LOGO
Reply to Thread New Thread
Old 05-23-2008, 01:01 AM   #1
Beerinkol

Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
Default
Arattai Arangam - Behind the screen.

http : // jazeela. blogspot. com/2008/02/blog-post.html
படித்தேன், லிட்டில் மாஸ்ட்டர் ஜி,

இதென்ன பிரமாதம்... பட்டிமன்றத்தில் பேசும் பாரதிபாஸ்கர், ராஜா, சாலமன் பாப்பையா ஆகியோர்கூட தாங்கள் என்ன பேசப்போகிறோம் என்பதை ஏற்கெனவே ஒருவருக்கொருவர் குறிப்புகளை அனுப்பி, எதிர் அணி அதற்கேற்றாற்போல பதில் தயார் செய்து, அதையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு அப்புறம்தான் மேடையேறுகின்றனர்.

ஆனால், மேடையில் பேசும்போது, ஏதோ அப்போதுதான் கேட்டு அதற்கு உடனே மேடையிலேயே பதில் உடனுக்குடன் சொல்வது போல ராஜா, பாரதி பாஸ்கர் போன்றோர் நடிப்பதுதான் சூப்பர்.

இந்த நாடக ஒத்திகை, லியோனி பட்டிமன்றம் உள்பட, பெரும்பாலான பட்டிமன்றங்களில் நடக்கிறது.
Beerinkol is offline


Old 12-01-2005, 07:00 AM   #2
Peptobismol

Join Date
Oct 2005
Age
58
Posts
4,386
Senior Member
Default
US/ஐரோப்பா TVயில் ஒரு wrestilng program
அந்தக் காலத்தில் அதை உண்மையென் நம்பி பார்த்தவர்கள் ஏராளம்.
பின்புதான் புரிந்தது அது நடிப்பென

உலகமே இப்படித்தான்..
Peptobismol is offline


Old 05-25-2008, 06:00 PM   #3
Paul Bunyan

Join Date
Jul 2007
Age
59
Posts
4,495
Senior Member
Default
திருமணத்துக்குப் பிறகு நடிப்பில் இருந்து விலகியிருந்த நடிகை நந்திதா இப்போது சின்னத்தரையில் நடிக்க வந்துவிட்டார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புவனேஸ்வரி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

HOW IS BUVANESWARI SERIAL?
Paul Bunyan is offline


Old 06-22-2008, 01:44 AM   #4
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கு சன் டி.வி.யில் சூப்பர் டான்டர்-2 ஒளிபரப்பாகிறது. பார்வையாளர்கள் வாக்களிப்பு மட்டுமே போட்டியாளர்களை அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெறச் செய்கிறது. அபூர்வா, மைக்கேல், சுனில்குமார், வந்திதா, ப்ரீத்தி, அபிராமி, ஆண்டனி ஆகிய ஏழு பேர் தனிநபர் நடன போட்டியாளர்களாக காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர். ஜீவன்-சவிதா, அஷ்வின்- மாதுர்யா, ஹரி-ஸ்வேதா, தமிழ்வேந்தன்-தன்யா, தயாநிதி-ஜெஸ்லீன், ஜேசுப்ரவீன்-டயானா, விஜய்-மௌ லிகா ஆகிய ஏழு ஜோடிகளும் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

சூப்பர் டான்சர்-2ல் தங்களுக்குப் பிடித்தமான போட்டி யாளரை வெற்றி யாளர்களாக தேர்வு செய்வதற்கு தங்களின் வாக்குகளை உடனே பதிவு செய்யலாம். அதிக வாக்குகளை அனுப்பும் பார்வை யாளர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 நபர்களுக்கு மட்டும் நடிகை மாளவிகாவைச் சந்திக்கும் ஓர் பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது.
brraverishhh is offline


Old 07-12-2008, 02:06 AM   #5
HedgeYourBets

Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
Default
Bad news for Shipping Balu & company? The NDTV Imagine serial Ramayan is a super duper hit in South India especially Tamilnadu.

