Reply to Thread New Thread |
|
![]() |
#1 |
|
|
![]() |
![]() |
#2 |
|
ஜெயா "டிவி'யில், வார நாட்களில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பா கும் "ஜெயம்' தொடரில் இனி வரும் வாரங்களில் ஏகப்பட்ட திருப்பங் கள் உள்ளன. இரு குடும்பங்களுக்கு இடையே இருக்கும் பிரச்னையை மையமாக வைத்து போய்க் கொண்டிருக்கும் இந்த தொடரில், மேஜர் கவுதம் கேரக்டரில் மாற்றம் வரும். ஜயா தொடர்களில், பலரால் பார்க்கப்படும் தொடர் இது என்பதால், விறுவிறுப்பு குறையாமல் இருக்க இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
|
![]() |
![]() |
#3 |
|
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜெயம் தொடர் 400 எபிசோடுகளைத் தாண்டியிருக்கிறது. நடிகை சுதா சந்திரன் நடிக்கும் இந்த தொடரின் கதைச்சுருக்கம் வருமாறு:
பத்மாவின் தியாக வாழ்க்கை அவளது மாமியார் ரங்கநாயகி அம்மையாரை ரொம்பவே பாதிக்கிறது. தன்னைப் பார்த்துக் கொள்வதற்காக அந்த ஒண்டிக் குடித்தனத்தில் மருமகள் தன்னோடு இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட மாமியார், தனது மருமகளாவது நன்றாக இருக்கட்டும் என்று எண்ணுகிறாள். ரங்கநாயகியின் தம்பி சுதர்சனம் வசதியானவர். தம்பியின் வீட்டில் மருமகள் இருக்கட்டும் என்று விரும்புகிறாள் ரங்கநாயகி. சுதர்சனுக்கோ பத்மாவை அறவே பிடிக்காது. ஆனாலும் மாமியாரின் விடாப்பிடியான வற்புறுத்தலுக்கிணங்கி அங்கே தங்க சம்மதிக்கிறாள். பத்மா குடும்பத்தில் எந்தக் கெடுதல் நடந்தாலும் அதற்குப் பின்னணியில் சக்ரவர்த்தி தான் இருப்பான். இப்போது அவன் பார்வை பத்மா மீது பாய்கிறது. பத்மாவின் கணவனை அவளிடம் இருந்து பிரித்து விட்டால் அவள் நிராதரவாகி விடுவாள்.அதற்காக அவன் தேர்ந்தெடுத்தது ஆண்டாளை. இந்த ஆண்டாள் பத்மாவின் கணவன் வத்சனை வளைத்துப் போடுகிறாள். மது உண்ட வண்டாக ஆண்டாளின் காதல் பிடியில் சிக்குண்ட வத்சன் பத்மாவை மறக்கிறான். அவள் நினைப்பையே அடியோடு வெறுக்கிறான்.பத்மா தனது கணவனின் புதிய காதல் பற்றி மாமியாரிடம் சொல்கிறாள். அதோடு தனது தரப்பிலும் ஆண்டாளோடு போராடுகிறாள். சுதர்சனின் மனைவி துளசி பத்மாவின் பள்ளிக் காலத் தோழி. அவள் உதவியுடன் ஆண்டாளோடு போராட்டம் நடத்துகிறாள். இதுவிஷயத்தில் பத்மாவின் இக்கட்டான நிலையறிந்த சுதர்சனம் தனது தரப்பில் பத்மாவுக்கு உதவுகிறார். இப்போதாவது பத்மாவால் கணவனை ஆண்டாளிடம் இருந்து மீட்க முடிந்ததா? பத்மா தவிர அவளது பெரிய சகோதரி வைஷ்ணவி, தங்கைகள் கவுசல்யா, சீதா ஆகியோரின்வாழ்க்கைப் பின்னணியிலும் உள்ள போராட்டங்களில் அவர்கள் வென்றார்களா என்பதை தொடரும் தொடரின் காட்சிகள் விவரிக்கிறது. |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 2 (0 members and 2 guests) | |
|