Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `நம்ம குடும்பம்' தொடர், இப்போது புதிய திருப்பங்களுடன் இறக்கை கட்டியிருக்கிறது.
தொடரின் இயக்குனர் சுந்தர்கே.விஜயன் தொடரில் தொடரப் போகும் காட்சிகள் குறித்து கூறியதாவது: "தம்பியை காதலித்து விட்டு சந்தர்ப்ப சூழ்நிலையில் அண்ணனுக்கு மனைவியாகும் ராதா, கணவனிடம் கூட தனது காதலை சொல்லாமல் மறைத்து விடுகிறாள். ஆனால் ஒரு கட்டத்தில் தம்பி மூலமே அது அண்ணன் காதுக்கு வர, எரிமலை வெடித்து சிதறுகிறது. எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் ராதா இப்போது அடுத்த கட்ட சோதனையாக கொலைக் குற்றவாளியாக கோர்ட்டில் நிற்க வேண்டி வருகிறது. சட்டம் அவளை சாத்திய சிறைக்கம்பிகளுக்குப் பின்னாக நிறுத்த, இப்போது ராதா குடும்பத்தில் இன்னும் போராட்ட அலை. இந்த அலையில் சிக்கிவிடாமல் தன்னையும் காப்பாற்றிக் கொண்டு குடும்ப கவுரவத்தையும் இப்போது ராதா மீட்டாக வேண்டிய நிலை. அந்தக் குடும்பத்திற்குள் வந்து சேரும் புதிய உறவுகள் ஏற்படுத்தி வைக்கும் பிரச்சினைகள் எப்படி சிதறுதேங்காய் ஆகிறது என்பதும் கதைக்குள்ளான அடுத்த கட்ட தடாலடித் திருப்பங்கள். ராதா கேரக்டரில் குஷ்பு வருகிறார்.'' "தொடரில் குஷ்பு நீடிக்கிறாரா?'' "கதையின் நாயகி ஜெயிலுக்குப் போனபின் புதிய கேரக்டர்கள் கதையை இன்னொரு கோணத்தில் கொண்டு போகும். இந்தக் களேபரங்கள் உச்சத்தை அடையும்போது மறபடியும் குஷ்பு கேரக்டரின் ஆதிக்கம் புயலாகக் கிளம்பும்.அப்போது குஷ்புவின் அதிரடிப் பிரவேசம் ரசிகர்களுக்கு சர்க்கரைப் பொங்கலாக இனிக்கும். எனவே தொடரில் குஷ்புவின் பங்களிப்பு தொடரவே செய்யும்.'' |
![]() |
![]() |
#2 |
|
|
![]() |
![]() |
#3 |
|
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம குடும்பம் தொடர், 100-வது எபிசோடை நிறைவு செய்திருக்கிறது. சுந்தர் கே.விஜயன் இயக்கும் இந்த தொடரில் நடிகை குஷ்பு முக்கிய கேரக்டரில் வருகிறார். தரத்திலும், தரவரிசையிலும் முதலிடத்தை எட்டிப் பிடித்திருக்கும் தொடர் என்ற பெருமையும் இப்போது நம்ம குடும்பம் தொடரை சேர்ந்திருக்கிறது.
தொடர் பற்றி இயக்குனர் சுந்தர்.கே.விஜயன் கூறும்போது... "தம்பியை விரும்பிவிட்டு எதிர்பாரா சூழ்நிலையில் அண்ணனை மணந்து கொண்ட நந்தினிக்கு அவள் காதலனே வில்லன் ஆகிறான்.இந்த மவுன யுத்தத்தில் பொறுமையை மட்டுமே கடைப்பிடித்து வந்த நந்தினி, இப்போது வெகுண்டு எழத் தொடங்கினாள். விளைவு, காதலனை தாக்கும் அளவுக்கு போய்விடுகிறது ஆனால் அந்த தாக்குதல் தவறுதலாக கணவன் மீது பட்டுவிட, அவன் மயக்க நிலைக்குள்ளாகி விடுகிறான். கணவன் உயிருடன் திரும்பக் கிடைப்பானா என்கிற அளவுக்கு அடுத்த சில நாட்களை பதட்டத்துடன் கழிக்கிறாள்,நந்தினி. இதற்குப் பிறகு அவளுக்கு அடுத்த கட்ட போராட்டமும் இருக்கிறது. பிரச்சினைகளில் இருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்பது இப்போது நந்தினிக்கு கம்ப சூத்திரமாகி விடுகிறது. பெண்ணின் பெருமையை விளக்கும் இந்த கேரக்டரில் குஷ்பு நடிக்கிறார்.கேரக்டரை புரிந்து கொண்டு அந்த கேரக்டராகவே அவர் மாறி விட்டதும் தொடரை முதல் இடத்துக்கு கொண்டு வந்திருப்பதாக உணருகிறேன்.'' |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|