Reply to Thread New Thread |
06-26-2012, 06:56 PM | #1 |
|
ஆச்சார்யன் திருவடிகளே சரணம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ ஸ்ரீ: ஸ்ரீமந்நாராயணாய நமஹ அடியேன் ஸ்ரீநிவாச தாஸன் மானுட காதலுக்கு மாலவன் காதலே மண்ணுலகின் முன் மாதிரி பாடம். வாழ்க்கையின் சரணாகதி தத்துவம் அன்பின் மலர்ச்சியிலிருந்து தொடங்குகிறது. கண்ணனின் ஆராவமுதத்தை சுவைத்து உண்டு அவர் பால் காதல் கொண்டால் சகல அமுதமும் நம் அதரத்திணுள் இறங்கி ஆன்மாவுக்குள் கலந்து பொங்கி வழியும். அதில் நம்முடைய பொய் ஆசனங்கள் அனைத்தும் நம்மை விட்டு தூர விலகி போய் விடும். அவர் பால் நமக்கு பற்று அதிகம் ஏற்பட ஏற்பட நமக்குள் வாமன மூர்த்தியானவர் இரண்டேயடியில் ஏழுலகங்களையும் அளக்கும் கால்களை வளர்ப்பார் நமக்கு உறுதுணையாக நின்று. அந்த எம்பெருமானை நாம் முழுமையாக உணர்ந்து கொள்ள ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் போன்ற சான்றோர்கள், அப்பெருமான் மீது காதல் வயப்பட வைக்கும் சுவையும், நெறியும், பக்தி பரவசமும் கலந்த முக்கனி சாறாக நமக்கு பல க்ரந்தங்கள், ப்ரபந்தங்கள் போன்ற பல சுவையான விஷயங்களை தந்தருளியிருக்கிறார்கள். அந்த சாறினை சுவைப்பட பிழிந்து தந்து படிப்போர் மனதில் மகிழ்ச்சி வெள்ளத்தை கரை புரள வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து பல பெரியோர்கள், சான்றோர்கள், எழுத்தாளர்கள், உபன்யாசகர்கள் எனப் பலர் நல்ல விஷயங்களை புத்தகமாகவும் பல ரூபத்திலும் வெளியிட்டுள்ளார்கள். அதிலிருந்து அடியேன் படித்ததை, கேட்டதை இந்த வளையத்தின் மூலம் ஸ்ரீவைஷ்ணவத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்போருக்காகவும், அடியேனை போல் ஆரம்ப கட்டத்தில் இருந்து தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்காகவும் அடியேன் ஒரு சிறு முயற்சியாக இதனை எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இதில் ஏதாவது தவறு இருப்பின் அடியேனை மன்னித்து பொறுத்து அருள ப்ரார்த்திக்கிறேன். |
|
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|