|
![]() |
#1 |
|
அன்றும் இன்றும் என்றும் இளமை இனிமை அதுதான் கவிஞர் வாலி
http://www.mayyam.com/talk/asset.php...2&d=1297198693 வாலிப கவிஞர், இன்றும் இளையவர்களுக்கும் எழுதுபவர் என்று ஏராளமான பட்டங்கள் இருந்தாலும் இவரது தமிழையும் நயத்தையும் அறியாதவர்கள் இருக்க முடியாது. மறக்கப்பட்ட பாடல்களையும் இவரது கவி நயத்தையும் நினைவூட்ட இதோ அவர் பெயரில் நான் ஏற்கனவே ஆரம்பித்த திரி காணாமல் போன காரணத்தால் இதோ புது திரி. பிள்ளையார் சுழியாக இதோ அவர் பெண்மை/சக்தி குறித்து தேவர் மகன் என்ற திரையில் இசை ஞானி இளையராஜாவின் இசையில் எழுதிய இரண்டு பாடல்கள் 1. மணமகளே மணமகளே என்ற இனிய பாடல். சாரதா படத்தில் பஞ்சு அருணாச்சலத்தின் பாடலான மணமகளே என்ற முதல் அடியை எடுத்துக்கொண்டு நம் கவிஞர் எவ்வளவு அழகாக அதே சமயம் எளிமையாகவும் இனிமையாகவும் எழுதியிருக்கிறார் மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும் மங்கலமே மங்கலமே குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே...பொங்கிடுமே குற்றம் குறை இல்ல ஒரு குந்துமணிச்சரமே மஞ்சள் வளமுடனே என்றும் வாழணும் வாழணுமே மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும் மங்கலமே மங்கலமே குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே...பொங்கிடுமே வலது அடி எடுத்து வைத்து வாசல் தாண்டி வா வா பொன்மயிலே பொன்மயிலே புகுந்த இடம் ஒளிமயமாய் உன்னால்தானே மாறும் மாங்குயிலே...மாங்குயிலே இல்லம் கோயிலடி அதி பெண்மை தெய்வமடி தெய்வம் உள்ள இடம் என்றும் செல்வம் பொங்குமடி மணமகளே மணமகளே வாழும் காலம் சூழும் மங்கலமே மங்கலமே குணமகளே குலமகளே பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே...பொங்கிடுமே 2. மாசறு பொன்னே வருக* சிலப்பாதிகாரத்தின் பாடலின் முதல் அடியையொற்றி இலக்கிய வார்த்தைகளை உபயோகித்து பெண்மையின் சிறப்பை பறைசாற்றும் வகையில் ரேவதி தாயான வேளையில் ஒலிப்பதாக அமைந்த பாடல் கவிஞரின் திறனுக்கு சான்று. மாசறு பொன்னே வருக! திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக!! மாதவன் தங்காய் வருக! மணிரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக!! கோல முகமும் குறுநகையும் குளிர்நிலவென நீலவிழியும் பிறைநுதலும் விளங்கிடும் எழில் நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும் (மாசறு) நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம் உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே! பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே! திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே! கருமாரி மகமாயி காப்பாற்று எனையே! பாவம் விலகும் வினையகலும் உனைத்துதித்திட ஞானம் விளையும் நலம் பெருகும் இருள் விலகிடும் சோதியென ஆதியென அடியவர் தொழும் (மாசறு) இரண்டு பாடல்களையும் இனிமையாக பாடியவர்கள் மின்மிணி மற்றும் ஸ்வர்ணலதா குழுவினர் |
![]() |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|