Reply to Thread New Thread |
|
![]() |
#1 |
|
for title song சன் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புராணத் தொடர் திருவிளையாடல்.
சிவபெருமான், பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தன்னை வழிபடும் பக்தர்களிடத்தில் நிகழ்த்திய சம்பவங்களே திருவிளையாடல் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய திருவிளையாடல்கள் திருவிளையாடற்புராணம், சிவபுராணம், சிவமகாபுராணம், பெரியபுராணம், கந்தபுராணம் முதலான நூல்களில் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சுவாரஸ்யமான கதைகளின் தொகுப்பே இந்த திருவிளையாடல். தொடரில் இடம் பெறும் மாயாஜாலக் காட்சிகளை திரையில் கொண்டு வருவதற்கென்று சுமார் ஐம்பது பேர் கொண்ட கிராபிக்ஸ் குழு பணியாற்றி வருகிறது. சிவபெருமானாக ஸ்ரீதரும், உமாமகேஸ்வரியாக யமுனாவும், அவ்வையாராக மனோரமாவும், நாரதராக ராதாரவியும், இந்திரனாக ப்ரித்விராஜனும், இந்திராணியாக யுவராணியும், தொடக்க கதையில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். இசை:கங்கை அமரன், ஒளிப்பதிவு:சரவணபாண்டியன், எபிசோட் டைரக்டர்:செல்வபாண்டியன், திரைக்கதை வசனம்: ஸ்ரீமான் கவிச்செல்வர். இயக்கம்: ராகேஷ், சின்ஹா. ரேடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தொடரை தயாரிக்கிறது. ################################ WHO ACT AS VINAYAGAR? |
![]() |
![]() |
#2 |
|
திங்கள் முதல் வெள்ளி வரை
இரவு 8.00 மணியிலிருந்து 8.30 வரை இந்த நெடுந்தொடர் ஒளிபரப்பாகிறது. காச்-முச் என்று கத்தும் மெகா சீரியல்களுக்கிடையே வம்பு, சண்டை, வெட்டு, குத்து, பழி, மாமியார்-மருமகள் சண்டை என்று பார்த்து சலித்து விட்ட மக்களிடையே, அருமையாய் ஒரு பக்தித் தொடர் "ராடன் க்ரியேஷன்ஸ்' சன் டிவி மூலம் வழங்குகிறது. தூய தமிழில் தமிழ் நடிகர்கள் கொண்டு ஒளிபரப்பாகும் இத்தொடர் மிகுந்த மனமகிழ்ச்சியைத் தருகிறது. இது பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இதோ இத்திரி. |
![]() |
![]() |
#3 |
|
இரு தினங்கள் முன் ஒளிபரப்பான பகுதியில்,
முருகனின் அம்சங்களாக நவபாலகர்களை பற்றி கூறியிருந்தார்கள். மக்களுக்கு ரசிக்கும் வகையில் தொடரை வழங்க வேண்டும் என்ற முனைப்பு பாராட்டத் தக்கது, எனினும், இதற்காக, இக்கால வழக்கில் உள்ள சொற்களை, குறிப்பாக இளைஞர்களை கவர்வதற்கு அவர்கள் பயன்படுத்தும் சில வழக்குச் சொற்களை "நவபாலகர்கள்' பயன்படுத்தியது, சற்று எரிச்சலை உண்டு பண்ணியது. நொடிக்கு நூறு தரம், அந்த பாலகர்களில் ஒருவர் முருகன் தன் சொல்லாட்சியில் வென்றாலோ, அல்லது முருகனின் கூற்று சரியாகி விட்டாலோ "அப்படி போடு!" / "அப்படி போடுங்கள்" என்று கூறிக்கொண்டிருந்தனர். அது ரசிக்கும்படி இல்லை! மேலும், நெடுந்தொடர் என்பதால், சொற்களும், வசனங்களும் நிதானமாக வருகிறது. அது பாதகமில்லை. நமக்கு சில நாட்களில் பழகி விடும் ![]() |
![]() |
![]() |
#4 |
|
அவ்வை என்றாலே "கே.பி.சுந்தராம்பாள்" நினைவு தான் தமிழ்நாட்டு மக்கள் பலருக்கு வரும்.
நம் ஆச்சி இதை சவாலாகவே எடுத்துக்கொண்டு விட்டார் போலும். வந்த இரண்டே நாட்களில் நம் மனதில் அவ்வை என்றால் மனோரமா ஆச்சி இடம் பெறும் அளவு இவர் நடிப்பும், தமிழும், பேச்சும், ஒப்பனையும் அமைந்திருக்கிறது. கே.பி.சுந்தராம்பாள் இடத்தை இரண்டே நாட்களில் கொள்ளை கொண்டு விட்ட மனோரமாவிற்கு இது மாபெறும் வெற்றி! ![]() |
![]() |
![]() |
#5 |
|
|
![]() |
![]() |
#6 |
|
|
![]() |
![]() |
#9 |
|
இன்றைய தொடரில் சிற்றரசன் ஒருவன், தனக்கு மகன் அதாவது அந்நாட்டு இளவரசன் பிறந்த செய்தியை முரசுகொட்டி அறிவித்து, மக்களையும் தன் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும்படி பொது அழைப்பு விடுக்கிறார்.
அரண்மணையில் பொருள் கொண்டுவருவோர்க்கு பெருமதிப்பும் மற்றோர்க்கு முகச்சுளிப்பும் பரிசளிக்கிறார்கள். அழகாய், அர்த்தமாய், ஆழமாய் கவிதை ஒன்றை புனைந்து சென்ற புலவர் ஒருவர்க்கு கிட்டியதென்னவோ ஏளனமும் அவமரியாதையும். வீரக்கலைளை கற்பிக்கும் மற்றொருவனுக்கும் பெருத்த அவமானத்தையே பரிசளிக்கின்றனர். இது கண்டு தன் நாடகம் ஒன்றைத் துவக்குகிறார் நாரதர். என்னடா இது "ஸரஸ்வதி சபதம்" படம் பார்ப்பது போல் உள்ளதே என்று நாம் நினைக்கும் முன்பே, அதையே தான் அடுத்த சில நாட்களுக்கு திருவிளையாடற் கதையாக வழங்கவிருக்கிறார்கள் என்று புரிந்துவிடுகிறது. நம் எண்ணத்தை போலவே பிரம்மலோகத்திற்குச் சென்று, கல்வி பெரிதா செல்வம் பெரிதா என்ற சர்ச்சையை துவக்குகிறார் நாரதர். பிரம்மதேவனும் இதை மேலும் தூண்டிவிடவே கோபமுற்ற சரஸ்வதி 'அறிவே உலகில் சாலச் சிறந்தது' என்று உணரத்தப் புறப்படுகிறார். அடுத்து ஸ்ரீவைகுந்தம் சென்று ஆனந்தமாய் வீற்றிருக்கும் லக்ஷ்மியை கோபமுறச்செய்ததும், 'உலகில் செல்வமே சிறந்தது' என்ற கூற்றை நிரூபித்துக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து புறப்படுகிறார் லக்ஷ்மிதேவி. "அடுத்து என்ன திருக்கைலாயம் தானே!" என்று விஷமமாக முடிந்தது இன்றைய பகுதி. பிரம்மதேவன், "உலகில் சாலச் சிறந்தது செல்வமே" என்று சொன்னவுடன், "ஆஹா இதைத் தான் நான்" என்று புன்னகையுடன் ஆரம்பித்து "நாரதா!" என்று ஸரஸ்வதி சினந்ததும் "எதிர்பார்க்கவில்லை" என்று சொல்ல வந்தேன் தேவி என்று நாரதர் சொல்வது ரசிக்கும்படி இருந்தது! செல்வங்கள் எல்லாமே அழிந்துவிடக்கூடியவை தான், கல்வி செல்வத்தைத் தவிர, என்று ஞானநிலையில் நம்மில் பலர் உளமாற நினைத்தாலும், உண்மையில், இப்பூவுலகில் நாம் வாழும் வரை, ஆசை, பிடிப்பு, அர்த்தம் எல்லாம் இருக்கும் வரை, செல்வமும் வீரமும் துணை புரிந்தால் தான் உலகில் பிழைத்திருக்க முடியும் என்பதே மறுக்க முடியாத உண்மை. ஜனரஞ்சகமாக ரசிக்கும்படி பல உரையாடல்கள், இருப்பதால், இத்தொடரை 'சமயம் சார்ந்த' தொடராகத் தான் பார்க்க முடிகிறது. ஞானதாகம் கொண்டு அலையும் சிலருக்கு ஆங்காங்கே சில ஞான முத்துக்கள் சிதறக்கூடும். அவற்றை கவனமாய் சேகரித்துக் கொள்வது அவர்கள் சாமர்த்தியம். புலவரின் மனைவியாக நடித்தவர் இன்னும் சற்று பாத்திரத்தில் ஊறியிருக்கலாம். அவர் நடிப்பு சோபிக்கவில்லை. அரசன் அரசி இருவரும் வெகு சுமார். புலவராக நடித்தவர் பரவாயில்லை, நன்றாகவே செய்திருந்தார். |
![]() |
![]() |
#11 |
|
ஒப்பனையாளரின் பங்கு பாராட்டத்தக்கதாய் உள்ளது.