The Tamil version of the serial went on air on Sun TV in March. It beams Sundays, 10.30 am to 11.30 am. Seeing the instant success and response it received, in early May, it began to be aired also on Gemini TV and Surya TV, Monday to Friday, 7 pm to 7.30 pm.

As per the TAM Peoplemeter, On Sun TV, Ramayan has grown the time slot by over 86%, making it the No. 1 weekend show. The show on Gemini TV has managed to grow the slot by 14%, while on Surya TV, it is pitted against the top show in the Kerala market, but it still helped the channel slot grow by 47%.

On Sun TV, Ramayan averages in excess of 9 TVR since it launched on March 16. On Gemini TV, it averages close to 4.5 TVR and on Surya TV the show averages in excess of 4 TVR.

Gaurav Gandhi, EVP, business operations and ancillary revenues, NDTV Imagine, said, " Ramayan, besides being an instant hit on our own channel, has found tremendous success in the 3 southern markets as well."

"The Sun Network, with their wide reach, and UTV, who are marketing the show for us on these 3 channels, have been instrumental in this success. In the coming months Ramayan will be also be available across several other markets and platforms in India & Overseas."
HedgeYourBets is offline


Old 07-12-2008, 02:07 AM   #6
Lillie_Steins

Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
Default
Another disturbing news for the First Son of Tamilnadu. THE SUN DIRECT SUBSCRIPTION HAS CROSSED ONE MILLION IN THE FIRST 200 DAYS OF ITS OPERATION. The one million-subscriber base comes from only 4 southern states - Tamil Nadu, Karnataka, Kerala, Andhra Pradesh and the union territory of Pondicherry. The company will be soon spreading its wings across the country.

Among the other first's are:

Sun Direct DTH launched 4 regional basic tiers consisting of over 100 plus channels specific to each southern state (Tamil basic, Telugu Basic, Kannada Basic and Kerala basic) at the rate of Rs. 75/- per month with the consumer premises equipment (set top box, Dish, LNB etc.. ) being given free for viewing.


Sun Direct DTH is also the first DTH platform in India which provides to their customers with the latest MPEG 4 technology.


Sun Direct DTH provides in addition to regular audio/video outputs, Digital Optical audio outputs for crystal clear audio quality and component video output to get the best picture quality for plasma, LCD and other High end TV's.

Sun Direct DTH is the only existing DTH platform to provide High Definition TV (HDTV) in India and will shortly launch a few HD channels.

Source: Sun Direct press release, television point.
Lillie_Steins is offline


Old 08-23-2008, 03:31 PM   #7
MannoFr

Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
Default
மீண்டும் மெட்டி ஒலி
பகல் 11.00
MannoFr is offline


Old 08-29-2008, 06:29 PM   #8
PhillipHer

Join Date
Jun 2008
Age
59
Posts
4,481
Senior Member
Default
http://selvaspeaking.blogspot.com/20...g-post_25.html

கடைசியாக ஒரு வரி - முதுமை வந்து விட்டால், எப்போதோ நடந்த நல்லதுகளை அசைபோடுவோம். சன் டிவி இப்போது அப்படி ஒரு அசைபோடும் நிலைக்கு வந்துவிட்டது. சமீபத்திய உதாரணம் - மெட்டிஒலி ரிப்பீட்.
PhillipHer is offline


Old 08-29-2008, 10:32 PM   #9
TorryJens

Join Date
Nov 2008
Posts
4,494
Senior Member
Default
hello post all tv serials online to watch please post it thank you
You can watch almost all serials from Sun TV for free on:

www.londontamilvideo.com

and


www.isaitamil.net
TorryJens is offline


Old 10-01-2008, 12:09 AM   #10
radikal

Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
Default
பாவம் சன் TV

ஐரோப்பாவ்வில் கலைஞரின் TV தான் எல்லா இடமும் மின்னுகின்றது

சந்தாவோ மிகக் குறைவு

பாலசந்தர்
பாரதிராஜா
என பெரிய திலகங்களின் நாடகங்கள்

சன் TV யோ
பழையானவற்றை மீண்டும் போடுவதும்
கோலங்கள், ஆனந்தம் இரண்டையும் இன்னும் ஒரு 5 வருடமாவது இழுக்க வைப்பதும் என மிகப் பாடுபடுகின்ரது
பரிதாபமாக உள்ளது.
radikal is offline


Old 10-01-2008, 05:46 AM   #11
Peptobismol

Join Date
Oct 2005
Age
58
Posts
4,386
Senior Member
Default
பந்தம்-500

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பந்தம் தொடர் 500 எபிசோடுகளை கடந்து இருக்கிறது.

இந்த தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக அப்சர் நடித்து வருகிறார். கோமா நிலையில் இருந்து குணமாகிய செல்வாவின் மனைவி நித்திலா, தான் யார் என்று மறந்த நிலையில் அம்னீஷியா பேஷண்டாக சக்தியிடம் வந்து சேர்கிறாள்.

செல்வாவின் மனைவிதான் நித்திலா என்று தெரிந்தும், சக்தி அவளை காதலிக்கிறான். இதை தடுக்க நினைக்கும் சக்தியின் அக்கா காயத்ரியின் எச்சரிக்கையையும் மீறி சக்தி நித்திலாவை தன் மனைவியாக்கி கொள்ள முயல்கிறான்.

நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் தேவிபிரியா, ஆதிலட்சுமியின் குடும்ப பிரச்சினைகளை தீர்த்து வைத்து ஆதிலட்சுமியையும் திருத்த முயல்கிறார். நீலாம்பரிக்கும் ஆதிலட்சுமிக்கும் என்ன உறவு, செல்வா எப்படி நித்தியாவை மீட்கிறார் என்ற கேள்விகளோடு பந்தம் தொடரை விறுவிறுப்புடன் கொண்டு போகிறோம் என்கிறார், தொடரின் இயக்குனர் ஹரிபாபு.

தொடரில் இரட்டை வேடங்களில் நித்யா நடிக்கிறார். மற்றும் நளினி, தீபக், ராஜசேகர், ஷில்பா, மனோகர், ஸ்ரீகுமார், யுவஸ்ரீ, கன்யா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இசை: ரேஹான்; திரைக்கதை, வசனம்: குமரேசன்; இயக்கம்: ஹரிபாபு; தயாரிப்பு: சேன் மீடியா.
Peptobismol is offline


Old 10-09-2006, 07:00 AM   #12
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default
ராணி மகா ராணி


சன் டி.வி.யில் சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் `கேம்ஷோ' `ராணி மகாராணி' முழுக்க முழுக்க பெண்களே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி, ஓர் சுவாரஸ்யமான அதிர்ஷ்ட விளையாட்டை மையமாக கொண்டது. திரையில் மறைந்திருக்கும் பிரபலம் யார்? என்பதே இந்த விளையாட்டின் பிரதானம். கொடுக்கப்பட்ட நாலு வாய்ப்புகளில் முதல் வாய்ப்பிலேயே அந்த பிரபலம் யார் என்று சரியாகச் சொன்னால் 1 லட்சம் பரிசு.

இரண்டாவது வாய்ப்பில் கண்டு பிடித்தால் ரூபாய் 50 ஆயிரம் பரிசு, மூன்றாவது வாய்ப்பில் கண்டு பிடித்தால் ரூபாய் 25 ஆயிரம், நாலாவது வாய்ப்பில் கண்டு பிடித்தால் ரூபாய் 12,500. இத்தோடு வார்த்தை விளையாட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்க நாணயமும் பரிசாக காத்திருக்கிறது.

நடன நிகழ்ச்சி வரிசையில் `ராணி மகாராணி' நிகழ்ச்சியும் மக்களின் வரவேற்பை பெறும் என்று சரிகம நிறுவனத்தின் பி.ஆர்.விஜயலட்சுமி தெரிவித்தார். பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார், மமதி அஞ்சன். ஒளிப்பதிவு- உதயசங்கர். இசை: பால்ராஜ், இயக்கம்: பிரின்ஸ்- வெங்கட்.ஜி.
doctorzlo is offline


Old 10-29-2008, 04:24 PM   #13
Big A

Join Date
Oct 2005
Age
51
Posts
4,148
Administrator
Default
Not sure where to post this...
Watched Vivek interviewing Abdul Kalam. It was very good. Kalam's answers were simply superb and made heck a lot of sense. The way he put forth his opinions was very loveable. Vivek started off with stupid questions like sinna vayasula pattam vittrukkIngaLA, deevali rocket vitturukkeengala etc., The questions that followed were good. I thought the whole thing was not spontaneous though - as in Kalam already knew what the questions were going to be and he had already prepared the answers. He was looking at a TV screen which was in front of him the whole time. Whatever it is, it was an excellent watch.
Big A is offline


Old 10-31-2008, 02:42 AM   #14
MannoFr

Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
Default
Not sure where to post this...
Watched Vivek interviewing Abdul Kalam. It was very good. Kalam's answers were simply superb and made heck a lot of sense. The way he put forth his opinions was very loveable. Vivek started off with stupid questions like sinna vayasula pattam vittrukkIngaLA, deevali rocket vitturukkeengala etc., The questions that followed were good. I thought the whole thing was not spontaneous though. Whatever it is, it was an excellent watch.
சும்மா ஒண்ணே முக்கால் படங்களில் மட்டுமே நடித்திருக்கும் நடிகைகளின் திரையுலக அனுபவங்களை (??) பேட்டி காண்பதைவிட, அறிவியல் விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களுடைய பேட்டி உருப்படியாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.

சன் டிவி இனிமேலும் இதுபோன்ற உருப்படியான நிகழ்ச்சிகளைத்தொடர வேண்டும்.
MannoFr is offline


Old 10-31-2008, 03:22 AM   #15
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
சன் டிவி இனிமேலும் இதுபோன்ற உருப்படியான நிகழ்ச்சிகளைத்தொடர வேண்டும்.

மக்களை வளர விடுவாங்களா ஆ
NeroASERCH is offline


Old 11-17-2008, 01:16 PM   #16
Lt_Apple

Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
Default
Abhinaya creations Mega Serial Thiruppavai being telecast in Sun Tv channel at 12.30 noon on all Mondays to Fridays is the story of a family subject. Many viewers initially thought that the serial speaks about the Love of Andal with Lord Perumal. But it is entirely different. As per the story line the Vedas do not belonged to one particular community or religion alone. People who have faith in them will reap the benefit.

The story of the Thiruppavai, Screenplay and direction are all done by J.K. Balamurugan. Manibharathi is writing the dialogues, and is produced by Radha Krishnaswamy for Abhinaya creations.

Delhi Ganesh, Anuradha Krishnamoorthy, Sivan Srinivasan, Shobana, Sangeetha, Nithya,Shravani and other leading artistes are acting.
Lt_Apple is offline


Old 11-29-2008, 02:59 AM   #17
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
"திருப்பாவை'.
நல்ல தொடர்களை கொடுப்பதுதான் நோக்கம்: ஜே.கே.



அபிநயா கிரியேஷன்ஸ் சார்பில் பத்துக்கும் மேற்பட்ட மெகா தொடர்களை தயாரித்த ஜே.கே. முதன் முதலாக சன் டி.வியில் ஓளிபரப்பாகி வரும் திருப்பாவை சீரியலைத் தயாரித்து இயக்கி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது.

இதுவரை மாங்கல்யம், ஆடுகிறான் கண்ணண், தீர்க்க சுமங்கலி, செல்லமடி நீ எனக்கு, தெலுங்கில் காஸ்ட்லி அல்லுலு, வம்ச வருஷம் உள்ளிட்ட பல தொடர்களை தயாரித்து இருக்கிறேன்.

தற்போது இயக்கி வரும் திருப்பாவை என்னுடைய கதை என்பதால், அதனை மற்ற யாரும் சொன்னால் நன்றாக இருக்காது என்பதற்காகவே, நான் இயக்கும் பணியில் இறங்கினேன். மாமியார், மருமகள் சண்டை, இரண்டு, மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அல்லல்படுவது போன்ற வழக்கமான சீரியல் கதைகளைப் போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட கதையைக் கொண்டதுதான் திருப்பாவை.

இந்தக் கதை வேதத்தை பற்றியது, நல்ல விஷயங்களை செய்யும் போது வேதத்தை மீறுவதில் தப்பில்லை, எதுவாக இருந்தாலும் வேதம் சொல்லுகிற படிதான் நடக்க வேண்டும் என இந்த இரண்டு கருத்துகளுக்கிடையே நடக்கும் மோதல்தான் "திருப்பாவை'.

கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் நிஜம் மாதிரி தெரியும் ஆனால் நிஜமாக இருக்காது. விசாரித்தால்தான் உண்மை தெரியவரும். மனம் விட்டு பேசாத எதுவுமே பிரச்னைதான்; அதை பேசி தீர்த்து விட்டால் முடிந்து விடும்.

நகர வாழ்க்கையில் மனைவிக்கு வாங்கி போகிற மல்லிகை பூ கூட டீசல் புகையில் கருகி விடுகிறது. கிராமத்தை விட்டு பிழைப்பு தேடி நகரத்துக்கு வந்த ஒவ்வொருவரும் ரசனையை தொலைத்துவிட்டுதான் வாழ்கின்றனர்.

ஆகவே டி.வி.யில் கிராமத்தை காட்டுவோம் என்பதற்காகதான் இந்த சீரியலை நகரங்களை விட்டு விட்டு கும்பகோணம் அருகிலுள்ள உப்பிலியப்பன் கோவில் கிராமத்தில் எடுத்திருக்கிறோம். இனி வரும் காட்சிகளையும் அங்கேயே எடுக்க முடிவு செய்துள்ளேன். சீரியலை கிராமத்தில் எடுப்பது அதிக செலவுதான். ஆனாலும் நல்ல சீரியலை மக்களுக்கு கொடுப்பதுதான் நோக்கம் என்றார் ஜே.கே.
tgs is offline


Old 11-30-2008, 10:39 AM   #18
Fegasderty

Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
Default
செந்தூரப்பூவே


சன் டி.வி.யில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், `செந்தூரப்பூவே'.

மக்கள் அரங்கம் தவிர வேறு எந்த சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்கேற்காத விசுவுக்கு இந்த கதை பிடித்துப் போகவே உடனே டபுள் ஒ.கே. சொன்னார். விசுவின் நண்பராக தொடரில் வரும் நரசிம்மராஜ×ம் ஒரு திரைப்பட பிரபலம்தான். விட்டாலச்சாரியின் ஆஸ்தான ஹீரோ! தமிழ் நாட்டில் சக்கை போடு போட்ட `ஜெகன் மோகினி' திரைப்படத்தின் ஹீரோவும் இவரே.

கதாநாயகி ரஞ்சினி கிருஷ்ணன் கேரள அரசின் மாநில விருதை பெற்றவர். சித்தி தொடருக்குப் பிறகு சின்னத்திரைப் பக்கம் வராமல் இருந்த யுவராணி, இத்தொடரின் வில்லி கதாபாத்திரம் பற்றி தெரிந்ததும் உடனே மேக்கப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

`மெட்டிஒலி' தொடருக்கு திரைக்கதை எழுதிய முத்துச்செல்வன் தொடருக்கு திரைக்கதை எழுத, பரமேஷ்வர் இயக்கி வருகிறார்.
Fegasderty is offline


Old 12-07-2008, 07:22 PM   #19
9mm_fan

Join Date
May 2007
Age
54
Posts
5,191
Senior Member
Default
'ராணி மகாராணி' நிகழ்ச்சியில் வழக்கத்துக்கு மாறாக அல்ல, வழக்கத்துக்கு கூடுதலாக சில சுவாரஸ்யங்களைச் சேர்த்திருக்கிறார்கள். அதை அறிமுகப்படுத்தும் முகமாக, முதல் ஷோவுக்கு இரண்டு தெரிந்த முகங்களை போட்டியாளர்களாக அழைத்திருந்தனர்.

