Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
திகாரில் கனிமொழி! ‘மகிழ்ச்சிகளும், துயரங்களும்’!!
![]() ஆனால் மேன்மக்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் எதுவுமில்லை. ரயிலிலோ, விமானத்திலோ, இல்லை சிறை என்றாலும் அவர்களுக்கு முதல் வகுப்புதான். முன்னர் ஒரு முறை சிக்கன நடவடிக்கை என்ற நாடகத்திற்காக அமைச்சர்களெல்லாம் விமானப் பயணத்தில் முதல் வகுப்பை தவிர்ப்பார்கள் என்று அறிவித்தது போல சிறையிலும் சிக்கன நடவடிக்கைக்காக முதல் வகுப்பு இல்லை என்று அறிவித்தால் வரும் அரசியல்வாதி, அதிகாரி, முதலாளிகளுக்கு வாழ்க்கை என்றால் என்னவென்று புரியவைக்க முடியும். கனிமொழி கைதை வைத்து தி.மு.கவை எதிர்க்கும் பலரும் மிகப்பெரும் சாதனையை அடைந்து விட்டது போல துள்ளிக் குதிக்கிறார்கள். ஈழ ஆதரவாளர்கள் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட மக்களுக்காக கருணாநிதியை பழிவாங்கிவிட்டதாக திருப்தி அடைகிறார்கள். இந்த சந்தோஷக்காரர்களுக்கு அரசியலின் அரிச்சுவடி கூட தெரியவில்லை என்பதோடு, அவர்கள் கொண்டிருக்கும் ஈழம், தி.மு.க எதிர்ப்பு குறித்தும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. குறிப்பிட்ட பிரச்சினையில் மக்களை அணிதிரட்டி தீர்க்க வேண்டிய பொறுமை வழிமுறைகளெல்லாம் இவர்களுக்கில்லை. ஏதாவது குறுக்கு வழியில் நடக்கும் நிகழ்வுகளை வைத்தே தீர்த்துவிடலாம் என நினைக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழல் உச்சநீதிமன்ற ஆணைப்படி விசாரிக்கப்படுகிறது. பாராளுமன்ற கூட்டு விசராணைக் குழு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ராசா, அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவையெல்லாம் மத்திய அரசின் திட்டப்படி நடந்தவையல்ல. சில தற்செயலான நிகழ்வுகள் சேர்ந்து இந்த ஊழல் விவகாரத்தை இப்போதுள்ளபடி நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இதை ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் இந்த விவாகாரத்தை தோண்ட தோண்ட அது ஊழலின் ஊற்று மூலமான முதலாளிகளை நோக்கி பாயும். அதனால் இந்த விவகாரத்தில் இத்தோடு விட்டுவிட்டு எப்படி கழண்டு கொள்ளலாம் என்பதே காங்கிரசு கும்பலின் கணக்கு. இந்த பிரச்சினை தி.மு.கவிற்கும் தெரியும். மற்றவர்களெல்லாம் இதை வைத்து காங்கிரசு தி.மு.க பிளவு என்று சித்தரிக்க முயலும்போதெல்லாம் சில அப்பாவிகள் அப்படி நடக்குமென்று மகிழ்வுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் தி.மு.கவோ என்ன நடந்தாலும் காங்கிரசை விட்டுப் போகமாட்டோம் என்று பெவிக்கால் போல ஒட்டிக்கொண்டிருப்பதை இவர்கள் அறியவில்லை. மன்மோகன் அரசாங்கத்தின் இரண்டாண்டு நிறைவு விருந்துக்கு கூட டி.ஆர் பாலு மரியாதையுடன் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த விருந்தில் ஊழலை ஒழிக்கப் போவதாக மன்மோகனும், சோனியாவும் பேசியது நல்ல தமாஷ். ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று காங்கிரசு கூட்டணி அரசின் ஊழல்களெல்லாம் வரிசையாக அணிவகுக்க அந்த அணிவகுப்பின் மரியாதை ஏற்பவர்கள்தான் ஊழலை ஒழிக்கப் போகிறார்களாம். எனவே இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் இதற்குமேல் சூடு பிடிக்காமல் பார்த்துக் கொள்வது எப்படி என்பதே அவர்களது பிரச்சினை. அப்படித் தடுக்க முடியாவிட்டால் பல தலைகளோடு, பல அடிப்படை நிலைகளும் கேள்விக்குள்ளாக்கப்படும். ஆகவே இந்த விளையாட்டை பாதுகாப்பாக எப்படி விளையாடப் போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனாலும் ராஜாத்தி அம்மாள் தனது மகள் சிறையில் சென்றது குறித்து கதறி அழுதாராம். கருணாநிதியும் தள்ளாத வயதில் டெல்லி சென்று சந்திக்கிறாராம். கனிமொழி கைதுக்காக டெல்லி சென்றதைக் கூட அவர் கூடவே ராசா, சரத்குமாரையும் பார்ப்பதற்காக செல்வதாக குறிப்பிட்டார். ராசா சிறைக்கு போய் இத்தனை நாளாகிறது. அப்போது தோன்றாத பாசம் இப்போது தோன்றிருப்பதாக கூறுவது நல்ல காமெடி. கருணாநிதிக்கு இரண்டு குடும்பங்கள், எண்ணிறந்த வாரிசுகள், தி.மு.கவின் படுதோல்வி, பாதுகாக்கப்பட வேண்டிய சொத்துக்கள் இன்னபிற பிரச்சனைகளோடு கனிமொழி கைதும் சேர்ந்துவிட்டது. தயாளு அம்மாளின் வாரிசுகள் சம்பாதித்ததோடு பிடிபடவில்லை என்பதும் ராசாத்தி அம்மாளின் வாரிசு மட்டும் பிடிபட்டது என்றும் குடும்ப பூசல்கள். இதையெல்லாம் பார்த்தால் தமிழக மக்கள் அளித்திருக்கும் ஓய்வு என்பது கருணாநிதிக்கு அமைதியாக இருக்காது என்று தெரிகிறது. இதில் கனிமொழி இரண்டு கோடி ரூபாய் கொடுத்து கலைஞர் டி.வியில் வலியுறுத்தி சேர்த்தது நான்தான் என்று வேறு உடன்பிறப்புக்கு கடிதம் எழுதுகிறார். ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்டவன் என்று நிரூபணம் ஆகிய நிலையிலும் தன்னையும், தன் குடும்பத்தாரையும் எளிமை, அர்ப்பணிப்பு, தியாகம் நிறைந்த ஒழுக்கசீலர்களாக வெட்கம் கெட்டு சித்தரிப்பதற்கு அவர் கூச்சமே படவில்லை. தி.மு.கவின் இன்றைய பிழைப்புவாதத்தில் இத்தகைய அற உணர்ச்சிகளை எதிர்பார்ப்பது குதிரைக்கு கொம்பு முளைப்பது போலத்தான். கருணாநிதியும், அவரது கட்சியும் கார்ப்பரேட் நலன் விரும்பும் சக்திகள் என்றாகிவிட்ட நிலையிலும் வட இந்திய ஊடகங்கள் தமது தமிழின விரோத வெறுப்பை கைவிடவில்லை. கனிமொழியின் கைதை காட்டிய, விவாதித்த வட இந்திய ஊடகங்கள் எல்லாம் அதை ஜன்மவிரோதத்தோடு சித்தரித்தன. தற்போது இலங்கையின் கஸ்டடியில் இருக்கும் கே.பியை வைத்து தி.மு.வின் பிராமண எதிர்ப்பு கொள்கையே ராஜிவ் காந்தியின் மரணத்திற்கு காரணம் என்ற காமடியையெல்லாம் ஒளிபரப்புகின்றன. கருணாநிதியே தான் பழை ஆள் இல்லை என்று கதறி அழுதாலும் இவர்கள் மன்னிப்பதாக இல்லை. திராவிட இயக்கத்தின் மீதான வன்மத்தை அவர்கள் எப்போதும் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. - வினவு |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|