும். அப்போது, பைனலுக்கு யார் என்பது தெரிந்து விடும். முதலில் வரும் குழுவுக்கு ரூ. 2 லட்சம், இரண்டாவதாக வரும் குழுவுக்கு ரூ. 1 லட்சம் பரிசு காத்திருக்கிறது. இரவு 7 மணிக்கு மறக்காதீங்க. |
![]() |
![]() |
#8 |
|
|
![]() |
![]() |
#9 |
|
விஜய் டி.வி. தொடரில் நடிக்க...
பள்ளிப் பருவத்தையும் பால்ய காலத்தின் பசுமை நிறைந்த நினைவுகளையும் மீட்டெடுத்து நேயர்களை நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி வரும் நிகழ்ச்சிகளுள் ஒன்று... விஜய் டி.வி.யின் "கனா காணும் காலங்கள்'. இந்தத் தொடரில் நடித்து வரும் பச்சை, பாண்டி, ராகவி, உன்னி, பாலா, வினீத் ஆகியோர் நேயர்கள் மத்தியில் வெகுவாகப் பிரபலமாகியுள்ளனர். கதைப்படி, தற்போது இவர்கள் 12-ம் வகுப்பை முடித்து மேற்படிப்பைத் தொடரவுள்ளனர். அதேபோல 11-ம் வகுப்பு படிக்கும் ராக்கி, கிரண், ப்ரியா, மிண்டு ஆகியோர் 12-ம் வகுப்பிற்கு முன்னேறுகிறார்கள். இதையடுத்து 11-ம் வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவியராக நடிப்பதற்கு விஜய் டி.வி. புதுமுகங்களைத் தேடி வருகிறது. இதில் நடிக்க விரும்புபவர்கள், திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "கனா காணும் காலங்கள்' தொடரின் இடையே கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்து புகைப்படத்துடன் தங்களைப் பற்றிய விவரங்களை... "எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர், "கனா காணும் காலங்கள்', விஜய் டி.வி., எண்.15, ஜெகநாதன் ரோடு, நுங்கம்பாக்கம்; சென்னை-34.' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். சரியான பதில்களைக் கூறுபவர்கள், தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்கள் "கனா காணும் காலங்கள்' தொடரில் நடிக்கலாம். |
![]() |
![]() |
#10 |
|
வாழ்க்கையில் வெற்றி பெற்ற பிரபல முகங்களை நேயர்களுக்கு புதிய கோணத்தில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இது. இந்நிகழ்ச்சியை இதுவரை தொகுத்து வந்த சார்மிளாவிற்கு பதிலாக இதனை தொகுக்க வருகிறார் பிரபல நடிகையான சுவர்ணமால்யா. இந்நிகழ்ச்சியின் முதல் விருந்தாளியாக எழுத்தாளர் பா.விஜய் வந்திருந்தார். இவரை தொடர்ந்து வரும் 5-ந்தேதி (திங்கள்) பின்னணி இசைப்பாடகரான விஜய் ஏசுதாஸ் பங்கு பெறுகிறார். இவருடன் அவரது குருவான ராமமூர்த்தி ராவ் பங்கு பெறுகிறார்.விஜய் டி.வி.யில் திங்கள்-புதன் இரவு 10.30 மணிக்கு ஜில்லுன்னு ஒரு சந்திப்பை காணலாம்.
|
![]() |
![]() |
#11 |
|
பள்ளி குழந்தைகளுக்கெல்லாம் கோடை விடுமுறை விட்டாச்சு! சம்மருக்கு ஏற்றார்ப் போல ஜில்லென்று வருகின்றனர் குட்டீஸ். விஜய் டி.வி.யின் இந்த வார திறந்திடு சீசேம் நிகழ்ச்சியில். குழந்தைகளை குதூகலப்படுத்தும் பரிசுகளான பொம்மைகள், புத்தகம், கீ போர்டு மற்றும் வீடியோ கேம்ஸ் ஆகியவை பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் பம்பர் பரிசாக ரூ. 35 ஆயிரம் வெல்லும் அரிய வாய்ப்பும் குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.
விஜய் ஆதிராஜ×ம் குழந்தையோடு குழந்தையாக மாறி குட்டீஸுக்கு நிகராக செய்யும் லூட்டிகள் ரசிக்கும்படி அமைந்திருக்கும். இந்த ஸ்பெஷல் திறந்திடு சிசேம் நிகழ்ச்சியை நாளை (சனி) இரவு 7 மணிக்கு விஜய் டி.வி.யில் கண்டு மகிழுங்கள். |
![]() |
![]() |
#12 |
|
கோடை விடுமுறை துவங்கி விட்ட இந்நிலையில், விட்டாச்சு லீவு என்ற தாரக மந்திரத்தை எல்லா வயது சிறுவர்களும் கூறுவது நம் காதில் விழுகிறது. குழந்தைகளுக்கு பிடித்தமான, அவர்களை குதூகலப்படுத்தும் வகையில் பல அனிமேஷன் திரைப்படங்களை வரும் 21 முதல் ஒளிபரப்ப விஜய் டி.வி. தயாராகி விட்டது.
குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில், அவர்களை சிரிக்க, சிந்திக்க வைக்க ஹோம் ஏலோன், கிரீஷ், மைபிரண்டு கணேஷ், பால் கணேஷ், டார்க்மேன், பவர் ரேஞ்சர்ஸ் போன்ற சூப்பர் ஹிட் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் தமிழில் திங்கள்-வியாழன் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஊட்டும் மற்றுமொரு செய்தி, திரைப்படத்திற்கு இடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கும் அதிர்ஷ்டசாலி சிறுவர்களுக்கு தினம் ஒரு சைக்கிள் மற்றும் பிரம்மிப்பூட்டும் பல பரிசுகள் காத்துக்கொண்டிருக்கிறது. |
![]() |
![]() |
#13 |
|
விஜய் சேனலில், ஞாயிறுதோறும் காலை ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும், தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது
கடந்த வாரம் ஓவிய சுற்றில், நடுவராக வழக்கமாக வரும் நெல்லை கண்ணனுடன் நடிகரும் ஓவியருமான சிவகுமார் பங்கேற்றார். ஓவியச்சுற்றில் மருது, மனோ ஆகியோரின் ஓவியங்களை பார்த்து பேச்சாளர்கள் , தமிழில் கலக்கினர். இதில் பங்கேற்ற 26 பேச்சாளர்களும், இன்று நடக்கும் அரசியல் விவாத மேடையிலும் பங்கேற்கின்றனர். நடுவராக, இலக்கியவாதி நாஞ்சில் சம்பத்தும் சேர்கிறார். பேச்சாளர்களின் பேச்சை உன்னிப்பாக கேட்டு, பளீச் என தவறை சுட்டிக்காட்டுவதில் நெல்லை கண்ணனுக்கு நிகர் அவர் தான். தமிழகத்தில், தமிழில் பேசுவதே குறைந்து விட்டது ...என்று அலுத்துக்கொள்பவரா? முதலில் இந்த நிகழ்ச்சியை பாருங்கள்! |
![]() |
![]() |
#14 |
|
|
![]() |
![]() |
#15 |
|
விஜய் டி.வி.யில் சூப்பர் சிங்கர்-2008 தமிழகத்தின் சிறந்த பாடகருக்கான குரல் தேடல் மீண்டும் பிரம்மாண்டமாக துவங்க உள்ளது. இதில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிக்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் இசையில் பாடும் ஒரு அரிய வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது.
முதற்கட்ட குரல் தேர்வு இரண்டு வாரங்களாக கோவை மற்றும் திருச்சியில் நடந்து முடிந்தது. கோவையில் 16 பேர் திருச்சியில் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வரும் ஞாயிறு (ஜுன் 22) முதல் 26-ந்தேதி வரை சென்னையில் குரல் தேர்வு நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் பாடகர்கள் பிரத்யேமாக அமைக்கப்பட்டிருக்கும் வீடியோ பூத்களுக்கு சென்று தங்களின் குரலை பதிவு செய்யலாம். சென்னையில் வீடியோ பூத்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்கள்: ஸ்பென்ஸர்ஸ்: ஜி.என். செட்டி ரோடு, தி. நகர். பாரதி ஏர்டெல் லிட்: அண்ணாநகர் கிழக்கு, அண்ணா நகர். (கே-4 போலீஸ் ஸ்டேஷன் அருகில்). அபிராமி மெகா மால்: புரசைவாக்கம் ஹை ரோடு. அடையார் ஆனந்த பவன்: எம்.ஜி. ரோடு, சாஸ்திரி நகர். அடையாறு மொபைல் பூத்களும் சென்னை மாநகரத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதிலும் குரலை பதிவு செய்யலாம். இந்த வீடியோ பூத் வாய்ப்பை பயன்படுத்தாதவர்கள், வரும் 27-ந்தேதி சென்னையில் காலை 8 மணி முதல் மேயர் ஸ்ரீராமநாத செட்டியார் சென்டர், 75/2 சாந்தோம் நெடுஞ் சாலை, ராஜா அண்ணாமலை புரம், சென்னை-600028 என்னும் இடத்தில் நடக்கவிருக்கும் நேர்முகத் தேர்விலும் பங்கு பெறலாம். சென்னை நேர்முகத் தேர்வில் தகுதி சுற்று நடுவர்களாக பின்னணி பாடகர்கள் பிரசாந்தி, ராஜலட்சுமி மற்றும் விநயா பங்கு பெறுகின்றனர். மேலும் உங்கள் குரலை முழு விவரங்களோடு (not clear) என்ற இணைய தளத்திலும் பதிவு செய்யலாம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உங்களின் பாட்டு திறமையை உலகறிய செய்யுங்கள்! |
![]() |
![]() |
#16 |
|
விஜய் டிவியில், நான்கு மாதங்களாக சக்கை போடு போட்டு வரும் இசைக்குடும்பம் நிகழ்ச்சி, பைனலில் நுழைகிறது
பின்னணி பாடகர்கள் பென்னி, உஜ்ஜெய்னி, ராகுல், வினயா, அஸ்லாம், கிரி, மற்றும் சூப்பர் சிங்கர்கள் சவும்யா, கவுதம், ஜூனியர் சூப்பர் சிங்கர்ஸ் பால சாரங்கன், தன்யாஸ்ரீ, கவுசிக், மதுமிதா, சாய் சரண், அபர்ணா ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் லட்சங்களை அள்ளப் போவது யார் என்பது இன்று தெரிந்து விடும். ரமேஷ் விநாயகம், இவர்களின் பாடல் திறனை மதிப்பிடுகிறார். பேசுகிறேன் படப்பாடல் பாடிய நேகாபசின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் |
![]() |
![]() |
#17 |
|
மனித வாழ்வில் இறை பக்தி எவ்வளவு முக்கியம்? ஆன்மிக பாதையின் அற்புதம் என்ன? இதை புரிய வைத்தார் தயானந்த சரஸ்வதி சுவாமிகள்.
விஜய் "டிவி'யின் "பக்தி திருவிழா'வை நேரடியாக துவக்கி வைத்து பேசிய அவர், "இந்த உலகில் வாழும் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறோம்; கொடுத்த வனும் அவனே; கொடுப்பவனும் அவனே' என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது. சென்னையில் மூன்று நாட்கள் நடந்த பக்தி திருவிழாவில், ஆராமுதாச் சாரியார், முரளீதர சுவாமிகள், கருணாச் சாரியார், சரஸ்வதி ராமநாதன், நாகை முகுந்தன், அனந்த பத்மநாபாச்சாரியார் ஆகியோர் சொற்பொழிவும், நாத சங்கீர்த்தனமும் நடந்தது. விரைவில் இந்த நிகழ்ச்சிகள் "டிவி'யில் ஒளிபரப்பாகும். |
![]() |
![]() |
#18 |
|
நடனம் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஒருவரின் நடனத் திறமையை நிரூபிக்கும் விதமாக தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத ஒரு புதிய முயற்சிதான் விஜய் டி.வி.யில் விரைவில் வரவிருக்கும்`நடனத்தில் அடுத்த பிரபுதேவா' நிகழ்ச்சி.
நடனத்தில் விருப்பம் கொண்ட 16 முதல் 35 வயது நிரம்பியவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். சிறந்த நடனக் கலைஞர்களில் ஒருவரான பிரபுதேவா, இவர்களில் யார் அடுத்த நடனப் புயல் என தேர்ந்தெடுக்க உள்ளார். |
![]() |
![]() |
#19 |
|
மனித வாழ்வில் இறை பக்தி எவ்வளவு முக்கியம்? ஆன்மிக பாதையின் அற்புதம் என்ன? இதை புரிய வைத்தார் தயானந்த சரஸ்வதி சுவாமிகள்.
விஜய் "டிவி'யின் "பக்தி திருவிழா'வை நேரடியாக துவக்கி வைத்து பேசிய அவர், "இந்த உலகில் வாழும் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறோம்; கொடுத்த வனும் அவனே; கொடுப்பவனும் அவனே' என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது. சென்னையில் மூன்று நாட்கள் நடந்த பக்தி திருவிழாவில், ஆராமுதாச் சாரியார், முரளீதர சுவாமிகள், கருணாச் சாரியார், சரஸ்வதி ராமநாதன், நாகை முகுந்தன், அனந்த பத்மநாபாச்சாரியார் ஆகியோர் சொற்பொழிவும், நாத சங்கீர்த்தனமும் நடந்தது. விரைவில் இந்த நிகழ்ச்சிகள் "டிவி'யில் ஒளிபரப்பாகும். |
![]() |
![]() |
#20 |
|
Vijay TV's PAADUM OFFICE must have been reallly awesome i guess !!!
I saw Divya from Infy perform with the Isaiyil Thodangudhamma ..... wow simply amazing ... The IT industry has a lot of other talents too hidden - Vijay TV has done a wonderful job to bring those hidden talents out to the public .... Kudos ![]() |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|