Reply to Thread New Thread |
|
![]() |
#1 |
|
மேகலா-600 திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மேகலா தொடர் 600 எபிசோடை கடந்திருக்கிறது. கடன் தொல்லையை சமாளிக்க முடியாத மேகலாவின் தந்தை கலையரசு ஒரு கட்டத்தில் வீட்டை விட்டே ஓடிப் போகிறார். போகிற இடத்தில் ஒரு விபத்தில் சிக்கி பழைய நினைவை அறவே இழந்து விடுகிறார். இப்போது அவருக்கு தான் யார் என்பது கூட நினைவில் இல்லை. பழசையெல்லாம் மறக்கவைத்து கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருக்கும் காலம், கடைசியில் அவரை அவரது கடைசிப்பெண் திருமணத்தில் கொண்டு வந்து சேர்க்கிறது. கல்யாண வீட்டில் சமையல்காரர்களில் ஒருவராக அவரைப்பார்த்து அதிர்ச்சிஅடைகிறாள் அவரின் அக்கா சண்முகவடிவு. அக்கா மூலம் பிரிந்த குடும்பம் மீண்டும் அவருக்கு கிடைக்கிறது. தொழிலதிபராக கொடிகட்டிப்பறந்த அன்றைய கால கட்டத்தில் அவருக்கு அக்கா வடிவு பேச்சு தான் வேதம். அக்கா பேச்சை கண்ணை மூடிக்கொண்டு கேட்டவர் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் வெறுப்புக்குரியவரானார்.அக்கா பேச்சைக் கேட்டே மூத்தமகள் மேகலாவை வீட்டை விட்டு துரத்தினார். இப்படி வீட்டில் இருந்த அந்த நாளில் குடும்பத்துக்கே சிம்மசொப்பனமாக இருந்துவந்த அந்த கலையரசன், இப்போது எல்லாம் மறந்தவராய் எதுவும் நினைவில் இல்லாதவராய் மீண்டும் அந்த குடும்பத்திற்குள் வந்திருக்கிறார்.ஆனால் அதிரடியான மாற்றம், எல்லாரிடமும் அன்பைப் பொழிகிறார். தன் கோபக்கார தம்பி பாசமிகு தம்பியாக திரும்பி வந்திருப்பதில் அக்கா வடிவுக்கு மட்டும் அதிர்ச்சி. குடும்பத்தவரை பற்றி அக்கா பழைய நினைப்பில் ஏதாவது குறை சொல்லப் போக, அதற்காக அவர் அக்காவை கண்டிக்கும் அளவுக்குப் போகிறார். இது அக்காவை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.. அன்பு, மேகலா குடும்பத்தில் நல்லவனாக நடித்தபடி தன் நாடகத்தை தொடர்ந்த காலம் உண்டு. அவன் நோக்கம் மேகலாவை திருமணம் செய்துகொள்வது. அதற்காக பெயருக்கேற்றபடி அத்தனை அன்பை அந்தக் குடும்பத்தில் கொட்டுகிறான். அத்தனை சாமர்த்தியமாக காய் நகர்த்தி மேகலாவைத் தவிர அந்த குடும்பத்தின் ஒட்டுமொத்த அன்புக்கும் உரியவனாகி விட்ட அன்புவால் மேகலாவை திருமணம் செய்யமுடியுமா? மேகலாவின் அப்பா கலையரசனுக்கு பழைய நினைவுகள் திரும்பி விட்டால் இப்போது அவர் பாசத்தை பொழிந்து கொண்டிருக்கும் மேகலாவை மறுபடியும் துரத்தி விட்டுவிடுவாரா? மேகலாவின் தங்கை கண்மணி வாழ்வில் அவள் கணவனாக வந்த பூபதி ஒரு அதிர்ச்சிப்புயல். குடிபோதையில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி மனைவியை அத்தனை நோகப்பண்ணினவன் இப்போது அதிக போதையால் நுரையீரல் பாதிப்புக்குள்ளான ஒருநோயாளி. அதுவும் மரணத்தின் நாட்கள் எண்ணப்படும் ஒரு நோயாளி. அவன் போகிற காலத்துக்குள் அதுவரை தன்னால் சுகப்படாத தன்மனைவி கண்மணிக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்துவிட நினைக்கிறான்.அவன் எண்ணம் ஈடேறியதா? தொடரும் காட்சிகள், தொடரை தொடர்ந்து சுவாரசியப்படுத்தும்'' என்கிறார், இயக்குனர் விக்ரமாதித்தன். மேகலாவாக காயத்ரி நடிக்கிறார். மேகலாவின் தந்தை கேரக்டரில் தீபன்சக்ரவர்த்தியும் அத்தை கேரக்டரில் வடிவுக்கரசியும் நடிக்கிறார்கள்.மற்றும் பாவனா, ஸ்ரீதேவி, ஸ்ரீ, சஞ்சீவ், சந்திரபோஸ், ராஜலட்சுமி, கவுதமி, ராஜ்காந்த், ஸ்ரீகுமார், வின்சென்ட்ராய் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை: முத்துச்செல்வன். வசனம்: பாஸ்கர் சக்தி. இசை: இளங்கோ. இயக்கம்: விக்ரமாதித்தன். தயாரிப்பு: `மெட்டிஒலி' சித்திக். [html:e2695898da] ![]() நன்றி: தினதந்தி |
![]() |
![]() |
#2 |
|
megala mudiyapoguthu so idhai parkkavum.
[html:19cf6ac359] 15_04_10_megala1 Uploaded by ananney. - Watch feature films and entire TV shows.[/html:19cf6ac359] [html:19cf6ac359] 15_04_10_megala2 Uploaded by ananney. - Classic TV and last night's shows, online.[/html:19cf6ac359] |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|