Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
|
![]() |
![]() |
#2 |
|
http://www.sunnetwork.org/contactus/default.htm
you'll find the address. i couldn't find their email address ... |
![]() |
![]() |
#3 |
|
சன் டிவியில் ஒளிபரப்பான சூர்யா தொடரைத் தொடர்ந்து `மகள்' என்னும் புதிய மெகா தொடரை தயாரித்திருக்கிறது, நிம்பஸ் டெலிவிஷன் நிறுவனம்.
இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. வரும் திங்கட்கிழமை தொடங்கும் இந்தத் தொடரின் கதைச்சுருக்கம்:- ஒவ்வொரு குடும்பத்திலும் மகள் எனப்படுபவள் எவ்வளவு முக்கியமானவள்; குடும்பத்தின் பெருமையையும், கவுரவத்தையும் மகள் எப்படி காப்பாற்றுகிறாள்... குடும்பத்தின் குத்துவிளக்காக போற்றப்படும் இந்த மகள், தன் உறவுகளுக்காக எத்தனை தியாகங்கள் செய்கிறாள்? எவ்வளவோ சுமைகளை சுமந்து, முடிவில் அவள் அடைந்த சுகம்தான் என்ன? இதுவே கதையின் கரு. அம்மன் படத்தில் வில்லனாக நடித்த ராமி ரெட்டி இத்தொடரில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் சின்னத்திரையில் அவர் நடிப்பது இதுவே முதல் முறை. மற்றும் நடிகர் - நடிகைகள்: மீனாகுமாரி, வரலட்சுமி, சுலக்ஷனா, காவ்யா, சந்தானம், ரிஷி, ஸ்வேதா, ஸ்ரீதர், கோவை பாபு, தியாகராஜன், பிந்து மாதவி, சுந்தரி, முரளி, அர்விந்த், கவுசல்யா, செந்தாமரை, அமிர்தகடேசன், பக்தவச்சலம், தனலட்சுமி, மாஸ்டர் அபிலாஷ். பாடல்: பழனி பாரதி. பாடல் இசை: ராஜேஷ் வைத்யா. திரைக்கதை: ஜோதி அருணாச்சலம். வசனம்: எம்.கே.மணி. இயக்கம்: பிரான்சிஸ் பாப்பு. கிரியேட்டிவ் டைரக்டர்: ஆர்.நாராயணன், கே.ஆர்.சுப்புரத்தினம். ஒளிப்பதிவு: ஆர்.பி.எஸ்.சூரியன், எடிட்டிங்: பிஜ×. தயாரிப்பு மேற்பார்வை: ஆர்.ஐயப்பன். தயாரிப்பு: ஆகாஷ் குரானா. |
![]() |
![]() |
#4 |
|
|
![]() |
![]() |
#5 |
|
|
![]() |
![]() |
#6 |
|
|
![]() |
![]() |
#7 |
|
ராணி மகா ராணி
சன் டி.வி.யில் சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் `கேம்ஷோ' `ராணி மகாராணி' முழுக்க முழுக்க பெண்களே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி, ஓர் சுவாரஸ்யமான அதிர்ஷ்ட விளையாட்டை மையமாக கொண்டது. திரையில் மறைந்திருக்கும் பிரபலம் யார்? என்பதே இந்த விளையாட்டின் பிரதானம். கொடுக்கப்பட்ட நாலு வாய்ப்புகளில் முதல் வாய்ப்பிலேயே அந்த பிரபலம் யார் என்று சரியாகச் சொன்னால் 1 லட்சம் பரிசு. இரண்டாவது வாய்ப்பில் கண்டு பிடித்தால் ரூபாய் 50 ஆயிரம் பரிசு, மூன்றாவது வாய்ப்பில் கண்டு பிடித்தால் ரூபாய் 25 ஆயிரம், நாலாவது வாய்ப்பில் கண்டு பிடித்தால் ரூபாய் 12,500. இத்தோடு வார்த்தை விளையாட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்க நாணயமும் பரிசாக காத்திருக்கிறது. நடன நிகழ்ச்சி வரிசையில் `ராணி மகாராணி' நிகழ்ச்சியும் மக்களின் வரவேற்பை பெறும் என்று சரிகம நிறுவனத்தின் பி.ஆர்.விஜயலட்சுமி தெரிவித்தார். பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார், மமதி அஞ்சன். ஒளிப்பதிவு- உதயசங்கர். இசை: பால்ராஜ், இயக்கம்: பிரின்ஸ்- வெங்கட்.ஜி. |
![]() |
![]() |
#8 |
|
(i couldn't find where to convey this so did it here)
Yesterday I watched "Thiruvalar Thirumathi" while I thought it was a cute show (except for the contrived argument drama part of the show) what I really was impressed about is the sheer amount of prizes that both couples can win even if theydo not "win" the challenge put infront of them...not only money but products and trips as well....very impressive... I like how one team does not lose everything in the end and can leave the show atleast happy about their experience....i know many american game shows where even if playing to the very end you can lose everything...or build up your score and end up with nothing...I'm thinking for the young couples that are participating in this show this will be a big plus...(atleast hopefully no arguments about losing totally).... |
