Reply to Thread New Thread |
![]() |
#21 |
|
|
![]() |
![]() |
#22 |
|
புத்தகம் படி.. பரிசைப்பிடி!
உங்கள் வீட்டில் நூலகம் வைக்க ஆசையா? நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `புத்தகம் படி பரிசைப்பிடி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினால் போதும். புத்தகங்களை பரிசாக வெல்ல முடியும். ஆனால் ஒன்று, நீங்கள் பொது அறிவு, இலக்கியம் எல்லாவற்றிலும் புலமை பெற்றவராக இருக்க வேண்டும். நிகழ்ச்சி நடத்துபவர் உடன் விளையாடுபவரிடம் கேள்வி கேட்பார். அதற்கு நான்கு பதிலும் தருவார். அதிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுத்து சொன்னால் ஒரு புத்தகம் பரிசாக கிடைக்கும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒவ்வொரு புத்தகம் பரிசு. கேள்விக்கு சரியான பதிலைச் சொல்லி கைநிறைய புத்தகங்களை பரிசாக அள்ளிச் செல்லும் இந்த நிகழ்ச்சியை நடத்துபவர் இ.மாலா. ` புத்தகம் படி பரிசைப்பிடி நிகழ்ச்சி' மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மாலை 6.03 மணிக்கு ஒளிபரப்பாகிறது. |
![]() |
![]() |
#23 |
|
கற்போம் கணினி
திங்கள் முதல் வெள்ளி வரை மக்கள் தொலைக்காட்சியில் தினமும் காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, `கற்போம் கணினி' நிகழ்ச்சி. விரும்புகிறோமோ இல்லையோ நாகரிகம் நுழைந்து நம் வாழ்க்கையை மாற்றிவிட்டது. விஞ்ஞானம் வளர்ந்து அனைத்தும் கணினிமயமாகி விட்டது. வாழ்க்கையோடு கணினி பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. நாம் அனைவரும் கணினியை கையாள தெரிந்து வைத்திருக்கிறோமோ என்றால் இல்லை. கணினியை கையாளுவது எளிது. இல்லத்தரசிகள் முதல் ஏர்பூட்டும் உழவர்கள் வரை அனைவரும் கணினியை கையாளத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கணியத் தமிழ் அமைப்பினர் கற்றுத் தருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை `முகவரி' முத்து இயக்குகிறார். |
![]() |
![]() |
#24 |
|
நடிகை மனோரமாவின் வாழ்க்கைப் பின்னணியை விவரிக்கும் புதிய தொடர் "ஆச்சி வந்தாச்சு.'' இது தமிழன் டிவியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே லட்சியத்திற்காக தனக்கு ஏற்பட்ட சோதனைகளை சாதனைகளாக மாற்றி வெற்றியின் உச்சிக்கு சென்றவர், நடிகை மனோரமா. இவர் தன் வெற்றிக்கு உதவியவர்களையும், சாதனைகளுக்கு துணை நின்றவர்களையும் இந்த தொடரில் நினைவுகூறுகிறார். எண்ணம், கருத்தாக்கம்: ஏ.பத்மராஜ்; திரைக்கதை வசனம்: தேவன்; இயக்கம்: ஏ.கே.உசேன். |
![]() |
![]() |
#25 |
|
மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.03 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் புதிய நிகழ்ச்சி இசைத் தமிழ் பாமாலை.
அப்பர், சுந்தரர், சம்பந்தர், சேக்கிழார் என்ற சமயக் குரவர்கள் நால்வரும் இயற்றிய நற்றமிழ் பாடல்களை ஓதுவார்கள் இசையோடு பாடுகிறார்கள். கேட்கும் போது காது குளிர்கிறது. தமிழ் மணக்கிறது. நல்ல தமிழ் இசையை விரும்புகிறவர்களுக்கு இனிய வரவு இந்த இசைத் தமிழ் பாமாலை. மதுரை இன்னிசை இணையம் வழங்கும் இந்த இசைத் தமிழ் பாமாலை, இசைத் தமிழுக்கு சூட்டப்படுகின்ற மாலை. |
![]() |
![]() |
#26 |
|
குறிஞ்சி மலர்
மக்கள் தொலைக்காட்சியில் புதன் தோறும் மாலை 4.30 மணிக்கு மலரும் குறிஞ்சி மலர், மேதைக் குழந்தைகளின் திறமையை அரங்கேற்றும் நிகழ்ச்சி. வயதுக்கு மீறிய சாதனை புரிந்த இளம் சாதனையாளர்களை நேர்காணல் செய்வது, திறமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது என்று திறமைக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சிதான் குறிஞ்சி மலர். இளம் சாதனையாளர்களை பார்க்கும் மற்ற குழந்தைகளுக்கு தாங்களும் ஏதாவது சாதனை புரிய வேண்டும் என்ற ஆவல் எழும். அவர்களும் சாதனைக்கான முயற்சியில் இறங்குவார்கள். எந்த குழந்தையும் திறமையான குழந்தைதான். அவர்களின் திறமையை வெளிக்கொணரும் பங்கு பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் உண்டு. குழந்தைகளின் திறமைக்கு மரியாதை தரும் இந்த நிகழ்ச்சியை இயக்குபவர் ஜெயராமன். |
![]() |
![]() |
#27 |
|
திரைகடல் ஓடி...
மக்கள் தொலைக்காட்சியில் செவ்வாய் தோறும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் நேரலை நிகழ்ச்சி, திரைகடல் ஓடி. இன்று ஏற்றுமதி வணிகம் என்பது அதிகம் லாபம் சம்பாதிக்கும் துறையாக உள்ளது. ஆதிகாலத்திலேயே நம் தமிழர்கள் கடல் கடந்து வணிகம் செய்து வந்தார்கள்.ஆர்வமுள்ள தமிழர்கள் அனைவரும் ஏற்றுமதி துறையில் ஈடுபட வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட நிகழ்ச்சிதான் `திரை கடல் ஓடி'. ஏற்றுமதி ஆலோசகர் ராமச்சந்திரன் எந்தெந்த நாடுகளுக்கு எந்தெந்த பொருளை ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம். ஏற்றுமதிக்கு எந்த பொருள் அதிக லாபம் சம்பாதித்து தரும் என்பது போன்ற தகவல்களை எல்லாம் புள்ளி விவரங்களுடன் தருகிறார். ஏற்றுமதி வணிகத்தில் ஏற்கனவே ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் அந்த துறையின் நெளிவு சுழிவுகளை அறிய இந்த நிகழ்ச்சி துணைபுரிகிறது. |
![]() |
![]() |
#28 |
|
மகளிர் உலகம்
மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நேரலை நிகழ்ச்சி, `மகளிர் உலகம்'. இது பெண்களுக்கான நிகழ்ச்சி. பெண்கள் தான் கற்றதையும், பெற்றதையும் தன் தோழியரோடு தொலைபேசி வழியாக பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பிரச்சினைக்கு தீர்வு, சுற்றுலா சென்று வந்த அனுபவம், பிடித்த பொன்மொழி, எழுதிய கவிதை என பெண்கள் தங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் தொலைபேசி வழியாக பகிர்ந்து கொள்ளலாம். இல்லத்தரசிகளாக கணவன், குழந்தை, குடும்பம் என்று வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் பெண்கள் தங்கள் அனுபவங்களையும், எண்ணங்களையும் பரிமாறிக் கொள்வதற்கான களம் தான் இந்த மகளிர் உலகம். |
![]() |
![]() |
#29 |
|
|
![]() |
![]() |
#30 |
|
கிராமத்துப் பாட்டு
மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி `கிராமத்துப்பாட்டு' நாற்று நடுவோரும், ஏற்றம் இறைப்போரும், சுண்ணம் இடிப்போரும் வேலை செய்யும் களைப்பு தெரியாமல் இருக்க பாடிக் கொண்டே வேலை செய்வார்கள். இந்தப் பாட்டில் ராகம், தாளம் எல்லாம் நேர்த்தியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் கேட்பவர்களின் களைப்பை போக்கும் ஆற்றல் இந்த நாட்டுப்புற பாட்டில் இருக்கும். அந்த நாட்டுப்புறப் பாட்டை அழகான அரங்கில் நேர்த்தியாக தருவதுதான் கிராமத்துப்பாட்டு. இந்த கிராமத்துப் பாட்டை கேட்டால் மண் வாசனை வீசும், மனசுக்குள்ளே மகிழ்ச்சி தாளம் போடும். முறையாக இசை கற்றவர், கேள்வி ஞானத்தால் பாடும் பாடல் ஆற்றல் பெற்றவர்கள் என பலதரப்பட்ட பாடகர்கள் கிராமத்து பாட்டு நிகழ்ச்சியில் பாடுகிறார்கள். இதில் இசை புதிது, குரல் புதிது. கேட்கும் அனுபவமும் புதிது. |
![]() |
![]() |
#31 |
|
பட்டாம் பூச்சி
மக்கள் தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சியான பட்டாம்பூச்சி, நூறாவது எபிசோடை கடந்திருக்கிறது. செல்லக் குழந்தைகளுக்கான இந்த விளையாட்டு நிகழ்ச்சியில் "கொக்கு பரபர... கோழி பரபர... பூனை... பறக்காது'' போன்ற வேடிக்கையான பாட்டு விளையாட்டும், வரைகலை மூலம் உருவாக்கப்பட்ட வினோத உருவத்தில் இருப்பது எவை என்பதை கண்டுபிடிக்கும் ஞாபகசக்தியையும், அறிவாற்றலையும் சோதிக்கும் பகுதி, வெற்றியாளர்களை அறிமுகப்படுத்தும் பகுதி என பொழுது போக்குக்கும், அறிவுக்கும் விருந்து வைக்கும் நிகழ்ச்சிதான், பட்டாம்பூச்சி. வெற்றி பெற்ற செல்லக் குழந்தைகளுக்கு பரிசும் உண்டு. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளி பரப்பாகிறது. |
![]() |
![]() |
#32 |
|
கனவு இல்லம்
மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `கனவு இல்லம்'. உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை இந்த மூன்றும் மனிதனுக்கு இன்றியமையாதவை. இதில் இருக்க இடம் என்பதுதான் இன்று குதிரைக்கொம்பாகி விட்டது. நகரங்களில் வீடு வாங்குவது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. வாடகை வீட்டில் வாழலாம் என்றால் கட்டுப்படியாத வாடகை! பணவீக்கம்... வேலையின்மை... விலைவாசி ஏற்றம்... இதற்குள் சிக்கிச் சுழலுபவர்கள் சொந்த வீடு வாங்குவது நடக்கிற காரியமா? நிச்சயமாக எல்லோராலும் சொந்த வீடு வாங்க முடியும். அதற்கு வழிசொல்லும் நிகழ்ச்சிதான் கனவு இல்லம். வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டியவை என்ன? வங்கிக் கடனுக்கு வழி என்ன... வில்லங்கமில்லாமல் வீடு வாங்க கவனிக்க வேண்டியது என்ன? வாங்கிய வீட்டை பராமரிப்பது எப்படி... லீகல் பார்ப்பது என்றால் என்ன... இப்படி வீடு... வீட்டுமனை சார்ந்த அத்தனைக்கும் விளக்கம் தரும் நிகழ்ச்சிதான், கனவு இல்லம். சொந்த வீடு வாங்க வேண்டும் என்று கனவு காண்பவர் களுக்கு அந்தக் கனவை நனவாக்க வழிசொல்லும் இந்தக் கனவு இல்லம். |
![]() |
![]() |
#33 |
|
கேள்விக்கு என்ன பதில்?
நாம் பூமியில்தான் வாழ்கிறோம். ஆனால் பிரச்சினைகளுக்கு நடுவில் வாழ்கிறோம். பிரச்சினையிலிருந்து விடுபட என்ன வழி... எல்லோரும் பிரச்சினையின்றி வாழ என்ன வழி... விடைதெரியாத ஆயிரம் கேள்விகள். அந்த விடை தெரியாத கேள்விகளுக்கு தீர்வை எட்ட முயலும் முயற்சிதான் `கேள்விக்கு என்ன பதில்?' ஒவ்வொரு பிரச்சினையையும் எடுத்து... அதன் காரண, காரியங்களை துறை சார்ந்த வல்லுநர்கள் துணையோடு அலசி ஆராய்ந்து தீர்வுக்கு வழிசொல்லும் நிகழ்ச்சி. மக்கள் தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமைதோறும் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்தநேரலை நிகழ்ச்சியில் நேயர்கள் தாங்கள் ஆலோசனைகளையும் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் தொலைபேசி வழியாக பகிர்ந்து கொள்ளலாம். நிகழ்ச்சி இயக்கம்: கார்மல். |
![]() |
![]() |
#34 |
|
http://www.hindu.com/fr/2008/10/31/s...3150550400.htm
Kaelvikku Enna Badhil (Makkal TV, Friday, 11.00) Our life is characterised by the challenges we face; the anomalies we witness around us; the societal issues we share with our fellow citizens. Power cuts and losing out lands to SEZs are but a few examples of the range of issues we are facing in the current scenario. What are the alternatives? Where are the solutions? Kaelvikku Enna Badhil is an attempt to find answers to such questions. The live phone-in show involves experts from the relevant fields, in line with the topic debated in the particular episode. It also facilitates viewers’ interaction over phone, so as to share their opinions and perspectives on the topic of the show. The show is directed and anchored by Carmel. |
![]() |
![]() |
#35 |
|
http://www.hindu.com/fr/2008/10/31/s...3150550400.htm
Udal Nalam Penum Kaimanam (Makkal TV, Sundays, 9 a.m.) This is for the health conscious. The global addiction to fast foods — pizza, burger and so on has not spared the people of Tamil Nadu. In the bargain, their health has taken a beating. Udal Nalam Penum Kaimanam brings to the viewer traditional recipes, nutritious and tasty. Food thus becomes the remedy to ailments. The programme also introduces new recipes as well. |
![]() |
![]() |
#36 |
|
http://www.hindu.com/fr/2008/10/31/s...3150550400.htm
Kanavu Illam (Makkal TV, Saturdays and Sundays, 1 p.m.) To own a home is a universal dream. But never has it been more difficult, what with escalating costs, inflation that is not showing signs of coming down and recession. Property within the city is beyond the reach of the common man. And paying rent again is not an easy proposition. So what is the solution? Kanavu Illam (Dream House) guides prospective owners and those who aspire to buy property. What are the salient points one should notice? How is loan obtained? How is litigation avoided? |
![]() |
![]() |
#37 |
|
வேலைவாய்ப்பு தகவல்கள்
வேலை கிடைக்கவில்லை என்பவர்கள் ஒரு பக்கம்... தகுதியான பணியாளர் கிடைக்கவில்லை என்பவர்கள் மறுபக்கம்... இருவரையும் இணைக்கும் பாலம் ``வேலைவாய்ப்புத் தகவல்கள்.'' இன்றைக்கு படிக்கும் மாணவர்களிடம் வேலை என்றதும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலை மட்டும்தான் கண்முன் விரிகிறது. ஆனால் அதைத் தாண்டியும் ஆயிரம் வேலை இருக்கிறது. எந்த வேலைக்கு நாட்டிலும், உலக அளவிலும் தேவை அதிகமாக இருக்கிறது? இதற்கு என்ன படிப்பு படிக்க வேண்டும்? முதுநிலை பட்டப் படிப்பு படித்தவர்களும் கூடுதலாக எதைப் படித்தால் வேலை கிடைப்பது சுலபமாகும் என்று கல்வியாளர்கள் பங்கேற்று, நேரலையில் தெளிவுபடுத்தும் இந்த நிகழ்ச்சி, வியாழன்தோறும் காலை 11 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. |
![]() |
![]() |
#38 |
|
இவர்கள்
இந்த சமூகத்தால் கவனிக்கப்படாதவர்கள், சமூகத்தால் உரிய அங்கீகாரம் தரப்படாதவர்கள், இந்த சமூகத்துக்கு முக்கியமானவர்கள் இல்லை என்று கருதப்படுபவர்கள், பற்றிய நிகழ்ச்சி ``இவர்கள்.'' யார் இந்த ``இவர்கள்?' சாக்கடை அள்ளுபவர், கடற்கரையில் சுண்டல் விற்பவர்கள், குப்பை பொறுக்கி வாழ்பவர்கள், பிணம் எடுப்பவர்கள், அரவாணிகள் என்று சமூகத்தில் கடைநிலை மக்களாக சித்தரிக்கப்பட்டிருப்பவர்கள். கவனிக்கப்படாத இந்த மக்களை கருத்தில் கொண்டு அவர்களை நேர்காணல் செய்து அவர்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களது லட்சியத்தையும் பதிவு செய்யும் நிகழ்ச்சிதான் ``இவர்கள்.'' சனிக்கிழமை தோறும் காலை 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியை மக்கள் தொலைக்காட்சியில் காணலாம். |
![]() |
![]() |
#39 |
|
செல்வம் சேர்
அதிகம் சம்பாதிப்பதால் ஒருவன் செல்வந்தன் ஆகிவிட முடியாது. சேமிக்கத் தெரிந்தவன் மட்டுமே செல்வந்தன் ஆக முடியும். அதற்கான வழிசொல்லும் நிகழ்ச்சிதான் ``செல்வம் சேர்''. நேரலை மூலம் நேயர்கள் விளக்கம் பெறலாம். வீட்டு குடும்ப வரவு செலவு திட்டம் போடுவது... சம்பளத்தில் எவ்வளவு வீட்டு வாடகைக்கு எடுக்கலாம்... பிள்ளைகள் படிப்புக்கு எவ்வளவு பணம் செலவிடலாம் ... எவ்வளவு விழுக்காடு பணம் சேமிக்கலாம்...சேமிப்பது என்றால் எதில் சேமிப்பது...பரஸ்பர நிதியில் முதலீடு செய்யலாமா.. தங்கத்தில் முதலீடு செய்யலாமா.... வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கலாமா... என வழி சொல்லும் நிகழ்ச்சி. வருமானத்தை எப்படி திட்டமிட்டு செலவு செய்யலாம், எப்படி திட்டமிட்டால் உங்கள் பணத்தை பன்மடங்கு பெருக்கலாம் என்று வழி சொல்லும் இந்த நிகழ்ச்சியை சனிக் கிழமை காலை 9 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் காணலாம். |
![]() |
![]() |
#40 |
|
|
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|