LOGO
Reply to Thread New Thread
Old 02-13-2012, 03:23 AM   #1
KukkoDrukko

Join Date
Oct 2005
Posts
511
Senior Member
Default திருவானைக்காவல் ஆலய ஸ்தல வரலாறு.... பாகம் 1...
முன்னொரு காலத்தில் அடர்ந்த கானகத்தில் வானுயர்ந்த ஒரு ஆலமரத்தின் கீழ் ஒரு சிவ லிங்கம் இருந்தது. அந்த சிவ பிரானுக்கு இரண்டு முரட்டு பக்தர்கள். ஒன்று ஒரு யானை. ம்ற்றோன்று ஒரு சிலந்தி. இருவரும் இறைவன் மீது கொண்ட பக்தி அளவிடமுடியதது.

யானை தினந்தோறும் காவிரி ஆற்று நீரை ,தான் ஆற்றில் குளித்துமுடித்தபின், தனது தும்பிக்கையில் எடுத்துவந்து இறைவனுக்கு நீராட்டுவதில் தனது அன்றாட கடமையாக செய்துவந்தது.

யானை சென்றபின் வெய்யில் தலைக்கு ஏறிவிடுவதால் சிவனுக்கு லிங்க வடிவின் மேல் சிலந்தி தினந்தோறும் சிவலிங்கத்தின் மேல் வெய்யில் தாக்காவண்ணம் வலை பின்னி கூறை அமைப்பது சிலந்தியின் வழக்கம். மேலும் அவ்வாறு வலை பின்னுவதால் ஆலமரத்தின் காய்ந்த இலைகள் சிவலிங்கத்தின் மேல் வாடிக்கையாக விழும்போது இயற்கையாக கூறை அமைத்ததுபோல் இருக்கும்.

மறுநாள் காலை யானை மீண்டும் வந்து பார்க்கும்போது சிவலிங்கத்தின் மேல் சிலந்தி வலை பின்னபட்டிருப்பது தினந்தோறும் வாடிக்கையாக இருந்தது.

தான் தினமும் அபிஷெகம் செய்து முடித்தபின் யாரோ வந்து சிவலிங்கத்தின் மேல் அசுத்தம் செய்வதாக யானை கருதியது.

இதற்க்கு முடிவுகட்ட முடிவு செய்தது யானை. ஒரு நாள் வழக்கம்போல் யானை தனது அபிஷெக கடமையை முடித்தபின் ஒரு மரத்தின் பின்புறம் மறைந்திருந்து நடப்பதை வேடிக்கை பார்க்க முடிவு செய்தது.

இடை அறியாத சிலந்தி வழக்கம்போல் வலை பின்ன துவங்கியது.

உடனே கோபம் கொண்ட யானை ஓடிவந்து சிலந்தியை தனது தும்பிக்கையால் தாக்கி காலில் போட்டு மிதித்து கொன்றது. சிலந்தியும் தன்பங்கிற்க்கு யானையை தும்பிக்கையில் கடித்து விஷத்தை செலுத்தி யானையை கொன்றது.
KukkoDrukko is offline


Old 02-14-2012, 04:13 AM   #2
Jannet.K

Join Date
Oct 2005
Posts
517
Senior Member
Default
ஆராயாமல் சிவ பக்தனை சிவ பக்தனே ஆனாலும் கொல்வது பாவமே. ( உம் : ராமாயணத்தில் ராவணவதம் முடிந்தபின் ஸ்ரீ ராமன் அதனால் தான் ராவணன் சிவபக்தன் என்பதாலும்,பிராமணன் என்பதாலும் ராமேஸ்வரத்தில் ஈசனை வழிபட்டதாக புராண்ம் கூறுகிறது....).

சிலந்தியின் சிவ சேவையை முழுமையாக அறிந்துகொள்ளாமல் முன் யோசனை இன்றி கொன்றதால் யானைக்கு மொட்சம் அளித்தார் சிவபிறான். மாறாக சிலந்தி மறு பிறவியில் சோழ பேரரசனாக பிறக்கும் பாக்கியத்தை அளிக்கிறார் சிவ பெருமான்)....

மறு பிறவி...... செங்கண்ணச் சோழன்....

( இவன் 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்றும் 1ம் நூற்றாண்டைச் சார்ந்தவன் என்போரும் உண்டு. எனினும் முழுமையான தகவல்கள் இல்லை....)

