LOGO
Reply to Thread New Thread
Old 08-24-2012, 09:15 AM   #1
Opperioav

Join Date
Oct 2005
Posts
381
Senior Member
Default சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண்


By London Swaminathan (This post has already been uploaded in English)

சிந்து சம்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட 4000க்கும் மேலான முத்திரைகளில் உள்ள எழுத்துக்கள் இதுவரை எல்லோரும் ஒப்புக்கொள்ளும் விதத்தில் படிக்கப்படவில்லை. சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல ஆராய்ச்சியாளர் இது எழுத்தே அல்ல ,வெறும் சித்திர முத்திரை என்று சொல்லி பெரிய சர்ச்சையைக் கூடக் கிளப்பிவிட்டார். இதுவரை சிந்து சமவெளி எழுத்துக்களுக்கு ஐம்பத்துக்கும் மேலான வினோத விளக்கங்கள் வந்துள்ளன.
எழுத்துக்கள் புரியாவிடிலும் அதிலிருக்கும் தெய்வங்களையாவது புரிந்துகொள்ள முடியுமா என்று பார்த்தால் அதுவும் முடியவில்லை. ஒரு முத்திரையில் ஒரு உருவத்தைச் சுற்றி 4 மிருகங்கள் இருப்பதை பசுபதி முத்திரை என்றும் இது ஆதி சிவன் என்றும் ஆரிய சிவனுக்கு முந்திய திராவிட சிவன் என்றும் தவறான விளக்கங்களைக் கொடுத்து இந்து மதத்தைக் குழப்பிவிடவும் மாற்று மத ஆராய்ச்சியாளர்கள் முயன்றனர்.

இவர்கள் ஆரிய திராவிடப் புதை மணலில் சிந்து சம்வெளி நாகரீகத்தைச் சிக்க வைத்திருப்பதால் அது வெளியே வரமுடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. இது திராவிட எழுத்து அமைப்பு உடைய எழுத்துவகையைச் சேர்ந்தது என்று சொல்லி திசை திருப்பியும் விட்டனர். ஆனால் இதைச் சொல்லி ஐம்பது ஆண்டுகள் பறந்தோடிவிட்டன. ஒரு அங்குலம் கூட முன்னேற முடியவில்லை.

ஆரிய திராவிட விஷத்தை அகற்றிவிட்டு இந்த முத்திரைகளை ஆராய்ந்தால் நாளைக்கே கூட தீர்வுகாணமுடியும். இதை உணர்ச்சிக் கொந்தளிப்பால் எழுதவில்லை. பசுபதி முத்திரை மத்திய கிழக்கு நாட்டிலும், டென்மார்க்கிலும் கிடைத்திருப்பதால் அதை சிவன் என்று முத்திரை குத்த முடியாது. பாம்பு ராணி முத்திரை கிரேக்க நாட்டிலும் மற்ற நாடுகளிலும் கிடைத்திருப்பதால் அதையும் சிந்துவெளிக்கு மட்டுமே சொந்தம் என்றும் சொல்ல முடியாது. இன்றைய கட்டுரையில் வரும் 2 புலிகளுடன் சண்டை இடும் காட்சியும் உலகம் முழுதும் கிடைத்திருப்பதால் ஆரிய திராவிட மாயையை ஒதுக்கிவிட்டு ஆராய வேண்டும். சிந்துவெளி நகரங்களில் உள்ள வட்டக் கற்களும் ம்த்தியக் கிழக்கு, நீலகிரி பழங்குடி மக்கள், ஐரொப்பிய நாடுகளில் காணக் கிடக்கின்றன.

இந்திரனும் வருணனும் விஷ்ணுவும் தமிழ்க் கடவுள்கள் என்று “ஒல்காப் பகழ் தொல்காப்பியன்” கூறுவதையும், தொல்காப்பியன் ஒரு பிராமணன் என்று “உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” கூறுவதையும், “நான்முறை முற்றிய அதங்கோட்டு ஆசான்” என்னும் வேதப் பிராமணன் தலைமையில் தொல்காப்பியம் நிறைவேறியதாக பனம்பாரனார் கூறுவதையும் கருத்திற் கொண்டால் ஆரிய திராவிட மாயை, சூரியனைக் கண்ட பனிபோல விலகி ஓடி விடும்.

யார் இந்தப் புலி மகள்?

சிந்து சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட வினோதமான முத்திரைகளில் பேய் முத்திரைகள் பற்றியும், பாம்பு ராணி முத்திரை பற்றியும், பசுபதி/விஷ்ணு முத்திரை பற்றியும், ஐராவதம் மேல் பவனி வரும் இந்திரன் பற்றியும் முந்திய கட்டுரைகளில் கண்டோம். இன்று புலி மகள், புலி ராணி, புலி தேவி யார் என்று ஆராய்வோம்.

ஒரு புலித் தெய்வ முத்திரையில் ஒரு பெண்ணின் பாதி உடல் புலியாகவும் மறு பாதி பெண்ணாகவும் இருக்கிறது.

இன்னொரு புலி முத்திரையில் கொம்புள்ள புலி இருக்கிறது. மற்றுமொரு முத்திரையில் கொம்புப் புலியுடன் ஒரு கொம்பு மனிதன் சண்டை போடுகிறான். சிலர் இதை நடனம் ஆடுவதாகவும் எழுதி இருக்கிறார்கள்.

