Reply to Thread New Thread |
|
![]() |
#1 |
|
சோ-வின் எங்கே பிராமணன் எனும் தொடர் இன்று முதல் ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணியில் இருந்து 8.30 மணி வரை ஒளிபரப்பாகவிருக்கிறது.
இதன் மூலம் நாம் சொல்லப்போகும் கருத்துக்கள் உபநிஷத்துக்கள் வேதங்களை ஒட்டி அமைந்திருக்கும் என்று விளம்பரம் செய்திருந்தனர். பிராம்மணன் என்பவன் பிறப்பால் மட்டும் பிராம்மணன் ஆக மாட்டான். பிரம்மத்தை எவன் தியானித்து இருக்கிறானோ அவனே பிராம்மணன் என்று வேதங்களும் உயர்ந்த கருத்துக்களும் தெரிவிக்கின்றன. இக்கருத்தை எந்த அளவு ஒருமித்து, செய்திகளையும், தகவல்களையும் பரிமாறவிருக்கிறார்கள் என்ற ஆவல் எழுகிறது. Enke Biramanan - Title song |
![]() |
![]() |
#2 |
|
|
![]() |
![]() |
#3 |
|
|
![]() |
![]() |
#4 |
|
|
![]() |
![]() |
#5 |
|
|
![]() |
![]() |
#6 |
|
எங்கே பிராமணன்'
நடிகரும் எழுத்தாளருமான சோ எழுத்தில் வெளிவந்த `எங்கே பிராமணன்' நாவல், சின்னத்திரை தொடராக ஜெயா டிவியில் வருகிறது. பிரபல தொழில் அதிபர் நாதன்-வசுமதி தம்பதியரின் ஒரே வாரிசு அசோக் விரக்தியின் விளிம்பில் நின்று `தான் யார்?' என்ற ஆன்மிகத் தேடலில் ஈடுபடுகிறான். சந்தேக நிவாரணியாக கை கொடுக்கும் மாங்காடு பாகவதர், சாஸ்திரத்தில் துளியும் நம்பிக்கையற்ற நாதனின் உறவுக்காரர் நீலகண்டய்யர், பல வைதீகர்களை காண்ட்ராக்டில் கையடக்கி வைக்கும் வேம்பு, செல்வந்தரானாலும் வைதீக பிராமணர்களை மதித்து போற்றும் நீதிபதி ஜகன்னாதய்யர் இவ்வாறு பல பாத்திரங்கள் கதையை ஆளுகின்றன. தன்னை யார் என தெரிந்து கொள்ள பாடுபடும் அசோக்கிற்கு பிரம்மோபதேசம் செய்து வைத்தால், நிவாரணம் ஏற்படும் என்கிறார் பாகவதர். யார் உண்மையான பிராமணன் என்ற சர்ச்சை தீர, வசிஷ்டரை பூமியில் மானுடனாக (அசோக்) பிறப்பித்த விஷயத்தை கூறுகிறான் ஈசன். `யார் பிராமணன்' என்ற கேள்விக்கு விடை காணாத வசிஷ்டர் பிரம்மோபதேசம் நிறைவேறியதும் விடை காண்பார் என சிவபெருமான் கூறுகிறார். ஆனால் அவ்வாறு விடை கிடைக்காமல் போகவே, சிவனை அணுகி கேட்க அவர் `பூணூல் நடைபெற்றது. ஆனால் பிரம்மோபதேசம் இன்னும் நடைபெறவில்லை' என்கிறார். சிவபெருமான் குறிப்பிட்ட `அந்த' பிரம்மோபதேசம் அசோக்கிற்கு வையாபுரி என்ற அரசியல்வாதியின் கையாள் சிங்காரம் என்கிற பிராமணன் அல்லாத மனிதன் மூலம் சித்திக்கின்றது! குலத்தால் அல்ல, குணத்தாலே பிராமணியம் அறியப்படும்என்ற பேருண்மை விளங்குகிறது. வசிஷ்டர் தேடிய `பிராமணன்' கிடைக்கிறான். டெல்லிகுமார், நளினி, குயிலி, கோபி, கோல்டன் சுரேஷ், வரலட்சுமி, ஸ்ரீவித்யா, விஜயகிருஷ்ணராஜ் நடிக்கிறார்கள். திரைக்கதை வசனம் எழுதி தொடரை இயக்குபவர்: வெங்கட். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு தொடர் ஒளிபரப்பாகிறது. |
![]() |
![]() |
#7 |
|
|
![]() |
![]() |
#8 |
|
இந்த நாவலை நான் படித்ததில்லை. ஆனா கூறியது போல், அஷோக் என்ற வாலிபன், சுயத்தின் தேடலில் ஈடுபடுகிறான். இளம் வயதில் ஆன்ம வெளிபாட்டை தாண்டிய வேதாந்த தேடல் பெற்றோருக்கு கவலையை தருகிறது. இக்குடும்பத்திலும், இவன் சந்திக்கும் நபர்கள் அவர்களை சேர்ந்தவர்கள் குடும்பத்திலும் நடக்கும் கதை மட்டுமே அல்ல இத்தொடர். அவர்கள் நடத்தும் சம்பாஷணையில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய சில அரிய கருத்துக்களை கதையின் ஊடே பேச்சின் ஊடே புகுத்தியிருக்கிறார்.
சென்றவாரமே விளக்கு ஏற்றுதலின் முக்கியத்துவம், விடியற்காலை கோலமிடுதல் என்பன பொன்ற சாஸ்திர விஷயங்களை ஆராய்ந்து அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்கள். இடையிடையே, தொடரைப்பற்றிய சில சந்தேகங்களை சோ விடமே ஒரு நபர் கேட்பது போலவும், அதற்கு சோவும் தன் சுய கருத்தை வெளியிடுவது போலவும் அமைத்திருப்பது, பொதுவாய் வெளிவரும் சராசரி தொடர் என்ற நினைப்பைத் தாண்டி வித்தியாசத்தை கொணர்கிறது. |
![]() |
![]() |
#9 |
|
திங்கள் பிப்ப்ரவரி 9
_________________ அஷோக்கின் பிறந்தநாளையொட்டி அவன் பெற்றோர் புதுத் துணி வாங்கி வருகிறார்கள். "நீங்கள் குடுத்த இந்த உடம்பு எனும் சட்டை இருக்கையில் எனக்கென் புதுச்சட்டை" என்று மறுத்துவிடுகிறான் அஷோக். "பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த கணம் முதலே மரணத்தை நோக்கி தம் பயணத்தை தொடங்கிவிடுகின்றனர். இதில் கொண்டாட என்ன இருக்கிறது. பிறந்த நாள் என்பது வெறும் மயில்கல்" என்கிறான். குயிலி கோபு குடும்பத்தில் ஸ்ரார்த்தம் நடைபெறுகிறது. நம்பிக்கையற்ற கோபுவின் கேள்விகளுக்கு, (உதாரணமாக "ஹவிஸ் அக்னியில் இடும் போது, அது எப்படி முன்னோர்க்கு போகும்? அக்னி என்ன குரியர் செர்விஸ் நடத்துகிறாரா?" ) ஸ்ரார்த்தம் செய்துவைக்க வந்த சாஸ்த்ரிகள் அர்த்தம் கூறிகிறார். இதன் விளக்கங்கள் சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் அளித்திருப்பது "தெய்வத்தின் குரல்-பகுதி4" இல் இருக்கிறது என்கிறார். ஸ்ரார்த்தம் செய்யும் போது ஏன் பஞ்சகச்சம் அணிய வேண்டும் என்பதற்கு சோ வின் விளக்கம் வித்தியாசமாய் இருந்தது. 'Was it convincing enough?' என முடிவெடுக்க வேண்டியது அவரவர் தனிப்பட்ட விஷயம். ஸ்ரார்த்த உணவை ஏன் குடும்பம் அல்லாத (கோத்திரம் அல்லாத) ஒருவர் உண்ணக்க்கூடாது என்பதற்கும் விளக்கம் இருந்தது. (அப்படியே பழக்கம் என்று கூறிகிறார்) ( I wasn't conviced about this part of his explanation) அஷோக்கின் கல்லூரியில் அவனைப் பற்றி ஆசிரியர் ஒருவர் தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுக்கிறார். வகுப்புக்களுக்கு சரிவர வருவதில்லை, எனினும் 95 சதவிகிதம் மதிப்பெண் பெறுகிறான். மிகவும் அமைதியாக, யாருடனும் பேசாது, மௌனியாய் இருக்கிறான், எப்போதும் மரத்தடியில் ஆழ்ந்த சிந்தையில் ஈடுபட்டிருக்கிறான். அல்லது ஏதேனும் புத்தகம் படித்தபடி இருக்கிறான், என்கிறார். அவன் சஞ்சரிக்கும் லோகமே வேறு என்று தலைமை ஆசிரியரும், வகுப்பாசிரியரும் முடிவு செய்கின்றனர். லோகத்தில் அவ்வப்பொழுது, ஒரு Einstein, c.v.raman, ramanujam போன்ற அரிய பிறப்புக்கள் பிறக்கும். அவர்களின் போக்கும், செயலும் வித்தியாசமாய் இருக்கும். அவர்களின் பிறப்பிற்கு ஒரு பலமான நோக்கம் இருக்கும். நமக்கு அதை தெர்ந்து கொள்வதும் கடினம், என இருவரும் மகிழ்வுடன் ஸ்லாகிக்கின்றனர். இந்த தொடரிலும் "காதல்" வரும் என்று சோ தன்னுடன் உரையாடுபவரிடம் சொல்லி முடிக்கிறார். That is to grab the interest of all and sundry. 'இன்னும் தேடுவோம்' என்று நேற்றைய தொடரை முடித்தனர். இதுவரை, சாஸ்திர விளக்கங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், ஆன்மீகத்தேடலுக்கு இன்னும் தரப்படவில்லை என்பது என்போன்ற சிலருக்கு வருத்தம் அளிக்கிறது ![]() "தேடித்தான் பார்ப்போமே!" என்று எனக்கும் தோணுகிறது. தேடிப்பார்ப்பேன். |
![]() |
![]() |
#10 |
|
இத்தொடரில் வரும் வைதீக / ஆன்மீக விஷயங்கள் சிலவற்றை மட்டுமே இங்கு எல்லோருடனும் பகிர நினைக்கிறேன். நேற்றையிலிருந்து நான் இத்தொடரை பார்த்து வருகிறேன். அதனால் சென்ற பதிவில் இடம் பெறும் "தன்னுடன் உரையாடுபவர்" என்ற சொற்றொடருக்கு பதில் "தயாரிப்பாளர்" என்று மாற்றிக்கொள்ளுங்கள்.
சோ அவ்வப்பொழுது உரையாடுவது தொடரின் தயாரிப்பாளருடன். |
![]() |
![]() |
#11 |
|
செவ்வாய் - Feb 10
________________ நம் மாங்காடு பாகவதரின் குடும்பச்சண்டைகள் நேற்றைய பாதி தொடரை ஆக்ரமித்தது. நமக்கேன் அவர்கள் வீட்டுக் கதையெல்லாம்!? பாகவதர் உணர்ச்சி வசப்பட்டு "நகரேஷு காஞ்சி" என்று காஞ்சி மாநகரின் பெருமையை சுட்டிக் காட்டினார். உடல் நலம் குன்றியும் ஜட்ஜ் வீட்டுத் தர்பணத்திற்கு செல்ல விழைந்த தன் தகப்பனை, மகன் தடுத்து தான் சென்று தர்பணம் நடத்திவிட்டு வருகிறான். வேதியல் படித்து வேலையில் அமர்ந்திருப்பவனுக்கு வேதமும் தெரியும் என அடக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் தன்னை வெளிப்படுத்துகிறான். கலியுகத்தில் வேதம் தெரிந்தவர்கள் குறைந்து வருவது மலிந்து கிடக்க, இளம் வாலிபன் ஒருவனின் வேத அப்யாசம் கண்டு திருப்தியடைக்கிறார் நீதிபதி. தர்பணம் பற்றிய பேச்சு அடிபடும் போது, முன்னோருக்கு மட்டுமின்றி அவர்கள் செய்யும் கார்யம், பாரபட்சமற்று ஜாதி மத வேறுபாடுகளற்று, தாய் தந்தை உறவினர் அற்ற மற்ற ஆன்மாக்களுக்கும் சென்று சேர்வதாய் ஒரு ஸ்லோகம் சொல்வதுண்டு. யேஷம் ந மாதா ந பிதா ந ப்ராதா ந பந்து ந அந்ய கொத்ரீந: தே சர்வே த்ருப்திமயந்து என்பது ச்லோகம். நம் கதாநாயகன் அஷோகை கிண்டல் செய்த ஆட்டோ ட்ரைவர் ஏதேச்சையாய் இறந்து விட, விட்டேத்தியாய் பேசிய அஷோக்கின் கரி-நாக்கும் இதற்கு காரணம் என்று பேசத் துவங்குகின்றனர் அக்கம் பக்கத்தவர். முறையே, இங்கு தொடரை நிறுத்தி சோவின் விளக்கம் தொடர்ந்தது. வாக்கு பலிதம் ஏதேச்சையாக நடந்தால் அது co-incidence ஆக இருக்க வாய்ப்புண்டு. வாக்குபலிதம் அடைந்துவிட்டவனெல்லாம் மஹான் அல்ல என்றார். பேசும் பத்து சொல்லில் ஒரு சொல் பலிக்கும் வாய்ப்பு என்றைக்குமே உண்டல்லவா?! என் பாட்டியும் அம்மாவும் அப்பாவும் சொன்ன "இட்சிணி தேவதைகளை" பற்றித் தான் இவரும் சொன்னார். Thoughts gets powerful as it gets dense என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதனாலேயே நல்லதை நினைக்க வேண்டும். பேச வேண்டும். நடத்த வேண்டும். இதைத் தவிர எங்கள் வீடுகளில் எங்கள் பாட்டிகள் "இட்சிணி தேவதைகள்" பற்றி சொல்வார்கள். இட்சிணி தேவதைகள் அரூபமாய் எங்கும் நிறைந்திருப்பார்களாம். நாம் ஏதேனும் சுபமாகவோ அசுபமாகவோ பேசினால், சமயத்தில் அவர்கள் "ததாஸ்து" (அப்படியே ஆகட்டும்) என்று கூறிவிடுவார்கள். அதனால் நல்லதே பேச வேண்டும். நம்மை சுற்றி கேட்கும் சப்தங்களும் நல்லனவாய் (ஒழிந்து போ, சனியனே போன்ற வார்த்தைகள் நம் வாழ்விலும், ஏன் தொலைக்காட்சி போன்ற நவீன வஸ்துக்கள் மூலமாக நம் செவிக்கு விழுந்தால் கூட தவிர்க்கபப்ட வேண்டியது) இருக்கவெண்டும் என்று வலியிறுத்துகிறார்கள். இதையே சோவும் கூறி தொடரை முடித்தார். |
![]() |
![]() |
#12 |
|
My mom has read this book once and she was enthralled. Just today I came to know that there is a serial on Jaya TV about this. I'm planning to watch it. I'll surely participate in the discussions.
I have the thirst to know more about "Self Realization", "God's existence", "Power of Vedhas/Mantras" etc. Hope I'll be able to get it in this serial. ![]() |
![]() |
![]() |
#13 |
|
|
![]() |
![]() |
#15 |
|
|
![]() |
![]() |
#16 |
|
|
![]() |
![]() |
#17 |
|
நேற்றைய பகுதியில் சொல்லிக்கொள்கிறார் போல் ஒன்றும் இல்லை.
நாதன் அவர்களின் club தேர்தல் சார்ந்த அலட்டல்களும் பேச்சுக்களும் தொடர்ந்தன. நளினி தன் பகுதியை மிகச் சிறப்பாக செய்கிறார். தொலைக்காட்சி நாடகத்தில் மட்டுமே நடிப்பவர்களுக்கும், திரை நட்சத்திரங்கள் தொலைக்காட்சித் தொடரில் நடிப்பதற்கும் நிறைய வித்யாசங்கள் காண முடிகிறது. kudos to naLini ![]() சோ சொன்னதைப் போல் இன்றைய காலகட்டத்தில், தெருக்கு தெரு, தொகுதிக்கு தொகுதி, அடுக்குமாடி குடியிருப்பு உட்பட மகளிர் அணி, நல்வாழ்வு அமைப்பு என்று பல பெயர்களுடன் associations அதைச் சார்ந்த, குழப்பங்கள், ego, பொறாமை போட்டி என சொல்லி மாளாது. ஒன்றையணா பெறாத இந்த அமைப்புக்களில் யார் தேர்தலில் ஜெயித்தால் என்ன! யார் தோற்றால் என்ன! பெரும்பாலான இடங்களில், தனிப்பட்ட விரோதங்கள் நிரம்ப வளர்ந்து வருவது கண்கூடு. அப்புறம், இன்னொன்று: சாஸ்த்ரிகள் மகனுக்கும் ஜட்ஜ் பெண்ணுக்கும் இடையே அழகான நட்பு கலந்த காதல் மலர்வது போல் தெரிகிறது. |
![]() |
![]() |
#18 |
|
|
![]() |
![]() |
#19 |
|
|
![]() |
![]() |
#20 |
|
|
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 2 (0 members and 2 guests) | |
|