Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
leiden ganesha.jpg
Ganesh in Leiden (Holland) Museum சிங்கப்பூரின் பெயர் சம்ஸ்கிருத பெயரான சிங்கபுரம், சிம்மபுரம் ஆகியவற்றிலிருந்து வந்தது என்றும் கொம்பு (ஸ்ருங்க) போன்ற பகுதியில் இருப்பதால் ஸ்ருங்கபுரம் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுவர். இதற்கு தாமசிகம் என்ற பெயரும் உண்டு. சிங்கப்பூரில் இப்போது முப்பதுக்கும் மேலான இந்துக் கோவில்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் விநாயகர் உருவங்கள் பிரதிஷ்டை செய்வதற்கு முன்பாகவே தென் கிழக்கு ஆசிய நாடுகளில் விநாயகர் உருவம் வழிபாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் தென் கிழக்கு ஆசிய நாட்டு விநாயகர் மண்டை ஓட்டு ஆபரணங்களை அணிகிறார். கபால வரிசையின் மேல் அமர்ந்திருக்கிறார். பூதநாதன், கணபதி என்ற பெயர் பொருத்தமாக இருக்கும். அங்கே கிடைத்த ஒரு வினாயகர் சிலை இப்போது ஹாலந்து நாட்டு லெய்டன் நகர அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதன் உயரம் 2.25 மீட்டர் இவர் கபாலங்களின் மேல் அமர்ந்ததோடு பிறைச் சந்திரனையும் கபாலங்களையும் அணிந்திருக்கிறார். சிவன் போலவே இவர் முக்கண்களோடு காட்சி தருகிறார். பிற்காலச் சோழர்களில் மிகவும் புகழ் பெற்றவனும் கடலுக்கப்பால் தென் கிழக்கு ஆசியாவரை சோழ சாம்ராஜ்யத்தின் எல்லையை விரிவாக்கியவ னுமான ராஜராஜ சோழனின் பிரதிநிதிகள் சிங்கப்பூரையும் ஆண்டனர். அவர்களில் ஒருவனான பலெம்பாங் நாட்டுப் பிரதிநிதியான பரமேஸ்வரன் 13ஆம் நூற்றாண்டில் சிங்கப்பூரை ஆண்டார். பின்னர் அவன் மலாக்காவில் ஆட்சியை அமைத்தார்.1414ல் அவர் ஆட்சி முடிவுக்கு வந்தது. பின்னர் போர்ச்சுகிசியர், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷார் ஆட்சிக்கு வந்தனர். பரமேஸ்வரன் காலத்தில் கட்டப்பட்ட மலாக்கா கஜபெராங் பொய்யா விநாயகர் ஆலயம், திரவுபதி அம்மன் ஆலயங்கள் இன்னும் இருக்கின்றன. இராஜ ராஜன் காலத்திய 50 கோவில்கள் கடாரத்தில் அகழ்ந்தெடுக்கப் பட்டன. கங்கைப் பட்டாணி என்ற ஊரில் பூஜாங், கம்போங், டாலம் புக்கிட் பாண்டியாட் ஆகிய இடங்களில் அகழ்ந்தெடுக்கப்ப்பட்ட இந்து ஆலயங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தியவை. சண்டி தெலாக செம்பிலதன் என்ற இப்பகுதியில் 9 கோவில்கள் குளத்துடன் அமைந்திருந்தன. சிங்கப்பூரையும் மலாக்காவையும் ஆண்ட பரமேஸ்வரனின் மகன், சுமத்திரா சுல்தானின் மகளை மணந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறினான். இதற்குப் பின் இஸ்லாமிய சமயம் பரவியது. (ஆதாரம்: தென் கிழக்கு ஆசியாவில் இந்துப் பண்பாடு, பலருடைய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல்). ******************* |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|