Reply to Thread New Thread |
|
![]() |
#1 |
|
|
![]() |
![]() |
#2 |
|
|
![]() |
![]() |
#4 |
|
|
![]() |
![]() |
#5 |
|
கலைஞர் டி.வி.யில் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாகிறது,டைரக்டர் அரிராஜன் இயக்கும் `அப்பா' மெகா தொடர்.
அப்பாவாக பிரசன்னா, மகனாக கமலேஷ் நடிக்க, மகள்களாக தேவிப்ரியா, நர்மதா, ராஜஸ்ரீ நடிக்கிறார்கள். கமலேஷின் மனைவியாக தாரிகா நடிக்கிறார். தாரிகாவின் பெற்றோராக அனுமோகனும் குயிலியும் நடிக்கிறார்கள். ஜி.சத்யா, மங்கை அரிராஜன் இணைந்து தயாரிக்கும் `அப்பா' தொடரின் டைட்டில் பாடல் காட்சி சமீபத்தில் ஒகனேக்கல்லில் படமாக்கப்பட்டது. திங்கள் முதல் வெள்ளி வரை தொடர்ந்து இத்தொடர் ஒளிபரப்பாகும். ``இதுவரை சின்னத்திரை கண்டிராத குடும்பக் கதை. ஆண் கேரக்டர்கள் மூலம் தொடரை பார்க்கும் பெண்களை கண் கலங்கச் செய்யும் யதார்த்தமான கதைப் பின்னணியில் இந்தத் தொடரை இயக்கியிருக்கிறேன்' என்கிறார், தொடரின் இயக்குனர் மங்கை அரிராஜன். |
![]() |
![]() |
#6 |
|
Hi,
Can anyone from India give me the contact details of Kalaignar TV? I'm thinking of their telephone number and address... And do they have a website? I have heard that the rights for Kalaignar TV programs have been sold to a TV-station in Europe... anyone know which? I know for sure that it is not Tharisanam TV Europe... Deepam TV has allready Vijay TV and some Jaya TV prorgrams rights, like CeeITV has rights for Jaya TV... |
![]() |
![]() |
#7 |
|
Vijay TV la vantha sila programs Sun TV la Copy panni ippa Kalaignar TV la yum panna aarambichachu
![]() ![]() I suppose there is a Program on NT where prabhu shares certain opinion which is good. And There is one logic illa Magic. Okay. Is there more specific program worth a watch ? |
![]() |
![]() |
#8 |
|
கலைஞர் "டிவி' சேனலில், எல்லாமே சிரிப்பு தான் என்ற நிகழ்ச்சி, ஞாயிறு தோறும் வருகிறது. கலக்கப்போவது யாராக இருந்த விஜய் நிகழ்ச்சியில் இருந்து, இன்னொரு சேனலுக்கு போய், அசத்தப்போவது யாரு என்று நடத்தியவர்களில் சிலர் சேர்ந்து, இப்போது எல்லாமே சிரிப்பு என்று கலக்குகின்றனர். அவர்களில் ஒருவர், சமீபத்தில், பள்ளிவகுப்பில் டீச்சரிடம் நம்பர் 1 போக வேண்டும் என்று குழந்தைகள் கேட்பது போல, பிரபலங்கள் கேட்டால் எப்படி கேட்பார்கள் என்று சொல்லி, முதலில் நடிகர் திலகம் சிவாஜி சொல்வதாக அவர் குரலில், "கை வீசம்மா கைவீசு...கடைக்கு போகலாம் கைவீசு' என்பதை மாற்றி, கடைக்கு என்பதற்கு பதில், பாத்ரூமுக்கு...என்று ஜோக் அடித்தது வேதனை. இதுவா சிரிப்பு...?
|
![]() |
![]() |
#9 |
|
“Naan Aval Illai” is a serial that is making waves on Kalaignar TV. Directed by K. Balachander, it tries to cash in on the veteran director’s classic “Naan Avan Illai”, starring Gemini Ganesan, which was recently re-made with Jeevan in the lead. In its television avatar, the only difference is the protagonist is a woman. The story revolves around Anitha (Indiraja) who, due to circumstances, has to disguise herself as Vanitha, a non-existent twin sister of Anitha! What follows is a comedy of errors resulting in Anitha juggling various disguises and sojourning in prison as well. Jayakodi (Renuka) comes to her rescue but she too gets caught up in the melee and what unfolds is a comedy riot. The serial, produced by Pushpa Kandasamy, proves that television audiences are brand conscious and old film titles have tremendous recall value.
|
![]() |
![]() |
#11 |
|
Hi,
Only Tharisanam TV, Deepam TV, Sun TV, KTV, Holy God, Blessing TV, Living God, Maharaji Words of Peace and Rainbow TV are Tamil TV channels available on Hotbird satellites. Kalaignar TV is not telecasting in Europe... it is said that a unidentified TV-channel has bought rights for Kalaignar TV to telecast in Europe... But I don't know which... |
![]() |
![]() |
#12 |
|
கலைஞர் "டிவி' சேனலில், எல்லாமே சிரிப்பு தான் என்ற நிகழ்ச்சி, ஞாயிறு தோறும் வருகிறது. கலக்கப்போவது யாராக இருந்த விஜய் நிகழ்ச்சியில் இருந்து, இன்னொரு சேனலுக்கு போய், அசத்தப்போவது யாரு என்று நடத்தியவர்களில் சிலர் சேர்ந்து, இப்போது எல்லாமே சிரிப்பு என்று கலக்குகின்றனர். அவர்களில் ஒருவர், சமீபத்தில், பள்ளிவகுப்பில் டீச்சரிடம் நம்பர் 1 போக வேண்டும் என்று குழந்தைகள் கேட்பது போல, பிரபலங்கள் கேட்டால் எப்படி கேட்பார்கள் என்று சொல்லி, முதலில் நடிகர் திலகம் சிவாஜி சொல்வதாக அவர் குரலில், "கை வீசம்மா கைவீசு...கடைக்கு போகலாம் கைவீசு' என்பதை மாற்றி, கடைக்கு என்பதற்கு பதில், பாத்ரூமுக்கு...என்று ஜோக் அடித்தது வேதனை. இதுவா சிரிப்பு...? வர வர காமெடி என்ற பெயரில் காமநெடி தரக்கூடிய விஷயங்களையும், மேலே குறிப்பிட்டதைப்போன்ற அருவருப்பான கான்செப்ட்களையும் சர்வ சாதாரணமாக தரத்துவங்கிவிட்டனர். நடுவர்களாக இருப்பவர்களும் அவர்களைக் கண்டித்து ஒரு குட்டு வைப்பதை விட்டு, அவர்களும் சேர்ந்து சிரித்து தொலைக்கிறார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பெண்களும் நடுவர்களாகவோ காம்பியர்களாகவோ வருகிறார்கள். அவர்கள் கூட இதை கண்டிப்பதில்லை என்பது மட்டுமின்றி, ரசிக்கவும் செய்கிறார்கள். உமாரியாஸ், கோவை சரளா, ஸ்வர்ணமால்யா, திவ்யதர்ஷிணி, மகேஸ்வரி என்று யாரும் இதில் விதிவிலக்கில்லை. இது போன்ற காமெடிகள், ஒரு குறிப்பிட்ட வயதினர் மட்டத்தில், அல்லது நண்பர்கள் வட்டத்தில் பரிமாறிக் கொள்ளக்கூடிய ஜோக்குகளாக இருக்கலாம். ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பது ஒரு வீட்டில் ஐந்து வயது குழந்தை முதல் எண்பது வயது முதியவர்கள் வரை ஒன்றாக உட்கார்ந்து பார்க்கக் கூடிய ஒரு விஷயம். அதிலும் இது போன்ற காமெடி நிகழ்ச்சிகள் மாமனார், மருமகள், அம்மா, மகன் என்று அனைத்து உறவுகளும் ஒன்று சேர்ந்து பார்க்கக் கூடிய ஒரு நிகழ்ச்சியில் இது போன்ற அருவருப்பான, முகம் சுழிக்கும்படியானவற்றை தருவது எவ்வளவு அபத்தம் என்பதை பங்கு பெறுபவர்கள் உணர வேண்டும். நகைச்சுவை என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் தரக்கூடாது. நடுவர்ககளும் நமக்கென்ன என்று இருக்காமல், அவர்களைக் கண்டிக்க வேண்டும், மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும். அனைவருக்கும் சமுதாய பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டும். சமீபத்தில் 'கலக்கப்போவது யாரு - பகுதி 3' ல் ஒரு பெண் கலந்து கொண்டு நகைச்சுவைகளை சொன்னார். அவர் சொன்னவற்றில் முக்கால் வாசி ஆண்-பெண் கள்ளத்தொடர்பு பற்றிய விஷயங்கள். நகைச்சுவை என்ர பெயரில் ரொம்ப சர்வ சாதாரணமாக சொன்னார். அவர் பெயர் சங்கீதா. இத்தனைக்கும் அவர் ஒரு கல்லூரிப் பேராசிரியையாம். டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிறாராம். வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டார். இவரிடம் படிக்கும் மாணவ மாணவிகள்... பாவம். |
![]() |
![]() |
#13 |
|
திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் சொல்லியிருக்கிறார். வரவேற்போம். ஆனால் அதை விட மோசமான குடிக்கும் (மதுவருந்தும்) காட்சிகள் சர்வ சாதாரணமாக இடம் பெறுகின்றன. இளைஞர்கள் விரும்பி பார்க்கும் திரைப்படங்களில் மட்டுமல்ல, குடும்பத்தோடு பார்க்கக்குடிய தொலைக்காட்சிகளிலும் சர்வ சாதரணமாக இடம் பெறுகின்றன. முன்பெல்லாம் குடிப்பவன் என்றால், வில்லனையும் கொடுரமானவனையும் காண்பிப்பார்கள். ஆனால் இப்போதோ, குடிப்பழக்கம் இல்லாத கல்லூரி மாணவனையே காண்பிப்பதில்லை. போலீஸ்கார்கள் காவல் நிலையத்திலேயே குடிப்பதாக காட்டுகிறார்கள். காசு என்பதை எப்படியாவது சம்பாதிப்பது என்ற ஒரே குறிக்கோளுடன் தான் இவர்கள் அலைகிறார்களா?.
'உங்களை யார் மேடம் பார்க்கச்சொன்னார்கள்?' என்று இவர்கள் கேட்கலாம். நான் ஒருத்தி மட்டும் தொலைக்காட்சியை ஆஃப் செய்துவிட்டால் போதுமா?. மற்றவர்கள் கெட்டால் பரவாயில்லையா?. சமீபத்தில் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் (கலக்கப்போவது யாரு 3) ஒருவர் நகைச்சுவை பண்ணுகிறார். எப்படி தெரியுமா?. அப்பன் வைத்திருந்த மதுவை குழந்தை குடித்து விட்டு, மயக்கத்தில் ஊறுகாய் கேட்கிறதாம். மிமிக்ரி பண்ணுகிறார். அதை நடுவர் எஸ்.வி.சேகரும், உமா ரியாஸும் கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ஆண்டவா.... நகைச்சுவைக் காட்சிகளில் குவாட்டர், கட்டிங் என்ற வார்த்தைகள் இல்லாத ஜோகுகள் ரொம்பவே அரிதாகி வருகிறது. இதுக்கெலாம் அரசாங்கம் தான் சட்டம் போட்டு தடுக்கவேண்டும் என்பதில்லை. 'இவற்றை மக்களுக்கு கொடுத்துதான் சம்பாதிக்க வேண்டும் என்றால் அந்த காசு எனக்கு தேவையில்லை' என்று இவர்கள் முடிவெடுக்க வேண்டும். இவர்கள் யாரும் வேற்றுக்கிரக வாசிகள் அல்ல. சமுதாயத்தில் இவர்களும் ஒரு அங்கம்தான் என்பதை உணர வேண்டும். 'எல்லாமே சிரிப்புதான்' நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு போன்ற தோற்றமுடைய ஒருவர் வருகிறார். அவர் அங்குள்ள பெண் காம்பியர் மகேஸ்வரியிடம் 'வழிவதை' ஒரு தொடர் நகைச்சுவையாக வைத்திருக்கிறார். போதும் நிறுத்துங்க தம்பி...... |
![]() |
![]() |
#14 |
|
|
![]() |
![]() |
#16 |
|
கலைஞர் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர், மகராசி.
தனியாக நின்று சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மகராசியின் வெற்றிக்கான இலக்கு தான் கதையின் முடிச்சு. சாதனை படைக்க வேண்டுமென்ற வெறியோடு திருமண வாழ்க்கையை வெறுக்கிறாள் மகராசி. பெற்றோர்களோ, மகளைத் திருமண கோலத்தில் பார்க்கத் துடிக்கிறார்கள். வேறு வழி தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறும் மகராசிக்கு சந்திரமோகன் என்ற தொழிலதிபரின் அறிமுகம் கிடைக்கிறது. அவர் தனது நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்குகிறார். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல், முழு முயற்சியோடு நிறுவனங்களை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்கிறாள் மகராசி. சந்திரமோகன் என்ற தொழிலதிபராக `மோகமுள்' அபிஷேக்கும், மகராசியாக புஷ்பலதா என்ற புதுமுகமும் நடிக்கிறார்கள். |
![]() |
![]() |
#18 |
|
|
![]() |
![]() |
#19 |
|
கலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30க்கு (முன்பு 8.30) டாட்டா இண்டிகாமின் "ஆட்டம் பாட்டம்" என்ற நடன நிகழ்ச்சி ஒளிபரபாகிறது. சென்ர வாரம் வரை அதில் நடுவர்களாக வந்த நடிகை பூஜா, டான்ஸ் மாஸ்ட்டர் பிரசன்னா இருவரும் மாற்றப்பட்டு, தற்போது நடிகர் அப்பாஸ், மற்றும் நடிகை காயத்ரி நடுவர்களாக இருந்து ஸ்கோர் வழங்குகிறார்கள். (இந்த நிகழ்ச்சிக்கென்று தனி த்ரெட் இல்லாததால் இங்கு போஸ்ட் பண்ணியிருக்கிறேன்).
பூஜாவும் பிரசன்னாவும் இருந்தபோது ஓரளவுக்கு சரியான முறையில் மதிப்பிட்டு மார்க் வழங்கி வந்தனர். அதிலும் பிரசன்னா, ஆடுபவர்களின் நடனத்தில் உள்ள நிறை, குறைகளை (குறிப்பாக குறைகளை) சரியான முறையில் சுட்டிக்காட்டுவார். ஆனால் இப்போது அப்பாஸ் மற்றும் காயத்ரி வந்தபின்னர் மதிப்பீடு என்பது கேலிக்கூத்தாகி விட்டது. சும்மா சகட்டுமேனிக்கு வாய்க்கு வந்தபடி (கைக்கு வந்தபடி..?) ஒன்பது, பத்து என்று அள்ளி வழங்குகின்றனர். உண்மையில் நன்றாக ஆடியவர்களுக்கு வழங்கினால் பரவாயில்லை. ஆனல் நிலைமை அப்படியில்லையே..!. சரியான ஆட்டத்துக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறதென்றால் அதைக்கண்டு மகிழ்ச்சியடைபவள் நான்தான். அதே சமயம் பல்வேறு டான்ஸ் மாஸ்டர்கள் கட்டிக்காத்த அரங்கில் தவறான ஆட்டத்துக்கு முழு மதிப்பெண் வழங்கப்படுமானால் அதைக்கண்டு வருத்தம் அடைபவளும் நான்தான். (நான் சங்க காலத்து நக்கீரனின் கொள்ளுப்பேத்தி). ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக ஒன்றைச்சொல்லலாம் என்று நினைக்கிறேன். இப்போது ரீமிக்ஸ் ரவுண்ட் நடந்து வருகிறது. அதில் முதலில் பழைய பாடலையும், பின்னர் பாதிக்குமேல், அந்தப்பாடலின் தற்காலத்திய கெடுக்கப்பட்ட வடிவத்தையும் ஒலிபரப்பி அதற்கு தகுந்தாற்போல ஆடுகின்றனர். முந்தாநாள் ஒரு போட்டியாளர், இளையராஜாவின் அன்றைய பாடலான 'வாடி என் கப்பக்கிழங்கே' பாடலுக்கும் அதன் தற்போதைய வடிவத்துக்கும் ஆடினார். பின்னர் ஆடிய பகுதியில் கொஞ்சமே கொஞ்சம் டான்ஸ் இருந்தது. முதல் பகுதியில் அறவே ஆட்டமில்லை. சும்மா அங்கே இங்கே நின்றாரே தவிர எந்த டான்ஸ் மூவ்மெண்ட்டும் கொடுக்கவில்லை. அதுக்கு இருவரும் பத்துக்கு பத்து (மொத்தம் 20) கொடுத்தனர். அது மட்டுமல்லாது, காயத்ரி ஏதோ காணாததைக் கண்டதுபோல அந்த பெர்ஃபாமென்ஸுக்கு (??) புகழ்மழை பொழிந்தார். அப்பாஸுக்கு சரியாக த்மிழ் பேச வரவில்லை. திக்கித்திணறி பேசுகிறார். ஏதோ சொல்ல நினைக்கிறார். அதை சரியான வார்த்தைகளால் அவரால் சொல்ல முடியவில்லை. ஒருசில போட்டியாளர்கள் நிஜமாகவே ரொம்ப நல்லா பண்றாங்க. ஆனால் மதிப்பீட்டில் உள்ள குளறுபடிகள் காரணமாக பின்னுக்குப்போய் விடுகிறார்கள். |
![]() |
![]() |
#20 |
|
கலைஞர் தொலைக்காட்சியில் நடந்து வந்த 'கானா குயில் பாட்டு' முதல் பகுதி சென்ற வாரம் முடிவு பெற்று, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுத்தொகை (ரூ.1 லட்சம்..?) காசோலையாக வழங்கப்பட்டது. முதற்பகுதியின் நடுவர்களாக 'தேனிசைத்தென்றல்' தேவாவும், கானா உலகநாதனும், வாராவாரம் பங்கேற்று, பல்வேறு நிலைகளில் பலரை வடிகட்டி, வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். தொகுப்பாளர்களாக தொலைக்காட்சி நடிகர் ஷியாம் மற்றும் காயத்ரிப்ரியா பங்கேற்றனர். கலகலப்பாக சென்ற முதல்பகுதி நிறைவடைந்தாலும், இரண்டாவது பகுதி உடன் துவங்கப்படும் என அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று இரண்டாம் பகுதி துவங்கியது. தொகுப்பாளர்களாக அதே ஷியாம், (காயத்ரிக்கு பதிலாக) தீபா வெங்கட் வந்துள்ளனர். அதுபோலவே நடுவர்களாக அதே 'கானா' உலகநாதனும், தேவாவுக்கு பதிலாக பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முகங்களைக்கொண்ட கங்கை அமரனும் வந்துள்ளனர். ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு கெட்டப்பில் தோன்றும் அமரன், இம்முறை தாடியில்லாமல், தலையில் கருப்பு(?) முடியுடன் சற்று இளமையாக தோற்றமளித்தார். முன்பெல்லாம் இடையிடையே ஷியாம் மட்டுமே பாடுவார். காயத்ரி பாட மாட்டார். இம்முறை தீபாவெங்கட்டும் பாடுகிறார். போட்டியில் பாடுபவர்கள் வெறும் கேலிக்கூத்தாக இல்லாமல் ஏதாவது சமுதாய கருத்தை மையமாக வைத்துப்பாடுவது நன்றாக இருக்கிறது. இந்நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|