சிவன், பார்வதி என்ற தெய்வக் கதாபாத்திரங்கள் நாம் பார்த்துப் பழகியவை(அவர்கள் க்ரீடங்கள், குறிப்பாக பார்வதியின் க்ரீடம், சிவனின் பாம்பு, முதலியவை ரொம்பவே ஜொலிக்கிறது! இதைக் கொஞ்சம் கவனம் கொண்டு சற்றே நம் கண்கள் மேல் கருணை காட்டலாம்!) . இவற்றை விட, குறிப்பிட்டுச் சொல்லும்படியாய் அக்காலத்து கதா பாத்திரங்களாய் வளைய வரும் சாமான்யர்கள் புலவர், அவர் மனைவி, வீரர், இவர்கள் ஒப்பனை மிக அழகாய், இயல்பாய், யதார்த்தமாய் இருந்தது ! பாராட்டுக்கள் ![]() |
![]() |
![]() |
#12 |
|
ஸ்ரீதர் - சிவன்
யமுனா - பார்வதி ராதாரவி - நாரதர் மனோரமா - ஒளவையார் பூவிலங்கு மோகன் - பிரம்மா பாவனா - லட்சுமி ப்ரவல்லிகா - மாஸ்டர் மோகன்ராஜ் - பிள்ளையார் பேபி பூஜா - முருகன் பீலிசிவம் - வியாழபகவான் பிருதிவிராஜ் - இந்திரன் யுவராணி - இந்திராணி சுதர்சன் - துவஸ்டர் ஐசக் - விஸ்வரூபன் ராம்கி - வித்யாதரன் கிருத்திகா - கலையரசி கனிகா - அம்பிகை (அரசி) பிர்லாபோஸ் - மாமல்லன் நளினிகாந்த் - வசந்தபுர அமைச்சர் செளமியன் - பார்த்திபன் பால்குணசேகரன் - சுப்பையா - சுந்தர் OAK - தட்சன் சுமங்கலி - வேதவல்லி சுஜிதா ஸ்ரீ - தாட்சாயினி பிரியங்கா - ரேவதி வாசுவி - அஸ்வினி கோல்டன் சுரேஷ் - சந்திரன் பாபூஸ் - வீரபத்திரன் மனோகர் - தனபதி மல்லிகா - குணவதி யோகினி - சுசீலை விக்கி - பூபதி சாந்தி வில்லியம்ஸ் - பொன்னம்மா அமலா - அன்னம் சாட்சி சிவா - மனோகர் சாந்தி ஆனந்த்ராஜ் - மரகதம் ரமணி ஸ்ருதி =========== அனுமான் வால்போல் ...... |
![]() |
![]() |
#16 |
|
22.5.08
______ கைலாயத்தில் கலகலப்பாக கலகம் துவங்குகிறது. உமாமஹேஸ்வரியாக யமுனாவின் கோபம், அலட்சியப் பார்வை, சிரிப்பு எல்லாமே நன்றாக அமைந்திருந்தது. தன் பங்குக்கு தானும் கோழை ஒருவனை வீரனாக்கி செல்வம் படைத்த அரசியையும், நாவன்மை படைத்த கலைமகள் அருள் பெற்றவனையும், வீரனின் அடிமை ஆக்குகிறேன் என்று சபதமிட்டுச் செல்கிறார். நாரதர் "ஆம் தேவி" என்று இழுத்து, 'சரஸ்வதி சபத' சிவாஜியை நினைவூட்டுகிறார். சிவாஜியை நினைவூட்டாமல் நடிப்பது கடினம் என்றாலும், இம்மி பிசகாமல் அதே வசனத்தை இயக்காமல் இருந்திருக்கலாம். (நடித்த திரு.ராதாரவி அவர்களும் நடிகர் திலகத்தை போல் செய்யாமல் இருந்திருக்கலாம்) . எல்லோருக்கும் நடிகர் திலகம் படம் நெஞ்சத்தில் நிறைந்து இருக்கிறது என்பதால் நம்மை மகிழ வைக்க இப்படி செய்கிறார்கள் போலும்! அடுத்து நமக்குத் தெரிந்த சரஸ்வதி சபதக் கதையில் வித்யாபதி என்றவன் ஊமை, அவனை பேசவைத்து கலைமகளின் ஆசிப் பெறச் செய்கிறார் சரஸ்வதி. இங்கே கதைப் படி, வித்யாதரன் என்ற இளைஞன் ஊமை அல்ல. மூடன். அதாவது பகுத்தறிவு குறைவாக (மிகக் குறைவாக) பெற்றவன். (வித்யதாராக நடனக் கலைஞரும் நடிகருமான ராம்ஜி நடிக்கிறார். ) 'சரஸ்வதி சபத'க் கதையும், 'மஹா கவி-காளிதாசர்' கதையும் ஒன்றாய் அமைந்தது போல் இருந்தது. வித்யாதரன், மூடனாய் வளர்கிறான். உலையில் அரிசிபோட்டு சோறு வடித்து வை என்று அவன் தாய் கட்டளை இட, இவனோ, உலையில் அரிசி பொங்குவதற்குள் இன்னும் நேரம் ஆகிவிடும், என்று அரிசியை நேராக அடுப்பில் போட்டுவிடுகிறான். தணல் எரியாத குறைக்கு அவன் தந்தை எழுதிய ஓலைச் சுவடியையும் அடிப்பில் போட்டு எரியவிடுகிறான். அவன் தாய் மூடனைப் பெற்றதற்கு கண்ணீர் வடிக்கிறாள். இது இப்படி இருக்க, இன்னொரு செல்வந்தன் வீட்டில் செல்லப் பெண்ணாய் அறிவிற் சிறந்த 'கலையரசி' என்று ஒரு பெண் வளர்ந்து வருகிறாள். தனக்கு வரப் போகும் மணாளன் அறிவில் சிறந்த சான்றோனாக இருக்கவேண்டும் என்ற விருப்பத்தின் பேரில், தன்னை பார்க்க வரும் வரன்களை கேள்விக் கணைகள் கொண்டு எதிர்கொள்ள நினைக்கிறாள். இவளின் தைரியம் கண்டு, அக்காலப்(இக்காலமும் / எக்காலமும் ?!?!) பெண்ணுக்கே உரிய பணிவும் பண்பும் இல்லாதவளாக அவளை வளர்த்து வரும் சித்தியே குறைகூறி முத்திரைக் குத்திவிடுகிறாள் ( மேலும் என்ன நடைக்கிறது என்பது நாளை பார்ப்போம் ) ஒரு சிறு வேண்டுகோள்: இயக்குனர் கவனிக்க வேண்டிய ஒன்று. இறைப் பாத்திரங்கள் தூயத்தமிழில் தான் பேசவேண்டும் என்பதால், அவர்களின் தமிழ், நடைமுறைத் தமிழுக்கு வழுக்குவதில்லை. ஆனால், சாதாரண மக்கள் கதாபாத்திரம் ஏற்போரும், புராணத் தொடர் என்பதால் தூயத் தமிழில் பேசுவதை வழக்காக்கி, தொடர் முழுதும் எல்லாப் பாத்திரங்களும் தூயத் தமிழ் பேசச் செய்திருக்கிறீர்கள். இதில் நடுநடுவே இப்படிப்பட்ட பொதுமக்கள் கதாபாத்திரங்கள் வழக்கு தமிழுக்கு சறுக்கிவிடுகின்றனர். இதை கவனம் கொள்ளவேண்டியது அவசியம். அஃதாவது, ஒன்று, நடைமுறைத் தமிழ் பேசவேண்டும். இல்லையென்றால், புராணத் தொடர் என்பதால் எல்லோருமே தூயத்தமிழ் பேசவேண்டும். இப்படியும் அப்படியுமாய் மாற்றி மாற்றி பேசுவது மனதில் பிசிறுதட்டுகிறது. இதை கவனம் கொள்வது நல்லது. |
![]() |
![]() |
#17 |
|
|
![]() |
![]() |
#19 |
|
சக்தி பிரபா!!
அப்படிக் கூறவரவில்லை. உங்களது விமர்சனங்களை உடனுக்குடன் தரவும் ஆறப் போட்டால் சுவையும் குன்றிவிடும் சிலவேளை சொல்ல வந்ததையும் மறந்துவிடுவோம். உங்கள் விமர்சனம்தான் அதை இன்னும் உன்னிப்பாகக் கவனிக்கத் தூண்டுகின்றது. ஆகவே உடன் தொடருங்கள். அதுவும் இன்று கட்டாயம் தேவை இன்று பார்க்கச் சந்தர்ப்பம் இல்லை |
![]() |
![]() |
#20 |
|
|
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 2 (0 members and 2 guests) | |
|