![]() |
![]() |
#12 |
|
(i couldn't find where to convey this so did it here) |
![]() |
![]() |
#13 |
|
|
![]() |
![]() |
#14 |
|
|
![]() |
![]() |
#15 |
|
அம்மன் படத்தில் வில்லனாக நடித்த ராமி ரெட்டி இத்தொடரில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் சின்னத்திரையில் அவர் நடிப்பது இதுவே முதல் முறை. சன் டிவியில் ஒளிபரப்பான சூர்யா தொடரைத் தொடர்ந்து `மகள்' என்னும் புதிய மெகா தொடரை தயாரித்திருக்கிறது, நிம்பஸ் டெலிவிஷன் நிறுவனம். குடும்பத்துக்காக ஓடாக தேயும் பெண்களின் கதையை விட்டு இந்த சீரியல்காரர்கள் வெளிவரப்போவது எப்போது..?. |
![]() |
![]() |
#16 |
|
|
![]() |
![]() |
#17 |
|
`அபிநயா கிரியேஷன்ஸ்' நிறுவனம் தற்போது சன் டி.வி.க்காக `செல்லமடி நீ எனக்கு' என்கிற மெகா தொடரினை தயாரித்து வழங்கி வருகிறது. இத்
தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரினை அடுத்து `அழகம்மை' என்கிற புதிய மெகா தொடரை தயாரித்து வழங்க உள்ளது, அபிநயா கிரியேஷன்ஸ். இது குறித்து தொடரின் தயாரிப்பாளர் ஜே.கே. கூறியதாவது:- ``æÖஸ்ட்லிமாப்பிள்ளை தொடங்கி `செல்லமடி நீ எனக்கு' வரையில் சன் டி.வி.க்காக நாங்கள் தயாரித்து வழங்கிய தொடர்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பினை பெற்று உள்ளது. அந்த வரிசையில் நாங்கள் அடுத்து தயாரித்து வழங்க உள்ள `அழகம்மை' தொடரும் இடம் பெறும். அந்த அளவிற்கு மிக வித்தியாசமான கதைக்களத்தினை கொண்டதாக இத்தொடர் உருவாக உள்ளது. தன் வாழ்க்கையில் முன்னேற உதவி செய்தவனையே அவன்தான் தனக்கு உதவியவன் என தெரியாமல் ஒருவன் பழி வாங்கி விடுகின்றான். உதவி செய்தவன் அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்கையில், தனக்கு உதவியவனே அவன்தான் என்கிற உண்மை புரிந்து... அவனுக்கு உதவுவதும், அவனை வாழ்க்கையில் வெற்றி பெற செய்ய போராடுவதும்தான் இத்தொடரின் மையமுடிச்சு. இது, குடும்ப பின்னணியுடன் மிக சுவாரசியமாக சொல்லப்பட உள்ளது'' அழகம்மை தொடரை ஏ.ஆர்.மனோ இயக்குகிறார், இவர் டைரக்டர்கள் பத்ரி, சுந்தர் சி. பூபதிபாண்டியன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். |
![]() |
![]() |
#18 |
|
தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக சினிமாவை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு புதுமையான நிகழ்ச்சி "சூப்பர் ஸ்டார்ஸ்.''
இந்நிகழ்ச்சியின் நோக்கம், நடிக்கும் ஆர்வம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து சினிமாவிற்கு தேவையான நடிப்பு, நடனம், ஸ்டண்ட், டப்பிங் பேசுவது என சினிமா சார்ந்த துறைகளில் பயிற்சி கொடுத்து அவர்களை சிறந்த கலைஞர்கள் ஆக்குவதே! அவர்களில் சிறந்த ஹீரோ, ஹீரோயினைத் தேர்ந்தெடுத்து சில்வர் லைன் பிலிம் பேக்டரி நìறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் அறிமுகப்படுத்தி நடிக்க வைக்க உள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் பங்கு பெறும் மற்ற நடிகர், நடிகைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், மாடலிங் துறையிலும் மற்றும் சின்னத்திரை, பெரியத்திரை நடிகர்களாக பிரகாசிக்க வாய்ப்புகள் உண்டு. விரைவில் சன் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. |
![]() |
![]() |
#19 |
|
சன் டி.வி.யில் புதிதாக சனிக்கிழமை இரவு 9.30க்கு ஒளிபரப்பாகும் கேம் ஷோ "ஜோடிப்பொருத்தம்". தம்பதிகள் கலந்துகொண்டு போட்டியிட்டு பரிசு பெறும் நிகழ்ச்சி. (பழைய 'திருவாளர் திருமதி', மற்றும் 'தங்க வேட்டை' நிகழ்ச்சிகள் நினைவிருக்கிறதா?. அதனுடைய புதிய வடிவம்தான் இது).
அதன் முதல் போட்டிநிகழ்ச்சி நேற்றிரவு ஒளிபரப்பானது. ஆனந்தக்கண்ணன் மற்றும் அனிஷா தொகுத்து வழங்குகிறார்கள். கடைசி வரை சென்று வெற்றி பெறுபவர்களுக்குத்தான் பரிசு என்றில்லை. கலந்துகொண்டாலே கூட எக்கச்சக்க பரிசுகள். இதில் பல சுற்றுக்கள். கேள்வி நேரம், மௌனமொழி, மின்னல் சுற்று, விலையைச் சொல்லுங்கள்..... இப்படி. (எல்லாம் 'புதிய மொந்தையில் பழைய ......' கதைதான்). கலந்துகொள்பவர்களுக்கு கேஸ்ஸ்டவ், கம்ப்யூட்டர், மிக்ஸி அது இது என்று ஏகமான பரிசுகள். விலையைச்சொல்லுங்கள் போட்டியில் ஒரு குறிப்பிட்ட பொருளைக்காட்டும்போது நான்கு ஜோடிகளும் அதற்கு விலையை எழுதிக்காட்ட வேண்டுமாம். யார் அதுக்கு நெருக்கமாக விலையைச்சொல்கிறார்களோ அவர்களுக்கு அந்த பொருள். ரொம்ப நெருக்கமாக இருக்க வேண்டுமென்று கூட இல்லை. மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள நெருக்கமாக இருந்தாலும் போதும். மற்றவர்களை விட நெருக்கமாக இருக்க வேண்டும், அவ்வளவுதான். நேற்று கூட ஒரு கேஸ் ஸ்டவ் விலையைக்கேட்டபோது, மற்றவர்கள் 3500, 4000, 4200 என்று சொல்லியிருக்க ஒரு தம்பதி மட்டும் 7,000 சொன்னார்கள். உண்மையில் அதன் விலை 14,000 ரூபாய். ஆனால் 7000 தான் நெருக்கமாக இருக்கிறது என்று அவர்களுக்கே கொடுத்து விட்டனர். (அப்போ ஏன் இதுல கலந்துக்க அடிச்சுக்க மாட்டாங்க?). ஒரே தம்பதி, சோபா செட் உள்பட பல பரிசுகளை அள்ளிச்சென்றனர். அதிலும் ஒவ்வொரு வார நிகழ்ச்சியிலும் கடைசி இரண்டு இடம் வருபவர்களுக்கு லட்சரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் பரிசு கொடுக்கிறார்கள். இது ஒரு வாரத்தோடு முடிவதல்ல, வெற்றி பெற்றவர்கள் இவ்வளவையும் வாங்கிக்கொண்டு அடுத்த சுற்றுக்கும் போகிறர்களாம். அள்ளுங்கோ...!!!!. |
![]() |
![]() |
#20 |
|
சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புராணத் தொடர் திருவிளையாடல்.
சிவபெருமான், பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தன்னை வழிபடும் பக்தர்களிடத்தில் நிகழ்த்திய சம்பவங்களே திருவிளையாடல் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய திருவிளையாடல்கள் திருவிளையாடற்புராணம், சிவபுராணம், சிவமகாபுராணம், பெரியபுராணம், கந்தபுராணம் முதலான நூல்களில் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சுவாரஸ்யமான கதைகளின் தொகுப்பே இந்த திருவிளையாடல். தொடரில் இடம் பெறும் மாயாஜாலக் காட்சிகளை திரையில் கொண்டு வருவதற்கென்று சுமார் ஐம்பது பேர் கொண்ட கிராபிக்ஸ் குழு பணியாற்றி வருகிறது. சிவபெருமானாக ஸ்ரீதரும், உமாமகேஸ்வரியாக யமுனாவும், அவ்வையாராக மனோரமாவும், நாரதராக ராதாரவியும், இந்திரனாக ப்ரித்விராஜனும், இந்திராணியாக யுவராணியும், தொடக்க கதையில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். இசை:கங்கை அமரன், ஒளிப்பதிவு:சரவணபாண்டியன், எபிசோட் டைரக்டர்:செல்வபாண்டியன், திரைக்கதை வசனம்: ஸ்ரீமான் கவிச்செல்வர். இயக்கம்: ராகேஷ், சின்ஹா. ரேடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தொடரை தயாரிக்கிறது. ################################ WHO ACT AS VINAYAGAR? |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|