வேறு ஒரு புலி முத்திரையில் ஒருவன் புலிக்குப் பயந்து மரத்தின் மேல் இருந்து கொண்டே ஏதோ சைகை செய்கிறான். இன்னும் ஒரு முத்திரையில் ஒருவன் இரண்டு புலிகளுடன் சண்டை போடுகிறான்.



யார் இந்தப் புலிப் பெண்? துர்க்கையா? இந்தியாவில் புலி வாகனம் உடைய இரண்டு கடவுளர் உண்டு: ஒன்று துர்க்கா தேவி மற்றொன்று சபரிமலை ஐயப்பன்.

திபெத்தில் புத்த மதத்தைப் பரப்பிய இந்திய சாது பத்ம சம்பவர் புலியில் சவாரி செய்வது போல உருவங்கள் இருக்கின்றன.

சோழர்களின் சின்னம் புலிச்சின்னம் என்று சங்கத் தமிழ் நூல்கள் பாடுகின்றன. சோழர்கள் வடமேற்கு இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்று அவர்களுடைய மெய்க்கீர்த்திகளும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் மறைமுகமாகச் சொல்லுகின்றன. உத்தர குருவை ஆண்ட சிபிச் சக்கரவர்த்தி, முது மக்கள் தழியை உண்டக்கிய முசுகுந்தன் மற்றும் சூரிய குல மன்னர்களை-- தங்கள் முன்னோர்கள் என்று சோழர்கள் பெருமை பேசுகின்றனர். இதுதவிர, புலிகள் க்ஷத்ரியர்களின் சின்னம் என்று வேதகால இலக்கியங்கள் கூறுகின்றன.
மஹாபாரத்தில் வீரர்களைப் புகழ்கையில் அடிக்கடி, “ஓ, மனிதர்களில் புலி போன்றவனே!” என்று வியாசர் புகழ்கிறார்.

சிவ பெருமான் புலித்தோல் அணிந்திருக்கிறார். பதஞ்சலி முனிவரை புலிக்கால் முனிவர் என்று அழைத்தனர். தமிழர்கள் புலி நகத்தை வீரத்துக்காக அணிந்தனர். சகுந்தலை – துஷ்யந்தன் பெற்றெடுத்த பரதன் சிங்கம் புலி ஆகியவற்றுடன் விளையாடினான். புருஷாமிருகம் என்னும் மிருகம் பற்றிய கதை மகாபாரத்தில் வருகிறது.பாதி சிங்கம் பாதி மனிதனான நரசிங்காவதாரம் நாம் அனைவரும் அறிந்ததே. வேதத்தில் கழுதைப் புலி பற்றிய குறிப்பு வருகிறது.
ஆக இந்த எல்லாப் புலிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் சிந்து சமவெளிப் புலி மகள் கொஞ்சம் விலகியே நிற்கிறாள். வெளி நாட்டு அறிஞர்கள் இவளையும் ஆதி துர்க்கா (புரோட்டோ ஷிவா என்று கதை விட்டது போல இவளை புரோட்டோ துர்க்கா) என்று கதை கட்டி விடுவார்கள்.

சப்த மாதர் முத்திரை நரபலியா?



ஒரு முத்திரையில் அரசமரத்துக்குள் ஒரு தெய்வம் நிற்க ஒருவன் மிகப் பெரிய ஆட்டைக் கொண்டுவந்து அவள் முன்னே நிறுத்தி மண்டியிட்டு வணங்குகிறான். ஒரு ஸ்டூலின் மீது மனித தலை மட்டும் இருக்கிறது. இது நரபலியா?

அதற்குக் கீழே ஏழு பெண்கள் கைகோர்த்து நடனம் ஆடுகின்றனர். இந்த ஏழு பெண்கள் உலகில் பல இடங்களில் இருக்கின்றன. தென் ஆப்பிரிக்கா குகைச் சிற்பங்களில் ஆஸ்திரேலியப் பழங்குடி ஓவியங்களில், கிரேக்க நட்சத்திரக் கதைகளில், வடமொழியில் சப்த மாதர் கதைகளில் ஏழு பெண்களைக் காணலாம்.

ஒரிஸ்ஸாவில் கோண்டு இனமக்கள் வழிபடும் தரைப் பெண்ணு என்னும் கடவுள் பூராப் பெண்ணு என்னும் கடவுளைப் படைத்ததாகக் கதை உண்டு. இந்த தரைப் பெண்ணுக்கு கொடுரமான முறையில் பலிகள் இடுவதுண்டு.

சுருக்கமாகச் சொல்லப் போனால் சிந்து முத்திரைகளில் காணப்படும் அதே கருத்து உலகம் முழுதும் இருப்பதால இதை ஆரிய திராவிட நீர்ச் சுழலில் இருந்து மீட்டு காய்தல் உவத்தல் இன்றி ஆராய்தல் நலம் பயக்கும்.

Please read my earlier posts:1.Serpent Queen: From Indus Valley to Sabarimalai 2.Sugarcane Mystery: Indus valley and Ikshvaku Dynasty 3. Vishnu seal In Indus Valley 4. Indus Valley –New Approach required 5.Indra in Indus valley seals+ Symbols for Vedic Gods and 6.Ghost in Indus seals.

Contact swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com
*******************
Opperioav is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 07:52 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity