Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
ஒரே வருடத்தில் 103 பாடல்கள் எழுதிய
கவிஞர் நா.முத்துக்குமார்! தொடர்ந்து 5 வருடங்களாக அதிக படங்களுக்கு பாடல்கள் எழுதி சாதனை புரிந்து இருக்கிறார், கவிஞர் நா.முத்துக்குமார். கடந்த (2008)-ம் ஆண்டில் மட்டும் அவர் 30 படங்களுக்கு, மொத்தம் 103 பாடல்களை எழுதி இருக்கிறார். கடந்த ஆண்டு அவர் எழுதிய பாடல்களில், ``டாக்சி டாக்சி'' (சக்கரக்கட்டி), ``சூசூ மாரி'' (பூ), ``முதல் மழை எனை நனைத்ததே'' (பீமா), ``அன்பே என் அன்பே'' (தாம்தூம்), ``அடடா அடடா அடடா'' (சந்தோஷ் சுப்ரமணியம்), ``சுற்றி வரும் பூமி,'' (ஜெயம்கொண்டான்), ``மச்சான் மச்சான்'' (சிலம்பாட்டம்), ``உசிலம்பட்டி சந்தையிலே'' (தெனாவட்டு) உள்பட 25 பாடல்கள் பிரபலமாகி உள்ளன. தற்போது, எந்திரன், நான் கடவுள், அங்காடித்தெரு, பையா, அயன், சிவா மனசுல சக்தி, நந்தலாலா, மரியாதை, ஜக்குபாய், நானும் என் சந்தியாவும், நாடோடிகள், ஜெகன்மோகினி உள்பட 54 படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார். dailythanth 9.1.09 |
![]() |
![]() |
#2 |
|
His pen 'maange' more
IndiaGlitz [Tuesday, January 06, 2009] For the fifth year in-a-row, lyricist Na Muthukumar has emerged the lyricist who has penned the maximum number of songs for a year in Tamil cinema. In 2008, he has penned songs for 30 films. He has totally written 103 songs. Some of the songs penned by Muthukumar include Taxi Taxi (Sakkaraikatti), Choo…Choo…Mari (Poo). Mudhal Mazhai (Bheemaa), Adada Adada (Santhosh Subramaniyam) and Machaa Machaan (Silambattam). Muthukumar is currently writing for songs in films including Endhiran, Naan Kadavul, Siva Manasula Sakthi, Nandhalala, Jaggubhai, Jagan Mohini among others. |
![]() |
![]() |
#3 |
|
|
![]() |
![]() |
#4 |
|
|
![]() |
![]() |
#5 |
|
|
![]() |
![]() |
#6 |
|
Illa Sanjeevi,
Kadal thaandum paravaikellam, idiayil marangal kidayadhu - Something Something Kadal thandum paravaikellam ilaippaara marangal illai, kalangamale kandam thaandume - Pesugiren, Sathum Podathe -- Unnal indru penn aanadhan artham purindhadhe - Enthan Vanamum, Vazhthugal Unnal indru pennagave, nan pirandhadhan arthangal arindhu konden - Akkam Pakkam, Kridom - Two are just samples... have few more like this ![]() |
![]() |
![]() |
#7 |
|
|
![]() |
![]() |
#8 |
|
சென்ற வருடத்தில் (2008)
முப்பதுக்கும் மேற்பட்ட படங்க ளுக்காக, மொத்தம் நூற்றி மூன்று பாடல்கள் எழுதி சாதனை படைத் திருக்கிறார் கவிஞர் நா. முத்துக்கு மார். அதுபோன்று அவர் தற் போது ஐம்பத்தி மூன்று படங்க ளுக்கு பாடல்கள் எழுதி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டில் அவர் பணியாற்றிய படங்களின் விவரம் வருமாறு: பீமா, குருவி, வாரணம் ஆயிரம், சக்கரக் கட்டி, பூ ( மு ழு ப் ப ô ட ல் கள்), வாழ்த்துகள் (முழுப் பாடல்கள்), சந் தோஷ் சுப்ரமணியம், தெனா வட்டு (முழுப் பாடல்கள்), அறை எண் 305-ல் கடவுள், சேவல் (முழுப் பாடல்கள்), சாது மிரண்டா (முழுப் பாடல்கள்), வெள்ளித்திரை, சிலம்பாட்டம், பொய் சொல்லப் போறோம் (முழுப் பாடல்கள்), பாண்டி, உளி யின் ஓசை, ஜெயம் கொண்டான், தாம்தூம், மகேஷ் சரண்யா மற் றும் பலர், சண்டை (முழுப் பாடல்கள்), தோட்டா, தூண் டில் (முழுப் பாடல்கள்), இன்பா, தரகு, அழைப்பிதழ், கடோத்கஜன் (முழுப் பாடல் கள்), நேற்று இன்று நாளை, மதுரை பொண்ணு சென்னைப் பையன், காளை, ஜோதா அக்பர் (முழுப் பாடல்கள்), யாரடி நீ மோகனி (முழுப் பாடல்கள்). பிரபலமான பாடல்களில் சில: "சக்கரகட்டி' படத்தில் "டாக்சி டாக்சி...', "பூ'வில் "சூசூ மாரி...', "பீமா'வில் "முதல் மழை எனை நனைத்ததே...' "தாம்தூம்' படத்தில் "அன்பே என் அன்பே...', "குருவி'யில் "கெட்டப் பையன்...', "சந்தோஷ் சுப்ர மணியம்' படத்தில் "அடடா அடடா...', "தெனாவட்டு'வில் "எங்கே இருந்தாய்..', "உளியின் ஓசை'யில் "காலத்தை வென்ற கலை ஞன் இவன்...', "பாண்டி'யில் "உன் லுக்கு செக்ஸி...' "ஜெயம் கொண் டான்' படத்தில் "சுற்றி வரும் பூமி...', "சாதுமிரண்டா'வில் "நீதானா நீதானா...', "சிலம்பாட்டம்' படத்தில் "மச்சான் மச்சான்...', "ஜோதா அக் பரி'ல் "முழுமதி...' உள்பட முத் துக்குமாரின் பல பாடல்கள் முத் திரை பதித்தன கடந்த வருடத் தில்! தற்போது எழுதிக்கொண் டிருக்கும் படங்கள்: எந்திரன், நான் கடவுள், அங் காடித் தெரு, பையா, அயன், சிவா மனசுல சக்தி, நந்தலாலா, மரியாதை, ஜக்குபாய், பட்டா ளம், நானும் என் சந்தியாவும், வாமனன், நாடோடிகள், சரித்தி ரம், போடா போடி, வெண்ணிலா கபடிக் குழு, நியூட்டனின் மூன்றாம் விதி, கி ரு ஷ் ண லீ û ல , ம û ழ வரப் போகுது, 1977, மாயாண்டி குடும்பத் தார், புதிய வார்ப்புகள், முத்திரை, மாசிலாமணி, ஐந்தாம் படை, ஜெகன் மோகினி, தா.நா-07 அல 4777, ஈர்ப்பு, என்னைத் தெரியுமா, புகைப்படம், காதல்னா சும்மா இல்ல, ஓடிப்போலாமா, சென்னைப் பட்டணம், அவன் அவள் அது, பள் ளிக்கொண்டாபுரம், சங்கமித்ரா, பிருந்தாவனம், சொல்லச் சொல்ல இனிக்குது, அய்யன், பலே பாண் டியா, மத்திய சென்னை, மதராஸ் பட்டணம், வித்தை, ஏன் இப்படி மயக்கினாய், காந்தி நகர் பேருந்து நிறுத்தம், அவள் பெயர் தமிழரசி, நித்யா, வழக்கு எண் 15/3, மற்றும் ராகவன் பி.இ. ஆகியவை. தொகுப்பு : பாலு[/tscii][tscii] |
![]() |
![]() |
#9 |
|
பட்டு நெய்யும் ஊரிலிருந்து பாட்டு நெய்பவன்!
சந்திப்பு: ஜி.அசோக் காஞ்சிபுரம் அருகே இருக்கும் கன்னிகாபுரம் என் ஊர். என் நினைவுகளில் மட்டுமே வாத்துகள் நீந்தும் வேகவதி ஆற்றங்கரையில் இருக்கும் ஊர். இன்று அந்த ஆற்றை சாயக் கழிவுகள் தின்றுவிட்டன. பொன்வண்டுகளை பிடித்து தீப்பெட்டிச் சிறையில் அடைத்ததும், தண்டவாளத்தில் தாமிரக் காசுகளை வைத்து ரயில் ஏறியதும் காந்தமாக மாறும் எனக் காந்திருந்து காசையும் காலத்தையும் தொலைத்ததும், சிவபெருமானுக்கு அடுத்தபடியாக மூன்று கண்ணுடன் இருக்கும் பனை நுங்கில் வண்டி செய்து, பம்பாய்க்குப் போகிறேன் என்று சொல்லி பசுமாட்டுத் தொழுவத்தைச் சுற்றி வந்ததும் அந்த ஊரில்தான். நெசவுதான் எங்கள் ஊர் தொழில். என் பால்யத்தின் பகல் பொழுதுகளில் என்னை தூங்க வைத்த தாய். என்னோடு படித்தவர்கள் எல்லாம் பட்டுத்தறி நெய்ய போய் விட்டார்கள். நான் பாட்டெழுத வந்து விட்டேன். எங்கள் ஊரின் வழி நெடுகிலும் சின்னதும், பெரியதுமாய் ஏரி கரைகளில் அணிவகுத்து நிற்கும் பனைமரங்கள். ‘‘ஏரி கரையில் ராணுவ வரிசை கிராப் வெட்டிய பனை மரங்கள்'' என என்னை ஹைக்கூ எழுத வைத்தவை அந்த பனை மரங்கள்தான். சாலையோரத்தில் மண்டி கிடக்கும் சீமை ஆடுதொடாச் செடிகள். வேலி ஓரத்தில் கிராமஃபோன் குழல்கள் ஆடுதொடா பூக்கள் என எழுத வைத்தது. இப்படி என் மண்ணில் உள்ள அனைத்துமே என்னை கவிஞனாக மாற்றியிருக்கிறது. அல்லது நான் மாறியிருக்கிறேன். எல்லா ஊரையும் போலவே எங்கள் ஊரிலும் ஓர் ஆறு இருந்தது. காஞ்சிபுரத்து பாலாற்றில் இருந்து கிளை பிரிந்து, ஓர் இளம் பெண்ணின் சேலை போல நீண்டு நெளிந்து எங்கள் கன்னிகாபுரத்தைச் சுற்றி வளைந்து செல்லும் ஆற்றுக்கு வேகவதி ஆறு என்று பெயர். இன்று சாய கழிவுகளால் முதியவளின் சேலை போல் கிழிந்து கிடக்கிறது. என் பால்யத்தின் ஒவ்வொரு ரகசியத்தையும் அந்த ஆறு அறிந்திருக்கிறது. ஊர் அந்நியப்பட்டது போல் பூக்கள் மிதந்த ஆறும் பிளாஸ்டிக் பைகளைச் சுமந்தபடி அந்நியப்பட்டு நிற்கிறது. வேகவதி ஆற்றங்கரையில்தான் கிரிக்கெட் ஆடுவோம். தென்னை மட்டையில் பேட், சைக்கில் டியூபில் பந்து, ஆடுதொடா குச்சிதான் ஸ்டம்ப். அப்போதெல்லாம் ஆறு எங்களுக்கு அம்பயராக இருந்தது. ஊர்ந்து வந்து தன்னை தொடும் பந்துக்கு அது நான்கு ரன் கொடுத்தது. அந்தரத்தில் பறந்து வந்து தன் மேல் மிதக்கும் பந்துக்கு ஆறு ரன் கொடுத்தது. ஆயினும் ஆறு கொடுக்கும் ஆறு ரன்களைப் பெறும் பாக்கியம் கடைசி வரை எனக்குக் கிட்டியதே இல்லை. வாத்துகளை வேடிக்கை பார்ப்பவன் என்பதால் நான் ‘டக்' அடித்து விட்டு பந்து பொறுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வேன். வாத்துகளிடம் என்னைக் கவர்ந்தது அவற்றின் காலடிகள். ஈர மண்ணில் வாத்துகளின் காலடிகள் கடவுளால் வரையப்பட்ட நட்சத்திரங்கள். அந்த சின்ன வயது வாத்துகளின் காலடியோடுதான் என் முதல் பாடலுக்குள் நுழைந்தேன். எனக்கு பாம்புகள் என்றால் பயம். படையே நடுங்கும் போது நான் எம்மாத்திரம்? வயல் காடுகளில், கரும்புத் தோட்டங்களில், வைக்கோல் போர்களில் என எத்தனையோ பாம்புகள் படம் எடுத்து முடித்து என் பயத்தையும் எடுத்து ஓடியிருக்கின்றன. தண்ணீர் பாம்புகள் சாதுவானவை. என் நண்பர்கள் தண்ணீர்ப் பாம்பைப் பிடித்து கால்சட்டைப் பையில் போட்டுக் கொண்டு வகுப்பில் வெளியே விட்டு பயமுறுத்துவார்கள். நான் தண்ணீர்ப் பாம்பை பார்த்ததும் தலைதெறிக்க ஒடுகிற ஆள். நூறு பாம்புகள் இருந்தும் கிராமத்தில் வாழ்க்கை சுகமாயிருந்தது. பாம்புகளற்ற நகரத்தில் பயமாயிருக்கிறது. உயரங்கள் மீதான என்னுடைய காதலை என் கிராமத்து மரங்களே நிறைவேற்றி வைத்தன. கிராமத்தில் மண்ணில் மீது இருந்ததை விட மரங்களின் மீது இருந்த நேரமே அதிகம். என்னைத் தேடிக் கொண்டு வீட்டில் இருந்து வருபவர்கள் தோட்டங்களுக்கும், தோப்புகளுக்குமே வருவார்கள். இலைகளுக்கு நடுவில் ஒளிந்து கொண்டு ஆந்தைகள் மாதிரி குரல் கொடுத்து அவர்களை அலற வைப்பது அப்போதைய விளையாட்டுகளில் ஒன்று. காலையில் இரண்டு, மூன்று புத்தகங்களுடன் மரம் ஏறிவிட்டால், மதியப் பசிக்குதான் கீழே இறங்குவேன். என் கிராமத்திற்கு டூரிங் டாக்கீஸ் வந்தது. கூண்டு வண்டிகளில் இரு புறமும் போஸ்டர் ஒட்டி, ரேடியோ ஸ்பீக்கர்களில் இன்றே கடைசி என்று திரையிடப்படும் படத்தின் சிறப்புகளை சொல்லி, சிறுவர்கள் நாங்கள் பின் தொடர, நோட்டீஸ் கொடுத்துச் சென்றார்கள். மறக்காமல் ஒவ்வொரு தடவையும் கடைசியாக ஒளி ஒலி அமைப்பு ஈஸ்வரி சவுண்ட் சர்வீஸ் என்ற முகவரியோடும் காது குத்து, கல்யாணம், மஞ்சள் நீராட்டு விழா போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் அணுகச் சொன்னார்கள். ஆடு தொடா பூக்கள் வடிவத்தில் சாயம் போயிருந்த அந்த ஸ்பீக்கர்களின் வசீகரத்தில், நாங்கள் ஊரின் எல்லை வரை சென்று வழியனுப்புவோம். இப்படியாகத்தான் மாட்டு வண்டிகளின் ஸ்பீக்கர் உதவியுடன் சினிமாவின் விதை என்னிலும், எங்கள் ஊரிலும் விழத் தொடங்கியது. மருதமலை மாமணியே முருகய்யா... என்றழைத்து டிக்கெட் கொடுத்து டூரிங் டாக்கீஸ் படம் காட்டியது. கிராமத்தின் ஒரே பொழுதுபோக்கு அதுதான். ஆற்று மணலில் அமர்ந்தபடி, சாம்பல் நிறத்தில் சாயம் போன திரையில் பொரி உருண்டை சாப்பிட்டபடி படம் பார்ப்போம். காஞ்சியின் ஆண்டர்சன் மேல் நிலைப் பள்ளியில்தான், எனக்கு உயர் நிலைக் கல்வி. பக்கத்தில் இருக்கும் ஏகாம்பரநாதர் ஆலயத்தின் ஆயிரங்கால் மண்டபம்தான், என் தனிமை வாழ்வின் அடையாளம். என் தேர்வுகள், என் இலக்கிய தாகம் இரண்டுக்காகவும் இங்கே நிறைய படித்திருக்கிறேன். பூவரசம் இலையிலே பீப்பி செய்து ஊதினோம் பள்ளிக்கூட பாடம் மறந்து பட்டாம்பூச்சி தேடினோம் தண்ணீப் பாம்பு வரப்பில் வர தலைதெறிக்க ஓடினோம் பனங்காயின் வண்டியில் பசுமாட்டுத் தொழுவத்தைச் சுற்றி வந்து பம்பாய்க்குப் போனதாகச் சொல்லினோம் அடடா வசந்தம், அதுதான் வசந்தம் மீண்டும் அந்தக் காலம் வந்து மழலையாக மாற்றுமா? [/tscii][tscii] |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|