Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
Garuda-Shaped-fire-Altar-at-Panjal-Athirathram-2011.jpg
சங்கத் தமிழ் நூல்கள் சங்க கால மன்னர்கள் செய்த பல அபூர்வ யாகங்கள் குறித்து பல அதிசயமான செய்திகளைத் தெரிவிக்கின்றன. ஒரு யாகம் முடிந்தவுடன் ஒரு பார்ப்பனரும் அவர் மனைவியும் மாயமாக மறைந்துவிட்டார்கள். இதைப் பாடிய புலவரின் பெயர் பாலைக் கவுதமனார். அவர் வேண்டுகோளின் பேரில் சேர மன்னன் 10 யாகங்களைச் செய்து முடித்தவுடன் இந்த அதிசயம் நடந்தது.(காண்க: செல்வக் கடுங் கோ வாழியாதனைப் பாலைகவுதமனார் பாடிய மூன்றாம் பத்து-- பதிற்றுப் பத்து) வேளிர் என்னும் குறுநில மன்னர்கள் தாங்கள் யாகத் தீயிலிருந்து உதித்ததாகக் கூறுகின்றனர். பஞ்ச பாண்டவர் மனைவியான திரவுபதி இப்படி யாகத்தீயில் உருவானவர். பல ராஜஸ்தானியர்கள் ,குஜராத்திகள், பஞ்சாபியர் ஆகீயோரும் இப்படிக் கூறுவது வியப்பான ஒற்றுமையாகும். கபிலரும் கூட இதே செய்தியைக் கூறுகிறார் (புறம் 201). கரிகால் சோழன் வேத நெறி தவறாது ஆண்டவன். 2000 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட இவன் சோழ மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவன். இவன் பருந்து வடிவ யாக குண்டம் அமைத்து அதில் யூபம் (கம்பம்) நட்டான் என்று புறநானூற்றுப் புலவர் பாடுகிறார். தூவியற் கொள்கை துகளறு மகளிரொடு பருதி உருவிற் பல்படைப் புரிசை எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண் வேத வேள்வி தொழில் முடித்த தூஉம் புறம் 224 (கருங் குழலாதனார்) கரிகாலனின் எல்லா மனைவியரும் அப்போது உடன் இருந்தனர். மனைவி உடன் இல்லாமல் வேள்வி செய்ய முடியாது. அவர்களை வேள்விக் கிழத்தியர் என்றே தமிழ் நூல்கள் கூறும். 1008 அல்லது 10008 செங்கற்களை சுத்தி செய்து மந்திரம் கூறி ஒவ்வொரு செங்கல்லாக அடுக்குவர். சமீபத்தில் கேரளத்தில் கழுகு வடிவ யாக குண்டம் அமைத்து பெரிய யாகம் செய்தனர். கலிபோர்னியா பலகலைக் கழக ஆசிரியரகள், அறிவியல் வல்லுனர்கள் புடைசூழ இந்த யாகம் நிறைவேறியது. தமிழ் மன்னர்கள் வேத நெறியை தங்கள் வாழ்வியல் நெறியாகக் கொண்டனர். காஞ்சி மகா சுவாமிகளும் தனது உரையில் வேதம், யாகம், பிராமணர்கள் ஆகியவற்றுக்கு சங்க காலத்தில் வழங்கும் தமிழ் சொற்களைப் பார்க்கையில் இந்தப் பண்பாடு எவ்வளவு காலத்துக்கு முன் எவ்வளவு ஆழ வேரூன்றியிருக்க வேண்டும் என்கிறார். வெளி நாட்டுக் காமாலைக் கண்ணர்கள் பொய்யான ஆரிய திராவிட வாதத்தை அவர்களுடைய மதத்தைப் புகுத்த நம் முன் வைத்ததால் நாம் மதி மயங்கிக் குழம்பிவிட்டோம். கல்யாண மந்திரங்களில் சப்தபதி என்னும் ஏழடி நடக்கும் மந்திரம் முக்கியமான மந்திரமாகும். மணப் பெண்ணும் மண மகனும் கையைப் பிடித்துக் கொண்டு தீயை வலம் வருவார்கள். இந்த மந்திரங்களின் அர்த்தம் தமிழ் திரைப் பட காதல் பாடல்களை எல்லாம் மிஞ்சிவிடும். கண்ணகியும் கோவலனும் தீயை வலம் வந்து ஐயர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டதை சிலப்பதிகாரம் பத்திரிக்கை நிருபர் தோற்றுப் போகும் அளவுக்கு அழகாக வருணிக்கிறது. ஏழடிகள் ஒருவருடன் நடந்து சென்றால் பந்தமும் பாசமும் உறுதி பெற்றுவிடும் என்று ரிக்வேதம் சொல்லுகிறது. கரிகாலன் தன்னைப் பார்க்க வந்தவர்களை வழி அனுப்புகையில் வேத நெறிப்படி ஏழு அடிகள் கூடவே நடந்து சென்று வழி அனுப்புவானாம். பால்புரை புரவி நால்குடன் பூட்டிக் காலின் ஏழடிப் பின் சென்று கோலின் தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு --பொருநர் ஆற்றுப்படை வரிகள் 165-167 மதுரைக் காஞ்சி எழுதிய மாங்குடிக் கிழார் இன்னும் ஒரு அதிசிய விஷயத்தைச் சொல்லுகிறார். மற்ற எல்லா நாட்டு மன்னர்களும் சேவல் கூவும் சத்தத்தைக் கேட்டு எழுந்திருப்பான். அனால் மதுரைப் பாண்டிய மன்னனோவெனில் ஐயர்கள் முழங்கும் வேத ஒலியைக் கேட்டு எழுந்திருப்பான் என்று. சிறுபாண் ஆற்றுப் படை எழுதிய புலவர் இன்னும் ஒரு வியப்பான விஷயத்தைச் சொல்லுகிறார். பிராமணர்கள், பாணர்கள் போன்றோர் நல்லியக்கோடன் அரண்மனையில் 24 மணி நேரமும் அனுமதியின்றி உள்ளே போகலாம் என்கிறார். பொருனர்க் காயினும் புலவர்க் காயினும் அருமறை நாவின் அந்தணர்க்காயினும் அடையா வாயில் (சிறு பாண்—வரிகள் 203-206) பாண்டிய மன்னர்களில் மிகவும் பழைய மன்னர்களில் ஒருவன் முதுகுடுமிப் பெருவழுதி. அவனுக்கு அடைமொழியே பல் யாக சாலை முது குடுமிப் பெரு வழுதி என்பதாகும். நாடு முழுதும் யாகத் தூண்கள் இருக்குமாம் (புறம் 6,15). அவன் தலை தாழ்வது இரண்டே முறைதானாம். ஒன்று சிவன் கோவிலில், இரண்டு நாலு வேதம் படித்த அந்தணர் முன்பு (புறம் 6). அவ்வையாருக்கு ஒரே மகிழ்ச்சி. ஏன் தெரியுமா? உலகில் 1500 ஆண்டுகளுக்குக் குடுமி பிடிச் சண்டை போட்ட ஒரே இனம் தமிழ் இனம் தான். உள் சண்டையினாலேயே அழிந்த ஒரே இனம் என்ற பெருமை உடைத்து. அப்பேற்பட்ட மூன்று தமிழ் மன்னர்களும் ஒரே மேடையில் வீற்றிருந்ததைப் பார்தவுடன் அவ்வைப் பாட்டிப் பூரித்துப் போய்விட்டார். எப்போது தெரியுமா? சோழ மன்னன் பெரு நற் கிள்ளி ராஜசூய யாகம் செய்தபோது --ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களை விட நீங்கள் நிறைய நாட்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று பாடினார் (புறம் 367) அப்போது பெருநற் கிள்ளியுடன் சேரமான் மாரி வெண்கோவும் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். ஒவ்வொரு மன்னனும் என்ன யாகம் செய்தான் என்பதை தொல்பொருட்துறை அறிஞரும் வரலாற்று நிபுணருமான டாக்டர் நாகசாமி அவர்கள் கல்வெட்டு இலக்கியச் சான்றுகளுடன் யாவரும் கேளிர் என்னும் அவரது நூலில் பட்டியல் இட்டிருக்கிறார். ஒவ்வொரு மன்னரின் கோத்திரம் என்ன என்பதையும் செப்பேட்டுச் சான்றுகளுடன் எழுதி இருக்கிறார். சிம்மவர்மன் என்ற பல்லவ மன்னன் பத்து அஸ்வமேத யாகங்களைச் செய்ததாக சிவன் வாயில் கல்வெட்டு கூறுகிறது. புதிய விஷயம்: அஸ்வமேத பாண்டியன் குப்தர்கள் அஸ்வமேத யாகம் செய்தவுடன் குதிரைப் படத்துடன் தங்க நாணயங்களை வெளியிட்டார்கள். அப்படி தமிழ் மன்னர்களின் தங்க நாணயம் கிடைக்க வில்லை. ஆனால் ஒரு பாண்டிய மன்னனின் செப்பு நாணயம் குதிரைப் படத்துடன் கிடைத்துள்ளது. இது முதுகுடுமிப் பெருவழுதியாக இருக்கலாம். ஏனெனில் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த உலகின் மாபெரும் கவிஞர்களில் ஒருவரான காளிதாசன் அவனது ரகுவம்ச காவியத்தில் பாண்டிய மன்னர்கள் அவப்ருத ஸ்நானத்தால் நனைந்ததாக எழுதி இருக்கிறார். அவரது காலத்தில் வாழ்ந்த முதுகுடுமிப் பெருவழுதியையே இது குறிக்கிறது. யாகம் செய்யும்போது குளிப்பதை அவப்ருத ஸ்நானம் என்று அழைப்பர். காளிதாசனின் காலம் கி.மு முதல் நூற்றாண்டு என்பதற்கு சங்கத் தமிழில் 200க்கும் மேலான சான்றுகள் இருக்கின்றன. (இதை எனது காளிதாசனின் காலம் என்ற கட்டுரையில் காண்க). ‘பொய்யா நாவிற் புகழ்’ உடைய கபிலர் தரும் இன்னொரு வியப்பான தகவல் (புறம்122): மலையமான் திருமுடிக்காரியின் நாட்டை யாரும் வெல்லவும் முடியாது, படை எடுக்கவும் முடியாதாம். ஏனேனில் நாடு முழுதையும் அவன் ஏற்கனவே அந்தணர்க்கு தானமாகக் கொடுத்துவிட்டானாம்! கடல் கொளப்படா அது, உடலுநர் ஊக்கார், கழல் புனை திருந்து அடிக் காரி! நின் நாடே;அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே;( புறம் 122—கபிலர்) வேதங்களை ஏற்றுப் போற்றும் தமிழ் இலக்கியங்கள் என்ற நூலில் திரு கே சி இலக்குமிநாராயணன் , ஒரு கலைக் களஞ்சியம் கொள்ளும் அளவுக்கு தகவல்கள் தந்துள்ளார் என்பதையும் இங்கே குறிப்பது பொருத்தமாக இருக்கும். *********************** |
![]() |
![]() |
#2 |
|
believe it or not, i was reading about this just yesterday. strange!! same author too, but i did not connect
![]() here is an english version, along with a pix of the eagle shaped kundam. for the benefit of the public ofcourse. the tamil narration given by you (ofcourse) reads better ![]() Karikal Choza and Eagle shaped Fire Altar « Tamil and Vedas eagle-shaped-yagna-kunda[1].jpg one question if you dont mind - why did the the brahmin couple disappear? who wanted them gone? what was the reason? thank you. |
![]() |
![]() |
#3 |
|
something wild nearly stuck me.
there is a school of thought that the chola kings were ancestors of the current day mukkulathors. of these agamudaiyars were supposedly most influenced by vedic hinduism. would that have anything to do with, sivaji ganesan feeding 108 brahmins on one of his last birthdays? not intended for arguement. just a thought to be shared. thats all ![]() |
![]() |
![]() |
#4 |
|
வேளிர் என்னும் குறுநில மன்னர்கள் தாங்கள் யாகத் தீயிலிருந்து உதித்ததாகக் கூறுகின்றனர். பஞ்ச பாண்டவர் மனைவியான திரவுபதி இப்படி யாகத்தீயில் உருவானவர். பல ராஜஸ்தானியர்கள் ,குஜராத்திகள், பஞ்சாபியர் ஆகீயோரும் இப்படிக் கூறுவது வியப்பான ஒற்றுமையாகும். கபிலரும் கூட இதே செய்தியைக் கூறுகிறார் (புறம் 201). Ref: all these kshariya kings can be traced to yudhistra. Astronomical Dating of Events & Select Vignettes from Indian History - kosala vepa Astronomical Dating of Events & Select Vignettes from Indian History - Kosla Vepa - Google Books |
![]() |
![]() |
#5 |
|
It is true, that there existed a Agni dynasty/Race (Agni Kulam), like that of IshvAku (Solar race) and Lunar dynasty (Chandra Kulam.). I read that the Agni race, Brahma-kshatriyas, probably descended from the Satavahanas (Telugus) incl pallavas and the bengal brahmins, who migrated to south india, were vedic learned. i surely miss the 'member who does not want to be named' and who probably would jump in and tell us all more about this. so sad ![]() |
![]() |
![]() |
#6 |
|
so interesting, all this anthropology! 1. Vedic roots of early tamil culture : Michel Danino - Vedic Roots of Early Tamil Culture 2. Pandyas ruled the tamil (even around Mahabharata war) and Cheras (Perumals) ruled Kerala. Many had sanskrit names . Son of Kulasekharan Pandya, the second king of Madurai, the legendary Malayadwaja Pandya who sided with the Pandavas and took part in the Kurukshetra War of the Mahabharata (completed around 400 CE) is described as follows in Karna Parva (verse 20.25) [9][10]: Malayadwaja Pandya and his queen Kanchanamala had one daughter Thathagai alias Meenakshi who succeeded her father and reigned the kingdom successfully and built Meenakshi Temple. The daughter was born out of Putra kAmEshti Yagam and goddess herself. Meenakshi Amman Temple - Wikipedia, the free encyclopedia Pandian kings were the earliest rulers of Tamil Land. Pandyan Dynasty - Wikipedia, the free encyclopedia They had Varman in their titles like the Lunar/Puru dynasties like that in SE Asia [Rise of the Lunar and Solar dynasties Continue later.. |
![]() |
![]() |
#7 |
|
govinda,
i hear and read you. i understand what you are trying to say, ie the south indian kings did not rule in isolation, but considered themselves part of the continuum that is india. but then, how did the attitude at the beginning of the 20th century turn up, that tamil brahmins, were 'aryans' as opposed to the rest of the tamils being dravidians. if i heard right, it was the tambrams themselves who promoted this line of thought again, the people missing, will have references for this. but maybe you too can confirm this..and even now, terms like brahmana tejas, and brahmana kaLai, are used to differentiate us from the rest of tamil nadu. i have heard so much in my own family, even from folks, who are as black as charcoal. what i would like to know, from you, whether you think, that early 20th century tambram thinking was an aberration of thought, and was more instigated by the sudden avenues to prosperity and self suffiency as a community, provided by jobs in the british raj. this, for a community, which forever was steeped in poverty, and who lived at the mercy of the charity of the other castes patronizing the temples and vedic learning. also, it might be good to remember, that in the late 1800s and early 1900s, the empire was at its zenith, and most on earth, probably believed it will go on and the sun will never set in the british empire. so, when through our taking to english, we hitched our wagon to the british horse, and must have revelled in the jolly good romp the combination was to provide us, in terms of good jobs, security and above all, something that was never there before, pensions!! maybe you can enlighten us, please and share us your thoughts on the same. thank you. |
![]() |
![]() |
#8 |
|
Dear Kunjippu
We did not have much information about the disappearance. We came to know only from the old commentaries. May be it is like an incident where TRISANKU was sent to heaven alive(with his body). The ancient commentary is as follows: பாலைக் கௌதமனார் பாடிய மூன்றாம் பத்து : பாடிப் பெற்ற பரிசில்: நீர் வேண்டியது கொண்மின் என ,யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும் என, பார்ப்பரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினர். இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் இந்த யாகத்தை நடத்தினான். மற்றொரு சுவையான செய்தி: குறையாத நல்ல புகழினையும் உயர்ந்த நூற்கேள்வியினுமுடைய நெடும் பாரதாயனார் என்னும் தன் புரோகிதர் தனக்கு முன் துறந்து காடு செல்ல, அதனையறிந்து தானும் துறந்து காடு சென்றவன் என்பதாம்"--- பழைய உரையில் கண்டவை. It is about Chera King Selkezu kuttuvan, brother of Imayavarampan Netuncheralaathan |
![]() |
![]() |
#10 |
|
one question if you dont mind - why did the the brahmin couple disappear? who wanted them gone? what was the reason? |
![]() |
![]() |
#11 |
|
govinda, Plus, for the tamil kings, the kings of North India were challenging to their power-complexes. They had to oblige to Maurya/Kalinga, Gupta and even earlier the Pandyas were defeated by Arjuna, SahaDeva etc. One may see why the Pandya kings might have participated in KrishnA's war to earn supremacy/influence. [Ref-MB: http://www.sacred-texts.com/hin/m08/m08020.htm] Even during Chera/Chola kings, they travelled and en-slaved few kings (in case of Senguttuvan building Kannagi statue!). The dravidians had an envy for the Northern Power, but they brought lot of north architects to build their temples. The dravidians excelled in PRIDE! [which runs even in the new blood] In the same way, in the later years, the place for Brahmins in the vedic shAstrAs might have been too much for their dignity, though the priests of tamil saiva agamas were not that well regarded, IMO . [ The same was the case, why Mahabharata was fought, by the kshatriyas/krishna-yadavas against pAndavAs. The similar emotional/ego-play by the opponent-races in the worship of Lord Shiva to challenge the Rama/Krishna campaigns. ] The Aryan/Dravidian must be a British understanding of Indian culture, as they saw Sanskrit and vedic culture more pre-dominant in the North than the South. They would not have attempted to know the background and history of our ancient India. Plus, one might see that the 3 Tamil Kingdoms had a treaty around Kalinga period that they will be united and win over the North kings. But, once Pandya kings came to power around 3BC, the unity didn't last long. [though chera/chola ruled to-gether] and they defeated each other, and sub-dued the other from coming up to higher positions. Such power struggle always existed, even if the 3 kingdoms later changed into various castes based on skills/position/power/reign. Actually, the caste tag was only a 'dis-guised reason' for their power struggle/past enmity of rulership. Only after 3BC, the tamil kings had complete reign without interference from North and could focus on the temple building, arts, architect and encourage Brahmins/temples and also the 'RE'-evolution of Tamil. Plus, they need frequent yagnas/pujAs to gain confidence for military campaigns among the 3 rulers. Over-time, they divided into many castes that were focussed on Power shifts, only these later periods, IMU, Brahmins started working under the power-holders for jobs (accounts etc.). I guess, Brahmins could not have influenced much, but the poets/leaders of same castes have been giving clear messages on dharma time and again. The NBs of Tamilandu, had been very powerful, dignified and those who could not keep up ended up in bad state. So, casteism was not the major reason, superiority (power/strength/status) was the main reason. Kunjuppu sir, these are just my views from reading/understanding, so you may differ. |
![]() |
![]() |
#12 |
|
govinda, So, I won't take that serious. |
![]() |
![]() |
#13 |
|
|
![]() |
![]() |
#14 |
|
Like AIT and AMT, this too is a british invention as per current studies. Existence of a culturally united bharatavarsha including afganistan, southern parts of russia may be accepted more when studies are made.
The Aryan/Dravidian must be a British understanding of Indian culture, as they saw Sanskrit and vedic culture more pre-dominant in the North than the South. They would not have attempted to know the background and history of our ancient India. |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|