ஒருவர் சின்னத்திரை நட்சத்திரம் 'அலைகள்' ராணி.

இன்னொருவர் சின்னத்திரை நட்சத்திரம் புவனேஸ்வரி.

இருவருமே எந்த பந்தாவும் இல்லாமல் ரொம்ப சாதாரணமாக இருந்தனர் என்பதுடன், வழக்கமாகக் கலந்துகொள்ளும் குடும்ப பெண்களைப்போல, ஆரம்பத்திலேயே 'நான் பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக்கும்', 'அசத்துவோம்', 'நொறுக்குவோம்' என்றெல்லாம் வெட்டி பந்தா பண்ணாமல், திரையில் மறைந்திருக்கும் நட்சத்திரத்தைக் கண்டுபிடிக்க நிஜமான பரபரப்புடனும், பதட்டத்துடனும் காணப்பட்டனர். கண்டுபிடித்ததும், சின்னக்குழந்தைகளைப்போல குதூகலித்ததும் ரசிக்கும்படியாக இருந்தது.

நடிகை ராணி, தான் இந்தப்போட்டியில் பங்குபெற தன் மகன்தான் ட்ரைனிங் பண்ணினான் என்று சொன்னது ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்பது தெரியும். ஆனால் இவ்வளவு பெரிய மகன் இருப்பது ஆச்சரியம்தான். (சமீப காலம் வரை இவருக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை என்று நினைத்திருந்தேன். காரணம், அவ்வளவு இளமையாக இருக்கிறார்).

இருவருமே முதல் பரிசை வெல்லவில்லை. ராணி மூன்றாவது சுற்றிலும் (25 ஆயிரம்) , புவனேஸ்வரி இரண்டாவது சுற்றிலும் (50 ஆயிரம்) வென்றனர். ராணியை வெல்ல வைத்தது ஸ்னேகா என்றால், புவனேஸ்வரியை வெல்ல வைத்தவர் பார்த்திபன். இருவரையும் தங்கக்காசு வெல்ல வைத்தவர் ஜோதிகா.

நிகழ்ச்சி நடத்தும் மமதி அஞ்சன், அடிக்கடி 'இது 100% லேடீஸ் ஷோ' என்கிறார். டைட்டிலிலும் 'ராணி மகாராணி' என்ற டைட்டிலின் கீழே 100% லேடீஸ் ஷோ என்று போடுகிறார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிவில், டெக்னீஷியன்கள் பெயர்ப்பட்டியல் காண்பிக்கப்படும்போது முழுக்க முழுக்க ஆண்கள் பெயர்களாகவே வருகிறது. அப்புறம் என்ன 100%...??. (இந்த சாரதாவை முதலில் அடிச்சு விரட்டணும். ஸேம்சைட் கோல் போடுவதே இவ்ளுக்கு வேலையா போச்சு).
9mm_fan is offline


Old 12-08-2008, 03:19 AM   #20
Big A

Join Date
Oct 2005
Age
51
Posts
4,148
Administrator
Default
நிகழ்ச்சி நடத்தும் மமதி அஞ்சன், அடிக்கடி 'இது 100% லேடீஸ் ஷோ' என்கிறார். டைட்டிலிலும் 'ராணி மகாராணி' என்ற டைட்டிலின் கீழே 100% லேடீஸ் ஷோ என்று போடுகிறார்கள். ஆனால் நிகழ்ச்சி முடிவில், டெக்னீஷியன்கள் பெயர்ப்பட்டியல் காண்பிக்கப்படும்போது முழுக்க முழுக்க ஆண்கள் பெயர்களாகவே வருகிறது. அப்புறம் என்ன 100%...??.


(இந்த சாரதாவை முதலில் அடிச்சு விரட்டணும். ஸேம்சைட் கோல் போடுவதே இவ்ளுக்கு வேலையா போச்சு).
Big A is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 02:13 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity