Reply to Thread New Thread |
|
![]() |
#1 |
|
"ஆதிபராசக்தி''
ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் ஆன்மிகத் தொடர் "ஓம் ஆதிபராசக்தி.'' நடிகை சுகன்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இத்தொடரை எழுதி தயாரித்துள்ளார் ஸ்ரீபிரியா. அன்னை ஆதிபராசக்தியின் பெருமைகளை போற்றும் புராண அடிப்படையிலான தொடராகும் இது. வெள்ளிதோறும் இரவு 8.01 மணிக்கு ஒளிபரப்பாகிறது, ஆதிபராசக்தி தொடர். |
![]() |
![]() |
#2 |
|
பெண்களுக்கான `பரிசு விளையாட்டு'
ராஜ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி `பரிசு பத்தாயிரம்.' இல்லத்தரசிகளை மகிழ்விக்கும் இந்த விளையாட்டு நிகழ்ச்சியின் மூலம் இல்லத்தரசிகள் நாள்தோறும் பத்தாயிரம் ரூபாய் வரை வெல்லலாம். சொந்த பணத்தேவைகளுக்காக கணவனின் கையை எதிர்பார்க்கும் புத்திசாலிப் பெண்கள், தங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி தங்கள் செலவுக்குத் தேவையான பணத்தை பரிசாக வெல்லும் வாய்ப்பை இந்த நிகழ்ச்சி அளிக்கிறது. |
![]() |
![]() |
#3 |
|
மிக பழமையான இதிகாசமான மகாபாரதம் தமிழ் நேயர்களுக்காக வரும் திங்கட்கிழமை முதல் ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் எம்.ராஜேந்திரன் இது குறித்து கூறுகையில், மகாபாரதம் தலைமுறைகள் மற்றும் காலத்தைக் கடந்தது. அரசியல், வஞ்சகம், துரோகம் மற்றும் உறவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது எழுதப்பட்ட காலத்திற்கேற்றார் போலவே இன்றைக்கும் பொருந்தக் கூடியதாக அமைந்துள்ளது. இதற்கு முன் தொடர்களில் காணப்படாத பிரம்மாண்டத்தை நேயர்கள் அனுபவித்து மகிழ வேண்டும்' என்றார். திரைப்படத்துறையில் கையாளப்படும் நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் சிறப்பான பின்னணி இசையுடன் இத் தொடர் உருவாக் கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன் வேத வியாசரால் எழு தப்பட்ட மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் எந்த வித திரிபும் இன்றி, இதனைப் பார்க்கும் இளம் தலைமுறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இத் தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் வியாழன் வரை ராஜ் டி.வி.யில் மகாபாரதம் உங்களுக்குபுது அனுபவமாக இருக்கும். |
![]() |
![]() |
#4 |
|
கோலிவுட் பஸ்
ராஜ் டி.வி.யில் ஞாயிறுதோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `கோலிவுட் பஸ்'. தமிழ் திரையுலகின் நிகழ்வுகளை ஒரு கண்ணாடியாக பிரதிபலிக்கிறது கோலிவுட் பஸ் நிகழ்ச்சி. புதுப்பட பூஜை, புது ரிலீஸ், இசை வெளியீடு, வசூல் சாதனைகள், படப்பிடிப்பு தளங்கள், பிரபல நட்சத்திரங்களின் பேட்டிகள், புதுப்பட முன்னோட்ட காட்சிகள் மற்றும் பல தகவல்களை தருகிறது இந்த நிகழ்ச்சி. |
![]() |
![]() |
#6 |
|
|
![]() |
![]() |
#7 |
|
தங்க குரல் வேட்டை
திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சி, தங்க குரல் வேட்டை. தமிழகம் முழுவதும் உள்ள 15 முதல் 40 வயது வரை உள்ளவர்களில் 96 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இதில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ரூ. ஒரு கோடி மதிப்பிலான வீடு பரிசளிக்கப்படுகிறது. மேலும் இருவருக்கு பின்னணி பாடகராகும் வாய்ப்பும் உண்டு. பங்கேற்கும் போட்டியாளர்கள் அனைவரும் தமிழக இசை உலக பாடகர்களான பிரசாந்தினி, வினயா, பென்னி கிருஷ்ணகுமார், ஜெயராஜ் கோபால், சத்யன், ராஜலட்சுமி மற்றும் இசை அமைப்பாளர் ரைஹானா போன்றவர்களால் பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நடுவர்களாக பாடகர் கிரிஷ்; அனுபமா மற்றும் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் பங்கேற்கிறார்கள். திரைத்துறை மற்றும் இசைத்துறை பிரபலங்கள் சிறப்பு நடுவர்களாக பங்கேற்கிறார்கள். இந்த இசை நிகழ்ச்சி 2 விதமான சுற்றுகளை கொண்டது. முதல் சுற்றில் திருச்சி, சேலம், கோவை மற்றும் மதுரையை சேர்ந்த போட்டியாளர்கள் மொத்தம் 48 பேர் பங்கேற்கின்றனர். இரண்டாவது சுற்றில் சென்னை, திருப்பூர், ஈரோடு மற்றும் நெல்லையை சேர்ந்த போட்டியாளர்கள் 48 பேர் பங்கேற்கின்றனர். இந்த 96 போட்டியாளர்களிலிருந்து 40 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இறுதிச் சுற்றில், போட்டியாளர்கள் பல்வேறு திறமை சுற்றுகளுக்கு உட்படுத்தப்பட்டு ஒரே ஒரு தங்க குரலுக்கான போட்டியாளர் தேர்வாகிறார். நிகழ்ச்சி வர்ணனையாளர் நடிகை சுவாதி. தயாரிப்பு: சேடல் வீடியோஸ். |
![]() |
![]() |
#8 |
|
ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகவுள்ள புதிய இசை நிகழ்ச்சி "டாப் சிங்கர்'. இதில் 15 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
இதில் பங்கேற்கும் அனைத்துப் போட்டியாளர்களும் பாடகர்கள் சத்யன், ஜெயராஜ் கோபால், பென்னி கிருஷ்ணகுமார், பிரசாந்தினி, வினயா, ராஜலட்சுமி மற்றும் இசையமைப்பாளர் ரெஹேனா ஆகியோரால் பல்வேறு சுற்றுத் தேர்வுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். பாடகர் கிரிஷ், அனுபமா மற்றும் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் ஆகியோர் நடுவர்களாகப் பொறுப்பேற்கிறார்கள். இவர்களுடன் திரைத்துறை மற்றும் இசைத்துறையின் பிரபலங்கள் சிறப்பு நடுவர்களாகப் பங்கேற்கிறார்கள். அனைத்துப் போட்டியாளர்களிலிருந்தும் இறுதியாக 96 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர், அவர்களுள் 40 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். வித்தியாமான, பிரம்மாண்டமான அரங்கில் போட்டி நடைபெறும். இறுதி வரை சிறப்பாகப் பாடி அனைவரையும் கவரும் ஒரு தங்கக் குரலுக்குச் சொந்தக்காரர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவருக்கு இதுவரை தமிழகத்தில் எந்தத் தொலைக்காட்சிச் சேனலும் தராத வகையில் ரூ.1 கோடிக்கான பரிசும் பின்னணிப் பாடகராகும் வாய்ப்பும் வழங்கப்படும். சிட்டாடல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த நிகழ்ச்சியை நடிகை சுவாதி தொகுத்து வழங்குகிறார். போட்டியாளர்களுக்கான தேர்வு நடைபெறும் இடம், ஒளிபரப்பு நேரம் போன்றவை விரைவில் அறிவிக்கப்படும். |
![]() |
![]() |
#9 |
|
டாப் சிங்கர்