இவனது தாயும் தந்தையும் அரச குலத்திற்க்கு ஆண் வாரிசு வேண்டி,சிதம்பரம் நடராச பெருமானை மன்றாடி மனமுறுக வேண்டுகின்றனர். அதன்படியே அரசியும் கர்பமுற்றாள்.பிரசவ காலமும் வந்தது.இப்பவோ அப்பவோ என்று குழந்தை பிறக்கும் வேளை நெருங்கியது. அரண்மனை ஜோதிடர்களும், ஆன்மீக குருமார்களும் குழந்தை பிறக்கும் நல்ல வேளையை கணிக்க காத்துக்கொண்டிருக்கின்றனர்.

மன்னன் ஜோதிடர்களை குழந்தை பிறக்கும் வேளையை கணிக்க கட்டளையிடுகிறான். நீண்ட மவுனதிற்க்குபின் ஜோதிடர் கூறுகிறார்... அரசியார் சோழ குலதிற்க்கு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுப்பார்.ஆனால்......

என்ன ஆனால் ? தயங்காமல் மேற்கொண்டு கூறுங்கள்...

அரசே இதில் இரண்டு அம்சங்கள் இருக்கிறது... 1) குழந்தை பிறக்கும் வேளை அரசியார் இறந்துவிடுவார். 2) ஒரு நாழிகை குழந்தை கழித்து பிறந்தால் இந்த சோழ குலம் மேன்மேலும் விருத்தியாகும்..... இந்த இரண்டும் இந்த குழந்தையின் ஜனன கால பலன்கள்... என்றனர்....

இதை கேட்டுக்கொண்டிருந்த அரசியார் மன்னனிடம் ," எப்படியும் குழந்தை பிறக்கும்போது தான் இறக்கப்போகிறேன்.அதனால் எனது கால் கட்டை விரல் இறண்டையும் கட்டி தலைகீழாக கட்டி தொங்க விடுங்கள்.ஜோதிடர் சொன்னதுபோல் ஒரு நாழிகை கழித்து இறக்கி விட்டால் குழந்தை ஒரு நாழிகை கழித்து பிறக்கும் அப்படியாவது நமது சோழ வம்சம் தழைக்கட்டும் " என்று கேட்டுக்கொள்கிறாள்.

அவளது ஆசைப்படியே கட்டைவிரல் இரண்டையும் கட்டி தலைகீழாக தொங்க விடுகின்றனர். ஒரு நாழிகை கழித்து அரசியாரை இறக்கி விடவும்,அவள் உயிர் பிரியவும்,குழந்தை பிறக்கவும் சரியாக இருந்தது.

ஆனால் குழந்தை ஒரு நாழிகை கூடுதலாக,இயற்கைக்கு மாறாக தாயின் கருவறையில் இருந்ததால் பனிக்குட நீர் அவன் கண்களில் புகுந்து பிறக்கும் போதே கண்கள் சிவப்பாக பிறந்து விடுகிறது. அதனால் அவனுக்கு செங்கண்ணன் என்று பெயரிடுகின்றனர். நாளடைவில் செங்கண்ண சோழன் என்று பெயர் பெருகிறான்.


http://en.wikipedia.org/wiki/Kocengannan
Jannet.K is offline


Old 02-14-2012, 04:59 PM   #3
Bugamerka

Join Date
Oct 2005
Posts
400
Senior Member
Default
கோப்பெருஞ் சோழன் என்ற செங்கண்ணச் சோழன் தனது ஆட்சிக் காலத்தில் 70 சிவாலயங்களைக் கட்டியதாகவும்,அதில் முதன்மையானது திருவானைக் கோவில் என்றும் வரலாறு கூறுகின்றது.

அவன் கட்டிய 70 சிவாலயங்களும் யானை உள்ளே வர முடியாதவாறு கட்டப் பட்டதாகவும் கூற்ப்படுகிறது.

திரு ஆனைக் கா என்ற திருவானைக்காவல் ஆலயம் பஞ்சபூத ஸ்தலங்களில்," நீர் " ஸ்தலம் ஆகும் .

ஜம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி அம்மனை வருடம் ஒரு முறையாவது தரிசித்து வந்தால் சகல நண்மையும் நம்மை வந்து சேறும் என்பதில் மாற்றுக் கருத்திற்க்கு இடமில்லை ).

சிதம்பரம் ...... ஆகாயம் , ( நடரஜர் ஆலயம் )

திருவண்ணாமலை ........ நெருப்பு, (அருனாச்சலேஸ்வரர் ஆலயம் )

காளஹஸ்தி ....... வாயு ,

காஞ்சி ........ பூமி ( ஏகாம்பரேஸ்வரர் திரு கொவில் ) முதலியன மற்ற பஞ்ச பூத ஸ்தலங்கள் ஆகும்.
Bugamerka is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 12:46 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity