Reply to Thread New Thread |
|
![]() |
#1 |
|
தற்காப்புக்கலை
வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய நிகழ்ச்சி `தற்காப்பு கலைகள்'. இந்த நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் அனைவரும் தங்களை பாதுகாத்து கொள்ள தேவைப்படும் தற்காப்பு பயிற்சிகள் கற்றுத்தரப்படுகிறது. காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு குங்பூ பயிற்சி அளித்த குங்பூ மாஸ்டர் சஞ்சீவி பயிற்சியளிக்கிறார். நன்றி - தினதந்தி |
![]() |
![]() |
#2 |
|
வெற்றிக்கு வழி
வசந்த் டிவியில் வியாழன் தோறும் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நேரடி நிகழ்ச்சி, வெற்றிக்கு வழி. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற வியாபார பிரமுகர்கள் கலந்து கொண்டு, வெற்றி பெற ஆலோசனை வழங்குகிறார்கள். ஒவ்வொரு வாரமும் பல்துறை சார்ந்த வியாபார பிரமுகர்கள் பங்கு பெற்று வருகிறார்கள். ஆரம்ப நிலையில் வியாபாரத்தை எப்படி எடுத்து நடத்திச் செல்ல வேண்டும்; பணத்தை எவ்வாறு கையாள வேண்டும் என பல பயனுள்ள நடைமுறை ஆலோசனைகள், புதிய தொழில், வியாபாரம் முயல்வோருக்கு வழங்கப்படுகின்றன. உற்பத்தி தொழில், வாங்கி விற்கும் வியாபாரம், சேவை அடிப்படையிலான தொழில் என பிரிக்கப்பட்டு, தனித்தனியாக பிரமுகர்கள், ஆலோசனைகள் வழங்குகிறார்கள். நிகழ்ச்சியில் பிரபலங்களை சந்தித்து உரையாடுபவர் ஆர்.கார்த்திக். நன்றி: தினதந்தி |
![]() |
![]() |
#3 |
|
நீங்கள் கேட்டவை
வசந்த் டிவியில் ஞாயிறுதோறும் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சி, நீங்கள் கேட்டவை'. சின்னத்திரை ரசிகர்கள் விரும்பிக் கேட்கும் பாடல்கள், மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும். இதற்காக ரசிகர்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் சென்று, அவர்களை நேரில் சந்தித்து உரையாடுகிறார்,வசந்த் டி.வி.யின் தொகுப்பாளினி பத்மப்பிரியா. வி.கார்த்திகேயன் இயக்கும் இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு வி.பால்ராஜ். நன்றி: தினதந்தி |
![]() |
![]() |
#4 |
|
|
![]() |
![]() |
#5 |
|
சாப்பிடலாம் வாங்க
வசந்த் டிவியில் 200-வது எபிசோடை நெருங்கும் நிகழ்ச்சி, `சாப்பிடலாம் வாங்க' இன்றைய வேகமான வாழ்க்கை சூழலில் ஆரோக்கிய உணவிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது. அந்த ஆரோக்கிய உணவை ருசியாக தயாரிக்க, பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் கற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சியே, `சாப்பிடலாம் வாங்க.' விதவிதமான சுவையான உணவுப் பொருட்களை தயாரிக்கும் விதம் பற்றி, செய்முறை விளக்கத்தோடு விவரிக்கிறார்கள், சமையல் கலையில் வல்லுனர்களான குடும்பத் தலைவிகள். வசந்த் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்த நிகழ்ச்சி. நன்றி: தினதந்தி |
![]() |
![]() |
#6 |
|
குத்துப்பாட்டு!
வசந்த் டிவியில் டான்ஸ் போட்டியை மையமாகக் கொண்ட புதிய நிகழ்ச்சி, `பேட்டராப் ரிப்பீட்டு'. இது குத்து டான்ஸ் ஆடுபவர்களுக்கான போட்டி. குத்து டான்ஸ் போட்டிக்கு மொத்தம் மூன்று ரவுண்டுகள் உண்டு. முதல் ரவுண்டில் 3 பேர் கலந்து கொள்வார்கள். முதல் ரவுண்டில், தமிழ் குத்துப்பாட்டுக்கு அவர்கள் ஆடி ஜெயிக்க வேண்டும். 2-வது ரவுண்டு வெஸ்டர்ன் மிďசிக்கை அடிப்படையாக கொண்டது. 3-வது ரவுண்ட் `ராப்' பாடல்களுக்கான குத்தாட்ட ரவுண்டு. மூன்று ரவுண்டுகளையும் தாண்டி வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாட்டின் குத்தாட்ட ராஜா, தமிழ்நாட்டின் குத்தாட்ட ராணி வெற்றி மகுடங்கள் விருதுடன் வழங்கப்படும். டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ள, வயதோ அனுபவமோ தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினதந்தி |
![]() |
![]() |
#7 |
|
அம்மன்
வசந்த் டிவியில் 125 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும், பக்தி கலந்த சமூகத் தொடர், `அம்மன்.' அம்மனின் அருளால் கதாநாயகிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. மந்திரவாதி கும்பல் அந்த குழந்தையை கண்டுபிடித்து பலிகொடுக்க வேலைக்காரன், வேலைக்காரி வேடத்தில் கதாநாயகி வீட்டுக்கு போகிறார்கள். இதற்கிடையில் வேலு குடும்பத்திற்கு ஏற்பட்ட சாபம் குறித்த காட்சிகள் வரும் வாரங்களில் வருகிறது. எதற்காக அந்த குடும்பத்திற்கு சாபம் ஏற்பட்டது? அதற்கு தீர்வு என்ன? விவரங்கள் காட்சியாக விரிகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு வசந்த் டிவியில் அம்மன் தொடரை காணலாம். அம்மன் தொடர் பார்த்துவிட்டு நேயர்கள் அனுப்பும் சிறந்த விமர்சன கடிதங்களுக்கு வாரம் ஒரு பட்டுப்புடவையை அம்மன் தொடரின் தயாரிப்பு நிறுவனம் பரிசாக வழங்குகிறது. நன்றி: தினதந்தி |
![]() |
![]() |
#8 |
|
தேனருவி'
நெஞ்சை அள்ளும் பழைய திரைப்படப் பாடல்கள் `தேனருவி' என்ற பெயரில் வசந்த் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி கணேசன், முத்துராமன், ஏவி.எம்.ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்ற `எவர்கிரீன்' ஹீரோக்கள் நடித்த படங்களிலிருந்து தேன் சிந்தும் பாடல்கள் ஒளிபரப்பாகின்றன. தினமும் இரவு 10.30 மணி முதல் 12 மணி வரையிலும், காலை 9.30 மணிக்கும் இது ஒளிபரப்பாகிறது.நிகழ்ச்சி தயாரிப்பு: எஸ்.ஏ.விஜயகுமார். நன்றி: தினதந்தி |
![]() |
![]() |
#9 |
|
ஸ்டார் ஹிட்ஸ்
பிரபல கதாநாயகர்கள் நடித்த படப் பாடல்கள் இடம் பெறும் நிகழ்ச்சி `ஸ்டார் ஹிட்ஸ்.' இதில் கமலஹாசன், ரஜினிகாந்த், அஜித், விக்ரம், விஜய், பிரசாந்த், மாதவன், சூர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி என ஹீரோக்கள் நடித்த படப் பாடல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு வசந்த் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நன்றி: தினதந்தி |
![]() |
![]() |
#10 |
|
|
![]() |
![]() |
#11 |
|
திக்கற்ற தேவதைகள்
திருநங்கைகள் எனப்படும் அரவாணிகளுக்கு இன்றும் நமது சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்காமலேயே இருந்து வருகிறது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகளின் கண்ணீர் கதைகள் `திக்கற்ற தேவதைகள்' என்ற பெயரில் வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சியில் வாரந்தோறும் இரண்டு திருநங்கைகள் கலந்து கொண்டு தங்கள் கதைகளை கூறுகிறார்கள். வியாழக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி, மறு ஒளிபரப்பாக புதன்கிழமை காலை 10 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. நன்றி: தினதந்தி |
![]() |
![]() |
#12 |
|
தமிழ் அரங்கம்
வசந்த் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ் அரங்கம் எனும் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு அரங்கம் என, இலக்கிய ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் நிகழ்ச்சி இடம் பெறுகிறது. சுவாரஸ்யமான தலைப்புகளில் `பட்டிமன்றம்', கல்லூரிப் பேராசிரியர்கள், நல்ல தமிழ் பேச்சாளர்கள் வழங்கும் `இலக்கியச்சுவை', பயனுள்ள தலைப்பில் கலந்துரையாடும் `கருத்தரங்கம்', விறுவிறுப்பான `வழக்காடு மன்றம்', கவிஞர்கள் கலக்கும் `கவியரங்கம்', என ஒளிபரப்பாகி வருகிறது இந்த தமிழ் அரங்கம். நிகழ்ச்சி இயக்கம் இ.மணிபாரதி. தயாரிப்பு: வசந்த் டிவி. |
![]() |
![]() |
#13 |
|
ஆலய தரிசனம்
வசந்த் டி.வியில் வெள்ளி தோறும் காலை 6.15 மணிக்கு ஒளிபரப்பாகிறது, ஆலய தரிசனம் நிகழ்ச்சி. வசந்த் டி.வி தயாரித்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை இ.மணிபாரதி இயக்குகிறார். ஒவ்வொரு ஆலயத்தின் வரலாறு, உருவான பின்னணி, மகிமைகள், அருள் பாலிக்கும் கடவுளின் தோற்றம், பக்தர்களின் பக்தி பரவசம் மற்றும் திருவிழா கொண்டாட்டங்களை இந்த நிகழ்ச்சியில் காணலாம். |
![]() |
![]() |
#14 |
|
தாயில்லாமல் நானில்லை
வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘தாயில்லாமல் நானில்லை'. இதில், பிரபலங்கள் கலந்து கொண்டு தங்கள் தாயின் பெருமைகளை உணர்வுபூர்வமாக கூறுகிறார்கள். குழந்தைப் பருவத்திலிருந்து மனிதனாக சிறகுகள் விரிக்கும் காலம் வரை தாயின் அர்ப்பணிப்பு பற்றியும், வளர்ந்த பிறகு தாயைப் போற்றும் தங்கள் குணத்தையும் பிரபலங்கள் சுவைபட கூறும் இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கும், செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. |
![]() |
![]() |
#15 |
|
அகிலமே போற்றும் அன்னை சோனியா
வசந்த் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ``அகிலமே போற்றும் அன்னை சோனியா'' என்ற வரலாற்றுத் தொடர் ஒளிபரப்பாகிறது. காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் பொதுவாழ்வு தியாகங்களையும், பொது நலன் காத்திடும் மனிதநேய குணத்தையும், நிர்வாக திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த தொடர் அமைந்துள்ளது. பிரபல அரசியல் தலைவர்களும், சினிமா கலைஞர்களும், இயக்கவாதிகளும் இந்த தொடரில் பங்கேற்று சோனியா காந்தியுடன் தங்களுக்குள் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். |
![]() |
![]() |
#16 |
|
|
![]() |
![]() |
#17 |
|
|
![]() |
![]() |
#18 |
|
"என்ன செய்தார் எம்.பி?''
வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு வசந்த் டிவி வழங்கவிருக்கும் புதிய நிகழ்ச்சி, "என்ன செய்தார் எம்.பி?.'' இந்த நிகழ்ச்சியில் வசந்த் டிவி, நேயர்களிடமிருந்து பதிலைப் பெற்று ஒளிபரப்பவிருக்கிறது. உங்கள் தொகுதியில் உள்ள எம்.பி.யின் செயல்பாடு எப்படி இருக்கிறது என இந்த நிகழ்ச்சியில் கேட்கப்படுகிறது. தொகுதி வாரியாக இந்த கேள்விகள் கேட்கப்பட்டு மக்களின் கருத்துகள் சேகரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதியில் உள்ள எம்.பி.யின் செயல்பாடும் திருப்தியாக இருக்கிறதா, இல்லையா?'' ஆம் அல்லது இல்லை என இரண்டில் ஏதாவது ஒரு பதில் எஸ்.எம்.எஸ். மூலம் பெறப்படுகிறது. காரசாரமான அனல் பறக்கும் இந்த நிகழ்ச்சி வசந்த் டிவியில் விரைவில் வரவிருக்கிறது. |
![]() |
![]() |
#19 |
|
பெய்யெனப் பெய்யும் மழை
வசந்த் டி.வி.யின் இசை சார்ந்த புதிய நிகழ்ச்சி `பெய்யெனப் பெய்யும் மழை' இசைக்கருவிகள் இசைப்பதில் கைதேர்ந்த நிபுணர்கள், பலதரப்பட்ட இசைக்கருவிகளின் வேறுபாடு, இசைக்கருவிகள் சிறப்பு என்னென்ன? எப்படி இசைக்க வைக்கப்படுகிறது? எந்த ராகத்தில் இசைக்க எப்படி பயன்படுத்த வேண்டும்? திரைப்பாடல்களில் அது பயன்படுத்தப்பட்ட விதம் போன்றவற்றை மேற்கோள் காட்டி, இசைக்கருவியை இசைத்து, விளக்கி கூறுகிறார்கள். தொகுப்பாளர்கள் இதுதொடர்பாக கேட்கும் கேள்விகளுக்கு பிரபல இசைவல்லுனர் பதில் கூறுகிறார். இதற்கான படப்பிடிப்பு பிரமாண்ட அரங்கில் நடைபெற இருக்கிறது. |
![]() |
![]() |
#20 |
|
நகைச்சுவை புதுசு
வசந்த் டி.வி.யின் விரைவில் வரவிருக்கும் புதிய அரசியல், சினிமா மற்றும் சமூக பிரச்சினைகளை நகைச்சுவையாக அலசும் நிகழ்ச்சி `டீக்கடை பெஞ்ச்.' நாட்டில் அன்றாடம் நடக்கும் சமீப கால சம்பவங்களையும், நிகழ்ச்சிகளையும் காமெடிக் கோணத்தில் அணுகும் நிகழ்ச்சி இது. டீக்கடை பெண், மூன்று டீக்கடை வாடிக்கையாளர்கள் என நான்கு பேர் நிகழ்ச்சியில் காமெடி வழங்குகிறார்கள். |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|