சிறந்த குரல் தேடலுக்கான நிகழ்ச்சி டாப் சிங்கர். இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்களும் முன்னணி பாடகர்களும் நடுவர்களாக அமர்ந்து சிறந்த பாடகரைத் தேர்ந்தெடுக்கின்றனர். பாடும் திறமை படைத்தவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட இந்நிகழ்ச்சி ஒரு வாய்ப்பு. வெற்றி பெறுபவர்க்கு பரிசு காத்திருக்கிறது. திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ராஜ் டிவியில் டாப் சிங்கர் ஒளிபரப்பாகிறது. டாப் சிங்கர் நிகழ்ச்சிக்கு மாவட்டவாரியாக பாடகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டியில் கலந்துகொள்கிறார்கள். இந்த தகவலை நம்மிடம் தெரிவித்த நிகழ்ச்சியின் இயக்குனர் அம்பிலி கிருஷ்ணன், போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விதம் பற்றியும் விவரித்தார். அவர் கூறியதாவது:- முதல் கட்டமாக சேலம், திருச்சி, மதுரை, கோவை மாவட்டங்களில் இருந்து தேர்வு நடத்தி 48 பேரை தேர்ந்தெடுத்தோம்.அவர்களில் 20 பேர் நடுவர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த கட்ட போட்டிக்கு தயாராக இருக்கிறார்கள். இதையடுத்து சென்னை, திருப்பூர், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பாடும் ஆற்றல் கொண்டவர்கள் 48 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் 20 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களின் இந்த இண்டாம் கட்ட பரிசீலனை முடிந்ததும் இறுதிக்கட்டத்தேர்வு விறுவிறுப்பாகத் தொடங்கிவிடும். இந்த போட்டியின்நடுவர்களாக இதுவரை பிரபல பாடகர்களுடன் கலைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் சிம்பு, ஸ்ரீகாந்த், பரத், நடிகைகள் மும்தாஜ், பூர்ணிதா ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இறுதிப்போட்டியில் பிரபல இசைமேதை ஒருவர் கலந்து கொள்கிறார். |
![]() |
![]() |
#10 |
|
மனம் கவர்ந்த மகாபாரதம்
ராஜ் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மகாபாரதம் தொடர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஒரே நேரத்தில் ஈர்த்த தொடராகியிருக்கிறது. அஸ்தினாபுரம் மன்னன் சாந்தனுவின் திருமணத்தில் இருந்து தொடங்கிய கதை, இப்போது பாண்டவர்களின் சிறுபிராயத்தை சுவைபட சொல்லத் தொடங்கியிருக்கிறது. பாண்டவர்களைப் பிடிக்காத சகுனி தான் கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே பிரிவு ஏற்படுத்த எண்ணுகிறான். இந்த சூழ்ச்சி எதையும் அறியாத துரியோதனன் பாண்டவர்களிடம் உறவுமுறையில் நட்பு பாராட்டவே செய்கிறான். பாண்டவர்களில் மூத்தவர் யுதிஷ்டிரனிடம் (தர்மர்) "அண்ணா... நான் உங்களுக்கு உங்கள் தம்பிகள் போல உடனிருந்து உதவி செய்வேன்'' என்கிறான். சொன்னபடி சிறுசிறு உதவிகள் செய்து அந்தக் குடும்பத்தில் தன்னையும் ஒருவனாக இணைத்துக்கொள்கிறான். ஆனால் இதை கொஞ்சமும் எதிர் பாராத சகுனி, தன் திட்டம் இதனால் பாழாகிவிடும் என்று பயப்படுகிறான். இதனால் அவர்களுக்கிடையே பிரிவை ஏற்படுத்தும் முதல்விதையை விதைக்கிறான். கவுரவர்களுடன் பாண்டவர்களுக்கும் கிருபாச்சாரியார் உபநயனம் செய்விக்கிறார். அப்போது அங்கு செல்லும் சகுனி அங்கிருந்து பாண்டவர்களை அவமானப்படுத்தி திருப்பி அனுப்புகிறான்.இந்த சம்பவம் பாண்டவர்களை எந்தஅளவில் பாதிக்கிறது என்பதை அடுத்து வரும் காட்சிகள் சித்தரிக்கிறது. |
![]() |
![]() |
#11 |
|
|
![]() |
![]() |
#12 |
|
|
![]() |
![]() |
#13 |
|
பெண்
ராஜ் டிவியில் தினமும் காலை 11 மணிக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், பல பயனுள்ள தகவல்களையும் தரும் நிகழ்ச்சி `பெண்'. பெண்களால் வழங்கப்பட்டு, பெண்களால் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில், சமையல், கைவினை, அழகு குறிப்புகள் என்று மட்டுமில்லாமல், அலுவலக வேலை, தொழில், வணிகம் போன்ற துறைகளில் பெண்களின் சாதனைகளையும் தருகிறார்கள். |
![]() |
![]() |
#14 |
|
ஆள் பாதி ரீல் பாதி
உழைப்பு, விடா முயற்சி, வெற்றி, முன்னேற்றம் என்று வாழ்க்கை தத்துவத்தை மிக அழகாக, ஒரு குட்டி கதையுடன், நகைச்சுவை கலந்து மிக சுவாரசியமாக வழங்குகிறது, `ஆள் பாதி ரீல் பாதி' நிகழ்ச்சி. தனக்கே உரிய பாணியில், கிண்டலும், நையாண்டியும் கலந்து திரைப்படங்களிலிருந்து காமெடி காட்சிகளை பல வித்தியாசமான வேடங்கள் தரித்து தொகுத்து வழங்குகிறார் தொகுப்பாளர் `மிமிக்ரி' செந்தில். ராஜ் டிஜிட்டல் பிளஸ் சேனலில் ஞாயிறு தோறும் காலை 8 மணிக்கு இது ஒளிபரப்பாகிறது. |
![]() |
![]() |
#15 |
|
டாப் சிங்கர்
சிறந்த குரல் தேடலுக்கான நிகழ்ச்சி டாப் சிங்கர். இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்களும் முன்னணி பாடகர்களும் நடுவர்களாக அமர்ந்து சிறந்த பாடகரைத் தேர்ந்தெடுக்கின்றனர். பாடும் திறமை படைத்தவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்ட இந்நிகழ்ச்சி ஒரு வாய்ப்பு. வெற்றி பெறுபவர்க்கு பரிசு காத்திருக்கிறது. திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ராஜ் டிவியில் டாப் சிங்கர் ஒளிபரப்பாகிறது. டாப் சிங்கர் நிகழ்ச்சிக்கு மாவட்டவாரியாக பாடகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு போட்டியில் கலந்துகொள்கிறார்கள். இந்த தகவலை நம்மிடம் தெரிவித்த நிகழ்ச்சியின் இயக்குனர் அம்பிலி கிருஷ்ணன், போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் விதம் பற்றியும் விவரித்தார். அவர் கூறியதாவது:- முதல் கட்டமாக சேலம், திருச்சி, மதுரை, கோவை மாவட்டங்களில் இருந்து தேர்வு நடத்தி 48 பேரை தேர்ந்தெடுத்தோம்.அவர்களில் 20 பேர் நடுவர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த கட்ட போட்டிக்கு தயாராக இருக்கிறார்கள். இதையடுத்து சென்னை, திருப்பூர், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பாடும் ஆற்றல் கொண்டவர்கள் 48 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் 20 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களின் இந்த இண்டாம் கட்ட பரிசீலனை முடிந்ததும் இறுதிக்கட்டத்தேர்வு விறுவிறுப்பாகத் தொடங்கிவிடும். இந்த போட்டியின்நடுவர்களாக இதுவரை பிரபல பாடகர்களுடன் கலைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் சிம்பு, ஸ்ரீகாந்த், பரத், நடிகைகள் மும்தாஜ், பூர்ணிதா ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இறுதிப்போட்டியில் பிரபல இசைமேதை ஒருவர் கலந்து கொள்கிறார். |
![]() |
![]() |
#16 |
|
மனம் கவர்ந்த மகாபாரதம்
ராஜ் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மகாபாரதம் தொடர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஒரே நேரத்தில் ஈர்த்த தொடராகியிருக்கிறது. அஸ்தினாபுரம் மன்னன் சாந்தனுவின் திருமணத்தில் இருந்து தொடங்கிய கதை, இப்போது பாண்டவர்களின் சிறுபிராயத்தை சுவைபட சொல்லத் தொடங்கியிருக்கிறது. பாண்டவர்களைப் பிடிக்காத சகுனி தான் கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே பிரிவு ஏற்படுத்த எண்ணுகிறான். இந்த சூழ்ச்சி எதையும் அறியாத துரியோதனன் பாண்டவர்களிடம் உறவுமுறையில் நட்பு பாராட்டவே செய்கிறான். பாண்டவர்களில் மூத்தவர் யுதிஷ்டிரனிடம் (தர்மர்) "அண்ணா... நான் உங்களுக்கு உங்கள் தம்பிகள் போல உடனிருந்து உதவி செய்வேன்'' என்கிறான். சொன்னபடி சிறுசிறு உதவிகள் செய்து அந்தக் குடும்பத்தில் தன்னையும் ஒருவனாக இணைத்துக்கொள்கிறான். ஆனால் இதை கொஞ்சமும் எதிர் பாராத சகுனி, தன் திட்டம் இதனால் பாழாகிவிடும் என்று பயப்படுகிறான். இதனால் அவர்களுக்கிடையே பிரிவை ஏற்படுத்தும் முதல்விதையை விதைக்கிறான். கவுரவர்களுடன் பாண்டவர்களுக்கும் கிருபாச்சாரியார் உபநயனம் செய்விக்கிறார். அப்போது அங்கு செல்லும் சகுனி அங்கிருந்து பாண்டவர்களை அவமானப்படுத்தி திருப்பி அனுப்புகிறான்.இந்த சம்பவம் பாண்டவர்களை எந்தஅளவில் பாதிக்கிறது என்பதை அடுத்து வரும் காட்சிகள் சித்தரிக்கிறது. |
![]() |
![]() |
#17 |
|
ஆள் பாதி ரீல் பாதி
உழைப்பு, விடா முயற்சி, வெற்றி, முன்னேற்றம் என்று வாழ்க்கை தத்துவத்தை மிக அழகாக, ஒரு குட்டி கதையுடன், நகைச்சுவை கலந்து மிக சுவாரசியமாக வழங்குகிறது, `ஆள் பாதி ரீல் பாதி' நிகழ்ச்சி. தனக்கே உரிய பாணியில், கிண்டலும், நையாண்டியும் கலந்து திரைப்படங்களிலிருந்து காமெடி காட்சிகளை பல வித்தியாசமான வேடங்கள் தரித்து தொகுத்து வழங்குகிறார் தொகுப்பாளர் `மிமிக்ரி' செந்தில். ராஜ் டிஜிட்டல் பிளஸ் சேனலில் ஞாயிறு தோறும் காலை 8 மணிக்கு இது ஒளிபரப்பாகிறது. |
![]() |
![]() |
#18 |
|
ஆதிபராசக்தி
ராஜ் டிவியில்வெள்ளி தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது, ஆதிபராசக்தி புராணத் தொடர். அன்னை எந்தெந்த திருத்தலங்களில் எத்தனை விதமான திருவிளையாடல் புரிந்திருக்கிறாள் என்பதை காட்சிப்படுத்தும் தொடர் இது. காஞ்சி காமாட்சியாக இருந்து குடும்ப வாழ்வின் பெருமையை விளக்கும் அவளே மதுரை மீனாட்சியாக இருந்து வீரத்தை விளக்குகிறாள். கருணையின் வடிவான அவளே காளியாகவும் இருந்து அசுரவதம் புரிகிறாள். அவளால் எத்தனையோ புலவர்கள் வாக்குவளம் பெற்று பல அரிய நூல்கள் தந்திருக்கிறார்கள். ஒட்டக்கூத்தர், கவிகாளமேகம், மூககவி, காளிதாசன், தெனாலி ராமன் இப்படி எத்தனையோ கவிஞர்கள் அன்னையின் அருளால் கவிமேதைகளாகி இருக்கிறார்கள். மாங்காட்டில் காமாட்சியாக இருக்கும் அன்னை, திருவேற்காட்டில் கருமாரியாக வந்து காட்சி தருகிறாள். பாம்பாக இருக்கும் அவளே, வேம்பாகவும் இருந்து அருள் புரிகிறாள். இந்த அன்னை இமயம் முதல் குமரி வரை எந்தெந்த திருத்தலங்களில் பக்தர்களுக்கு எவ்விதமாய் காட்சியளித்தாள் என்பதை தொடரும் காட்சிகளில் காணலாம். ஆதிபராசக்தியாக நடிகை சுகன்யா நடிக்கிறார். மாஸ்டர் ஸ்ரீதர், காளிதாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்களும் உண்டு. தொடருக்கு கதைவசனம்: கே.பி.அறிவானந்தம். இசை:ராஜேஷ் வைத்யா. இயக்கம்: கோபி பீம்சிங். |
![]() |
![]() |
#19 |
|
ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் "மகாபாரதம்' இதிகாசத் தொடர் நேயர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.
பஞ்ச பாண்டவர்களின் போராட்டம், பாஞ்சாலியின் சபதம், சகுனியின் சூழ்ச்சி, கிருஷ்ண பரமாத்மாவின் வாழ்க்கைத் தத்துவம் நிறைந்த கீதா உபதேசம், அர்ச்சுனனின் வீரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த "மகாபாரதம்' மெகா தொடரில் இடம்பெற்றுள்ள தந்திரக் காட்சிகள் சிறுவர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ராஜ் டி.வி.யில் ஒளிப்பாகிறது. |
![]() |
![]() |
#20 |
|
நாகம்மா
ராஜ் டி.வி.யில் இன்று இரவு 8.01 மணிக்கு தொடங்கும் புதிய பக்தித் தொடர், நாகம்மா. 600 வருடங்களுக்கு முன்பிருந்து கதை தொடங்குகிறது. சர்வசக்தி பெற்ற தேவி நாகம்மாளின் சிலை காணாமல் போய் விடுகிறது. அந்த சிலையின் மதிப்பு தெரிந்து தொல்பொருள் ஆய்வுத்துறையில் இருந்து அதிகாரிகள் கூட்டம் சிலை தேடும் பணியில் ஈடுபடுகிறது. சிலையின் கணக்கற்ற மதிப்பு தெரிந்த திருடர்கள் கூட்டமும் சிலையைத் தேடி தங்கள் பயணத்தை தொடங்குகிறார்கள். இவர்கள் போதாதென்று மந்திரவாதி ஒருவனின் பார்வையும் நாகம்மா சிலை மீது இருக்கிறது. தனக்கு நாகம்மா சிலை கிடைப்பதன் மூலம் தன்னை சர்வசக்தி உடையவனாக மாற்றி விட முடியும். பிறகு எதிர்க்க எந்த சக்தியும் இல்லை என்று எண்ணும் அவனும் சிலை தேடலில் மும்முரமாகிறான். இந்த சிலைக்கு காலகாலமாக தொடர்ந்து பூஜை செய்து வந்த பூசாரியின் குடும்பம் தான் சிலைக்கு பாதுகாப்பு. அவர்கள் நாகம்மா சிலையை `பச்சையம்மா' வாக்கி வேறொரு கோவிலில் வழிபாட்டுக்கு வைத்திருக்கிறார்கள். ஆனால் இதை மந்திரவாதி மட்டும் தனது மந்திரசக்தியால் தெரிந்து கொள்கிறான். `பச்சையம்மன்' சிலையை கைப்பற்ற தீவிரமாகிறான்.பச்சையம்மன் கோவில் இருக்கும் ஊரில் ஒரு தெய்வக்குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தை சொல்வதெல்லாம் `அருள்வாக்காக' பலிப்பதால் ஜனங்கள் தெய்வக் குழந்தையாக கொண்டாடுகிறார்கள். இந்தக் குழந்தை வளர்ந்து பெரிய பெண்ணாகும் போது ஒரு இளைஞன் அவளை கவர்கிறான். அவனை சந்தித்தது தெய்வத்தின் விருப்பமாக இருக்கும் என்று எண்ணும் அந்தப் பெண், பெரியவர்கள் சம்மதத்துடன் அவனை மணந்து கொள்கிறாள். திருமணத்துக்குப் பிறகே சிலை திருட வந்த திருட்டுக்கும்பலில் அவனும் ஒருவன் என்பது தெரிய வருகிறது. இப்போது அந்தப் பெண் எடுக்கும் முடிவு என்ன? அவர் கணவனாலோ, மந்திரவாதியாலோ பச்சையம்மனாக மாறிய `நாகம்மா' வின் சிலையை அபகரிக்க முடிந்ததா என்பது பரபரப்பும் விறுவிறுப்புமான கிளைமாக்ஸ் என்கிறார், தொடரின் இயக்குநர் ஏ.ஆர்.ரமேஷ். தொடருக்கு ஒளிப்பதிவு: பி.எஸ்.முருகன், இசை: தேவா. பாடல்: பிறைசூடன். `நாகம்மா'வாக ஐஸ்வர்யா நடிக்கிறார். மற்றும் சண்முக சுந்தரம், சிவன் சீனிவாசன், சுபாஷினி, அழகு, டி.ராஜன், ஸ்ரீவித்யா ஆகியோரும் உண்டு. சனிக்கிழமை தோறும் இந்த தொடரை காணலாம். |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 2 (0 members and 2 guests) | |
|